Posts

Showing posts from February, 2018

என் இறுதி மூச்சில் - காதல் பிதற்றல் 31

நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டை அதில் முகம் திருப்பி நான் சொல்லப்படும் போடா என்ற முணுமுணுப்பும் மாலை நீ வந்த அடுத்த நொடி மறந்தே போயிருக்கும் இரு கண்களின் தோன்றிய காதலில் ....           *** கரம் பற்றிய போது நான் உச்சரித்த உன் பெயரில் இருந்த காதலை விட ... என் இறுதி மூச்சில் உன் பெயரை சுவாசித்தபடி கரைவேன் அதில் உள்ளது நம் காதல் .             -- பிரவீணா தங்கராஜ் .

தூசு-காதல் பிதற்றல்-30

அவன் பாதம் பட்ட மண் சிறகு முளைத்து மேல் எழும்ப அதை கண்ணில் பொத்தி இமை மூடி பாதுகாத்தேன் . நீங்கள் அதை சாதாரணமாக தூசு கண்ணில் பட்டது என்கின்றீர் .😉                  -- பிரவீணா தங்கராஜ்

சிற்பம்

இவன் வெறும் கல்லென்றே யாவரும் உளி போல தாக்க பிறர் அறியார் கல்லானது என்றாவது  உளியின் வலியை தாங்கிய சிற்பம் ஆகுமென்று ...                     -- பிரவீணா தங்கராஜ் .

முன்னிருக்கையில் மகள்

மித வேக தடையோ  சாலை விதிகளோ எமக்கு உணர்த்த தேவையில்லை வாகனத்தின் முன்னிருக்கையில் மகள்  அமர்கையில் .                        -- பிரவீணா தங்கராஜ் .

உயிரே பறித்து இருக்கலாம்- காதல் பிதற்றல் -29

உன் விழி அம்பு  என் இதயத்தை தாக்க பறிப் போனது எந்தன் உயிர் அல்ல ... எந்தன் உள்ளம் . மெல்ல புரிந்தது உயிரே பறித்து இருக்கலாமென்று  உள்ளம் இப்பொழுது உன்னிடமே வந்து அடைக்கலம் தேடுகின்றதே...!                    -- பிரவீணா தங்கராஜ் .

முதியோர் ஹைக்கூ ...

Image
முதியோர் ஹைக்கூ – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

ஒன்று சேர்த்தன

அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கே யென்று வாதாடிய யந்த தாவர நிலத்தினை பஞ்சாயத்து கூட்டி சரிவர பிரித்தே கொடுத்திட , என்றோ ஒரு நாள் அவ்விருவரும்  உண்டு தூக்கியெறிந்த தர்பூசணி செடி வேலிதாண்டியே இருவர் நிலத்தையும் ஒன்று சேர்த்தன .                           -- பிரவீணா தங்கராஜ் .

துள்ளித் திரிந்த பருவம்

முட்டி வரை பாவாடை யணிந்து முக மெல்லாம் புன்னகை யணிந்து கொட்டும் மழையிலும் கேளிப் பேச்சிலும் கொட்ட மடித்தே வாழ்க்கை நகர முட்டுக் கட்டையாய் முடிவு தந்தது பருவமெனும் சோ(சே)லையில் புகுந்தப் பின் துள்ளித் திரிந்த பருவமே - நீ எங்குச் சென்று ஒளிந்துக் கொண்டாய் ...!                       -- பிரவீணா தங்கராஜ் .

கருணை இல்லம்

Image
அத்திரு மரத்தைச் சுற்றி வேண்டுபவரே அத்திரிசாரமின்றி சுவீகாரம் புரிந்திடுவீர் புணர்ச்சியால் பூத்த பூக்கள் தான் வேறு பாவம் அறியா சிசுக்கள் தான் குப்பையில் பிறந்த மாணிக்கங்களே கூடுகளில் பறக்கவே ஆசைக்கொள்கின்றன உண்ண உணவும் இருக்க இடமும் தேடுவதை விட தாய் தந்தையென்ற பந்தங்கள் அரவணைக்கவே அண்டுகின்றன . கருணை யில்லா இல்லத்தில் சேர்த்துக்க செய்யாது கருணையில்லத்தில் சேர்ப்பித்த கயவர்களையும்  அறியாத பால்  முகமும் , முல்லை சிரிப்பும் உதிர்த்து பாசத்திற்கு  மட்டுமே ஏங்கிடும் உள்ளமது கண்ணில் ஏக்கம் கொண்டு தேடுகின்றனர் காக்க எவரேனும் வருவார்களென்று ... நேசத்தை கண்ணில் வைத்தே நெஞ்சில் வலியை மறைத்தே  இல்லத்தை நோக்கி வரும் மனத்தினையே  நெஞ்சத்தில் பந்தமென எண்ணி கொண்டாடும் மழலை கூட்டம் .                                   -- பிரவீணா தங்கராஜ் .

இதயத்தைத் திருடாதே

Image
எங்கோ வசித்து  என்னை இம்சித்துஎன் இதய சிம்மாசனத்தை தட்டுகின்றாய்...! கண்களில் தேடவைத்து கனவிலே மிதக்கவிட்டு தனிமையை ரசிக்கவைத்து மவுனத்தை வாசிக்கவைத்து இதயத்தை திருடி விட்டாய்......💖                 -- பிரவீணா தங்கராஜ் .  

கிராமியக் கவிதை

Image
           மஞ்சள் முகமுடையாள் மாசற்ற குணமுடையாள் தாமரை குளத்தினிலே  தாரகையே குளித்திடுவாய்... கணுக்கால் கொலுசினிலே காதலயெனையும் பூட்டிடுவாய்... பச்சை வயலில் நீ நடக்க பஞ்சாய் மாறின புற்களெல்லாம் தளும்பிய குடத்தை ஏந்திடவே  தாவணி யெடுத்து நீ சொருகளிலே தவிக்குதடி என் மனசு கருமையப்பிய கருவாச்சி காதல் பேசுவது உன் விழியாட்சி ரெட்டைசடையில் நீ திரும்ப ராட்டினமாக சுற்றுதடி மனசாட்சி கோலமிட்டு புள்ளிக்குள்ள சிக்கிக்கிட்டேன் வசமாக உன்னைப்போல அழகியாருமில்லை உள்ளமெல்லாம் நீ நிறைஞ்சு போனதால... ஆலமரத்தடி தலைசாய்ந்து அன்பாய் பேசிய கதைகளை தண்டட்டி அணிந்த அப்பத்தா தண்டோரா போட்டு சொல்லிடுவா கண்ணாடி வளையலை வாங்கிகிட்டு ஊர்திருவிழாக்கு வந்திடுவேன் மஞ்சுவிரட்டு காளையை அடக்கிப்புட்டு மஞ்சள்கயிறை ஏந்தியே நானும் வந்திடுவேன் என் கிராமத்து கிளியே காத்திரு விடியும்வரை .                                                    -- பிரவீணா தங்கராஜ் .

கார்ப்பரேட்

கல்லா பெட்டியருகே மீதி ஒருரூபாய் கொடுப்பதற்கு சில்லறையில்லையென மிட்டாய் கொடுக்கும் -அந்த விழி நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டிடம் வந்த பிறகே அழுத குழந்தைக்கு கணக்குபார்க்காது மிட்டாய் கொடுக்கும் அண்ணாச்சிகடையில் எலிகள் வந்து சேர்ந்தன .                        -- பிரவீணா தங்கராஜ் . 

உன் இதயபெட்டிக்குள் - காதல் பிதற்றல்-28

அயல் தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்கின்றாய்...! இங்கிருந்து எடுத்து சென்ற  இதயம் போதும் போதுமென்று சொல்லும் அளவிற்கு காதலை அள்ளிக் கொண்டு வா ... உன் இதயபெட்டிக்குள்ளிருந்து !                                       பிரவீணா தங்கராஜ் .

உந்தன் மொழிகளென்று காதல் பிதற்றல் -27

அதிகாலையில் உறக்க கலகத்தில் ஆரதழுவும் உந்தன் கைகளுக்குள் எந்தன் மேனிவாசம் இன்றென்ன அடுதலென எட்டிப்பார்க்கும் உந்தனார்வதில்  எந்தன் விழியில் சினத்தையும்  குளித்து முடித்து சாரல் மழையாக துவட்டும் உந்தன் கேசத்தை துவட்டும் எந்தன் தாய்மையும் அதே பட்டு கேசத்தை நின்வாரும் போது எந்தன் களைத்து விடும் குழந்தை மனதையும் உனக்கு பிடித்த அந்த வெண்நிற சட்டையில் என்னையறியாது கொட்டிய குழம்பால் ஏற்பட்ட சண்டைகளையும் ... நீ தேடும் அந்த சாம்பல்நிறகைக்குட்டை நேரம்போக்காமல் எடுத்துக் கொடுக்கும் கனத்தையும் அலைபேசியோடு அகம் பேசியதையும் கனபொழுதில் பதிந்த அழுத்த முத்தத்தையும் எடுத்து பெட்டிகளில் நிரப்பிக்கொள் . மொழிதெரியாத நாட்டில் செல்லுமுனக்கு தெரியும்  இதெல்லாம் தான் உந்தன் மொழிகளென்று...                                                            -- பிரவீணா தங்கராஜ் .