நீ என் முதல் காதல் -19
அத்தியாயம்-19 ஸ்ரீவினிதா லலிதா இருவரும் பேத்தி பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டார்கள். இனி பைரவ்-தாரிகா வீட்டில் இருக்கப் போகின்றாளே என்று கொஞ்சம் கவலை இருந்தது. லலிதாவை விட ஸ்ரீவினிதாவிற்கு பெரிய கவலை. ஷண்மதி போல ஸ்ரீநிதி தனிச்சையாக வாழ ஆசைப்படுபவள். நிச்சயம் பைரவோடு தாரிகாவோடு ஒரே வீட்டில் இருப்பது எல்லாம் கஷ்டமானது. தாரிகாவாது சிலதை மகனுக்காக தம்பிக்காக விட்டுக்கொடுத்துக் கொள்வாள். மாப்பிள்ளை பைரவிடம் எதிர்பார்க்க முடியுமா? ஷண்மதி யுகேந்திரனோடு வரவில்லையே. அவள் அவளது வீட்டில் தான் திருமணம் ஆனப்பின்னும் இருப்பேனென்று முதலிலேயே கூறிவிட்டாள். இங்கே ஸ்ரீநிதி எப்படியோ? அம்மா போல மகளும் என் வீட்லயிருப்பேன் ம்ருத்யு என்னோடு இருக்கட்டும் என்பாளோ? ஷண்மதிக்கு காரணம் இருக்கலாம். தாரிகா மருமகளை வந்து வந்து பார்த்து மகிழ்ந்து சென்றாள். ம்ருத்யுவும் அதே அறையில் அடிக்கடி ஆஜரானான். மதியம் போல ஸ்ரீநிதி கொஞ்சமாய் இயல்புக்கு திரும்பினாள் எனலாம். திருமணத்திற்கு வந்தவர்கள் ஒரளவு சென்ற...