தீவிகை அவள் வரையனல் அவன்- 1

                        

     

   

     தீவிகை அவள் வரையனல் அவன் 

🪔 தீவிகை🔥 வரையனல் -1

         ரிசப்ஷன் பெண்ணிடம் தனது கார்டை கொடுத்து காத்திருந்தான் ஆரவ்.

    "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்றவள் அமர இருக்கும் அறையை சுட்டி காட்டி போனை எடுத்து, பேச ஆரம்பித்தாள்.

     ஆரவிற்கு பொறுமை என்பதே குறைவு அதிலும் வேண்டுமென்றே சீண்டப்படும் பொறுமையை உடனே கலந்து செல்வது அவன் சுபாவம்.

     ஆனால் தற்போது இந்த பணிக்கு பின் இருக்கும் சிலரின் நம்பிக்கைகாக காத்திருக்க துவங்கினான்.

     ஆம், அவனுக்கு பின்னால் இருக்கும் தொழிலாளருக்காக தனது சுபாவத்தை கொஞ்சமே தளர்த்தி உள்ளான்.

     ரிசப்ஷன் பெண் அமர சொன்ன இடத்தில் வந்தமர்ந்தான் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் காலை போட்டு இடங்களை அலசினான்.

     நல்ல கலை ரசனை காத்திருப்போர் நேரம் கலைரசனையாக மனம் மாறவே பிரபல ஓவியத்தினை பார்வைக்கு வைத்திருப்பார்கள் போல.

    ஆரவ் ஆறடி ஆண்மகன். முகம் அழுத்ததுடன் இருக்கும். அவன் முடிவுகளை போலவே. ஆனாலும் அம்முகத்தில் ஈர்க்கும் சக்தி உண்டு. கண்கள் செந்தணலாக காட்சியளித்து சினத்தை பிரதிபலித்தாலும் நங்கை மனம் அவனின் வதனத்தை தாங்கி தான் கண் பதிக்க முடியும். அத்தகைய வசீகரம். ஆளுமை...

   யாரின் பேச்சை கேட்டு முடிவெடுப்பவன் அல்ல. கண்ணால் கண்டு செவியால்  கேட்டு உண்மை உணர்ந்து ஆராய்பவன். அன்பை கடல் அளவு காட்டுவதில் இருக்கும் அதே சுபாவம். பிடிக்கவில்லை என்றால் அதை விட அதிகமாகவே வெறுப்பை வெளிப்படுத்துவான்.

      இந்த இடத்து முதலாளிக்கு இரசனை தான் என்றவன் மனம் முதலாளி என்றதும் அதில் சுணக்கம் உண்டானது. சே... இந்த முதலாளி என்றாலே இப்படி தானா? காத்திருக்க வைப்பதற்கே பிறந்தவர்கள். ஏன் சக மனிதன் காத்திருக்க வைக்க அப்படி ஆனந்தமோ என்றவன் கண்கள் எரிச்சலை அடக்கிக் கொண்டது.

    இந்த டீல் கிடைத்தால் அரசு கான்டிராக்ட் கிடைத்ததற்கு சமம். ஆர்வம் மேலோங்க நேரத்தை பார்த்தான். வந்து ஒரு மணி நேரம் தாண்டி விட்டது. இவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பார்களா?

     மணி இன்னும் பத்து நிமிடம் பார்ப்போம் அப்படியும் அழைக்கவில்லை என்றால் இந்த டீலை நானே வேண்டாமென்று சென்று விட வேண்டும். என்னதான் மற்றவருக்காக என்றாலும் ஒரு மணி நேரம் போதும் என் குணத்தை பிடித்து நிறுத்த. அதற்கு மேல் காத்திருக்க இந்த ஆரவ்வால் இயலாதவொன்று.

      இப்படி ஆரவ் எண்ணிக் கொண்டு இருக்க அவனின் அலைப்பேசி அழைத்தது. அதில் அன்னை சுபாங்கினி தான்.

     தொடுதிரையை நகர்த்தி, "சொல்லுங்கமா?" என்றான்.

     "என்னடா சொல்ல...? எல்லாரும் பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு பக்கத்தில வந்துட்டோம். நீ இன்னமும் வரலை. காலையில் என்ன சொன்ன? அம்மா நீங்க போங்க டான்னு நாலு மணிக்கு அந்த ஏரியா பழமுதிர் சோலை கடைக்கு முன்ன வந்து நிற்பேனென்று சொன்னியா இல்லையா. அக்காவுக்கு வாட்ஸப்ல இன்னமும் அந்த மேனஜர் பார்த்து பேசவே இல்லையென்று அனுப்பி இருக்க, இங்க பாரு ஆரவ் திருமணம் வேண்டாம் அது இது என்று திரும்ப ஆரம்பித்த என்னை உயிரோட பார்க்க முடியாது." என்று எமோஷனலாக பிளாக் மெயில் செய்ய,

     "அம்மா... நான் பெண்ணை கூட பார்க்க தேவையில்லை. நீ பார்த்தா போதும். தாலி கட்டறது என் பொறுப்பு. திருமணம் வேண்டாமென்று சத்தியமா சொல்ல மாட்டேன் போதுமா. தாராளமா பெண் பாருங்க. பிடிச்சிருந்தா தட்டை மாற்றி நாள் குறியுங்கள்.

இந்த எமோஷனல் பிளாக் மெயில் எல்லாம் கேட்டு நான் பயப்படற ஆளா... எனக்கு பிடிக்கலை என்றால் தரகரை வீட்ல காலெடுத்து வைக்க விடுவேனா. 

நான் மாற மாட்டேன். பெண்ணை நீங்களே முடிவு பண்ணுங்க. என்னை கேட்டா என் சிட்டுவேஷனை சொல்லுங்க."

     "சரி ஆரவ். நாங்க அப்ப பெண் வீட்டுக்கு போறோம். நல்லதா முடிச்சிட்டு போன் போடறேன்." என்று சுபாங்கினி தன் மகளிடம்,

    "வைஷ்ணவி... என் பையன் பேசியது கேட்டிச்சா. பொண்ணு வீட்டுக்கு போகலாம்." என்று கர்வமாக மொழிந்தார் தன் மகளிடம்.

     ஆரவ் போனை எடுத்து வைத்து நிமிர, "மேம் உங்களை வர சொன்னாங்க சார்" என்றாள் ரிசப்ஷன் பணிப்பெண்.

   "என்ன மேம்மா?" ஆரவிற்கு வியப்பாக அமைந்து.

    "ஆமா சார்." என்று கதவை சுட்டி காட்டி அவளிடம் சென்று அமர்ந்தாள். 
   
    பணிப்பெண் போனை எடுத்து பேச ஆரம்பிக்க, ஆரவ் வியப்பில் இருந்து கலைந்தவன் சாதரணமாக மாறினான். இந்த காலத்தில் பெண் விமானம் ஓட்டுகின்றாள். ஏவுகணை விடுத்து விண்ணிற்கு பறக்கின்றாள். அப்படியிருக்க கட்டிட பிரிவில் இருப்பது அப்படி என்ன அதிசயம் என்று நடந்தான்.

    கதவை திறக்க ஏசி அறைக்குள் சில்லென்ற இதம் அதிகமாகவே இருந்தது. 

     உள்ளே வந்தவன் திரும்பி இருந்த அந்த பாவையின் முகம் காண்பதற்குள் அங்கிருந்த பெயர்பலகையை கண்டான்.

     'மிஸ். சம்யுக்தா சுவாமிநாதன் என்று பளீர் எழுத்துக்கு பின் படிப்பை வரிசைப்படுத்தி இருந்ததை பார்த்ததும், அதே நொடி சம்யுக்தா திரும்பவும் சரியாய் இருந்தது.

     "டேக் யுவர் சீட் மிஸ்டர் ஆரவ் தருணேஷ் . சாரி... உங்களை அதிக நேரம் காத்திருக்க வைத்துட்டேன்" என்று பேசவும் அவனோ,

      "இது எப்பவும் நடப்பது தானே... முதலாளிகள் தனக்கு கீழே இருப்பவங்களை காத்திருக்க வைப்பது." என்று இந்நேரம் வரை காத்திருக்க வைத்ததற்கு குட்டு வைத்தே பதில் தந்தான்.

      ஆரவ் உங்க மாடல் பார்க்கலாமா என்று கேட்டதும் தனது லேப்டாப் மூலமாக அதனை புரஜக்டர் கனெக்ட் செய்து காட்டினான்.

      விளக்கமும் அளித்தான். சம்யுக்தா தனது பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே, ஓகே ஆரவ் யோசித்து எங்க கம்பெனிக்கு செட்டானா ஒப்பந்த கடிதம் அனுப்பறோம். யூ கேன் கோ நௌ" என்று கணிப்பொறி திரையில் பணியை மேற்கொள்ள ஆரவிற்கு அது எரிச்சலை தர எழுந்து வெளியேறினான்.

   அவன் எழுந்த கணமே நாற்காலி இரண்டாடி பின் நகர்ந்து அவன் சினத்தை மொழிந்து விட்டே சென்றது. அதை சம்யுக்யா பெரிதாக எண்ணவில்லை.

     டையை மெல்ல தளர்த்தி லிப்டில் இறங்கியவனின் சினமோ மேலேறி கொண்டு இருந்தது.

    கூடுதல் நேரம் அங்கே இருந்து இருந்தால் சம்யுக்யாவை அறைந்து இருந்தாலும் ஆச்சரியப் படுவதில்லை. திமிர் உடம்பெல்லாம் திமிர் என்றது அவனின் அழுத்தமான உதடுகள்.

       இன்றே ஒப்பந்தமாகி அதை நாளை பணியாட்களோடு பகிர்ந்து மகிழ்வை காண தான் தனக்கு பெண் பார்க்கும் படலத்திற்கு கூட போகாமல் இங்கு வந்தது.

    ஏமாற்றம்.... கடலை நோக்கி பயணிக்க வைக்க சாந்தோம் சர்ச் அருகே இருக்கும் பார்க்கிங் செய்துவிட்டு கடலை நோக்கி நடந்தான்.

      ஆரவ் கைகள் மணலில் தன் கரங்களால் குத்தி சினத்தை தணிக்க சில நேரம் கழிந்து, மணலில் சின்னதாய் ஒரு வீட்டை கட்டி முடித்தான்.

      எப்பொழுதும் இது நடக்கும். மணலில் கை சென்றாலே ஆரவ் மணல்வீட்டை கட்டி விடுவான். இன்றும் கட்டிவிட்டு தன் போனில் அதனை படம் பிடிக்கும் சமயம் எங்கிருந்தோ வந்த பந்து அவ்வீட்டை கலைத்தது.

   பந்து வந்த திக்கை பார்க்க அங்கே ஒரு சிறுமி ஆரவின் செந்தணல் கண்களை கண்டு அஞ்சி பயந்து பிஞ்சு கரத்தால் முகத்தை மூடி தன் கையின் இடுக்கு பகுதியில் அவனை கண்டது.

    கடலில் தனது பிம்பத்தை மறைக்கும் அந்த செவ்வானம் போல இருந்த ஆரவ் தன்னை கண்டு அஞ்சும் அந்த சிறுமியை அழைத்து பந்தை கையில் கொடுத்தான்.

    "சாரி அங்கிள்" என்று கையை பிடித்து அச்சிறுமி உரைக்கவும், மண்டியிட்டு, "இட்ஸ் ஓகே மா" என்றவன் உதடு சின்னதாய் முறுவல் தர அதில் அவன் அன்பு மனம் கண்டு விட்டாலோ என்னவோ சிறுமி அச்சமின்றி வண்ணத்துப்பூச்சியாய் பறந்தோடினாள்.

     நேரமாக வீட்டுக்கு புறப்பட்டான்.

      கதவை திறந்து அவன் பாட்டிற்கு அறைக்கு செல்ல முயன்றவனை,

   "நில்லுடா... என்ன ஏது என்று கேட்காம போனா என்ன அர்த்தம்? வைஷ்னவி சொன்னது போல தான் நடந்துக்கற?" என்று சுபாங்கினி பேசவும் புரியாது விழித்தான். அதற்கு பிறகு பெண் பார்க்கும் படலம் சென்றார்களே என்ற நினைவு வரவும்.

      "உப்ஸ் சாரி மா. என்ன பதில்... நான் வரலை என்று ஏதாவது பேசிட்டாங்களா." என்றான்.

     "ஒன்றுமில்லை.. உன்னை போட்டோவில் பிடித்து விட்டது. என்ன நாங்களும் பெண்ணை பார்க்க முடியலை. போட்டோவில் தான் பார்த்தோம். அவள் அலுவலகத்திலும் திடீரென இருக்க வேண்டிய சூழ்நிலை என்று போன் செய்து எங்களிடம் மன்னிப்பு கேட்ணு பேசினா. போட்டோ மட்டும் அம்மாவிடம் கொடுங்க பார்த்துக் கொள்ளறேன். மற்றபடி பெற்றோருக்கு சரியென்றால் நமக்கு பிடித்திருந்தா தட்டை மாற்ற சொல்லிட்டா. போட்டோவில் நல்லா தான் இருந்தா"

     "அய்யோ அம்மா இப்படி சொன்னா எப்படி அவனுக்கு பெண்ணோட புகைப்படம் காட்டுங்க"   என்று ஷிவானி கூறவும் சுபாங்கினி ஒரு கவரை எடுத்து கொடுத்தாள்.

    "போ... அறைக்கு சென்று நிதானமா பாரு. நாளைக்கு தான் முடிவு சம்மதமா வேண்டாமா சொல்வதா நேரம் கேட்டு வந்து இருக்கோம்" என்றதும் வாங்கி கொண்டு வந்தான்.

        தனதறைக்கு வந்ததும் அதனை தூக்கி ஏறிந்தான். அவள் மேல் இருக்கும் சினம் அன்னையிடம் காட்டுவதா? ஏற்கனவே பட்டவை வடுவாக இருக்கும் பொழுது என்றவன் மனம் குமைந்தது.

     குளித்து முடித்து வந்தவன் தூர எறிந்த கவரை எரித்து பார்க்க, அதனை பார்க்க விரும்பாதவனாக கல்லாக இருந்தான்.

     ஆனால் அந்த கவர் கல் இல்லையே சாதரண பேப்பர் அல்லவா. பேனின் ஓட்டத்திற்கு பறக்க செய்து அவனின் கால் அருகே வந்து தஞ்சமடைந்தது. காலால் அதனை தள்ளி விட்டு பெருமூச்சொன்றை வெளியிட்டு திரும்பி பார்க்க மீண்டும் அவனின் காலில் வந்து படபடத்தது.

    வேண்டாவெறுப்பாக எடுத்து எரிய செல்ல அதுவோ வாய் திறந்து புகைப்படத்தை அவன் அருகே விழ வைத்து விட, தலைக்கீழான பிம்பத்தை தாங்கிய அப்புகைப்படம் எடுத்து திருப்பினான். 

    இது... இது அவள் தானே? என்றவன் மனம் அன்னை சொன்ன பெண்ணும் அலுவலகத்திலே எதிர்பார பணி காரணமாக வர இயலாத சூழ்நிலை காதில் மீண்டும் எதிரொலிக்க போட்டோவை பார்த்தான்.

     அழகான மங்கை தான். நிச்சயம் ஓப்புக் கொள்ள வேண்டும். ஆனால் ஆர்வ போன்றவனின் மனதில் அப்படி ஓன்றும் அதிர்வை உண்டாகிட வில்லை. ஏனென்றால் அப்பெண்ணின் செயலால் இருக்கலாம்.

     தூக்கி விட்டறிந்தான். அவனின் அலங்கார கண்ணாடி மேஜையில் சென்று விழுந்தன அப்புகைப்படம்.
    
       கதவு தட்டும் சத்தம் வர அன்னையாக தான் இருக்கும் என்று மனதில் திருமணத்தை பற்றிய முடிவில் பதிலுரைக்க வேண்டுமே என்று அலுத்துக் கொண்டு திறந்தான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்


Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு