சிரமமில்லாமல் சில கொலைகள்-20

 


🩸-20

      தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என்று மெர்லின் உயிர் காக்க வேண்டுமென ஜாஸ்மின் காத்திருக்க, மெர்லின் "நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்" என்று நொடியில் ஓடினாள்.

    ஜாஸ்மினுக்கு எதுவும் சரியென்று படவில்லை. சர்வேஷ் சென்றதும் மெர்லின் செல்வது அவளுக்குள் மோகன் யாரென சர்வேஷ் அறிந்துவிட்டானென புரியத்துவங்கியது.

      அவளின் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆரோலும் பின் தொடர்ந்தான்.

    தபித்தாளுக்கும் கிறிஸ்டோபருக்கும் ரெப்ரெஷ் ஆகி வருவதற்குள் நால்வரையும் காணாது இறைவனை தான் துதிக்க ஆரம்பித்தார்கள்.

      மெர்லினோடு இளவழகன் வருவதாலும் சர்வேஷ் விலாசம் சாந்தனு கூறியதிலும் மெர்லின் அமைதியாக வந்துக் கொண்டிருந்தாள்.

   ஜாஸ்மினோ குறுக்கு வழியில் சர்வேஷ் வீட்டை அடைந்து அவனிடம் மோகன் யாரென அறிய வேகமெடுத்தாள்.

       இளவழகன் அறைக்கு வர, சாந்தனுவை கண்டு திடுக்கிட்டான். கூடவேயிருந்தவனை இன்றளவு கண்டறியமுடியாத முட்டாளாக இருந்த தன்னறிவு தானே சாடி திட்டினான்.

    மெர்லின் வரவும் சாந்தனு மெய் மறந்தவனாக அவளின் முன் மண்டியிட்டு தலை சாய்த்தான்.

     "உன்னை வரவேற்கிறேன் ரதியே" என்றான்.

     "யவனா... நீ இங்கு வந்தது தவறு" என்று இளவழகன் ஆன்மா அவளை கிளம்ப சொல்லியது.

   அதே நேரம் ஜாஸ்மின் இறங்கி வர, துப்பாக்கி மெர்லின் நெற்றியில் வைத்தான்.

     "நீ தவறு மேல தவறு செய்கின்றாய் ஆதவா." என்றாள் ஜாஸ்மின்.

     "தங்கையாய் இருந்த பொழுதிலே என் உயிரை வாங்கிய மரிக்கொழுந்தே. உன் இராஜ விஸ்வாசம் வாழ்க. ஆனால் இனியும் உன் நஞ்சில் சாக மாட்டான் இந்த ஆதவன்." என்று கத்தினான் சாந்தனு.

     "இளவழகா.. அங்க என்ன சுற்றி சுற்றி பார்க்கற... அவனை ஒரே போட போடலையா.? என்றான் சர்வேஷ்.
   
     "அது சாத்தியமில்லாதது சர்வேஷ். ஏற்கனவே எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டேன். எப்ப எனக்கு ஆதவன் மோகன் நினைவு வந்ததோ அப்பவே சாமியாரை தேடி போய் என்னை பாதுகாக்க என்ன செய்யணுமோ செய்துட்டேன்.

    பின்ன மனுஷன்னா கன் பாயிண்டில் மிரட்டலாம். ஆவியை என்ன செய்ய. நீ என்ன நண்பன் என்று அபரஞ்சியை விட்டு தருவியா. இல்லை இளவழகன் தான் யவனரதி ஆதவனுக்குனு விடுவானா.
   
      என்னை பற்றி தெரிந்தவள் மரிக்கொழுந்து மட்டும் தான். அதனால தான் இத்தனை நாள் இளவழகன் ஆவி என்னை கண்டுப்பிடிக்கலை. எப்ப உனக்கு பழைய ஜென்மம் நினைவு வந்ததோ அப்பவே எந்த நிமிடமென்றாலும் இளவழகன் என் உயிரை எடுக்க முனைவதை அறிந்து கொண்டேன். இனி எந்த ஆன்மாவாலும் என்னை நெருங்க முடியாது.

   மெர்லின் கன் இருப்பதையும் பொருட்படுத்தாது சர்வேஷ் அருகே வந்தாள்.

       சாந்தனுவை பார்த்து, "ஏன் நீ உன் நண்பனுக்கு உன் காதலை விட்டு தர மாட்டியா ஆதவன். நான் மரிக்கொழுந்தோட விளையாட வந்து உன் மனசில காதலா விதைத்தா அதுக்கு நான் என்ன செய்ய? என்னோட வாழ்க்கையை என் இஷ்டப்பட்ட துணையோட வாழ நான் தானே முடிவெடுக்கணும். நீ என்னடானா எனக்காக இரண்டு ஜென்மத்துல இருக்கறவங்களை சாகடிச்சிருக்க. எனக்காகனு சொல்லாதே... உன் தவறான காதலை தடுக்க வருவாங்கனு பயந்து இரண்டு முறையும் மற்றவர்களை சாகடிச்சு இருக்க.

     யாருமில்லைனா உன்னோட அடைக்கலம் ஆவேன்னு நீயா முடிவு எடுத்தா அது யாரோட வாழ்க்கை.

   காதல் தானா வரணும். மோகனா இருந்தப்ப, சர்வேஷ் அத்தான் என்னை விரும்புதுனு தெரிஞ்சு, அவரை விட்டு மறந்து உன்னோட வாழ்வேனு நீ எப்படி முடிவு பண்ணலாம்.

      இதோ இப்பவும் நீயா சர்வேஷ் இல்லைனா நான் உன்னோட தஞ்சமாவேனு முடிவு பண்ணற. நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ தவறானவன் தெரிஞ்சப்பிறகும் லவ் பண்ணுவேனு நினைக்கிற. நான் சர்வேஷையே விரும்பலைனு சொல்லிட்டு இருக்கேன். இதுல நீ எக்ஸ்டாபிட்டிங்.

    உன்னை பார்த்தா கோபமா சாகடிக்கிற வெறி இருந்தது. ஆனா நீயும் இரண்டு ஜென்மம் எனக்காக வாழலை. முதல்ல உனக்கான வாழ்க்கையை வாழுங்க.

    உன் தங்கை இப்பவும் உன்னை அண்ணாவா ஏற்றுக்கணுமா? இல்லை வெறுக்கணுமானு முடிவு பண்ணு.

    அப்பறம் இளவழகன் இங்க வரமுடியாதுனு நினைக்காதே. நான் மனம் உருகி வேண்டினா என் அருகே அவரால வரமுடியும்" என்றாள்.

       சாந்தனு வியந்தபடி நின்றான்.

     "என்ன பார்க்கற உன்னருகே பத்தடி வரை இளவழகன் வரமுடியாதபடி கயிறை நீ கொண்டு வந்தா, என்னருகே மட்டும் வாழ வரம் வாங்கி வந்தவர் இளவழகன் அவரால வரமுடியாதா? என்ன பார்க்கற... அங்க பாரு..." என்று கைகாட்ட, அன்று பார்த்த அதே மரத்தடி சாமியார்.

     "இ... இவர்..?" என்று சாந்தனு தனது கழுத்தை மறைத்திருந்த தாயத்தை மறைக்க முயன்றான்.
 
      இளவழகனை இம்முறை மனதார ஏற்று முடிக்க, மெர்லின் முன் தன்னுருவம் பெற்று முன் வந்தான்.

     மெர்லின் தன் கையை அவன் முகத்தில் பதிய வைக்க அதுவோ காற்றில் தூழாவிய நிலையில் காட்சியானது.

     இளவழகனை முதல் முறையாக உருவமாக காண்கின்றாள்.

      தன்னிடம் காதலை பகிரவில்லையென்றாலும் தனக்காக தலை வெட்டி உயிர் துறந்தவன். என்ற எண்ணமும், அவனின் காதல் அன்று சொல்லவில்லை என்றாலும் இன்று அறிய முடிந்தது. அவனது ஒளிப்பெற்ற கண்கள் காதலோடு காப்பியம் படைத்தது.

      எனக்கே தெரியாம என் வாழ்வு சிதைந்து அதனால எத்தனை பேர் வாழ்வும் அநியாயமா வீணாகியிருக்கு. ஆசை பேராசை எல்லாம் வேண்டாம். நிம்மதியான வாழ்வை வாழ பழகுங்க." என்று கையெடுத்து வணங்கினாள்.

    அவளின் வணங்கும் நிலையை அறிந்து சாந்தனு மனம் சாய்ந்தாலும் அவளை விடவும் மனமில்லை அவனுக்கு.

     பால் நிறம், தளிர் உடல், ப்ரவுன் நிற கண்கள், சிப்பியாய் அவளுதடு என்று அவனை பித்தம் கொள்ள வைத்தது. விட்டு தர ஆண்மகன் மனம் மறுத்தது.

     இளவழகனோ தன் மாயத்தால் சர்வேஷின் பிடிகளை தளர்த்தி முடித்தான்.

        சர்வேஷ் ஒர் பக்கம் வந்து சாந்தனுவை பிடித்து கன்னை பறித்தான்.
 
    இளவழகனோ அவன் கயிறால் தானே இளவழகன் கொல்ல இயலாது தயங்குகின்றான் என்று கயிற்றை பிடுங்கி எறிந்தான்.

     சாந்தனு இளவழகனை கண்டும் சர்வேஷை கண்டும் அஞ்சி மெர்லினை தன் பக்கமாக இழுத்தான்.

    சர்வேஷை கன்னை பறித்தும் சாந்தனுவை சுட யோசித்தான்.

    "இங்க பாரு டா. என்னால ஒன்னுக்குள் ஒன்றா பழகி சாகடிக்க முடியலை. தயவு செய்து எங்க வாழ்விலிருந்து மொத்தமா போயிடு. என் கண்ணுல படாதே." என்று புல்லட்டை எல்லாம் எடுத்து தூரயெறிந்தான்.

    இளவழகனோ, தெரிந்தோ தெரியாமலோ யவனரதி இறப்புக்கு நீ காரணமல்ல. காரணமாக இருந்தவரை இரண்டு ஜென்மம் நீ கொன்றாய். இந்த ஜென்மத்தில் நான் கொன்று விட்டேன். இனியும் பிரச்சனை செய்யாதே. கடைசியாக மன்னிப்பளித்து போக சொல்கின்றோம். சாந்தனு கூறியபடி கண்ணில் அகப்படாமல் நல்லவனாக வாழ முயற்சி செய். நீயுமே இரு ஜென்மத்தை வீணாக்கி வாழாது தவிக்கின்றாய். உனக்கானவள் வருவாள்." என்று இளவழகன் பேசி முடித்தான்.

    அனைத்துக்கும் ஏளனமாக சிரிப்பை உதிர்த்தான் சாந்தனு.

     "மன்னிப்பு கேட்காம கொடுக்கறிங்களே. யாருக்கு வேண்டும். எனக்கு ரதி வேண்டும். யவனரதி வேண்டும் அவளை முத்தமிட்டு மஞ்சத்தில் ஆழ்த்தியப்பின் நானே கூட உயிர் துறக்கின்றேன்." என்று பேச, இளவழகன் வாள் பறந்து வர, அதற்கும் முன் ஒர் சின்னவூசி அவன் கையில் இறங்கியது.

    எறும்பு கடி போன்ற சின்ன வலி அவன் உணர்ந்து திரும்ப ஜாஸ்மின் நின்றிருந்தாள்.

     "இங்கு மன்னிப்பே கிடைக்காத தவறு செய்தும். அவர்கள் மன்னிப்பு வழங்கினார்கள். நீயோ... எச்சை கெட்ட பிறவியாக என் தோழியை துகிலுரிக்க துணிகின்றாய்.

      நீ மடிவது என் கையில் என்று மறந்து விட்டதா ஆதவா. யவனரதி இறப்பு வேண்டுமென்றால் உன்னால் நிகழாமல் இருக்கலாம். ஆனால் ஆடலரசன் இறப்பு உன்னால் மட்டுமே. அதற்கு வஞ்சம் தீர்க்க நான் வரமாட்டேன் என்று எண்ணி விட்டாயா?

    காதல் என்று கவிப்படைத்ததில்லை என்றாலும் கணவனாக எண்ணி வாழ்ந்தவள் நான். என் காதல் புனிதமில்லையா? அதை அழித்தது நீ.. உன்னை அழிக்க வந்தவள் நான். செத்தொழி ஆதவா...  மோகனாக வாழ்ந்தும் தாந்தனுவாக வாழ்ந்தும் மனிதனாக வாழவில்லை.

   பிறர் மனதை புரிந்து அவர் நலத்தை நாடவில்லை.

   காதலென்றால் தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லை என்றாலும் அவளை தூரத்திலிருந்து வாழ்த்துவது உண்மை நெஞ்சம் படைத்த காதலனின் உண்மை காதல்.

    உன்னோடயது இச்சை. காதலே அல்ல." என்று பத்ரகாளியாக மாறினாள் மரிக்கொழுந்தான ஜாஸ்மின்.

     தான் இறக்கின்றோம் என அறிந்த சாந்தனு பதுக்கி வைத்த கத்தியை எடுத்தான். அதை மெர்லின் மீது ஏறிய முயன்றான். ஆனால் ஜாஸ்மின் முன் வந்து தடுத்து அதனை தனக்காக ஏந்திக் கொண்டாள்.

     சாந்தனு கண்கள் ஏமாற்றம் கண்டு மெர்லினை சொல்லயியலா பார்வையை பதித்து விழுங்கினான்.
  
   அதில் வெறியா? தாபமா? மோகமா? அடையயியலா தவிப்பா? அது அக்கண்களுக்கே புரியும்.

     ஆடலரசன் உடனடியாக ஜாஸ்மினை கையில் ஏந்தி, "இங்க.. இங்க ஹாஸ்பிடல் பக்கத்துல எங்க இருக்கு?" என்றான்.

    சர்வேஷ் உடனடியாக காரை எடுத்து நிறுத்த அனைவரும் மருத்துவம் நோக்கி பயணித்தார்கள்.

      ஜாஸ்மின் கண்கள் சொருக, அவள் கன்னத்தை தட்டி, "எனக்கு சாகறதுன்னா பயம். வாழ தான் ஆசைப்பட்டேன். இப்ப நீ இல்லைனு சூழ்நிலை அமைந்தா... யோசிக்காம நானும் செத்துடுவேன் மல்லி." என்றான் ஆடலரசனாக ஆரோல்.
   
     கசந்த முறுவலை இதழில் உதிர்த்து ஐசியூ வார்டில் சேர்க்கப்பட்டாள் ஜாஸ்மின்.

     ஒவ்வொருத்தரும் நலம் பெற வேண்டினார்கள். ஆரோலோ கதவின் இடுக்கில் கண் பதித்து காததிருந்தான். முதல் ஜென்மம் அவள் விரும்பி இருக்கலாம். அதை நான் உணராது போயிருக்கலாம். ஆனால் அபரஞ்சி எனக்காக செய்தவை என்ற எல்லாம் மல்லி செய்தால் என்று அறிந்தப்பின் காதலும் அவளிடம் சேர்வது யானே நியாயம் என்பதாய் மாறி நின்றான்.

      சர்வேஷோ தான் ஒருவன் விரும்பியதையோ எண்ணி பார்க்காமல் தவிர்க்கும் மெர்லினை எண்ணி தானும் அவ்வாறே தணித்து இருக்க முடிவெடுத்தான் சர்வேஷ்.

     இளவழகன் ஆன்மா யவனரதியாக மெர்லின் தன்னை விரும்பியதுமே மாற்றம் பெற்றாலும் இக்காலத்தின் முடிவு தான் என்ன என்பதாய் காத்திருந்தான்.
     
    அவனும் ஜாஸ்மின் உகல்நிலை தேறி வந்து ஆடலரசனோடு வாழவே ஆசைக்கொண்டது.

   ஒர் வைத்தியரின் மகள் இளவரசனை ஆசைக்கொள்ள கூடாதா. முறையான காதல் இருவர் மனதில் தோன்றினாலும் அதை ஏற்பது காதலில் நியாயம் தானே.

     அந்த மரத்தடி சாமியார் பெண்ணவளின் நலம் பெறுவாள் என்று வாழ்த்தி புள்ளியாய் நடந்து மறைந்து போனார்.

       ஜாஸ்மின் கண் திறக்க கிரிஷ்டோபர் தபித்தாள் வந்து காணவும் சரியாக இருந்தது.

    அவளை வணங்கி தங்கள் குலத்தை காக்க வந்த தெய்வமாக வணங்கி நின்றனர்.

       கைகளை தட்டி முடித்து புன்னகை சிந்தினாள் மரிக்கொழுந்தாகிய ஜாஸ்மின்.

     அனைத்தும் சரியாய் முடியவும் மெர்லின் தனது தாய் தந்தையோடு தன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டாள். கூடவே விஸா பாஸ்போர்ட் ஏதுமின்றி இளவழகன் ஆன்மாவும் அவளோடு பயணம் செய்தது.

      இங்கு ஆரோலோ ஜாஸ்மினை கவனிக்க கூடவே இருந்தான்.

      சர்வேஷ் தனி வீடு பிடித்து அதில் அவன் மட்டும் வாழ ஆரம்பித்தான்.

   மெர்லினின் நினைவுகளோடு....

-🩸🩸🩸🩸🩸
-பிரவீணா தங்கராஜ்.

 அப்பறம் இந்த கதை genere எனக்கு புதுசு. பேய் கதை எல்லாம் பார்க்க மாட்டேன். என் பொண்ணு தான் நுண்ணோவியமானவளே கதை காமெடியா இருக்கு. ஹாரரா ஸ்கேர்டு ஆகற மாதிரி எழுத சொன்னா. என்னத்த எழுதினேனோ பயம் வந்த மாதிரி தெரியலை. பட் என் ட்ரை  இப்படி தான் இருக்குமோ என்னவோ. நமக்கு இதான் வருது. ஸ்மூத் லவ் பேமிலி ஸ்டோரி. 🥴

     பட் எனக்கு இது பிடிச்ச விதத்தில் கொடுத்த பீல். உங்க கருத்துக்காக காத்திருக்கேன்.
     
சிரமமில்லாமல் படித்ததிற்கு நன்றிகள் பல. இந்த கதை கொஞ்சபேர் தான் வாசிக்கறிங்க ஏன்னு தெரியலை.(நல்லா இல்லை சுமாரா இருந்தா அதான் நல்லாவே தெரியுது 😔)
  
    ஐய்... நானும் பேய் கதை எழுதிட்டேன் அவ்ளோ தான் என் சந்தோஷம். 🤭
   



 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு