பொழுதை கொஞ்சம் களவாடு
பொழுதை கொஞ்சம் களவாடு
'பூ வைத்தாய் பூ வைத்தாய் பூவுக்கோர் பூவைத்தாய்...' என்று 'அருவி' ஹம் செய்து கொண்டே கணினியில் தன் பாஸ்வோர்ட் லாகினை செய்தாள்.
லாகின் செய்த அடுத்த நொடி, 'ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு காலேஜ்ல எனக்கும் என் பிரெண்ட் ராணிக்கு முட்டிக்கிச்சு. எப்ப பாரு எல்லாரிடமும் லூஸ் டாக் விடுவியா. என் லவ் பிரேக்அப் ஆகிடுச்சுனு நீயேன் மற்ற பிரெண்டிடம் சொன்னயென்று ஒரே திட்டு. நான் என்ன பிரெண்ட்ஸ் பண்ணறது. நீங்களே சொல்லுங்க. என்னோட இன்னொரு பிரெண்ட் ராணி லவ் எப்படிடி போகுதுனு கேட்டா. நான் அவங்களுக்குள் சில பிரச்சனை அதனால பிரேக்அப் என்று சொன்னேன்.
இரண்டு பேருமே பிரெண்ட்ஸ் நான் பொய் சொல்ல முடியுமா. எனக்கு மனசுல பட்டதை தான் சொன்னேன். அதுக்கு போய் நீயொரு லூஸ் டாக் அதுயிதுனு சொல்லி திட்டிட்டா. நீங்களே சொல்லுங்க பிரெண்ட்ஸ் உண்மையை பேசறது தப்பா. என்னோட நேச்சரே இதான். மனசுக்கு பட்டதை சொல்வேன். மனசுல ஒன்னும் திடீரென பொய்யும் வராது.
ராணி போறப்ப இந்த பழக்கத்தை மாத்திக்கோனு அட்வைஸ் வேற. நீங்களே சொல்லுங்க. நான் என் குணத்துக்கு மாறா மாறணுமா. இல்லை என் மனசுக்கு பிடிச்ச மாதிரி பேசிட்டு ரிலாக்ஸா இருக்கவா. நீங்களே சொல்லுங்க பிரெண்ட்ஸ் எனக்கு உங்க சஜ்ஜஷன் பார்த்துட்டு தான் முடிவெடுக்கலாம்னு இருக்கேன்.' என்று குமுதத்தில் ஒரு பக்க கதை அளவிற்கு அருவி டைப் செய்து முகநூலில் போல்(poll-கருத்துகணிப்பு) கேள்வியாய் போட்டுவிட்டு பதிலுக்காய் காத்திருந்தாள்.
மடமடவென சிலர் 'நீ யாருக்காகவும் மாத்திக்காதே மா.' என்றும், ஒவ்வொருத்தருக்காக மாறி நாம மாறிட்டே இருக்கணும் கூல் மச்சி என்றும், 'இக்னோர் தட் பிரெண்ட்' என்றும், 'டோண்ட் சேஞ்ச் யுவர் ஆக்டிவிட்டிஸ்.' என்று மாறி மாறி அதையே கூறியிருந்தனர்.
சிலர் மட்டும் 'அவங்க பெர்சனல் நாம சொல்லக் கூடாதே. எனக்கு தெரியாதுனு பொய் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடு மச்சி" என்று போட அதற்கு அவளோ 'பொய் பேசினா தப்பு பா. சடனா பொய்யும் பேச வராது. எங்க வீட்டுக்கு முன்ன காந்தி தாத்தா சிலை இருக்கு தெரியுமா. அப்பா பொய் சொல்லக் கூடாதுனு சொல்லி வளர்த்தாங்க.' என்று மறுக்கும் பதிலுக்கு லூப் மெஸேஜாக தொடர்ந்தது.
134 comments 150 like வந்தப்பின் சாப்பிடும் நினைவு வர சைன் அவுட் செய்து விட்டு லேப்டாப்பை மூடினாள்.
மணி இதற்கே ஏழு ஆகிவிட்டது. நான்கு மணிக்கு போட்ட போஸ்ட் அதற்குள் மூழ்கியதில் மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் உறையாடி விட்டாள்.
சாப்பிட்டு ஒருமணி நேரம் தான் படிக்க அமர்ந்தாள். மீண்டும் ஒரு ஆசை எத்தனை லைக்ஸ் எத்தனை கமெண்ட்ஸ் வலுப்பெற்றது என்ற ஆவல் இரவு உறங்கும் முன் ஒரு முறை பார்த்து விட்டு படுத்தாள்.
ஏனோ தினசரி டைரி போல முகநூலில் எழுதி விட்டு அதற்கு வரும் லைக் கமெண்ட்ஸில் பேசுவோரிடம் நட்பு பாராட்டுவது அவளின் வழக்கம்.
***
"நதியா சாப்பிட வா. அங்க என்ன போன் பேச்சு" என்று திருவளவன் கூப்பிட போனில் பாதி பேசிவிட்டு துண்டித்தாள்.
"அப்பா என் பிரெண்ட் எல்லாம் சோஷியல் மீடியால ஒரு யுடூயூப் வச்சிருக்காங்க. காலேஜ்லயே இன்னிக்கு பயங்கிற பேமஸ். அதை சோஷியல் மீடியா ஷேர் பண்ணிருக்காலம். நான் அக்கவுண்ட் கிரியேட் பண்ணி பார்க்கவா?" என்று அனுமதி வேண்டி பதிலுக்காய் காத்திருந்தாள்.
''லுக் நதியா... இப்ப இருக்கற ஜெனரேஷன் என்ன பேசறோம் ஏது பேசறோம்னு தோனாம லைக் கமெண்ட்ஸ் ஒன்று மட்டும் மோட்டிவ் அச்சீவ்மெண்ட்ஸ்னு இருக்கிங்க. அதனால வர்ற பிரச்சனை அதிகம். எதுக்கு சோஷியல் மீடியா போய் தினசரி ஏதாவது பேசி நாமளா தேரை இழுத்து தெருவுல விடணும். எதுவானாலும் அவளோட போன்ல பாரு. இல்லையா யுடூயூப் என்றால் க்ரோம்ல பாரு. எதுலயும் அக்கௌவுண்ட் லாகின் பண்ணாதே. உனக்கு எந்த சோஷியல் மீடியாவும் வேண்டாம்." என்று திருவளவன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அப்படியே அக்கௌவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமென்றால் கல்லூரி முடியட்டும் என்று கூறிவிட்டார்.
நதியாவுக்கு ஏமாற்றம். நான் என்ன குழந்தையா. அங்காங்கே எத்தனை இளைஞர் இளைஞிகள் சமூகத்தளத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இன்னமும் எத்தனை காலம் பயத்தை விதைத்து தடுப்பாரோ என்ற எரிச்சல் மண்டியது.
இதே எண்ணம் திருவளவன் மனைவி சுனிதாவிற்கு தோன்றியது போல, அதனை இரவு தனிமையில் கேட்டு விட்டாள்.
"என்னங்க இது எத்தனை காலேஜ் பிள்ளைங்க எப்படில்லாம் வளர்றாங்க. நதியா ஒரு விஷயத்துக்காக கேட்கறா இப்படி பேசிட்டிங்களே" என்று குறைப்பட்டார் சுனிதா.
"உனக்கு புரியலைமா. என்னோட பயமே நதியா மாதிரி இருக்கற பிள்ளைகள் உபயோகப்படுத்தறதை பார்த்து தான்.
இங்க பாரு. என் ஆபிஸ் கொலிக்ஸோட பொண்ணு. டெய்லி டைரியாட்டும் எழுதிட்டு இருக்கா. பாரு" என்று அருவி என்ற அக்கவுண்டில் இருந்த பதிவுகளை வரிசையாய் காட்டினார்.
சில போஸ்ட் மூன்று நான்கு நிமிடமென நேரமெடுக்க பதிமூன்று போஸ்டை வாசித்தாள் சுனிதா.
"என்னங்க இது... அந்த பொண்ணு எங்க இருக்கா என்றதுல இருந்து அவளுக்கு எது சாப்பிட்டா அலர்ஜி என்றும் அவ வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காபிஷாப், முதல் கொண்டு அதுயிதுனு எத்தனை பதிவு. நிஜமா நம்ம நதியா வயசா?" என்று கேட்டார்.
"ஆமா மா கமெண்ட்ஸூக்கு வந்த லூப் மெஸேஜ் பார்த்தியா?" என்றான் திருவளவன்.
"ம்ம் பார்த்தேன்." என்றார் சுனிதா.
"இதுக்கு தான் பயமே. இந்த பொண்ணு எங்க இருக்கா எப்ப காலேஜ் போறா, அவ வீடு தனியா இருக்கு, இந்த நேரம் திருடன் வந்தா கூட யாருக்கும் தெரியாது அதுயிதுனு போட்டிருக்கா. இதுல அவ அப்பா மெடிக்கல் ரெப். அடிக்கடி வெளியூர் போறதையும் போட்டிருக்கா. அம்மாவும் அவளும் மட்டும் தானாம். சாதாரணமா பத்து நிமிடம் முகநூல்ல வந்து தலைகாட்டிட்டு போற நமக்கே இந்த போஸ்ட் எல்லாம் பட்டவர்த்தனமா டைரி மாதிரி இருக்கு.
கெட்ட எண்ணத்தோட சுத்தறவன் கண்ணுல பட்டா என்னாகும் சொல்லு. இந்த முகநூல்ல அந்த பொண்ணு ஏரியா பக்கத்துல இருக்கற பையன் கண்ணுல பட்டா அவனுக்கு பாலோவ் பண்ணவும் திருட்டோ மனபங்கமும் செய்ய அவளே வழி வகை சொல்லற மாதிரி இருக்கு. இந்த மாதிரி நம்ம மகளும் ஏதாவது செய்து பின்னால பிரச்சனை வர வேண்டாம்னு தான் முன்னாடியே தவிர்க்க பார்க்கறேன்." என்றான் திருவளவன்.
"நீங்க உங்க பிரெண்டிடம் பக்குவமா சொல்லி இதை தடுக்கலாமே." என்றாள் சுனிதா.
"எங்கம்மா சொல்லியாச்சு. அவர் எத்தனை முறை சொன்னாலும் இது ஹாபியா மாறிடுச்சுனு சொல்லிட்டாலாம். கண்டிச்சு பார்த்திருக்கார். பெயரை மட்டும் அருவி மாற்றிட்டு இதே வேலையா பார்க்கறா. அதை மீறி கண்டிச்சா மெச்சூர்ட் இல்லாம அழுவறாளாம். போதாதுக்கு சொன்ன இரண்டு நாள் கொஞ்சம் முகநூல் பக்கமே வராம மூன்றாவது நாள் திரும்ப இதே வேளையா இருக்காளாம்.
நம்ம பொண்ணு இப்படி அவஸ்தை படணுமானு தான் பயமே." என்றார்.
சுனிதா அனைத்தும் கேட்டு உறங்கினார்.
ஆனால் அதிகாலை தந்தை மகள் நலத்திற்காக கூறுவதாக எடுத்து கூறவும் நதியா வேகமாக தந்தை லேப்டாபை எடுத்து அவரின் எதிரிலேயே இன்ஸ்டாகிராமை ஓபன் செய்தாள். மடமடவென தன் தோழிகள் கிராப், டிசைனிங் பிளவுஸ், நர்சரி பூக்கள், போட்டோஸ் க்ளிக்ஸ், ஆடியோ கதை, கவிதைகள், மெஹந்தி டிசைன், என்று வரிசையாய் படிப்போடு தங்கள் திறமையை கூட வெளியிட்டு அதனால் பயன் பெறுவதை கூறினாள்.
ஒரு திறமை மறைந்து முடக்கப்படறது தப்புப்பா. நீங்க சொன்ன மாதிரி சோஷியல் மீடியால கண்டதும் டைரி மாதிரி புலம்பல் கேஸுங்க உண்டு. ஆனா நான் அப்படி பண்ணமாட்டேன்." என்று வாக்கு தந்தாள்.
"சாரி டா எத்தனை நல்ல விஷயம் இருக்குனு எனக்கும் தெரியும். ஆனா இப்படிப்பட்ட கேரக்டர் பார்த்து பயந்து தான் ஏதாவது விபரீதம் வந்துடுமோனு பேரண்ட்ஸ் பயப்படுவதே. நீ இனி தாராளமா உன் திறமையை வெளியிடு மா
பொழுதை கொஞ்சமா களவாடு மொத்தமா உட்கார்ந்திடாதே டா" என்று மொழிந்து சென்றார்.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
உண்மையான கருத்து .. அருமையான கதை
ReplyDelete