சிரமமில்லாமல் சில கொலைகள்-13


🩸-13

    இரவு தாய் தந்தை உறங்கியப்பின் தன் ஆடையில் முழுங்கையை மடக்கி வளையலை எடுத்துத் தடவி பார்த்தாள்.

     சர்வேஷ் உரிமையாகத் தன் கையில் மாட்டிய வளையலை தடவி பார்த்து இரசித்தாள்.

    சர்வேஷ் அவளுக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தான். யாருக்கு தான் பிடிக்காது. உறவில் தனக்குப் பிடித்தவையை அறிந்து நடந்து, தனக்குத் தேவையுணர்ந்து, பரிசும் காதலும் கொண்டு வந்து, அழகனொருவன் தன்னை அன்பால் ஆட்டிபடைக்க ஏங்க செய்யாதோ உள்ளம்.

      இன்று சர்வேஷ் தன் கையைப் பிடித்து மாட்டிய நிகழ்வை பலமுறை மனக்கண்ணில் ஓடவிட்டு உறங்கினாள் அபரஞ்சி.

     அபரஞ்சி இல்லாத பொழுதும் அதே போலத் தனக்குப் பிரசாதம் வந்திருந்தது ஜன்னல் வழியாக. இம்முறை ஆடலரசன் அது அபரஞ்சி அல்ல என்பதை அறிந்துவிட்டான். முட்டாள்தனமாக இந்நாள் வரை அவள் தான் தன்னை விரும்புகின்றாளென எண்ணி அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தித் தன்மீதே எரிச்சலானான்.

     சர்வேஷ் வீட்டில் தினமும் ஊர் பஞ்சாயத்துக் கூடியது. அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்தது. இதில் மனிஷா அபரஞ்சியினை விடத் தான் எந்தவிதத்தில் இறங்கிபோனோம் என்ற எண்ணம் மேலோங்கியது.

       இப்படியாகப் பிரச்சனை கிருஷ்ணன் காதுவரை செல்லாவிட்டாலும் தினசரி சர்வேஷ் பல கேள்விக்கு ஆளாகி நின்றான்.

      இப்பொழுது எல்லாம் மகள் கை வைத்த ஆடையைப் பெரும்பாலும் விரும்புவது எதற்கென்று அறியாமல் இருந்தாலும் மகள் விருப்பம் என்று விட்டிருந்த அம்புஜத்திற்கு அன்று கோவிலுக்குப் பாவாடைதாவனி அணிய வற்புறுத்தவும் மாட்டிக்கொண்டாள். வசரமாக உகை மாற்றி வந்தவள் வளையலை மறந்திருந்தாள்.

    அம்புஜம் கேட்டப்பின் பயந்து சர்வேஷ் கொடுத்ததைக் கூறினாள்.

       மகள் மனதில் ஆசையில்லையென்ற எண்ணத்தில் தான் இத்தனை நாள் சர்வேஷை எட்டி நிறுத்தியது. ஆனால் அவளே வளையலை மறைத்து அணிந்திருக்க அம்புஜம் மகள் மனதை அறிந்துக் கொண்டாள்.

   கேள்விக் கேட்டோ, வளையலை கழட்டவோ கூறவில்லை. கிருஷ்ணனிடம் விஷயத்தைக் கூறவும் தன் நெஞ்சில் கையை வைத்தவர், "நாளை மறுநாள் அபரஞ்சிக்கு பதினெட்டு வயது. குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக்கோ" என்று கண்ணாடியை துடைத்தபடி சென்றார்.

     சர்வேஷுக்கு இத்தனை நாட்கள் வராத சண்டை இந்த ஒரு மாதத்தில் எழும்புகிறதே... அதுவும் அபரஞ்சிக்கு பதினெட்டு தொடவும் பிரச்சனையும் துவங்குகிறதே என்ற பயம் அவனை ஆட்டி படைத்தது.

       சர்வேஷ் கண்ணை மூட யாரோ ஒருவர் புகைமயமாக வந்து, பிறந்த நாள் முடிந்தப்பின் அவளைக் காப்பாற்று. நான் தான் அவளைக் காப்பாற்ற இயலாதவனாக மாறி நின்றேன். நீ அப்படி ஆகிவிடாதே. மீண்டும் ஜென்மம் தொடர விடாதே. உனக்குக் கேட்கும் குரல் வேறுயாருமில்லை. அது நீயே. நான் காக்க மறந்த இளவரசி அவளே அபரஞ்சியே. அபரஞ்சிக்கு ஆபத்து நெருங்கும் காலமிது பாதுகாத்து உனக்குச் சொந்தமாக்கு. " என்ற குரல் செவியில் பலத்த ஓசையோடு அதிர கூறி மறைந்தது. 

    நள்ளிரவு எழுந்து சர்வேஷ் நீரை அருந்தினான். அந்தக் கருப்பு உருவம் தன்னருகே இருப்பதாக உணர்ந்தாலும் அது அபரஞ்சிக்காகப் பேசியதில் அச்சமின்றி யோசித்தான்.

      நான் சந்தித்தால் தானே பிரச்சனை கூடும். அவளைப் பார்க்க போகாமல் இருந்தாலும் பிரச்சனை வருகிறதே. அதுவும் இத்தனை நாள் அருகே இருந்த பொழுது கூட அன்னைக்கு என் காதல் தெரியவில்லை. ஆனால் தற்போது சந்தித்து வளையலை அணிவித்தது வரை யார் கூறியிருப்பார்கள்.

      இன்று தன் பிறந்த நாள் ஆனாலும் எந்தவொரு பிடிப்பும் வரவில்லை. எப்பொழுதும் தன் பழைய வீட்டில் அருகே இருக்கும் கோவில் சென்று வணங்கி அங்கே இருக்கும் ஆட்களுக்கு உணவு வழங்கிவிட்டு வருவது அவளின் வழக்கம். இன்றோ அது குறையாகத் தோன்றியது.

    இத்தனைக்கும் தங்கள் கல்லூரிக்கு அருகே இருக்கும் ஒர் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று வந்தும் அந்தத் திருப்தி கிடைக்கவில்லை. அந்தக் கோவிலுக்குப் போக முடியவில்லையே. அந்தக் கோவிலில் என்னவோ தனக்குப் பூர்வ ஜென்ம பந்தம் போலப் படிக்கரைக்குப் பக்கத்தில் காக்கைக்குச் சாதம் வைத்து மீனுக்குப் பொறியிட்டு என்று எண்ணுகையிலே உதட்டில் புன்னகை அரும்பியது.

     அம்புஜம் "என்ன சிரிப்பு வீட்டுக்கு போகலாம்." என்று அழைத்துச் சென்றாள்.

   கோவிலில் திரும்பி திரும்பி பார்த்து பிறந்தநாள் வந்திடுச்சு. கடவுளே எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கடந்தார்.

     வீட்டு வாசலில் மல்லிகா நின்றிருந்தாள். "ஹேய் மல்லி" என்று தன் வீட்டுக்கு ஓட, செங்கல் தடுக்கி விழுந்தாள்.

     அங்கே சிகரட்டை ஊதிக்கொண்டிருந்த மோகன் வந்து பிடிப்பதற்குள் கீழே விழந்து சிராய்த்திருந்தது.

     "என்னங்க பார்த்து வரக்கூடாதா." என்று எழுப்ப கை கொடுத்தான். அவளோ மல்லியின் கைப்பிடித்து எழுந்தாள்.

     "என்னடி நீ.... உன்னிடம் ஓரு விஷயம் சொல்ல வந்தேன். இப்படி விழுந்து வாறியிருக்க. அதுவும் பிறந்த நாளதுவுமா" என்று மல்லி தனது கைகுட்டையால் கட்டி முடித்தாள்.

     முட்டியில் சின்னதாய் இரத்தம் கசிந்தாலும் உடனே நின்றது.
 
     வீட்டுக்குள் அழைத்துப் பேச, அம்புஜம் காபி ஆற்றி வந்து தரவும், என்ன விஷயம் மல்லி என்ன பார்க்க இவ்ளோ தூரம். எப்பவும் வீட்டுக்குள் இருப்ப." என்று கேட்க மல்லி அமைதியாய் தலை கவிழந்தாள்.

     மோகனோ "மல்லிக்கு வரன் வந்துருக்கு. வர்ற வெள்ளி சின்னதா நிச்சயம் வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். எங்களுக்குத் தெரிந்தவங்கனு யாரிருக்க அதான் வீட்ல பெரியவங்களா அதே நேரத்துல மல்லிக்கு தோழியா உங்களை அழைக்க வந்தேன்." என்று கூறினான்.

      மோகன் சர்வேஷ்வரன் நண்பன் என்பதால் இவளை அங்கே வரவழைக்கச் செய்யும் நாடகமா என்று எண்ணினாலும் மல்லிக்கு நிஜமாகவே வரன் தகைத்து இருப்பது உண்மை தானே.

     "அம்மா அம்மா போகலாம் மா." என்று அபரஞ்சி கூறவும் அம்புஜம் "யோசித்து வர்றோம் மல்லி." என்று எடுத்துரைக்க விடைப்பெற்றுக் கிளம்பினார்கள்.

    அவர்கள் சென்றதும் "என்னம்மா நீ மல்லிக்கு நான் பெஸ்ட் பிரெண்ட் என்னைப் போகக் கூடாதுனு சொல்லறியே." என்று அபரஞ்சி சிணுங்கினாள்.

    "அங்க உன் அத்தை வீடு இருக்கு. இப்ப என் தங்கை வீடும் இருக்கு. போனா அங்கேயும் போக வேண்டியதா இருக்கும்." என்று அம்புஜம் மறுத்தார்.

    "எல்லோரும் அண்ணா தங்கை வீட்டுக்கு போக விரும்புவாங்க. நீ ஏன் மா தவிர்க்கிற?" என்று கேட்கவும் அம்புஜம் "உனக்குச் சொன்னா புரியாது" என்றவள் அவளை அறைக்குப் போகச் சொன்னாள்.

     இன்று மட்டும் தான் அந்தவூரில் இருந்சால் சர்வேஷ் அத்தான் இந்த வளையலை இன்று கொடுத்திருப்பாரோ." என்றவள் நினைவு தனக்கு வளையல் அணிவித்த நாளையை எண்ணி பார்த்தாள்.

     வீட்டிற்கு வரும் வழியில் கிருஷ்ணன் இனிப்பு வாங்கி வந்தமையால் தாமதமாக வந்து சேர, மல்லி மோகன் வந்ததைக் கூறி முடித்தாள் அம்புஜம்.
 
     "போவோம் மா எனக்கு வெள்ளிக்கிழமை அந்தவூர் வேலையிருக்கு. போனமுறை இருபதாயிரம் கடன் வாங்கின சிநேகிதன் பணத்தைத் திருப்பித் தருவதா சொன்னான். போகணும். சொந்த வீட்டுக்கு போனா இங்க எட்டி பார்ப்பதில்லை மதிக்கறதில்லைனு உங்கண்ணா ஊரில் சொல்லிட்டு இருக்கார். ஒரெட்டு பார்த்துட்டு வருவோம்." என்று கூறி உணவை உண்டு முடித்தார்.

    இரவு அபரஞ்சிக்கு அம்புஜம் அதைத் தெரிவித்ததும் மல்லியை பார்த்திடும் ஆர்வம் அதிகரித்தது.

    என்றுமில்லாமல் கூடுதலாகச் சர்வேஷ் அத்தானும் பார்ப்பேனே என்ற எண்ணங்கள் ஓடியது.    

     மோகன் சர்வேஷிடம் வந்து அபரஞ்சி அழைக்க மல்லியும் நானும் போனோம் டா. அநேகமா இங்க வெள்ளிக்கிழமை வந்தா வருவா." என்று கூறினான்.

     "அவளை ஏன் டா அழைக்கப் போன. அவளுக்கு இங்க வந்தா ஆபத்து." என்றான்.

    "என்னடா ஆபத்து வந்திடப்போகுது." என்று கேட்கவும்
 
    "அவளுக்கு ஆபத்து இருக்கு மோகன். என்னாலையோ என் குடும்பத்தாலையோ ஆபத்து என்றால் விலகியிருப்பது நல்லது டா" என்றாலும் சர்வேஷ் யோசனையோடு, "எனக்கும் அபரஞ்சியைப் பார்க்க ஆசையா இருக்கு." என்று அகன்றான்.

     கரும்புகையோ சர்வேஷை சுற்றி வட்டமிட்டாலும் யாரிடமிருந்து அபரஞ்சிக்கு ஆபத்து இருக்குமோ அவர்களிடமிருந்து தள்ளிநிறுத்த எண்ணினான்.

அபரஞ்சி தன் பிறந்தநாளிற்கு எடுத்த தாவானியை அணிந்து தர் நீண்ட சிகையில் தாய் கொடுத்த மல்லியை சூடி கண்ணாடி வளையலை அணிந்தவள் கண்ணாடி வளையலுக்குப் பார்டராகச் சர்வேஷ் கொடுத்தவையை அணிந்தாள். மறுபக்கம் வாட்ச் அணிந்து புறப்பட்டாள்.

அம்புஜம் தன்னிரு கையைத் திருஷ்டி சுழித்துச் சொடக்கிட்டு அழைத்துச் சென்றாள்.

கிருஷ்ணன் பணி முடித்து அப்படியே வருவதாகக் கூறிவிட்டார்.

மல்லி வீட்டிற்குச் செல்வதற்கு முன் அண்ணன் சந்திரசேகர் வீட்டுக்கு செல்ல இனிப்பு வாங்கினாள். கூடவே தங்கை கௌசல்யா வீடும் இருக்க அதிகமாவே வாங்கிக் கொண்டாள்.

போனதும் நிர்மலா வேண்டா வெறுப்பாக வரவேற்றார். அண்ணனும் அப்படியொன்றும் வரவேற்காதது எண்ணி உடனடியாகக் கிளம்பினார்.

"நான் அப்பவே சொன்னேன் இங்க வர வேண்டாம்னு" என்று நிறுத்தினாள்.

எயிரே சர்வேஷ் ஆடலரசன் நின்றிருந்தனர்.

அபரஞ்சி பார்வை சர்வேஷரனை நோக்கவும் ஆடலரசன் எல்லாம் புரியத்துவங்கியது.

தான் மட்டும் அபரஞ்சியை விரும்பி இருக்கின்றோம். அவள் அல்ல.. அப்படியென்றால் என்னோடு கடிதத்தில் பேசியது யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் வீட்டுக்குள் அமைதியாகக் கடந்து வந்தான். நிர்மலாவுக்கோ வயிறு பற்றி எரிந்தது. தன் இரு மகனும் அபரஞ்சியைப் பார்த்து நிற்பது கண்டு, ஆடலரசனாவது தனது அதட்டலில்(?), வந்ததால் கர்வம் கொண்டலும், சர்வேஷ் அப்படிக் கடக்காமல் அவளையே விழியில் நிரப்பிக் கொள்வது எரிச்சலை தந்தது.

இதில் சர்வேஷ் அவளையும் அவள் அணிந்த வளையலையும் கண்டு உதட்டோர புன்னகை உதிர்க்க, அபரஞ்சி தன் கீழ் உதட்டை பற்களில் கடித்துத் தன்னிலை அறிந்துக் கொண்டானோ என்று குறும்புடன் நடந்தால் கள்ளி.

சர்வேஷ் எதுவும் பேச முயலவில்லை. அத்தையிடமும் எப்ப வந்திங்க அத்தை நலமா? என்றதோடு நிறுத்தி கொண்டான்.

கௌசல்யா வீட்டுக்கு போக அங்கே ஆனந்தும் கௌசல்யாவும் வரவேற்றனர். இனிப்புப் பழம் வாங்கி முடித்து மனிஷாவுக்கும் சர்வேஷுக்கும் திருமணம் பேசி வைத்ததைக் கூறி மகிழ்ந்தார்கள்.

முக்கியமாக அந்தச் செய்தி கேட்டு அபரஞ்சி சோகமாகக் கண்டு பெரிதும் மகிழ செய்தனர்.

அம்புஜமோ சர்வேஷுக்கு மணமாகிவிட்டால் அபரஞ்சி பிரச்சனை நேராது என்பதால் அச்செய்தி அப்படியொன்றும் பாதிக்கவில்லை.

மனிஷாவும் செல்பில் இருந்த பொருட்களைக் காட்டி இது சர்வேஷ் அத்தான் வாங்கித் தந்தது என்று கடை பரப்பினாள். அபரஞ்சிக்கு ஒர் ஞானச்சிரிப்பு மட்டும் தோன்றியது.

அதற்குள் மல்லி எதிர் வீட்டில் எட்டி பார்க்க, அங்கே சென்று வருவதாக ஓடினாள்.

அபரஞ்சியை இத்தனை பொருட்கள் காட்டி அழ வைக்க எண்ணினால் அவளோ சிரித்துவிட்டுக் கடந்தது எரிச்சலை தந்தது மனிஷாவுக்கு.

மனிஷா முகம் வருந்த இன்று ஏதேனும் அவளை அழ வைத்து அனுப்பவே இரு குடும்பமும் திட்டமிட்டனர்.

ஆனால்....விதி... அழு வைக்க மட்டுமா செய்யும்..?

கருப்புருவம் கூடவே இரு குடும்பத்தின் தீய எண்ணங்களில் என்ன செய்தாலும் உடனடியாகச் சர்வேஷிடம் சொல்லி தடுக்க ஆன்மாவாகப் பேயாகவே அலைந்தான் இளவழகன்.

மல்லி குச்சிக்கு சேலைக்கட்டி நிறுத்தியதாக நின்றிருந்தாள்.

தலையைக் குனிந்து படியவாரிய பின்னலில் கனங்காபரமும் மல்லியும் ஏகத்திற்கு முடித்திருந்தனர்.

பெண் பார்த்து முடித்துத் தட்டு மாற்றிய பின் வந்திருந்தாள் அபரஞ்சி.

அதனால் மாப்பிள்ளை ஓரமாகப் பார்ததுவிட்டு, மல்லியை சீண்டினாள்.

மல்லி எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அபரஞ்சியைக் கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகையை மாற்றவே மோகன் "பாயாசம் ஆறிடறதுக்குள் கொண்டு போய்ச் சர்வேஷ் வீட்டுக்கும் மனிஷாவீட்டுக்கும் கொடு போ" என்று அனுப்பினான்.

மல்லி பேசிட்டு இரு ரஞ்சி வந்திடறேன்" என்று கொடுக்கச் சென்றாள்.

அங்கே கையோடு அவளே டம்பளரில் ஊற்றி கொடுத்துத் தட்டில் விநியோகித்து விட்டு வந்தாள்.

அதே நேரம் மோகன் தயங்கி தயங்கி பேச வந்தான். தன் தந்தை வந்ததும் சர்ர்.. சர்வேஷ் பார்த்தியா ரஞ்சி. வளையல் பிடிச்சிருக்கோ... கையிலே போட்டுயிருக்க." என்றான்.

"அம்மா... போட்டுக்கச் சொன்னாங்க அதான். என்றவள் மல்லியை அழைத்துக் கோவிலுக்குப் போகவா என்று கேட்கவும் சரியென்று கூறிவிட்டான்.

மல்லி வரவும் இருவரும் கோவிலுக்கு வந்தார்கள். மல்லி சோகமாக அமர்ந்திருக்க, மறுபக்கம் கோவிலுக்குக் கூடப் போகாமல் பொரியை வாங்கி மீனுக்குத் தூவினாள் அபரஞசி.

ஆடலரசன் மெல்ல நடையிட்டு முன் வந்தான். சர்வேஷை விரும்புகிறவளிடம் தான் எண்ண கேட்டிடயியலும் ஆனாலும் அவளின் இந்த நளினமும் அழகும் அவளை இரசித்துக் கொண்டிருந்தான்.

சட்டெனச் சர்வேஷ் அங்கு வந்து ஆடலரசனை அணைத்து "உனக்கு விசா கிடைத்திடுச்சு. நீ படிக்க அமெரிக்கா போகப் போற டா." என்று இனிப்பை ஊட்டினான்.

"இங்க என்ன பண்ணற அம்மா அங்க நாழி ஆகுதுனு உன் பெயரை ஏலம் விடறாங்க. வா" என்று சர்வேஷ் அழைத்துச் செல்ல கருப்புருவம் என்ன கொடுமை ஆடலரசா நீ என் தேவதையை விரும்பினாயா? என்று சினத்தில் சிவந்தது.

அதே நேரம் சர்வேஷ் நீயாவது வந்து நில்லு" என்ற குரலில் அவனும் கூடவே சென்றான்.

அந்தப்பக்கம் அழைக்கத் தாயோடு பேசிக் கொண்டிருந்தனர். கோவிலுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் ஆடலரசனின் படிப்பு கிடைத்த இடத்தை அளந்து கொண்டிருந்தார் நிர்மலா. கூடவே மனிஷாவும்.

ஆடலரசனுக்கு எதிலும் லயிப்பு தோன்றாது மீண்டும் அபரஞ்சியைத் தேடி படித்துறைக்கு வந்தான். அதே நேரம் கௌசல்யா தன்னோட கைக்குட்டை அந்தத் தெப்பத்தில் செல்வதைக் கண்டு எடுத்து தர முயன்றாள்.

குளத்தின் ஆழம் அபரஞ்சி அறியாததல்ல. ஆனாலும் கேட்டது தன் சித்தி கௌசல்யா என்றதும் எடுக்க முயல அது தன்னை உள்ளே இழுத்தது.

சித்தி வழுக்குது யாரையாவது கூப்பிடுங்க. என்று மூழ்கியபடி கத்தினாள்.

"அய்யோ ரஞ்சி..." என்று ஆடலரசன் ஓடி வர, நிர்மலா தன் இளையமகனின் பின்னால் வந்தவர் அவனைப் பிடித்துக் கொண்டு, "என்னடா பண்ணற... இங்கயேயிரு. அவ போய்த் தொலையட்டும். என்னங்க இவன் கூடயிருந்தா காரியத்தைக் கெடுத்துடுவான் அழைச்சிட்டு போங்க" என்று நிர்மலா ஆடலரசனை அழைத்துச் செல்ல உத்தரவிட்டபடி கௌசல்யாவோடு மறைவாக நின்றார்.

மல்லியோ தனக்குப் பிடிக்காத திருமணத்தை எண்ணி கோவிலில் சுற்றி கொண்டிருந்தாள்.

அபர்ஞசியோ கடைசி மொழியாக "சர்வேஷ் அத்தான்" என்ற பெயரை உச்சரித்து மூழ்கினாள்.

சர்வேஷை இங்கு மனிஷா பிடித்துக் கொண்டு விடாது தனக்குக் கண்ணாடி வளையலை வாங்கித் தர அடம் பிடித்தாள். தன்னவளை தவிர மற்ற எவளுக்கும் கண்ணாடி வளையலை கூட வாங்கித் தர மறுத்தான்.

அவளிடம் மறுத்துவிட்டுப் படித்துறையில் வர, மூழ்கும் அபரஞசியின் கையைப் பற்ற அவன் அளித்த வளையலில் ஒன்று அவன் கையோடு வந்ததே தவிர அவள் முற்றிலும் மூழ்கினாள்.

அதில் அதிர்ந்து முடித்து நின்றவன் வாயில் தானாக இரத்தம் வழிய அவனுமே உயிரை விட்டான்.

இவர்களை அழிக்க எண்ணிய மற்றவர்களும் அது போலவே வாயில் இரத்தம் வழிய உயிரை துறந்தார்கள்.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.


    

    

     

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு