கிராமியக் கவிதை

          

மஞ்சள் முகமுடையாள்
மாசற்ற குணமுடையாள்
தாமரை குளத்தினிலே 
தாரகையே குளித்திடுவாய்...
கணுக்கால் கொலுசினிலே
காதலயெனையும் பூட்டிடுவாய்...
பச்சை வயலில் நீ நடக்க
பஞ்சாய் மாறின புற்களெல்லாம்
தளும்பிய குடத்தை ஏந்திடவே 
தாவணி யெடுத்து நீ சொருகளிலே
தவிக்குதடி என் மனசு
கருமையப்பிய கருவாச்சி
காதல் பேசுவது உன் விழியாட்சி
ரெட்டைசடையில் நீ திரும்ப
ராட்டினமாக சுற்றுதடி மனசாட்சி
கோலமிட்டு புள்ளிக்குள்ள
சிக்கிக்கிட்டேன் வசமாக
உன்னைப்போல அழகியாருமில்லை
உள்ளமெல்லாம் நீ நிறைஞ்சு போனதால...
ஆலமரத்தடி தலைசாய்ந்து
அன்பாய் பேசிய கதைகளை
தண்டட்டி அணிந்த அப்பத்தா
தண்டோரா போட்டு சொல்லிடுவா
கண்ணாடி வளையலை வாங்கிகிட்டு
ஊர்திருவிழாக்கு வந்திடுவேன்
மஞ்சுவிரட்டு காளையை அடக்கிப்புட்டு
மஞ்சள்கயிறை ஏந்தியே நானும் வந்திடுவேன்
என் கிராமத்து கிளியே காத்திரு விடியும்வரை .
                                                   -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...