சக்தி

சக்தி இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்... ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம் தோழியான அட்வகேட் ஜெனியின் வீட்டில். "லுக் லீலா. கொஞ்சம் யோசித்து முடிவெடு. இப்ப வர்ற பெண்கள், தொட்டதுக்கு எல்லாம் டிவோர்ஸ் என்று நிற்கறாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து பாரு. இன்னிக்கு இந்த முடிவு சரியா இருக்கலாம். ஆனா நாளைக்கு உனக்கு ஒரு துணையென்று தேடுறப்ப வெற்றிடமா இருக்கும். உங்கம்மா வேதராணி சொல்லறதை காது கொடுத்து கேளு. உங்க அத்தை புவனா உங்களுக்கு என்ன பிரச்சனையென்றாலும் அவங்களிடம் சொல்ல சொல்லறாங்க." என்று அட்வகேட் ஜெனிதா தோழியாகவே இப்பொழுதும் அறிவுரை கூறிமுடித்தாள். "இது நேத்து முடிவெடுத்து இன்னிக்கு சரியென்று இங்க வந்து நிற்கலை ஜெனி. யோசித்து தான் முடிவெடுக்கறேன் எடுக்கறேன். அவருக்கும் இதுல மு...