இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

பஞ்ச தந்திரம்-10

பஞ்ச தந்திரம்-10      வேதாந்த் நைனிகாவை பார்த்து விட்டு, திரிஷ்யா கூட வந்த மற்றவர்களை பார்வையால் அலசினான்.           ரஞ்சனா மாடர்ன் உடையில் வந்திருந்தாள். அதனால் அவளை அளவிட்டவன் மஞ்சரியை பார்த்து சிரித்தான். நைனிகாவை பார்த்து மஞ்சரியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.     "என்னடா மாதர் சங்கத்துக்கு போய் நாலு நல்ல மனுஷங்களை கூட்டிட்டு வந்து முன்ன நிற்கறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். பிகாஸ் மாதர் சங்கத்து ஆட்களோட வந்தேன்னு தான் லேசா பயந்துட்டேன்.    கடைசில பார்த்தா போயும் போயும் இவங்களோட..." என்று ஏளனமாய் பேசினான்.        "இந்த பொண்ணு ஓகே... இவங்க இரண்டு பேரை எதுக்கு கூட்டிட்டு வந்த? இவங்களுக்கு என்ன தகுதியிருக்கு என்ன பத்தி பேச." என்று திரிஷ்யாவிடம் கேள்வி துளைத்தான்.          திரிஷ்யா வேதாந்த் அள்ளி வீசுப்போகும் நெருப்புகளை அறியாமல், "ஏன் இவங்களுக்கு தகுதி இல்லைன் சொல்லற" என்று கோபமாய் நின்றாள். தான் நியாயம் கேட்க அழைத்து வந்தவர்களையும் இகழ்கின்றானே என்ற கோபம்.     "ஓ... நீ நாலு சுவத்துக்குள்ள இருக்கற கட்டுப்பெட்டி இவங்க யாருனு தெரியாது தானே. இத

பஞ்ச தந்திரம்-9

பஞ்ச தந்திரம்-9       "தருண் இங்க இல்லை... அவன் ஈவினிங் தான் சென்னை வர்றான். இப்ப போன்ல தான் பேச முடியும். அதுவுமில்லாம என்னால அவனோட வாழ முடியாது. இந்த சேர்த்து வைக்கிற தாட்ஸ் இருந்தா தயவு செய்து மறந்திடுங்க. அதுக்கு நான் செத்துடலாம்.    எனக்கு என் வீடியோ தான் பிரச்சனை" என்று நைனிகா கூறவும் மஞ்சரியோ, "இது போன்ல பேச வேண்டிய விஷயமில்லை. நேர்ல பார்த்து முடிவு பண்ணலாம்." என்று  கூறவும் மற்றவர்களும் ஆமோதித்தனர்.     "அப்படின்னா திரிஷ்யா லைப்பை பார்ப்போம்." என்று கூறினாள் ரஞ்சனா.      திரிஷ்யா விழியை நிமிர்த்தி இந்த ரணகளத்திலா? என்று குழம்பினாள்.      "எப்படியும் ஈவினிங் வரை இங்க இருக்க முடியாது. மாட்டிப்போம். அதோட பசிக்கும். எங்க வார்டன் லைட்டா பத்து பதினொன்றுக்கு கண் அசரும். அந்த நேரம் ஓடிடலாம். வெளியே செக்கியூரிட்டி கேட்டா ஹாஸ்டல்ல இருக்கறவங்களை பார்க்க வந்ததா சொல்ஒஇ எஸ்ஸாகிடலாம்." என்று நைனிகா கூறவும் அனைவரும் இந்த திட்டத்தை ஏற்று வெளியே செல்ல தயாராகினார்கள்.        தனுஜாவும் திரிஷ்யாவும் சேர்ந்து போகட்டும். செக்கியூரிட்டி கேட்டா உங்க தங்கச்சி பார்