பருகும் தேனீர்

ஒரு மிடறு பருகி முடித்தேன் தித்திக்கின்றது தேனீர் அன்றொருனாள் உன்னிடம் பேசியருந்திய அதேயினிய நினைவுகள் அடுத்த மிடறு பருகினேன் சிறிது கசந்தன அதே தேனீர் நீ விலகி சென்ற கசந்த நினைவுகள் அதே தேனீர் ருசி மாறின உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்வை இனிமையாக்குவதோ கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை அடுத்த மிடறில் உணர்ந்தேன். --பிரவீணா தங்கராஜ்.