@ இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் @
நிலவே ...
சில நாட்களாக அல்ல...
சில மாதங்களாக அல்ல...
சில பல வருடங்களாகவே தேடுகின்றேன்
உடல் சுகவீனமாக இருந்தபோது
உள்ளார்ந்த அன்போடு
உரையாடிய தோழமையை விட
உயர்ரக உணவு விடுதியில்
எனக்கு முன்பே என் கைகளை அழுத்தி
நான் தருகின்றேனென
ஆத்மார்த்த புன்னகையோடு
அடம்பிடிக்கும் தோழமையை விட
கல்லூரியில் மிக அருகில் அமர்ந்து
கதைப்பேசி உணவுகளைப் பகிர்ந்து
உள்ளதை பகிர்ந்த தோழமையை விட
அவளையே தேடுகின்றேன்
பாதி மிட்டாயினை பாவாடையில் கடித்து
பகிர்ந்த அவளை
ஒற்றை மதிப்பெண்களில்
அடுத்த வகுப்பிற்கு தேர்வாகும்
அவளின் நிலைமை இருந்தும்
எனக்கு ஒற்றை மதிப்பெண்னில்
எனக்கு சதம் குறைந்ததை எண்ணி
வருந்திய அவளை தேடுகின்றேன்
சில நாட்களாய் அல்ல
சில மாதங்களாக அல்ல
சில பல வருடங்களாக தேடுகின்றேன்
நிலவே தேடுகின்றேன்
தோழமை என்றால் என்னவென்று
பசுமரத்து பால்யத்தில் கண்ட உன்னை
நிலவே தேடுகின்றேன் .
-- பிரவீணா தங்கராஜ் .
சில நாட்களாக அல்ல...
சில மாதங்களாக அல்ல...
சில பல வருடங்களாகவே தேடுகின்றேன்
உடல் சுகவீனமாக இருந்தபோது
உள்ளார்ந்த அன்போடு
உரையாடிய தோழமையை விட
உயர்ரக உணவு விடுதியில்
எனக்கு முன்பே என் கைகளை அழுத்தி
நான் தருகின்றேனென
ஆத்மார்த்த புன்னகையோடு
அடம்பிடிக்கும் தோழமையை விட
கல்லூரியில் மிக அருகில் அமர்ந்து
கதைப்பேசி உணவுகளைப் பகிர்ந்து
உள்ளதை பகிர்ந்த தோழமையை விட
அவளையே தேடுகின்றேன்
பாதி மிட்டாயினை பாவாடையில் கடித்து
பகிர்ந்த அவளை
ஒற்றை மதிப்பெண்களில்
அடுத்த வகுப்பிற்கு தேர்வாகும்
அவளின் நிலைமை இருந்தும்
எனக்கு ஒற்றை மதிப்பெண்னில்
எனக்கு சதம் குறைந்ததை எண்ணி
வருந்திய அவளை தேடுகின்றேன்
சில நாட்களாய் அல்ல
சில மாதங்களாக அல்ல
சில பல வருடங்களாக தேடுகின்றேன்
நிலவே தேடுகின்றேன்
தோழமை என்றால் என்னவென்று
பசுமரத்து பால்யத்தில் கண்ட உன்னை
நிலவே தேடுகின்றேன் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment