முதல் முதலாய் ஒரு மெல்லிய-19
அலுவலக அறைக்குச் சென்று வரும் போது சந்தித்த முதியவரிடம் ஆயிரம்
எடுத்து நீட்டினான். அவர்
''இந்த மாதம் பணம் ஏற்கனவே
கொடுத்து விட்டாயே அஸ்வின்'' என்றார்.
''இது பவித்ரா வரும் போது
ஏதும் வாங்கிட்டு வரலைனு பீல் பண்ணினா அதுக்கு சார். ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுக்க
ஏற்பாடு பண்ணுங்க'' என்று கூறி விடைப் பெற்றான்.
அங்கிருந்து கிளம்பி அஸ்வின் ஒரு ஹோட்டலில்
காரை நிறுத்தினான்.
''இறங்கு உனக்கு பசிக்கும்
சாப்பிட்டு போலாம்'' என்றான். பவித்ராவிற்கும் பசித்தது இறங்கி
இருவரும் மாலை சிற்றுண்டி உணவு உண்டனர்.
''மாலில் பொண்ணு அழகா இருக்கா அதனால விரும்பறேன்னு
நினைச்சியா பவித்ரா?! எப்ப பஸ் ஸ்டாப்ல உன் மனதையும் பார்தேனோ அன்னிக்கே
நீதான் எனக்கு வேணும்னு முடிவு பண்ணினேன். ஆனா நீ செம அழகு தெரியுமா?! அழகோடு குணம் இருப்பது என் அதிர்ஷ்டம்'' பவித்ரா ஏதும் கூறாமல் தலை
நிமிராமல் இருக்க, அஸ்வின் அதற்கு மேல் பேசவில்லை கார் புறப்பட்டது.
ஏனோ அஸ்வினை அடிக்கடி
பார்க்க கண்கள் பிரியப்பட்டதோ?!
என்று நினைத்துக் கொன்டே
பார்க்க, அவனின் கம்பீரத்தில் தொலையவே செய்தாள். அவளுக்கு
ஏற்கனவே இந்த ஐயம் உண்டு. முதல் முறை பார்த்ததும் புகைப்படம் எடுத்து மாட்டும்
அளவிற்கு எப்படி அவன் மனதில் பதிய முடியும் வெறும் அழகுக்காக மட்டுமா? என்ற கேள்வி அரித்தது. அப்படி இல்லை என்று இன்று தெளிவாக புரிந்தது.
ஆனாலும் இவன் செய்கை விசித்திரம் தான்.
சரியான பிடிவாதக்காரன்
அவனின் செய்கையில் மனம் அவனையே நினைப்பதை அறியாமல் அப்படியே பவித்ரா உறங்கிப்
போனாள்.
அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு சந்தோஷ நிலையில் வீடு வந்துச்
சேர்ந்தான்.
விஸ்வநாதன் கார் வரும் ஓசை
கேட்டதும் வெளியே வந்துப் பார்க்கையில் பவித்ரா அஸ்வின் தோளில் சாய்ந்து உறங்கிக்
கொண்டு இருந்தாள். விஸ்வநாதனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆனார்.
''பவித்ரா... பவித்ரா...'' என கன்னத்தை தட்ட மெல்லிய இமைகள் திறந்தாள். ''வீடு வந்துடுச்சு''
என்ற அஸ்வின் குரல் மிக
அருகில் கேட்கத் திக்கென்றது. அவனது தோளில்லா சாய்ந்து வந்தேன் என நாணினாள்.
''சாப்பாடு எடுத்து
வைக்கிறேன் வாங்க'' என்ற ராதையிடம்,
''வரும் போது பசிச்சது
சாப்பிட்டோம்'' என்றான் அஸ்வின்.
உடை மாற்றி வந்த
பவித்ராவிடம், அஸ்வின் அருகே சென்று ''என் கூட அவுட்டிங் வர மாட்டேன்னு சொன்ன, இப்ப ஈவினிங் இருந்து நைட் வரை என் கூட தான இருந்த'' என்றான்.
''ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக
வந்தேன் மத்தபடி நானா வரலை அஸ்வின்'' என்றாள்.
''ஓ ஹோ! அப்ப என் பெயர்
சொல்லி கூப்பிட்டதும் நீ இல்லையா?
நான் அது நீ என்று இல்லை
நினைத்தேன்'' என்று நமுட்டு சிரிப்போடு காதலுடன் கேட்டான்.
''அது..அது வந்து... வாய்
தவறி கூப்பிட்டுட்டேன்... சாரி''
என மிரண்ட விழியோடு கூறினாள்.
சுவாதி பெயரிட்டு அழைப்பது உறவின் உரிமையில் பவித்ரா அப்படி அழைக்க இயலுமா? அவளை விட பெரியவனை?
''இதே மாதிரி உன்னையும் அறியாமல் உன் காதலை சொல்லுவ
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்'' என சொல்லி உதடு குவித்து சென்றான்.
அப்பொழுது தான் 'நேச இல்லத்தில்' இருந்து கிளம்பும் போதே தான் அவன் பெயரை உச்சரித்ததை உணர்ந்தாள்.
எப்படி அவன் பெயரை உச்சரித்தேன் என்னை அறியாமல் என்று குழம்பி யோசிக்க உறக்கம்
அவளைத் தானாக தழுவியது.
அஸ்வினுக்கு ராம் போன்
செய்தான்.
''என்னடா எங்க கூட்டிட்டு போன?''
''வேற எங்க நேச இல்லம் தான்''
''ஏய் அவளை பார்த்த
இன்சிடென்ட் சொன்னியா?''
''ம்''
''என்ன ரியாக்ட் பண்ணினா?''
''அப்படியே அமைதியா கேட்டா.
வேற மாற்றம் தெரியல அவ கண்ணை பார்த்ததும் ரொம்ப ஹாப்பியா இருந்தா''
''ஓகே ஓகே அவ ஏதாவது பேசினாளா? ஐ மீன் அவளை பத்தி தனிப்பட்ட முறையில்...''
''இல்லை ஏன்டா'' அப்பொழுது தான் தானாக உளறுவது புரிய,
''நத்திங் டா எப்பவும்
தனிமையா இருக்கும் போது உங்கிட்ட ஷேர் பண்ண... அதாவது லவ் ஷேர் பண்ண சான்ஸ்
இருக்குமே அதான் ஏதாவது சொன்னாளா என்று கேட்டேன்'' என்று பேசினான்.
''எங்க நோ மோர் சேஞ்சஸ் பட்
ஏதோ என்னை பார்த்து ரசிச்ச மாதிரி இருந்துச்சு திரும்பி பார்த்தா அது பொய் என்று
இருக்குமோ திரும்பலை''
''அடேய் பார்த்து இருக்கலாம்
இல்லை''
''ராம் அவ என்மேல சாஞ்சி
தூங்கிட்டே வந்தாடா. அப்படியே ஒரு போட்டோ எடுத்தேன். பிக்சர் சென்ட் பண்ணி
இருக்கேன் பாரு''
''அடப்பாவி அவளுக்கு தெரியுமா? தெரிஞ்சது மவனே உனக்கு இருக்கு''
''நீ தான் அவளுக்கு சொல்ல
மாட்டியே. பின்ன எப்படி தெரியும்''
இப்படியே ஒரு வழியாக நண்பர்கள்
பேசி முடித்து உறங்க செய்தனர்.
பரீட்சை வரவும் அதிகம் நேரம்
அதற்கே போனது.
அஸ்வினும் அவளை அதிகம்
சீண்டாமல் தொல்லை கொடுக்காமல் மிதமான பேச்சோடு விட்டுவிட்டான்.
Comments
Post a Comment