முகமூடியின் வறுமை
வாசலிலே பன்னிரை சுழற்காற்றாடி விசிறிட
வகை வகையாய் பஞ்சு மிட்டாய்களும்
பாப்கார்ன்களும்
வண்டுகளாய் போட்டியிட்ட
வண்ண பலூன்களை இலவசமாய்
குழந்தைகளுக்கு நீட்டியப்படி
சிரித்த முகமாக மாட்டியிருக்கும்
அம்முகமூடி
தோள்களின் நிறமோ , முகமோ தெரியாத
அம்முகமூடி மனிதனிடம்
தங்கள் பார்க்கும் பொம்மை படத்தின்
நிஜ உருவம் நேரில் வந்ததாய்
மனமகிழ்ந்தே தன் பிஞ்சு கைகளை கொடுத்து
முகமலர்ந்து சிரித்தே செல்லும்
அக்குழந்தைக்கோ மற்றவர்களுக்கோ
நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை
முகமூடிக்குள் காற்று கூட புழுங்காத
விகார உருவமவொன்று அழகிய மனதோடு
முகமூடியின் பிடிக்குள் மட்டுமல்ல
வறுமை பிடிக்குள்ளும் உள்ளதென்று .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment