முதல் முதலாய்.... ஒரு மெல்லிய.... நாயகன்-நாயகி : அஸ்வின்- பவித்ரா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அது போலவே நம் நாயகி பவித்ராவுக்கும் ஒரு கதை உண்டு. இருபது வருடம் பெற்று வளர்த்த தாய்(கயல்விழி) தந்தை(நந்த கோபாலன்) இருவரும் ஓர் உண்மையை மறைக்க, அது கல்லூரி வயதில் பவித்ராவுக்கு தெரிய வர, கலங்கி போகின்றாள். கூடவே ரகுவால் கசப்பான நிகழ்வுகள் மறக்க எண்ணி, தன் வீட்டில் இருந்து இடம் பெயருகின்றாள். அங்கே நம் நாயகன் அஸ்வினை சந்திக்கின்றாள். தன் தந்தை நண்பனான விஸ்வநாதன் பையன் அஸ்வின் முதல் முதலாக மெல்லிய உணர்வாக பவித்ராவிடம் தோன்றிய காதலை கூற துவங்க, அவர்களுக்குள் நடைபெறும் அழகான உணர்வே இக்கதை. அஸ்வின்- பவித்ரா இவர்களுடன் சேர்ந்து ராதை, ஸ்ரீ ராம், தன்யா, ஆகாஷ், சுவாதி, சஞ்சனா ரம்யா என்று பலரும் கதையில் கரம் கோர்கின்றனர். புத்தகமாக பெற தொடர்...