சிரமமில்லாமல் சில கொலைகள்-15

   



🩸-15

    இளவழகன் யவனரதி காலம்

              யவனரதியும் தன் கண்களைப் பட்டுத்துணியில் பொத்தி கைகளைத் துழாவிக் கொண்டிருந்தாள்.

    பாகீரதி அவள் எட்டி பிடிக்கும் நேரம் எல்லாம் நழுவி ஓட அவளின் பாத கொலுசொலியின் இசை வைத்துப் பின் தொடர்ந்தாள்.
  
      ''யவனரதியே பார்த்து... செயற்கை  நீரோடை.." என்று கத்தவும்

      "பிடித்துவிட்டேன்" என்று கண்கட்டை அவிழ்க்க, அங்கே இளவழகன் நின்றிருந்தான்.

    "என்ன விளையாட்டு ரதி. சற்று நேரம் கடந்திருந்தாலும் நீரில் விழுந்து நனைந்து இருப்பாய்." என்று செப்பினான்.

    "பாகீரதி வந்ததால் சற்று விளையாட்டுக் குணம் எட்டி பார்த்துவிட்டது. நீருற்று தானே ஆறு அல்லவே அடித்துச் செல்ல. சற்று நனைந்திருப்பேன்." என்றவள் இளவழகனை கண்டு பேசவும்,

     "என்னிடம் அதிகம் வாயாடுபவள் நீ தான். பார்த்து உன்னைத் தூக்கி கொண்டு தனியிடம் சென்றிடுவேன். ஜாக்கிரதை" என்று இளவழகன் தனது மாமா கிருஷ்ணரிடம் அளாவ சென்றான்.

    "பாகீரதி எங்கே இருக்கின்றாய். நீ தேடிய கள்வன் வந்ததைக் கண்டாயா?" என்று தேட புதரிலிருந்து மறைந்திருந்த பாகீரதி எழுந்து வந்தாள்.

     "நீ முதலிலே என்னைக் கண் கட்டி கண்டறிய சொன்னாய் நான் செய்திருந்தால் இளவழகன் என்னைத் தீண்டி காப்பாற்றியிருப்பார்
எல்லாம் போனது. எனக்கு அவரை நேரில் காண அச்சம் யவனா... அதனால் அருகே வந்தால் மூர்ச்சையாகிவிடுவேன்." என்று மண்ணை நோக்கி பேசினாள்.

      இப்படியே நடந்தால் காலச்சக்கரம் பிறகு என் கையில் இளவழகனை கொண்டு சேர்த்திடும் பார்த்துக்கொள். ஏற்கனவே என்னிடம் வம்பு பேச்சை பேசுவார்." என்றதும் பாகீரதி முகம் செந்தணலாக மாறி நின்றாள்.

      "என்னை விட்டுவிட்டு இன்று விளையாட்டு துவக்கமாகி விட்டதா?" என்று குரல் ஒர் பக்கத்திலிருந்து  வந்தது.
 
     யவனரதி மேலிருந்த கோபம், மருத்துவரின் மகளானா மரிக்கொழுந்து மீது திரும்பியது.

      "ஒர் சாதரண வைத்தியரின் மகளுக்காக இராஜாவின் மகள்கள் நாங்கள் காத்திருக்க வேண்டுமோ." என்ற சுள்ளென்ற வார்த்தையை விட்டாள் பாகீரதி.

    "என்ன பேச்சு பாகீ. இவள் வைத்தியரின் மகள் மட்டும் அல்ல. எனது ஆருயிர் தோழியும் தான். நம்மை விட மாதத்தில் அகவை கூடுதல் கொண்டவளும். அதுவுமில்லாமல் விஷக்காய்ச்சல் கண்டு நீ மரணவாயிலில் இருந்தப்பொழுது உன்னைக் காப்பாற்றியவரின் மகள்.  அதற்காவது தக்க மரியாதை கொடு." என்று யவனரதி கூறி செருக்கோடு தன் தோழி மரிக்கொழுந்தை அழைத்துச் சென்றாள்.

     இரண்டு நாள் என்னோடு விளையாடி கதைக்கேட்டுச் சுமூகமாக இருந்த அக்கா தங்கை உறவில் ஒரே நாளில் சுழியம்(பூஜ்ஜியம்) கொண்டு விடுகிறாள்.

பாகீரதி கடுப்புடன் பின் தொடர்ந்தாள். பாகீரதி வயதில் பெரியவள். தன் பெரியம்மா மகள் யவனரதியை விட ஒரிரு மாதம் கூடுதலானவள்.

மாம்பழத்துண்டை அரிந்து வந்து அமுதம் தன் மகள் யவனரதிக்கு எடுத்து வந்தாள். ஆனால் கூடப் பாகீரதி மரிக்கொழுந்து கண்டதையும் முதலில் அவர்களுக்குக் கொடுக்கத் துவங்கினாள். அதனை உண்டு பேசி களிக்கச் செய்தனர்.

அப்பொழுது "பெட்டி நிறைய அணிகலன்களாக எடுத்து வந்து நீலமாயினி(நிர்மலா-மேரி) யவனரதியின் கழுத்தில் சிவப்பு கல் பதித்த மணிமாலையை அணிவித்தார்.

"என்ன அத்தையரே எனக்குப் பரிசா... எதற்கென்று அறியலாகுமோ?" என்று யவனரதி மகழிச்சி பொங்க கேட்டு முடித்தாள்.

"என் ஆருயிர் மருமகளின் பிறந்த நாள் வரப் போவதல்லவா அதற்கான சிறு அன்பளிப்பு." என்று அணிவித்துப் பாகீரதிக்கும் அணிவித்து முடித்தார்.

பாகீரதிக்கு அணிவித்த மாலையை விட அவள் கண்கள் யவனரதியின் மாலையில் கண் பதித்து இருந்தது.

இதில் மருமகளென்ற விளிப்பா... என்ற கடுப்பும் இருந்தது.

இளவழகன் தாயார் என்ற உரிமை பாகீரதியும் இணக்கமாகப் பேசினால் அதே வாஞ்சை இருந்தாலும் யவனரதியை போல மருமகளே என்ற அழைப்பு இல்லை அந்தவொன்று தான் முள்ளாய்த் தைத்தது பாகீரதிக்கு.

பாகீரதி தனதறைக்குச் செல்லவும் கூடவே செண்பா(கௌசல்யா-டெய்சி) தனது மகளின் அறைக்கு வந்து கதவை சாற்றினார்.

"விவரம் தெரிந்தவர்களுக்கு அப்பட்டமாகத் தெரியும் உமது சினம். எதற்குச் சடுதியில் இங்கு வந்துவிட்டாய்."

"பின்னர் என்ன செய்வதம்மா. அத்தைக்கு அவளைத் தான் பிடித்திருக்கிறது. நானும் நீ சொன்னது போல இளவரசன் இளவழகன் விரும்புகின்றேன் என்று யவனாவிடம் உரைத்து விட்டேன். அவளும் இளவரசரை காணும் பொழுது எட்டி நின்றாலும் அத்தை பேசும் வார்த்தைகள் கேட்டு எனக்குக் கசப்பை இயம்புகிறது." என்று முகத்தைத் தூக்கி வைத்தாள்.

"இதற்கெல்லாம் ஒர் முடிவு கட்டுகின்றேன். கலங்காதே." என்று வாக்கு தந்து நகர்ந்தார்.

இங்கு ஜோதிடரால் அறைவாங்கி நின்றான் சேவகன் ஆதவன்.

இளவழகன் கிருஷ்ணராஜன் வந்ததும் ஆதவன் ஒதுங்கி கொண்டான். அவர்களிடம் வனத்தேசம் சென்று வந்த பிறகு திருமண விஷயம் பேசலாம் என்று கூறி முடித்தார்.

திருமணம் விஷயம் என்றதும் இளவழகன் மனம் வெட்கம் கொண்டதை தடுக்கமுடியவில்லை.

கிருஷ்ணராஜன் தட்டி கொடுத்து வீடு திரும்பினார்.

வீட்டில் வந்து யவனரதிக்கு திருமண ஏற்பாடு என்று கூறி தடபுடலாக விழா போல உரக்க பரிச்சயமிட்டனர்.

யவனரதிக்குத் திக்கென்றது. பாகீரதி இளவழகனை அல்லவா விரும்புகின்றாள். யவனரதி பாகீயை தேட அவளோ அங்கு இல்லை. உடனே அவ்விடம் விட்டு நகர்ந்தாள் யவனரதி.

அதனை வெட்கம் என்று எண்ணிக் கொண்டார்கள்.

இளவழகனுக்கு அவள் வதனம் சொன்னது என்னவோ அமைதி என்பது புரிந்தாலும் அவன் நிறுத்தி கேட்கவில்லை.

"பாகீ எதற்கு இந்த அழுகை." என்று கேட்க , "ஓ... தெரியாதது போலக் கேட்கின்றாய்... என்ன நாடகம்" என்று அழுதாள்.

உன்னை விட வயதில் இரு மாதம் பெரியவள் நான். அப்படியிருக்க என்னைத் தேர்ந்தெடுக்கவில்லையே... இளவழகனை நான் எனது கணவனாக அல்லவா பூஜிக்கிறேன்." என்று அரற்றினாள்.

யவனரதி எவ்வளவோ எடுத்து பேசி கலக்கம் போக்க எண்ணியும் அறையில் இருந்து வெறியேற்றினாளே தவிர அரற்றிக் கொண்டேயிருந்தாள்.

பெரியவர்களோ பெரியத்தை மகள் என்ற விதத்தில் பார்த்தனரே தவிர மாதத்தினைக் கணக்கில் வைக்கவில்லை.

ஆதவன் தங்கையோ, இளவரசனை விரும்பியது தவறா அண்ணா... ஏன் தடை செய்கின்றாய்... உனக்கு இப்படி ராஜ குடும்பத்துப் பெண் மீது காதல் தோன்றினால் அப்பொழுது என் வலி புரியும் என்று மரிக்கொழுந்து அழுதபடி சென்றாள்.

எப்படிப் புரியவைப்பேன். கடவுளே... என்று ஆதவன் இடியாக அமர்ந்தான்.

திருமணம் என்றதும் இருவரின் ஜாதகம் பார்க்க பல்லாக்கில் பெண்கள் ஜோதிடரின் இடம் தேடி வந்தார்கள்.

வந்தவர்கள் முகம் மலர நற்செய்தியான திகதியை எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் ஜோதிடனோ இடிப்போன்ற செய்தியை தலையில் இறக்கினார்கள்.

இத்திருமணம் நடந்தால் இளவரசர்களின் உயிருக்கு ஆபத்து என்று பொய்யுரைத்தார். யவனரதிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகக் கூறினார்.

நீலமாயினி இம்முறை மகனுக்கு என்று பார்க்க ஆரம்பித்து இதற்கு என்ன செய்யலாம் அய்யா என்று அவரிடமே கேட்டு விட்டுப் பதிலுக்காய்க் காத்திருந்தார்.

யவனரதி ஜாதகம் அமோகமானது. என்ன மாங்கல்ய தோஷம் மட்டும் இடிக்கின்றது.

ஆனால் பாருங்க உங்க குடும்பத்தில் இப்படிப்பட்ட கண்ணிப்பெண் மனமுவந்து உயிர் துறந்தா இந்த நாட்டில் பாதிக்கு உங்க கொடி தான் பறக்கும்.

நீங்க எந்தத் தேசத்தில் கால் பதித்தாலும் வெற்றி தான்." என்று சந்தேகம் வராத அளவுக்கு இடையே தீயதை சொருகவும் அதைப் பற்றிக் கேட்க துவங்கினார்கள்.

அதாவது திருமணமாகதா கண்ணிப் பெண்ணின் உங்க குடும்பத்தில் பதினெட்டு தொட்டதும் உங்க குலதெய்வ கோவிலின் முன்ன குழியிலிட்டு புதைத்தா நாடும் தேசமும் விரிந்து கடல் கடந்து உங்க ஆட்சி அமையும். உங்க ராஜ பெயர் கல்வெட்டில் பொறித்து வரலாறு பேசும்" என்பதாகக் கூற,

"அப்படின்னா அவளையே நினைத்து இருக்கற என் மகன் இளவழகனின் கதி?" என்று நீலாயினி(நிர்மலா-மேரி) கேட்க, சந்திரசித்தன்(சந்திரசேகர-ஜார்ஜ்) உடனே "அவள் என் தமக்கை மகள் நீலா" என்றார்.

"சற்று அமைதி காணுங்கள். உங்களுக்கு இன்னொரு தங்கையும் தங்கை மகளும் உண்டு. என் மகன் இந்தத் தேசம் மட்டும் ஆள்வதா... ஈரேழு தேசம் ஆண்டுப் பெயர் வாங்க ஒர் அதிசயசக்தி கிட்டியுள்ளது." என்று வாயடைக்கச் செய்தார்.

"நீ மருமகளென்று வாய் நிறைய அழைத்தவள் அவள் எப்படியம்மா.?" என்று சந்திரசித்தன் கேட்டதும்

"மூத்த தங்கை மகள் என்ற அன்பு இருந்தது. தாங்கள் ஏன் இரண்டாம் தங்கையை எண்ணிடவில்லை. அவளைப் பெண் கொடுத்து என்னைப் பெண் எடுத்து இருக்கின்றீர். அவளை மருமகளென அழைத்துக் கொள்வோம். ஜோதிடர் கணிப்பில் இதுவரை நடக்காதது உண்டா. இந்தத் தேசத்தின் முடி சூட கிருஷ்ணனே அழைத்துத் திருமணத்துக்கு முன்பே ராஜாவாக ஆக்குவார் என்று கூறியது. நடந்ததா இல்லையா. அதே போல ஒர் உயிர் விஷக்காய்ச்சலில் உயிரைக்குப் போராடி மீண்டு வரும் என்றார் எல்லாம் நடந்தது தானே. ஏன் பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சூழ்நிலையில் தான் தங்களுக்கு மனைவி வாய்ப்பாள் என்பதும் உண்மை ஆனதுதானே. இதை மட்டும் மறுப்பது எப்படி." என்று கேட்டதும்

"யவனரதி உயிர் துறப்பது எளிதல்ல. கிருஷ்ணன் சும்மா கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான். அவனுக்கு இந்தத் தேசத்தில் விஸ்வாசமான நண்பர்கள் உண்டு. அதிலும் அமுதம்(தபித்தாள்-அம்புஜம்) விட்டு ஒதுங்குவாளா?" என்று துளைத்தார்.

" அனைத்தும் பார்த்து கொள்வோம்." என்று ஜோதிடரிடம் வணக்கம் வைத்துப் புறப்பட்டார்கள்.

அவர்கள் சென்றதும் செண்பா(கௌசல்யா-டெய்சி) வந்து வணக்கம் வைத்து பெரிய பேழைகள் நிரம்பத் தங்கம் வைடூரியம் மாணிக்கம் ரூபி என்று பரிசை குவித்து அகன்றார்.

இங்கு வந்து ஒன்றும் அறியாமல் சின்ன அண்ணியின் மகளைப் பாகீரதியை வருடி தோள் அணைக்க, அதிபனிடம்(ஆனந்த்-ஆண்டர்சன்) நீலமாயினி விவரித்துக் கூறி தன் திட்டத்துக்கு வழி வகுத்தாள் பாகீரதியை மருமகளாக்கி இத்தேசத்தின் ராணியாக முடிச்சூடி அழகு பார்ப்பதாகப் பேசினாள்.

செண்பா மறுப்பது போலப் பேசினாலும் ஜோதிடரிடம் யவனரதியை இப்படி ஆளாக்க திட்டம் வகுத்ததே அவர் தானே. செண்பா ஒன்றும் சந்திரசித்தன் அமுதத்தின் கூடப் பிறந்த தங்கை அல்ல. செண்பாவின் தாய் தந்தையர் இறந்திடவும் அமுதத்தின் தாய் தந்தையர் வளர்ப்பில் கூடவே தங்கையாக வளர்ந்தவர்.

எங்கே தனித்துக் கொடுத்துத் தங்கை பிரிந்திட நேரிடும் என்று தான் சந்திரசித்தன் பெண் எடுத்துப் பெண் கொடுத்து என்ற ரீதியில் அமுதத்தின் பெற்றோர் ஏற்பாடு செய்து வைத்து இறைவனடி சேர்ந்தது. இன்று அதுவே பகைப்பாராட்டி நட்பு சகிதம் முடித்துப் பெரியவளின் பேத்தி வாழ்வை சூனியமாக்க செய்யத் திட்டம் வகுத்தனர்.

எப்படி யவனரதியை தனியாக அழைத்துச் சென்று இந்த ஜோதிட பலியை செய்ய என்ற யோசனையில் திளைத்தனர். செண்பாவே யவனரதி தங்கள் குலத்தெய்வ கோவிலுக்கு என்றுமே வராமல் இருந்ததில்லை. அன்று இந்த இடத்தில் வைத்து அவள் கதை முடித்திட எண்ணினர்.

அன்றைய நாட்களில் கிருஷ்ணராஜன் வனத்தேசத்து ஆதிவாசிகளைக் காண செல்வதாக இருந்தது. அவர்களைக் கண்டு தேவையைப் போக்க சில பணமூட்டையும் நாட்டில் விளைந்த விளைச்சல் தானியத்தையும் எடுத்துக் கொண்டு காண சென்றார்.

இங்கே அமுதம் தனது மகளுக்குக் கடைசி முறையாகச் சீவி தலையலங்கரித்து உச்சி முகர்ந்து அனுப்பினாள்.

கோவில் தீர்த்தம் வாங்கிப் பருகி முடிக்க மயக்கம் கொண்டு தள்ளாடினாள் யவனரதி.

தள்ளாடியவள் முன் மங்கலான உருவம் மற்றுமே வந்து நின்றது. தன்னை யார் யாரோ குழியில் தள்ளி மண்ணைப் போடுவதை மட்டும் உணர்ந்தாள்.

இந்தப் பிறவியில் தன்னை உயிர் போலன்று காதலித்தவன் இளவழகன் என்பதை அறியாமல் சென்றாள்.

அவனோ பாதி வழியில் சேவகன் ஒருவனின் கூற்றில் யவனரதியை காப்பாற்ற வந்து அது இயலாமல் போகவும், தன் தாய் தந்தையரை கொல்லும் வேகத்தில் வினா எழுப்பினான்.

யாவருமே அவன் நலன் என்ற ஒன்றை முன் வைத்து பேச அதைக் கேட்க பிடிக்காமல் அவள் இறந்த கோவிலில் முன் என் நலன் என்று பேசி பேசியே என்னவளை கொன்றுவிட்டீர்கள் அல்லவா. இனி உங்களுக்கு ஒர் மைந்தனே என்று தன் வாளாலே தன் தலையை வெட்டி கொண்டான்.

''இப்படித் தான் என் காலத்தில் நான் அவளை இழந்தது. ஆனால் அவளை விரும்பி மணந்து பேராசையாக வாழ நினைத்த என் ஆசைகள் என் ஆன்மாவிற்கு மோட்சம் அடையவிடவில்லை.

என் ஆன்மா அங்கேயே சுற்றி இருக்க, சில நொடிகளில் தான் புரிந்தது. என் தாய் தந்தையர் தம்பி சின்னத்தைப் பாகீரதி என்று அனைவருமே ஒன்றன் பின் ஒன்றாக மாண்டார்கள். இது எப்படிச் சாத்தியம் என்று அறிய முற்பட்டேன். அறிய முடியவில்லை.

என் ஆன்மாவின் தினசரி வேண்டுதல் பலனாக என் மறுப்பிறவி அறிந்தேன். உனக்குக் குறிப்பிட்ட காலத்தில் என் குரல் செவியில் கேட்டது.

எனக்கு நடந்தவையைப் போலவே உனக்கு நடக்ககூடாதென உன்னை அறிவுறுத்தினேன். யவனரதியின் மறுப்பிறவியான அபரஞ்சியைப் பாதுகாக்க சொன்னேன். ஆனால் அடுத்த முறையும் அவளாகவே தெப்பக்குளத்தில் மூழ்கிட உதவியின்றிச் சாகடிக்கப்பட்டாள்.

அவளுக்குக் கெடு நினைத்தவர்களும் போன முறை போல இறந்தார்கள். அதனால் தான் உன் அருகே இருந்து காப்பாதை விட இம்முறை மெர்லினாக அவதரித்த யவனரதியின் அருகே இருந்து அவளைக் காக்க எண்ணினேன்.

அவளைக் குரோதமாகப் பார்ப்பவர்களை நானே கொன்றேன். இம்முறை பகைமை என்று யாரும் அருகே விடாது இருந்தேன்.

ஒர் கட்டத்தில் சர்வேஷிடம் சேர வேண்டுமே என்றதால் தான் இங்கு அழைத்து வந்தேன்." என்று இளவழகன் கரும்புகை கூறி முடித்தது.

"அப்போ... நம்மளை தவிர யாரோ ஒருத்தர் நம்ம குடும்பத்தையே கொல்ல எண்ணியிருக்காங்க அது யாரா இருக்கும்" என்று சர்வேஷ் பேச அதே எண்ணத்தில் தான் இளவழகனும் யோசித்ததான்.

மெர்லினுக்கோ யவனரதியாக இருந்த காலத்தில் தாம் இளவழகனை விரும்பலில்லை. அதனால் அவரின் மௌனமொழிகள் தனக்குப் புரியவில்லை. ஆனால் அபரஞ்சியாக இருந்த நேரம் சர்வேஷை விரும்பியதால் சர்வேஷிடம் தனக்கு நடந்தவை நினைவு இருக்கிறது. தற்போது இருக்கும் காலத்தில் ஒர் டிராவல் கையிடு என்ற ரீதியில் தான் சர்வேஷ் பழக்கம் இதுவரை தனக்குள் இதைத் தாண்டி வேறு எண்ணம் உதிக்கவில்லை. இறந்த பிறகும் இப்பொழுதும் அப்பொழுதும் யார் தங்களைத் தேடி வந்து பழி தீர்ப்பது. அதுவும் புரியவில்லையே... என்று எண்ணி அமர்ந்தாள்.

இங்கு ஆடலரசனோ கோவாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

கையில் கோவாவில் தன் பணத்தால் வாங்கிய புத்தம் புதிய தூப்பாக்கியை தடவி கொண்டு சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்தான்.

-🩸🩸🩸🩸🩸

பிரவீணா தங்கராஜ்.

hi
   யார் யார் பெயர் என்று தெரியுதா?

மெர்லின் -அபரஞ்சி-யவனரதி
சர்வேஷ்-சர்வேஷ்-இளவழகன்
லிசா-மனிஷா-பாகீரதி
ஆரோல்-ஆடலரசன்-ஆடலரசன்
தபித்தாள்-அம்புஜம்-அமுதம்(மெர்லின் தாய்)
கிரிஷ்டோபர்-கிருஷ்ணன்-கிருஷ்ணராஜன்(மெர்லின் தந்தை)
மேரி-நிர்மலா-நீலாயினி(சர்வேஷ் தாய்)
ஜார்ஜ்-சந்திரசேகர்-சந்திரசித்தன்(சர்வேஷ் தந்தை)
டெய்சி-கௌசல்யா-செண்பா(லிசா தாய்)
ஆண்டர்சன்-ஆனந்த்-அதிபன்(லிசா தந்தை)

மல்லி-மரிக்கொழுந்து மோகன்-ஆதவன்
  இனி ஆடலரசன் எதுக்கு வர்றான் அவன் என்ன செய்ய காத்திருக்கான் பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு