Posts

Showing posts from August, 2018

நாட்காட்டி - துளிப்பா

நாட்கள் கூடகூட  மெலிந்து போகின்றன நாட்காட்டி              - பிரவீணா தங்கராஜ் .

என்னை நானே புதுப்பிக்கிறேன்

Image
என்னை நானே புதுப்பிக்கின்றேன் அதிகாலையில் எழுந்து சிரத்தையின்றி எவ்வித அவசரமின்றி மென்பாதங்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தே மாடியில் நடைப்பயிற்சி செய்கின்றேன் அங்கங்கே கண்கள் குளிர வண்ண வண்ணப் பூக்களுக்கு நீரூட்டி முடிந்தளவு பசுமையை காத்துக் கொள்கின்றேன் கம்பு சோளம் கையிலெடுத்து வீசி நான் உணவளிப்பேனென நம்பி தினமும் வந்திடும் புறாவிடமும் காக்கை குருவியிடமும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம் மத்திய உணவு முடிந்து தினசரி நாளிதழில் பாக்கியில்லாது படித்து முடித்து அதிலிருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியில் எல்லாம் பூர்த்திச் செய்து பத்து வயது சிறுவனாக மகிழ்ந்துக் கொள்கின்றேன் வரவேற்பறையில் எல்லாம் எடுத்தப் பொருள் எடுத்த இடத்தில் வைத்து எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன் அந்தி மாலையில் ஒரு தேனீரை மெல்ல மெல்ல உறிஞ்சி பழைய நினைவுகளில் மூழ்கி அப்படியே நடைப் போட்டு முன்பு இல்லை என்று வாதிட்ட கோவில்களுக்கும் சென்று பக்தியோடு வரிசையில் வணங்குகின்றேன் இறையை... சரியாக ஆறு மணிக்கு முன்பே வீடு தேடி அழைக்காமலே வந்திடும் கொசுக்களை மின்சார மட்டையால் அடித்தே வீ

துளிப்பா - எட்டுவழிச்சாலை

சாலைகள் விரிந்தன பசுமைகள் முடங்கின விவசாயிக்கு விலங்கு           -- பிரவீணா தங்கராஜ்

முகமூடியின் வறுமை

Image
வண்ண விளக்குகள் கண்ணைப் பறிக்க வாசலிலே பன்னிரை சுழற்காற்றாடி விசிறிட வகை வகையாய் பஞ்சு மிட்டாய்களும் பாப்கார்ன்களும் வண்டுகளாய் போட்டியிட்ட வண்ண பலூன்களை இலவசமாய் குழந்தைகளுக்கு நீட்டியப்படி சிரித்த முகமாக மாட்டியிருக்கும் அம்முகமூடி தோள்களின் நிறமோ , முகமோ தெரியாத அம்முகமூடி மனிதனிடம் தங்கள் பார்க்கும் பொம்மை படத்தின் நிஜ உருவம் நேரில் வந்ததாய் மனமகிழ்ந்தே தன் பிஞ்சு கைகளை கொடுத்து முகமலர்ந்து சிரித்தே செல்லும் அக்குழந்தைக்கோ மற்றவர்களுக்கோ நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை முகமூடிக்குள் காற்று கூட புழுங்காத விகார உருவமவொன்று அழகிய மனதோடு முகமூடியின் பிடிக்குள் மட்டுமல்ல வறுமை பிடிக்குள்ளும் உள்ளதென்று .                           -- பிரவீணா தங்கராஜ் .

@ இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் @

நிலவே ... சில நாட்களாக அல்ல... சில மாதங்களாக அல்ல... சில பல வருடங்களாகவே தேடுகின்றேன் உடல் சுகவீனமாக இருந்தபோது உள்ளார்ந்த அன்போடு உரையாடிய தோழமையை விட உயர்ரக உணவு விடுதியில் எனக்கு முன்பே என் கைகளை அழுத்தி நான் தருகின்றேனென ஆத்மார்த்த புன்னகையோடு அடம்பிடிக்கும் தோழமையை விட கல்லூரியில் மிக அருகில் அமர்ந்து கதைப்பேசி உணவுகளைப்  பகிர்ந்து உள்ளதை பகிர்ந்த தோழமையை விட அவளையே தேடுகின்றேன் பாதி மிட்டாயினை பாவாடையில் கடித்து பகிர்ந்த அவளை ஒற்றை மதிப்பெண்களில் அடுத்த வகுப்பிற்கு தேர்வாகும் அவளின் நிலைமை இருந்தும் எனக்கு ஒற்றை மதிப்பெண்னில் எனக்கு சதம் குறைந்ததை எண்ணி வருந்திய அவளை தேடுகின்றேன் சில நாட்களாய் அல்ல சில மாதங்களாக அல்ல சில பல வருடங்களாக தேடுகின்றேன் நிலவே தேடுகின்றேன் தோழமை என்றால் என்னவென்று பசுமரத்து பால்யத்தில் கண்ட உன்னை நிலவே தேடுகின்றேன் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

அத்தனை சுலபமில்லை- காதல் பிதற்றல்38

அத்தனை சுலபமில்லை உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கும் பிடிக்குமென்று சொல்வது எனக்கு பிடித்தவை உனக்கு பிடிக்கவில்லையென இலகுவாக சொல்லிவிட்ட போதிலும் காதல் அரக்கனே அப்படி இருந்தும் ஒருமுறையேனும் உனக்கு பிடித்ததை மறுக்கும் நோக்கத்தோடு மூளை உத்தரவு பிறப்பித்தும் என் இதயத்தில் நீ செய்யும் அராஜகம் தலையை உனக்கு சாதகமாகவே அசைந்து விடுகின்றேன் .                      -- பிரவீணா தங்கராஜ்

முட்பூக்கள்

முட்களும் பூக்களும் ஒன்றே என்கின்றேன் நான் இல்லை என்கின்றனர் உன் விழியை பார்க்காதவர்கள்              -- பிரவீணா தங்கராஜ் 

ஏழைகளாக திரிகின்றாய் ...

அப்பரந்து விரிந்த வானத்தில் சிறகை விரித்துப் பறந்திடும் அப்பறவைக் கூட்டம் கூட அடுத்த வேளை உணவை சேகரிப்பதில்லை நாளும் உழைத்து உண்ணும் பரவசத்தில் லயிக்கின்றது மனிதா...  நீ மட்டும் தான் ஏழு தலைமுறைக்கு பணத்தைச் சேர்த்து வைத்து ஏழைகளாக திரிகின்றாய் மனதளவில் ...                        -- பிரவீணா தங்கராஜ் .

@ துளிப்பா ( ஹைக்கூ )@

சித்தாளின் தலையில் சுமைகள் உயர்கின்றன அவன் பிள்ளையின் மதிப்பெண்           *** ஏறிக்கொண்டு இருக்கின்றன குடிகாரனின் போதையும் இல்லாளின் கவலையும்          *** நிறங்கள் எல்லாம் வண்ணம் இழக்கின்றன பார்வையற்றவனின் கண்களுக்கு           *** தலையில் அடித்ததும் அலறுவதை நிறுத்துகிறது அலறி கடிகாரம்          *** தலையை சீவியதும் வாள் கூர்மை வீரம் எழுதுகோலுக்கு .               -- பிரவீணா தங்கராஜ் .

பெண்மனம்

Image
ஆழியே உன்னைப் போலவே பெண்மனம் அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும் உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம் ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம் அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம் உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம் வானத்தின் தூய்மை போல் மேலோங்கும் வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும் பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன... வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...! கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!                       -- பிரவீணா தங்கராஜ் .

தாயின் நேசம்

Image
புன்னகை ஒன்றே போதுமடி உனக்கு புவிதனில் நீயொரு பேரழகி என்பதற்கு காந்தத்தின் ஈர்ப்பை கருவிழியினில் காட்டி கண்கள் இரண்டும் கவிமொழி பேசுதடி கண்ணனின் குறும்பை மிஞ்சிடும் பெதும்பை நீ கார்மேகத்தின் செல்ல மகளே தாயின் சேலை விளிம்பில் நீ பிடிக்க சக்கரமாய் சுழலுமடி தாயின் நேசம் .                 -- பிரவீணா தங்கராஜ் .