என்னை நானே புதுப்பிக்கிறேன்

என்னை நானே புதுப்பிக்கின்றேன்
அதிகாலையில் எழுந்து
சிரத்தையின்றி எவ்வித அவசரமின்றி
மென்பாதங்கள் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்தே
மாடியில் நடைப்பயிற்சி செய்கின்றேன்
அங்கங்கே கண்கள் குளிர
வண்ண வண்ணப் பூக்களுக்கு
நீரூட்டி முடிந்தளவு பசுமையை
காத்துக் கொள்கின்றேன்
கம்பு சோளம் கையிலெடுத்து வீசி
நான் உணவளிப்பேனென
நம்பி தினமும் வந்திடும் புறாவிடமும்
காக்கை குருவியிடமும்
எங்களுக்குள் பேசிக்கொள்வோம்
மத்திய உணவு முடிந்து
தினசரி நாளிதழில் பாக்கியில்லாது
படித்து முடித்து அதிலிருக்கும்
குறுக்கெழுத்துப் போட்டியில்
எல்லாம் பூர்த்திச் செய்து
பத்து வயது சிறுவனாக
மகிழ்ந்துக் கொள்கின்றேன்
வரவேற்பறையில் எல்லாம்
எடுத்தப் பொருள் எடுத்த இடத்தில் வைத்து
எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்
அந்தி மாலையில் ஒரு தேனீரை
மெல்ல மெல்ல உறிஞ்சி
பழைய நினைவுகளில் மூழ்கி
அப்படியே நடைப் போட்டு
முன்பு இல்லை என்று வாதிட்ட
கோவில்களுக்கும் சென்று
பக்தியோடு வரிசையில்
வணங்குகின்றேன் இறையை...
சரியாக ஆறு மணிக்கு முன்பே
வீடு தேடி அழைக்காமலே வந்திடும்
கொசுக்களை மின்சார மட்டையால்
அடித்தே வீழ்த்தி முடிகின்றது
எனது அன்றாட பணி
இத்தனையும் பேத்தலாக தோன்றினால்
உங்களுக்கு வயது அறுபது அல்ல
                                          -- பிரவீணா தங்கராஜ் .
 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு