ஒரு பக்க கதை-சர்ப்பம்

சர்ப்பம் காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே வாஷிங்மிஷினில் துணியை துவைக்க போட்டு எடுத்து விட்டு, மாடியில் தொட்டியில் நீரையும் வழிய பிடித்து கொண்டாள். என்ன இன்று வீட்டிலிருக்கும் மழலையருக்கு பொழுது போகாமல் வாட்டியது. மீனாவின் குழந்தைகள் இருவர் மற்றும் கணவரின் அக்கா பிள்ளைகள் என்று மேலும் இருவர் இருக்க, முதலில் போனில் விளையாடி மகிழ்ந்தனர். மின்சாரம் இருந்தால் டிவியில் ஹாட் ஸ்டாரில் அலசி புது பட கார்டூன் என்று நேரம் கழித்திருப்பனர். இன்றோ அதற்கும் வழியில்லை. போனும் நீ நான் சொல்லறதை பார்க்கலை. எனக்கு இந்த கேம் பிடிக்காது என்று ஆரம்பமானது. கணேஷ் அவன் பாட்டிற்கு பைக்கை எடுத்து வெளியே சென்றான். மீனாட்சியோ பனிரெண்டு வயதுபிள்ளைகளும் எட்டு வயது ப...