முதல் முதலாய் ஒரு மெல்லிய-25

 

💘25


  ரகு பதுங்கிய புலி போல் பவித்ராவை நோட்டம் விட்டான். பவித்ரா மாடிக்கு சென்றுத் திரும்புகையில் ரகு வழிமறித்தான்.

''ஹலோ பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னை கண்டா பயம் இருக்கு போல ஓடி ஒளிஞ்சிக்குற'' என சீண்டினான்.


 ''உன்னை பார்த்து எனக்கு என்ன பயம். துஷ்டர்களை கண்டால் தூர விலகுனு சொல்வாங்க அதான் ஒதுங்கறேன்'' எனக் கூறி கீழே இறங்க, ரகு பவித்ராவின் கை பிடிக்க, ''பளார் '' என அறைந்தாள். இதை எதிர்பார்க்காத ரகு ஸ்தம்பித்தான். 
''
கை பிடிச்ச கொன்னுடுவேன். நான் அனாதையாவே இருந்தாலும் உனக்கு என்னடா. அத்துமீற செய்வியோ? இனி என்கிட்ட வந்த என் கையால தான் உனக்கு சாவு'' என சீறினாள்.


   கயல்விழி இதையெல்லாம் கீழே படிக்கட்டில் இருந்து கேட்டுக் கொண்டிருக்க பவித்ரா வேகமாக மங்கை அறைக்குச் சென்றாள்.


   அறையில் வந்து கட்டிலில் அமர்ந்தப் போது எப்படித் தனக்கு இத்தகைய தைரியம் என வியந்தாள். பின்பு தான் அஸ்வின் தொட்ட கையை இவன் பிடிக்க வந்த ஆவேசமென உணர்ந்தாள்.

   அடுத்த நாள் ஊருக்குக் கிளம்ப எடுத்து வைத்தாள். அஸ்வினுக்கு பிடிக்குமென தேடித் தேடி வேர்க்கடலையும் பாட்டியிடம் கூறி குழி பணியாரம், கடம்பம் பால், தனு சுவாதிக்கு மருதாணி என பையில் வைத்தாள்.


மங்கை பாட்டியோ ''இங்கே இருக்க கூடாதா பவித்ரா பாட்டியை விட்டு போகணுமா?'' என வருத்தமாய் கேட்டார்.
 

  ''இன்னும் ஒரு செமஸ்டர் பாட்டி அதுக்குப் பிறகு வந்துடுவேன்'' என கூறி பாட்டி தாத்தாவிடம் ஆசிப்பெற்று வருணின் தலையில் முத்தமிட்டு, தந்தையிடம் அணைப்பை விடுவித்து விடைப்பெற்றாள். கயல் கோவில் சென்று மகளுக்கு திருநீறு குங்குமம் எடுத்து ஓடி வரவும் பவித்ரா ஆங்கில்லை. நந்தன் மனைவியை எதுவும் கூறவில்லை. ஆனால் அதுவே கயலுக்கு வலித்தது. இன்னமும் தன்னை கணவர் ஒதுக்கம் காட்டுவதை உணர்ந்தார்.


   அஸ்வினை பார்க்கும் ஆவல் அவளுக்கு புதிய புத்துணர்ச்சியை தந்தது, இருந்தும் அவனை எப்படி எதிர் கொள்வது என்ற தயக்கமும் சேர்ந்தது.


ஸ்ரீராம் பவித்ராவிற்காக காத்திருந்தான். பஸ் வந்ததும் அவளை காரில் ஏற்றி பின் ''ஏதாவது என்கிட்ட சொல்ல நெனைச்சு மறந்துட்டியா?'' என இயல்பாய் கேட்டான்.


''
இல்லையே'' என்றாள் பவித்ரா.


''
நல்லா யோசி''


''இல்லை ராம் ஏன்''


''
அஸ்வின் தான் பவித்ரா ஏதாவது சொன்னாலானு கேட்டுக்கிட்டே இருக்கான் அதான்'' என்று கூறவும் சட்டென்று மவுனம் ஆட்கொள்ள அமைதிகாத்தாள்.

 ''என்னாச்சு?''  என்று அமைதியின் காரணம் கேட்க ''ம் ஒன்னுமில்லை'' என்றாள்.


ஸ்ரீராமிற்கு ஏதோ நடந்திருக்கு என்று தெளிவாக புரிந்தது. பவித்ராவை அஸ்வின் வீட்டில் விட்டு விட்டு அவன் வீட்டுக்குக் கிளம்பினான்.


அஸ்வினுக்கு பிடித்த வேர்க்கடலையை வேக வைத்து துணி மடித்து வைக்க, அஸ்வின் அவளைப் பார்க்காதது போல் சென்றான். 


   பவித்ராவுக்கு அழுகை பீறிட ரூமில் சென்று முகம் அலம்பினாள். ராதை வேக வைத்த கடலை கொண்டு அஸ்வினுக்கு கொடுக்க சொல்ல உடனே ஆசையாய் எடுத்துக் கொண்டுச் சென்றாள்.


அறைக்கு செல்ல வேகமாக வந்தவள் அன்று நடந்த நினைவு வந்து கால்கள் தயங்கியது. அஸ்வினே அவளை பார்த்து அதே நிலையில் இருந்தான். அவள் முகம் காண கூட முடியாது அவன் மீதே அவனுக்கு கோவம் வர ஏதோ தெரியாத நபரிடம் பேசுவது போல் ''வச்சிட்டு போ'' என கம்ப்யூட்டர் திரைப்பார்த்துக் கூறினான்.


   அலைப்பேசியை தூண்டித்ததற்காக  இத்தகைய கோபம்? இவன் செய்த செயலுக்கு நான் அல்லவா கோபப்படணும்!? என்று எண்ணினாலும் அவனது ஒதுக்கம் அவளை கவலை கொள்ள செய்தது உண்மையே...!

  ஒரு மாதம் ஆனபோதும் அஸ்வின் நடவடிக்கை அப்படியே இருந்தன. அஸ்வின் அவனாகவே அவளிடம் இருந்து ஒதுங்கி இருந்தான். முன்பு போல வண்டியில் கல்லூரிக்கு அழைத்து சென்று விட்டாலும் பேசகூடாதென்று மவுனமானான்.


   பவித்ரா அவளாக பேசவும் முயலவில்லை அவன் கொடுத்த முத்தம் எட்டி நிறுத்திவிட்டது. சுவாதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் விஸ்வநாதன் வீட்டுக்கு சுவாதி வரயியலாமல் போனது. பவித்ரா சுவாதி வீட்டுக்குச் சென்று பேசிவிட்டு வருவாள்.


      திருமண பத்திரிகை கொடுக்க ராதை விஸ்வநாதன் நேர காலம் இன்றி விரைந்தனர். ஆகாஷ் சுவாதியைப் பார்க்க சென்றிட, தனுவும் டியூஷன் செல்ல சில நேரம் அஸ்வின் பவித்ரா மட்டுமே இருக்க நேரிட்டது. அஸ்வின் அவனது அறைக்குள்ளேயே அடைந்தான். 


    ஒரு நாள் ஸ்ரீராம் கூட கேட்டான். 
  ''பவித்ரா கூட பேசறது இல்லையா அஸ்வின்?'' என்றதும் ''இல்லை அவள்கிட்ட....'' என்று தயங்கி மவுனமாக இருந்தவன் எப்படியும் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

   ''ஊருக்கு போகும் போது என் ரூமுக்கு வந்தாடா. என்கிட்ட சொல்லிட்டு போக.... நான் அவளை கிஸ் பண்ணிட்டேன். அவளை பொண்ணு பார்க்க வந்த கோவத்தை எங்க என்னை விட்டு போயிடுவாளோ என்ற பயமும் சேர்ந்து அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா இந்த நிமிஷம் வரை அது தப்போனு தோணுது. அவளும் என்னை பார்த்தா பயப்படறா அதனால் எனக்கு என் மேலயே கோவமாயிருக்கு.

 அதுவும் இல்லாம அவளை பொண்ணு பார்த்துவிட்டு போனவங்க பிடிச்சிருந்து அவளுக்கும் ஓகே என்று கல்யாணம் செய்தா. முடில டா ஏதாவது என் ஞாபகம் வர்ற மாதிரி முட்டாள்தனமா செய்ய கூடாது பாரு.”

''அவளுக்கு மேரேஜ் ஓகே ஆனா நீ என்ன செய்வ?'' என்று கேட்டான். இதுவரை அஸ்வின் இந்தளவு காயப்பட்டதில்லை.


''
தெரியலை... இந்த நிமிஷம் வரை எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு. என் காதல் உண்மை என்றால் அது தானே நிற்கும்''


''
அப்படி இல்லாம நெகடிவ்வா...''


''
நான் நெகடிவ்வா யோசிக்கலை. எப்படி முதல் முறை பார்த்து தானா அடுத்த முறை வருவா என்று நம்பினேனோ. அதே மாதிரி இந்த முறை மட்டும் கல்யாணம் தானா நின்றுட்டா அவளை அதுக்கு பிறகு போட்டோவுல கூட இன்னோரு வீட்டுக்கு பெண் பார்க்க தர விட மாட்டேன்'' என்று ஆணிதரமாக கூறினான்.


''
இப்போ தனியா தானே இருக்கா மனசு விட்டு கேட்டு தொலைக்க வேண்டியது தானே'' என்று ஸ்ரீராம் இவனின் முகவாட்டத்தை பொறுக்காது கேட்டான். 


''
யாருமில்லாத நேரத்திலும் அவ என்கூட தனியா இருக்கறதை பாதுகாப்பா உணரணும். தவிர இவன் இன்னிக்கு என்ன கேள்வி கேட்டு உயிரை வாங்குவானோ என்று பயந்திருக்க கூடாது. அதுவுமில்லாம அவளுக்கு என் காதல் சொல்லி புரிய வைக்க விரும்பலை. அவளுக்கு ஏற்கனவே எல்லாம் புரியுது. ஏற்று கொள்ள மாற்றா அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோனு யோசிக்கணும்'' என்றதும் ஸ்ரீராம் முகம் பிரகசித்தது. இந்த கோணத்தில் சென்றால் அவளின் குடும்பத்தை பற்றி அலசுவான் எளிதில் அவள் தவிர்க்கும் காரணம் அறியலாம். அறிந்தால் அதெல்லாம் அனாதை என்பது பிரச்சனையில்லையென புரியவைப்பான்.


''
இவ்ளோ யோசிக்கறவன் அன்னிக்கு அப்போ எதுக்கு கிஸ் பண்ணின?'' என்று கேள்வி எழுப்பினான் ராம்.


''
ஹ்ம் அதுவும் இப்படி தான் சட்டுனு மடத்தனமா தோணுச்சு செய்துட்டேன். ஆனா அதுகூட நினைச்சு பார்த்தா செம ஹாப்பியா இருக்கு'' என்று உதட்டை தடவி அதே நினைவில் பேசினான்.

   அவனின் செய்கை சிரிப்பை தர ''இருக்கும் டா இருக்கும்'' என்று கையில் இருந்த புத்தகத்தை அஸ்வின் மீது எறிந்தான் தோழன் ராம்.

 இப்படியாக சில நாட்கள் உருண்டன. திருமணத்திற்கு துணி எடுக்கக் கிளம்பினார்கள். ஞாயிறு என்பதால் பவித்ராவையும் ராதை அழைத்துச் சென்றாள்.

   சுவாதிக்கு எடுத்து முடித்த பின் ஒவ்வொருத்தருக்காக எடுத்தனர். பவித்ராவிற்கென ராதை ஒரு சேலையும், தவசுடர் ஒரு சேலையும் எடுத்தனர். எவ்வளவோ மறுத்தும் இருவரும் சுவாதி திருமணத்திற்கு கட்டாயம் அணிய வேண்டுமென வலியுறுத்தினார்கள்.


      அஸ்வினோ தனியாக ஒவ்வொரு ஷோ-கேஸ் பொம்மையை கண்டு அந்த சேலை பவித்ராவுக்கு பொருத்தமாக இருக்குமோ என்று இமை மூடி ரசித்தான். அப்படி ரசிக்கையில் ஒரு சேலையை பிடித்து போக பில் போட்டு, அதை பவித்ரா கையில் வைத்து ''இது உனக்கு தான். விருப்பம் இருந்தா கட்டு இல்லையேல் உன் இஷ்டம்'' என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான்.

    பின் கார் ஓட்டுவதில் ஆழ்ந்தான். இவன் பேசினானா இல்லையா என்றே குழப்பம் வரும் அளவிற்கு ஒரு நொடி மட்டுமே இளகி மீண்டும் அதே பழைய ஒதுக்கம் அவனுள் இருப்பதை கவனித்தாள். கல்லூரியில் சென்றாலும் அஸ்வின் நினைவு.


   இன்னும் இரு தினம் மட்டுமே இருந்தன. சுவாதி-ஆகாஷ் திருமணம். 

    ஆகாஷ் அறைக்கு அஸ்வின் வந்து,''இது என்னோட கிப்ட், ஹாப்பி மேரிட் லைப்'' என்று தங்க பிரேஸ்லேட் அணிவித்து வாழ்த்தினான்.
 கூடுதலாக ''எப்படி தான் மூனு வருஷம் காதலோடு காத்திருந்தியோ? சரி பை'' என நகர்ந்தான்.


 ''அஸ்வின் உனக்கு நான் ஏற்கனவே சுவாதியை விரும்பறது தெரியுமா டா?'' என்று கேட்டு முடித்தான்.


 ''நல்லாவே தெரியும். அஸ்வின் பார்வையில் எதுவும் மிஸ் ஆகாது'' என்றான் அஸ்வின்.


-மெல்லிய பூகம்பம் தொடரும்.

- பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...