பெண்னே...!

கவிதையின் நயம் கண்டு
 காகிதம் சிலிர்ப்பதில்லை
சிற்பத்தின் எழில் கண்டு
 உளிகள் உணர்வதில்லை
ஓவியத்தில் மிளிரும் வண்ணத்தை
  தூரிகைகள் கண்டதில்லை
வாசமுணர்ந்து பூக்கள்
 மணப்பதில்லை
பெண்னே உன் சக்தியை
 நீயும் உணர்ந்ததில்லை
                   --பிரவீணா தங்கராஜ் .

பூக்கள் கேலிப் பேசுகின்றன

பூங்காவினுள் நுழைந்ததுமே
பூக்கள் கேலிப் பேசுகின்றன
ஆயிரம் கதைப் பேசியதேயிடம்
அயலார் போல எண்ணமிட செய்தது
அதேயிருக்கையில் அமர்வு
ஆனால் அன்று போல் துள்ளலில்லை
மனக்குன்றல் மட்டுமே
அன்று தந்தையின் கண்ணில்
அகப்பட்டோம் காதலனோடு
இல்லத்தில் சிறைப்பட்டேன்
தற்கொலை நாடகம் வெற்றி பெற்றன
கூடவே ஜாதி மதம் பணம்
பகட்டு குடும்ப கௌரவமெல்லாம்
கரம் பற்றினேன்
தோற்று போயின
ஒரு உண்மை காதலும்
இரு மனமும்
அன்றுயமர்ந்த அதேப் பூங்கா
பூக்கள் கேலிச் செய்கின்றன
அன்று பிடித்த கரம் இல்லையென்று
               -- பிரவீணா தங்கராஜ் .

இது கணிதமல்ல வேதியல் -காதல் பிதற்றல் 35

*காதல் பிதற்றல் *
கவிதை எழுதி
காதலை கதைக்க
தெரியாதுயென
திரையிசை மென்பாடலை
ஒலிக்கவிட்டு
கந்தப்பார்வை வீசுகின்றாய்
அப்பார்வை சொன்னதடா
ஓராயிரம் காதல் கவிதைகளை
எனக்காக மட்டுமே நீ எழுதியதாக .
              ***
வட்ட வடிவ தோசைகள்
பிய்த்து ஊட்டுகையில்
இதயம் வடிவம்
பறக்கின்றது
இது கணிதமல்ல
வேதியல் ...
                 -- பிரவீணா தங்கராஜ் .

துளி துளியாய் - காதல் பிதற்றல்- 34

நீ என்னுள்
எப்பொழுது நுழைந்தாய்
என்று
யோசித்து யோசித்து
களைப்பு அடைத்து விட்டேன்
நீயோ துளி துளியாய்
இப்படி யோசிக்க வைத்து தான்
என்னுள் நுழைந்தாய் யென்பதை
அறியாது
             -- பிரவீணா தங்கராஜ் .

நீக்குகின்றேன் மீன் செதில்களை

அக்கடை கடக்கும் போதெல்லாம்
ஒவ்வாமை தான் எனக்குள்
நாசியினை கைக்குட்டையால்
நுகர்ந்துகொண்ட பின்னும்
ஒவ்வாமை சமிக்ஜை போகாது
அத்தகைய பாவையான யென்னிடம்
மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்ற
ஏக வெள்ளித்திரை வசனத்தை பேசியே
அன்பை கொட்டிவிட்டாய்
காதல்யெனும் மரத்தை வளர்த்துவிட்டாய்
அதனாலோ என்னவோ
எனக்கு பிடிக்காத அக்கடையின் வாடையை
சகித்துக் கொண்டு வாங்கி விடுகின்றேன்
உன் தாயின் கை பக்குவத்தில் பாதியாவது
வரவேண்டுமென்ற ஆசையுடன்
நீக்குகின்றேன் மீன் செதில்களை .
                                       -- பிரவீணா தங்கராஜ் .

பருகும் தேனீர்

ஒரு மிடறு பருகி முடித்தேன்
தித்திக்கின்றது தேனீர்
அன்றொருனாள் உன்னிடம்
பேசியருந்திய அதேயினிய நினைவுகள்
அடுத்த மிடறு பருகினேன்
சிறிது கசந்தன அதே தேனீர்
நீ விலகி சென்ற கசந்த நினைவுகள்
அதே தேனீர் ருசி மாறின
உன் நினைவுகள் மட்டுமே
என் வாழ்வை இனிமையாக்குவதோ
கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை
அடுத்த மிடறில் உணர்ந்தேன்.
        --பிரவீணா தங்கராஜ். 

நான் ஏட்டில் எழுதியதை- காதல் பிதற்றல் - 33

முந்தைய நாட்குறிப்பை யெடுத்து
தூசு தட்டி நீயும் நானும் சந்தித்த
இனிய நினைவுகளை படித்து ரசித்து
உன் மீதுள்ள அதீத காதலில்
தனிமையில் சிரிக்கின்றேன்
அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற
மிக பெரிய கேள்வி வட்டம்
என்னுள் சூழ்ந்திட
அக்கணம் வந்திட்ட உன்னை
விழியிலே வினாக்கள் தொடுக்கின்றேன்
என் முன் நெற்றியில் வலிக்காது முட்டி
நாசியோடு நாசி உரசி
அன்று நடந்த நிகழ்வுகளை அப்படியே
கண் முன் அச்சு பிசகாது
நக பூச்சு உட்பட அனைத்தும்
ரசனையோடு விவரித்து சொல்லி
அசரடிக்க வைக்கின்றாய்...
நான் ஏட்டில் எழுதியதை
நீ மனதில் எழுதியதை வியந்து
அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற கேள்வி
புள்ளியாய் மறைந்து
உன் மீது உள்ள காதலை
இமயத்தை விட உயர வைத்திட செய்து விட்டாய் .
                           -- பிரவீணா தங்கராஜ் .  

 

அவன் யெனும் இறை

சோதனைகள் வலுத்திட
காயங்கள் தந்திட
மனம் துவளத்தான் செல்வதுண்டு
இருப்பினும்
அவனது சோதனைகள் முடிந்தபாடில்லை
எனக்கு வாரி வாரி வருத்தங்களை தர
என்றுமே சலித்திடவில்லையவன்
துன்பம் கண்டு ஒளிக்கின்றேனா
கண்ணீர் விடுகின்றேனா அல்லது
அவன் பாதம் பணிந்து புலம்புகின்றேனயென
காண்பதில் அத்தனை சந்தோசம் அவனுக்கு
வேதனை பல தந்து அவனது இறையுணர்வுக்கு
பலன் உண்டாயென காத்திருக்கின்றான்
அவன் இருக்கின்றானா ? இல்லையா ?
இருந்தால் நன்றாகயிருக்குமா ? யென்ற
கேள்விக்குள் யென்னை தள்ள பார்கின்றான்
விடை கானா கேள்விகளை விதைத்து
விட்டு செல்கின்றான் ... அவன் யெனும் இறை
எனக்கான சோதனைகள் பாக்கி இருப்பதால் ...
                                     -- பிரவீணா தங்கராஜ் .

கண்கள் சொல்லுவ தென்ன...

உன் கண்கள் சொல்லுவ தென்ன
என் பார்வை புரிந்தும் பெண்னே..!
உள்ளத்தில் நீ அமர்ந்து என்னையே
கள்வனாய் மாற்றிய தென்ன..!
பாறையாய் இடுங்கி கிடந்த யென்னை
சிற்பமாய் புகுந்த மாய மென்ன...!
சொற்களில் உனக்கு பிடித்தமில்லையா!?
கற்கண்டு பார்வையால் கவிழ்ப்ப தென்ன...!
சுடும் பார்வை கூட குளிர் நிலவாக மாறி
பனிக்கூழாக உன்னில் என்னிதயம் வழிவதென்ன..!
கவி பேசும் திராட்சை கண்களுக்கு
காதல் சொன்னால் மட்டும் கோவமென்ன...!
இரு கண்கள் சந்திப்பில் ரசவாதம் நிகழ்வதென்ன
கண்ணே உன்னைக் கண்டு
என் இதயம் இடம் மாறுவதென்ன ...!
                              -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை--உறவாக வந்தவள் நீ

            ஒரு பக்க கதை - உறவாக வந்தவள் நீ  



                                     இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளை மருத்துவமனை அனுப்ப முடிவு செய்தது. அவளுக்கென யாரும் வரவில்லை என்றதும் கவலையிருக்க தான் செய்தன. இருந்தாலும் இந்த இரு பெரிய பேருந்துகள் மோதி நிறைய பேர் இறந்து இருக்க, அவள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான். என்ன நினைவு ஆற்றல் தான் சுத்தமாக இல்லை.

        சரி போனால் போகட்டும் என்று தான் அவளும் கிளம்பினாள். மனதில் சிறு பாரத்துடன். அப்பொழுது தான் ஒரு பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து தாய் இறந்து விட, அக்குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில் ஆசிரமம் அனுப்ப எண்ணினர் அமருத்துவ நிர்வாகம்.

         உடனே நினைவு இழந்த அவள் எனக்கு இந்த குழந்தை தாருங்கள் நல்ல முறையில் வளர்க்கிறேன். இங்கேயே ஒரு சின்ன வேலை கொடுத்தால் கூட போதும் என்றாள்.

                       மருத்துவ பெண் என்ன நினைத்தாளோ சரி என இசைத்திட, நினைவு இழந்த அவள் அக்குழந்தையின் தளிர் கரத்தில் முத்தமிட்டு எனக்கு 'உறவாக வந்தவள் நீ' என்று கொஞ்சினாள். அது அவளை பார்த்து அழகா சிரித்தது.

              - பிரவீணா தங்கராஜ்
       

ஈகோவினுள்...ஒளிந்துயிருக்கின்றன

ஒளிந்து கொண்டு இருக்கின்றன
அரையுறக்கத்தில் உந்தன் அணைப்பும்
உன்னிதயத்தில் என் முகப்பதிப்பும்...
கசந்த குழவி இனிப்பை அள்ளி
கொட்டியதாக எண்ணவைக்கும்
சமயலறையில் இடைப்பற்றிய
உந்தன் யிறுக அணைப்பால்
கரண்டியில் துழாவி குழம்பை ருசிப்பார்த்து
கண்களை உருட்டுமென்னை
தாயங்கள் ஆடுகின்றாய் என்பாய் நீ...
மிக பிடித்த பாடல்வரிகளில்
உன் புருவத்தை ஏற்றயிறக்கம் செய்து
என் போலி சினத்தில் குறுநகை செய்திடுவாய்...
சட்டென சங்கமிக்கும் இதழ் ஒற்றலால்
வெட்கம் சிவந்துவோட செய்வாய்...
உந்தன் வருகைக்காக நேரங்களை நெட்டிமுறித்து
இனிய நினைவுகளோடு காத்திருப்பேன்
இவை யெல்லாம்
ஒளிந்து கொண்டு யிருக்கின்றன
நீயும் நானும் போடும் சண்டைகளில்
யார் முதலில் பேசுவது என்ற ஈகோவினுள்...
                             -- பிரவீணா தங்கராஜ் .

பொய்கள்

அடுக்கடுக்கான பொய்கள்
முழுமனதுடன் இயல்பாக கதைக்கிறேன்
என்னை முழுமையாக அறிந்த மனதிடமே
நலமாக வளமாக இருக்கின்றேன்
நகைகள் பல அணிந்து
நகர்வலமாக ஊர் சுற்றி பார்க்கின்றேன்
காதலுடன் ?
பெற்ற குழந்தையை கைப்பிடித்தே
கேட்டதை வாங்கி கொடுக்கின்றேன்
இப்படியாக என் சில பொய்கள்
என்னை அறிந்த மனதிடம்
இயல்பாக கதைகின்றேன்
எந்தன் நலனின் அக்கரையில்
பாதிக்கும் மேலாக முழுதும்
கரைந்த பணமும் மனமும்
இனியாவது இருதங்கையை
கவனிக்க வேண்டியே
என்னை அறிந்த என் தாயின் மனதிடமே
திடமாக பொய் கதைக்கிறேன்
என் நலனில் எக்குறையும் இல்லையென ...
                --- பிரவீணா தங்கராஜ்

உறவாக வருவாயா

           

 உறவாக வருவாயா

                                        அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க,  தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து எழுந்தாள்.

   "சௌம்யா நீங்களா?" என்றதற்கு "ம்.." என்று தலை அசைத்து அங்கிருந்த அறைக்குச் சென்றாள்.

                            அங்கிருந்த அறையில் கண்ணாடி அணிந்து மருத்துவ உடையணிந்த பெண் மருத்துவர்,

   '' உங்க ரிப்போர்ட் வந்துடுச்சு சௌம்யா உங்களுக்கு .... ''  என ஆரம்பித்து பேசிக் கொண்டே போக அந்த பதில் அவள் இதற்கு முன் சென்ற மருத்துவமனையின் பதிலையே கூறினர்.

             அதனால் சுவாரஸ்யமின்றி இருந்தாள். இருதுளி கண்ணீர் வர அதை துடைத்துக் கொண்டு ரிப்போர்ட் பெற்றுக் கொண்டு எழுந்தாள் . ஏற்கனவே பணம் செலுத்தியதால் நேராக தனக்காக வெளியே காத்திருக்கும் கணவனிடம் காரில் ஏறி அமர்ந்தாள்.

      ''நான் தான் ஹாஸ்பிட்டலே வேண்டாம் என்றேனே . நீ தான் கேட்க மாற்ற சௌம்யா''

      ''ப்ளீஸ் கௌதம் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போகலாம் '' என சொன்னதும் வேறு வழியின்றி கோவிலுக்கு காரை செலுத்தினான்.      
                          
            மருத்துவமனைக்கு பிடிவாதமாக வர மறுத்துவிட்டான் . சௌம்யா மீது மேலும் குறை சொல்லும் ரிப்போர்ட் அவனுக்கு பிடிக்கவில்லை அதனால் ... கோவிலுக்கு வர மறுக்க இயலவில்லை. தூணோடு தூணாக அமர்ந்து மனைவி கண்ணீர் வடிக்க மற்றவர்கள் பாவம் பார்ப்பார்கள். அதற்காகவே கூட சென்றான். அவன் இருந்தால் சௌம்யா அழ மாட்டாள் என நம்பினான். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை அவள் அதிகம் அழவில்லை.

                                   கேட்டு கேட்டு புளித்துப்போன பதில்கள் என்பதால் இருக்கும் .
        ''ஏன் சௌம்யா இப்படி இருக்க, உனக்கு அப்பா அம்மா இல்லை . எனக்கும் இல்லை . உன்னை வருத்தப்பட வைக்கற மாதிரி பேச உடன் பிறந்தவர்களும் இல்லை . பிறகு எதுக்கு கவலை படற?'' என்றான்.

          மெல்லிய விசும்பலுடன், ''சமுதாயம் இருக்கே கௌதம் . அதுமட்டுமா நேரங்கள் வெறுமையை தின்று கொண்டு இருக்கே ...  உனக்கு அலுவலகம் போன உலகமே மறந்துடும் எனக்கு அப்படியா ? '' என விழியில் நீரை சிந்த துடைத்துக் கொண்டாள்.

        ''வீட்டுக்கு போகலாம் கௌதம் .'' என்றாள்.

        ''சௌம்யா , நான் என் வேலையை பெங்களூருக்கு மாற்றிக் கொண்டு நாம அங்க போயிடலாம் . புது இடம் புது மனிதர் உனக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும் ''

        ''உன் இஷ்டம் கௌதம் . '' என வீட்டிற்கு சென்றனர்.

                                       வேலைக்கு என்று பெரிதாக யாரையும் வைக்கவில்லை . ஒரே ஒரு முதியவள் மட்டுமே அவளும் ஊருக்கு சென்று இரவு வருவதாக சொன்னதால் மாற்று சாவியை கொடுத்திருந்தனர் .  அம்மூதாட்டி வந்தவுடன் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியது தான்.

                                           காலை 6 மணிக்கு குழந்தை அழும் சப்தம் சமையல் அறையில் இருந்து கேட்க கௌதம்-சௌம்யா இருவரும் எழுந்து வந்து பார்க்க , விசாலாட்சி மூதாட்டி ஒரு பச்சிளம் குழந்தைக்கு புட்டி பால் புகட்டி கொண்டுயிருந்தாள்.

      ''இது யார் குழந்தை பாட்டி ? '' என்றனர் இருவரும்.

     ''அதுவா கண்ணு என் மக வயித்து பேத்தியோட குழந்தை . பிள்ளையை பெத்துட்டு அவ இறந்துட்டா. அவ புருசனும் மூணு மாசத்துக்கு முன்ன குடிச்சு குடிச்சே குடல்  வெந்து செத்துட்டான். என் மக மருமகனும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருசித்தாள் வேலை செய்யும் போது கட்டிடம் இடிஞ்சு செத்துட்டாங்க . இப்ப இந்த குழந்தைக்கு என்ன தவிர யாருமில்லை. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். ஐயா உனக்கு தெரிந்த ஆசிரமம் இருந்தா சொல்லு யா. இந்த குழந்தையை அங்க விட்டுடலாம்'' என முடிக்க இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்தனர்.

        ''விசாலாட்சிம்மா ஆசிரமம் எதுக்கு இந்த குழந்தையை நாங்க வளர்கறோம். எங்களுக்கு கொடுங்களே.. '' என சௌமியா சொல்லிட , உடனே விசாலாட்சி ஆனந்தத்தில் குழந்தையை  அள்ளி கையில் கொடுக்க, பத்து வருடமாக சிரிக்காத தனது மனைவி சிரிப்பை கண்டு கௌதமும் மகிழ்ந்தான். அந்த பிஞ்சு குழந்தையின் கைகளை வருடி ''எனக்கு மகள் எனும் உறவாக வருவாயா... செல்லமே''  என்று முத்தமிட்டு அரவணைத்தாள்  சௌம்யா.

                                      --- பிரவீணா தங்கராஜ் .












மனசாட்சி என்று பெயர்

எனக்கு வெளியே இருந்து கொண்டு
எதிர் மறையாக நடப்பவன் நீ
நான் உள்ளே கொதித்திருப்பேன்
நீயோ வெளியே போலியாக சிரிப்பாய்
பிறர் பார்க்க வேடமிடும் வேடதாரி
உள்ளுக்குள் இரட்டைவேடம் என்கின்றாய்
நான் நானாக தான் இருக்கின்றேன்
நல்லவனோ தீயவனோ உள்ளிருக்கும்
எனக்கு நான் உண்மையானவன்
வெளியே இருக்கும் நீ தான்
மனிதருக்கு மனிதன் வித்தியாசம் காட்டி
பாகுபாடு கொண்டே நடிக்கின்றாய்
விருப்பமின்றி இருப்பினும் சிரிக்கின்றாய்
புகழ்கின்றாய் பொய்யாக
எனக்கு வெளியே இருந்து கொண்டு
எதிர் மறையாக நடப்பவன் நீ
பிறருக்கு எப்படியோ
கண்ணாடி முன் இருக்கும் உன்னிடம்
மட்டுமாவது உண்மையாக நட
அப்பொழுது தான் உள்ளிருக்கும் எனக்கு
மனசாட்சி என்று பெயர் சொல்லிக்கொள்வேன்
                                         -- பிரவீணா தங்கராஜ் .
 

👉தலைப்பு --இலக்கியத்தில் இளைஞர்களின் ஈடுபாடு

         👉தலைப்பு --இலக்கியத்தில் இளைஞர்களின் ஈடுபாடு

                                 ஆயிரம் மொழிகள் தோன்றி மறைந்தாலும் தமிழ் மொழியினை போல இன்சுவை கொண்ட மொழி எதுவுமில்லை . அத்தகைய தமிழ் மொழியில் இலக்கியம் பெரும் பங்கு கொண்டது . அக்காலத்தில் இலக்கியம் பலரும் அறிந்தே இருந்தனர் . தற்காலத்தில் இலக்கியம் பேசும் இளைஞர்களை பார்க்கும் பார்வையே வேறு தான் .
                                          என்ன தான் ஆங்கிலம் , இந்தி , பிரெஞ்சு என்று திணித்து கற்றுக் கொண்டாலும் தமிழ் தாயை மறக்க முடியுமா ? தாய் தமிழ் இலக்கியத்தை தாலாட்டாத இளைஞர்கள் இல்லை எனலாம் .
              இளைஞர்கள் கருத்துப்பிழை , எழுத்துப்பிழையின்றி இலக்கியத்தில் காலூன்றவில்லை என்றாலும் கவிதை , கதை , கட்டுரை போன்ற இலக்கியம் சார்ந்தவற்றில் ஈடுபாடு கொண்டு தான் இருக்கின்றார்கள் .
                                                       பாரதி அறியாத சமூகம் இல்லை . திருக்குறள் தெரியாத மனிதன் இல்லை . அப்படி
யிருக்க இலக்கியத்தில் இளைஞர்கள் பங்கு உண்டே ...
                    சங்கம் வைத்து முன்பு போல இலக்கியம் வளர்க்காவிட்டாலும் சில குழுக்கள் தோன்றி முகநூலில் இலக்கியத்திற்கு தனி இடம் கொடுத்தே மரியாதை செய்கின்றனர் இளைஞர்கள் .
                                 நவீன காலத்தில் நவீன முறையில் இலக்கியம் இளைஞர்களால் ஈடுபாடு கொண்டு தான் இருக்கின்றது . மனிதன் தான் காணும் சமூகத்தில் உள்ள நிறை , குறைகளை (அரசியல் , வன்கொடுமை , பாலியல் கொடுமை , காதல் கவிதை சமூக கவிதை போன்று ) தனது எழுத்தின் மூலமாக மரபு கவிதை வாயிலாகவோ அல்லது புது கவிதை வாயிலாகவோ கட்டுரை எழுதியோ இலக்கியத்தின் மூலமாக விதைக்கவே செய்கின்றான் .
                " இலக்கியத்தை விதைத்து தமிழை வளர்ப்போம் "
                                                                                                      -- பிரவீணா தங்கராஜ்

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...