கருணை இல்லம்

அத்திரு மரத்தைச் சுற்றி வேண்டுபவரே
அத்திரிசாரமின்றி சுவீகாரம் புரிந்திடுவீர்
புணர்ச்சியால் பூத்த பூக்கள் தான்
வேறு பாவம் அறியா சிசுக்கள் தான்
குப்பையில் பிறந்த மாணிக்கங்களே
கூடுகளில் பறக்கவே ஆசைக்கொள்கின்றன
உண்ண உணவும் இருக்க இடமும்
தேடுவதை விட
தாய் தந்தையென்ற பந்தங்கள்
அரவணைக்கவே அண்டுகின்றன .
கருணை யில்லா இல்லத்தில்
சேர்த்துக்க செய்யாது
கருணையில்லத்தில் சேர்ப்பித்த
கயவர்களையும்  அறியாத
பால்  முகமும் , முல்லை சிரிப்பும் உதிர்த்து
பாசத்திற்கு  மட்டுமே ஏங்கிடும் உள்ளமது
கண்ணில் ஏக்கம் கொண்டு தேடுகின்றனர்
காக்க எவரேனும் வருவார்களென்று ...
நேசத்தை கண்ணில் வைத்தே
நெஞ்சில் வலியை மறைத்தே 
இல்லத்தை நோக்கி வரும் மனத்தினையே
 நெஞ்சத்தில் பந்தமென எண்ணி
கொண்டாடும் மழலை கூட்டம் .
                                  -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...