நீ என் முதல் காதல் -4
அத்தியாயம்-4 ஸ்ரீவினிதா முதலில் மகனிடம் கூட உரைக்காமல் ஷண்மதியிடம் தாரிகா-பைரவ் பேசி சென்றதை கூறவும் ஷண்மதி உடனே சம்மதிக்கவில்லை. அங்கும் இங்கும் நடக்கவும் லலிதாவோ "என்னடி இந்தளவு யோசிக்கற? சட்டுபுட்டுனு ஆகவேண்டியதை பாருங்க அத்தைனு அக்காவிடம் சொல்வனு பார்த்தா மௌவுனமா நடைப்போடற" என்று ஆதங்கமாய் கேட்டார். ஸ்ரீவினிதா மருமகளிடம் தயங்கலாம். சிறுவயதிலிருந்து ஷண்மதியை வளர்த்த லலிதா ஏன் தயக்கம் கொள்ள போகின்றார்? அதனால் இலகுவாய் கேட்டு நின்றதும் "யோசிக்கணும் அத்தை. ம்ருத்யுவுக்கு பிடிக்குதானு கேட்கணும். ஏன்னா நான் தான் கட்டாயப்படுத்தி யுகனை மணந்தேன். என் பொண்ணுக்கு வர்ற மாப்பிள்ளையையும் கட்டாயப்படுத்த கூடாது பாருங்க. நமக்கு பிடிக்குதுனு ம்ருத்யுவுக்கு பிடிக்காம ஸ்ரீநிதியை அவன் தலையில கட்டி வைக்க முடியாதுயில்லையா? ம்ருத்யு படிப்பு முடிஞ்சி வரட்டும் பேசலாம். எனக்கு ம்ருத்யு விருப்பம் முக்கியம்" என்றவள் யுகேந்திரனை காணவும் யுகேந்திரனோ கழுத்தை இறுக்கிய டையை தளரவிட்டு வந்தான். "அதுக்கு அவசியமேயிருக்காது....