இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

புத்தாண்டு சபதம்

படம்
            புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும் மனனம் செய்யுமளவிற்கு காதை தீய வைத்துவிடுகின்றனர்.    நியூ இயர் என்றால் ஆர்வமாக வரவேற்க திவ்யாவுக்கும் ஆசைதான். ஆனால் ரவீஷ்?        எத்தனை முறை சொன்னாலும் ரவீஷ் ஆங்கில புத்தாண்டு அன்று நண்பர்களோடு மது அருந்திவிட்டு வருவது திவ்யாவுக்கு ஏற்க முடியாத கவலையை தரும்.      இந்த நியூஇயர் என்றாலே எரிச்சலாய் உணருவாள். தமிழ் வருடப்பிறப்புக்கு கூட இத்தனை ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால் ஆங்கில வருடத்திற்கு, நம்மை அடிமையாய் ஆண்டு சென்ற மொழியினத்திற்கு, அத்தனை வரவேற்பும் வாழ்த்தும் கொண்டாட்டமும். அதனால் இன்று அவன் கிளம்பி அலுவலகம் செல்லும் நேரம் திட்டு கிடைத்தாலும் பரவாயில்லையென்று தொண்டையை செருமிக் கொண்டு பேச துவங்கினாள்.     "ரவீஷ் நியூஇயர் என்று எப்பவும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற. தயவு செய்து இந்த முறை அப்படி பண்ணாதே. ரொம்ப கஷ்டமாயிருக்கு.     நீ மிட்நைட்ல வீட்டுக்கு வந்து சேரும் வரை