முதல் முதலாய் ஒரு மெல்லிய-26

 

💘26

அஸ்வின் வீடே அமர்க்களமாக காட்சி அளித்தன. தனுவிற்கு பவித்ரா சேலைக்கட்டி விட்டாள். பின் தவசுடர் அளித்த இளஞ்சிவப்புநிற பட்டை பவித்ரா அணிந்தாள். இளஞ்சிவப்பு நிறபட்டில் ஒரு அழகிய ரோஜாவாக இருந்தவளை ''வாவ் சூப்பர் அண்ணி'' என தனுவும்,
''
மகாலக்ஷ்மி மாதிரி இருக்க'' என விஸ்வநாதனும் ராதையும் கூறினார்கள்.


   அதன் பின் வந்த ராமும் ''லுக்கிங் ஆவ்ஸம்'' என ரசித்து சொல்ல, அஸ்வின் மட்டும் உற்றென்று இருந்தான். 


  அஸ்வினுக்கு தான் கொடுத்த சேலையை பவித்ரா அணிவாள் என்ற ஆவலே அதற்கு காரணம். அவன் தன்னை ஏதும் சொல்லாதது பவித்ராவுக்கு கஷ்டமாக  இருந்தது. ஆனால் அவளுக்கு தெரியாது இரசித்து, எப்போதும் போல் அவன் செல்லில் அவளை சிறைச் செய்தானென்று.


  நந்தன் வருவதாக இருந்து பின்னர் வர இயலாமல் போனது.  சுந்தரத்திருக்கு கொஞ்சம் உடல்நிலை சறுக்கியதே காரணம்.


அஸ்வின் கோட்சூட்டில் அழகாக வலம் வந்தான். வந்தவர்களின் பார்வை அவனை மொய்க்காமலில்லை.

    குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க அஸ்வின் பவித்ரா அருகே நிற்க பவித்ரா மனம் சிறகடிக்க அதே மனநிலையில் தான் அஸ்வினும் இருந்தான்.


ஆகாஷ் தான் வானத்தில் பறக்கும் நிலையில் இருந்தான். அவனுக்கு சுவாதி கைபிடிக்கும் ஒவ்வொரு முறையும் ஆனந்தத்தை வார்த்தையில் சொல்ல முடியவில்லை. 
சுவாதிக்கு அவ்வாறே தான் நிலைமை. எவ்வளவு பேருக்கு இப்படி காதல் தடையே இல்லாமல் சுபத்தில் முடிகின்றது. அது தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கடவுளுக்கு நன்றி தெரிவித்தாள்.


   அடுத்த நாள் ராதை எடுத்து தந்த மஞ்சள்நிற பட்டை அணிய, அஸ்வின் முகம் நேற்றைய ஏமாற்றமே அடைந்தது. தான் வாங்கி கொடுத்தச் சேலையை சுவாதி திருமணத்தில் க அணியத் தயங்குகிறாளென வேதனையடைந்தான். 
ஆனாலும் அஸ்வின் வேஷ்டி சட்டையில் மிக கம்பீரமாக காட்சி அளித்தான்.

 

    ஸ்ரீராம் வந்து பார்த்து விட்டு, ''டேய் உனக்கு வேஷ்டி சட்டை பிரமாதம் போ... பார்க்க மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்க, பார்த்துடா சட்டென இன்னொரு தாலி எடுத்து பவித்ரா கழுத்துல கட்டிடாத'' என விளையாட்டாய் கூறி சிரித்தான்.


  ''நல்ல ஐடியாவா இருக்கே'' என அஸ்வின் யோசிக்க ஆரம்பித்தான்.


  ''அடேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா... அது மாதிரி ஏதும் செய்துடாத, பொறுத்தார் பூமி ஆள்வர் படிச்சிருக்கல'' என சொல்லிச் சென்றான். 


    இதோ இன்னும் சில மணித்துளிகளில் சுவாதி ஆகாஷ் மனைவியாக மாறும் தருணம்.

  ''ஹலோ அண்ணி இன்னும் என்ன கனவு அண்ணா கழுத்தை குனிந்து வையிட்டிங் மாலையை போடும்மா'' என்றதும், சுவாதிக்கு ஆகாஷுக்கும் அதிர்ச்சி அஸ்வின் 'அண்ணி' என்று சொல்கின்றானே?


  ''டேய் அண்ணா உனக்கு என்ன தனியா சொல்லணுமா தாலி கட்டியத்துல இருந்து கனவுல போய்டறிங்க? மாலையை மூனு முறை மாத்தணுமாம்டா'' என்றான் அஸ்வின்.
மாலையை மாற்றிய படியே ''டேய் அவ உனக்கு அண்ணி நான் அதே டேய் அண்ணா வா?'' என்றான்.


   ''அண்ணா என்று சொல்லுறோம்ல அதுவே உனக்கு அதிகம்'' என்றான். அஸ்வினுக்கு தெரியும் ஆகாஷிற்கு தான் அப்படி அழைப்பதே அவனுக்கும் விருப்பம் என்று அதனால் அதை மாற்றவில்லை. 
    சுவாதி-ஆகாஷ் திருமணம் இனிதே நடைப் பெற்றது. அடுத்தடுத்து சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் நடைப்பெற்றன.

   சுவாதி புன்னகை பூ போல் காட்சி அளித்தாள். அவள் வீட்டில் ஆகாஷ் அணைப்பில் மூத்த மழையை பொழிந்து காதல் கடலில் இருந்தவர்கள் சம்சார கடலில் மூழ்கினார்கள்.


      ஒரு மாதம் உருண்டோடின. ஆகாஷ் சுவாதி புதுமண தம்பதியாக வலம் வந்தனர். தன்யாவுக்கு பிளஸ் டூ என்பதால் படிப்பும் ட்யுஷனும் முழு படிப்பாளியாக மாறியிருந்தாள்.

 

   ரம்யாவும் சஞ்சனாவும் “இன்னும் ஒன் அண்ட் ஹாப் மந்த் தான் பிறகு யார் யார் எங்க இருக்கோமோ? பார்க்க முடியோமோ? என்று கவலையாக சொல்ல பவித்ராவுக்கு அஸ்வினை பிரிந்து எப்படி இருப்பேன்? என்ற கேள்வியே மனதைக் குடைந்தது.


  ராதை விஸ்வநாதனிடம் ''எங்கே பவித்ராவை பொண்ணுப் பார்த்து விட்டு போனவங்க என்ன சொன்னாங்களாம்? நீங்களா சொல்விங்கனு பார்த்தேன் சொல்லலை. பவித்ராவிடம் கேட்க சங்கடமா இருந்தது'' என்று கேட்டதும் விஸ்வநாதன் தொண்டையை செருமினார்.

 
  ''அந்த பையன் சூர்யாவிற்கு இருபது நாளைக்கு முன்னாடி வேறு ஒரு பெண்ணோட கல்யாணம் முடிஞ்சுடுச்சு'' என்ற பதில் ஹாலில் இருந்த அஸ்வின் காதிலும் விழந்தது. அவன் பெரிதாய் ஈடுபாடு கொண்டதாக கடிக்கவில்லை.

 

  ராதையோ அதற்கு மேல் கேட்க தோன்றாமல் இதுவே போதும் என்று நிம்மதியடைந்தார்.

  

   அன்று சஞ்சு அஸ்வினை அழைத்து இருக்க, பவித்ராவோ  ''எதுக்கு அஸ்வினை அழைச்சு இருக்க சொல்லு சஞ்சு'' என்று தொடர்ந்து கேட்டாள்.


  ''இரு அஸ்வின் அண்ணா வரட்டும் சொல்றேன்'' என்றாள்.

       அஸ்வின் வந்ததும் திடீரென திருமண பத்திரிகை நீட்டினாள்.
  ''எங்க வீட்ல திடீரென கல்யாணம் வச்சிட்டாங்க அண்ணா சொந்தம் தான் பவித்ரா. அதான் நானும் சரினு சொல்லிட்டேன்'' என்றாள் சஞ்சு.


   முதலில் திகைத்தலும் பின் சந்தோஷமாக கட்டி அணைத்து வாழ்த்தை தெரிவித்தாள் பவித்ரா. 


   ''அண்ணா நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்'' என்று பத்திரிகை கொடுத்தாள். அதில் அஸ்வின்-பவித்ரா என்று பெயரிட்டு இருக்க வாங்கிப் பார்த்துப் புன்னகை சிந்தினான்.

 

 ''கண்டிப்பா சஞ்சனா'' என்றான். 


    ''ஏய் நீ என்கிட்ட முதலிலே ஏன் சொல்லலை கல்யாணம் எங்க? எப்போ?'' என்று பத்திரிகை பிரித்து ஆராய்ந்தாள் பவித்ரா. அது சென்னைக்கும் தஞ்சாவூருக்கு நடுவில் இருக்கும் ஒரு ஊரின் பெயராக இருந்தன. அவளும் பத்திரிகையில் அஸ்வின் பவித்ரா சேர்ந்ததை பார்த்து மகிழ்ந்தாள்.


   அஸ்வின்-பவித்ரா பெயர்கள் இந்த பத்திரிகையில் சேர்ந்தது போல அவர்கள் திருமண பத்திரிகையிலும் சேரும் நாள் தொலைவில் இல்லை என்றெண்ணினான் அஸ்வின். 

-மெல்லிய பூகம்பம் தொடரும்.

- பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1