விநோத கணக்கு
விநோத கணக்கு எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று. துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது. இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க மனம் உந்தியது. அப்பொழுது ராம் போன் வரவும் எடுத்தாள். "ஹாய் பொண்டாட்டி... என்ன உங்க வீட்டு ராஜ கவனிப்பில் புருஷனுக்கு கால் பண்ணணும் என்றதே மறந்திட்டியா?" என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான் ராம். ஜெனிபரோ தாய் தந்தை வீட்டுக்குள் அழைக்காத கோபத்தை தன் காதல் கணவனிடம் காட்டினாள். "என்ன நக்கலா ராம். எங்க வீட்ல சேர்த்துக்கலை அதனால குத்தி காட்டறியா. இதெல்லாம் உன்னால ராம்" என்று எகிறினாள். "ஏ... எங்க வீட்லயும் தான் சேர்த்துக்கலை. அப்பறம் எப்படி குத்தி காட்டறதா கணக்கு வரும். நீ எப்பவும் ரோட்ல இருக்கறப்ப போன் பண்ணுவியே இன்னிக்கு காணோமேனு கேட்டேன். ஒரு வேளை உங்க வீட்ல உன்னை அழைச்சி விருந்து உபசரிப்பு பண்ணறாங்களோனு. அதென்ன எல்லாம் என்னால? நீ ஒன்னும் பண்ணலை.?" என்று தங்கள் காதல் களவாணியில்