Posts

Showing posts with the label முதல் முதலாய் ஒரு மெல்லிய

முதல் முதலாய் ஒரு மெல்லிய (other site link details)

Image
                         முதல் முதலாய்.... ஒரு மெல்லிய.... நாயகன்-நாயகி :  அஸ்வின்- பவித்ரா              ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அது போலவே நம் நாயகி பவித்ராவுக்கும் ஒரு கதை உண்டு. இருபது வருடம் பெற்று வளர்த்த தாய்(கயல்விழி) தந்தை(நந்த கோபாலன்) இருவரும் ஓர் உண்மையை மறைக்க, அது கல்லூரி வயதில் பவித்ராவுக்கு தெரிய வர, கலங்கி போகின்றாள். கூடவே ரகுவால் கசப்பான நிகழ்வுகள் மறக்க எண்ணி, தன் வீட்டில் இருந்து இடம் பெயருகின்றாள்.          அங்கே நம் நாயகன் அஸ்வினை சந்திக்கின்றாள். தன் தந்தை நண்பனான விஸ்வநாதன் பையன் அஸ்வின் முதல் முதலாக மெல்லிய உணர்வாக பவித்ராவிடம் தோன்றிய காதலை கூற துவங்க, அவர்களுக்குள் நடைபெறும் அழகான உணர்வே இக்கதை.       அஸ்வின்- பவித்ரா இவர்களுடன் சேர்ந்து ராதை, ஸ்ரீ ராம், தன்யா, ஆகாஷ், சுவாதி, சஞ்சனா ரம்யா என்று பலரும் கதையில் கரம் கோர்கின்றனர்.  புத்தகமாக பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்:    Blog link:   முதல் முதலாய் ஒரு மெல்லிய   இக்கதையின் அடுத்த தொடர்ச்சி அதாவது ராமின் காதல் கதை  விழிகளில் ஒரு வானவில்  என்ற கதையாக பதிவு தொடரும்.  Amazon link:   முதல் முத

முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31 (முடிவுற்றது)

Image
  💘30        விஸ்வநாதன் வீட்டில் அஸ்வின் உட்பட அனைவரும் ஏதோ கோவில் காணிக்கை என்றும் , அருகே திருமண ரிசப்ஷன் என்றும் கூறி புறப்பட்டனர். அஸ்வினுக்கு வர இஷ்டம் இல்லாமல் இருப்பினும் பவித்ரா ஊர் அருகே என்பதால் அவள் வரவாய்ப்பு இருக்க கூடுமோ ?! என்று ஆவலோடு வந்தான். காரிலேயே புறப்பட்டனர்.    ஸ்ரீராம் , ஆகாஷ் , அஸ்வின் என மாறிமாறி காரினையோட்டி வந்தனர். நடுவில் அஸ்வின் கண் அசந்த நேரம் பூ , பழம் , வெத்தலை பாக்குயென இன்னப்பிறவும் வாங்கினார்கள்.       ஸ்ரீராம் ஒரு வீட்டின் அருகே காரை நிறுத்த அனைவரும் புன்னகை தவழ இறங்கினர்.   அஸ்வின் மட்டும் '' கோவில்னு சொன்னிங்க வீடு மாதிரி தெரியுது , மண்டபம் மாதிரியும் தெரில '' என்று வினவினான்.   '' உள்ள வா தெரியும் '' என ஆகாஷ் கிண்டல் செய்ய துவங்கினான்.    '' வாங்க வாங்க '' என வரவேற்றார் நந்தகோபாலன்.     '' என்னடா விஸ்வா சொல்லாம கொள்ளாம வா உள்ள வா. வாங்கம்மா '' என்று நந்தன் வரவேற்றார்.   '' யார் வீடு டா இது ?'' என முகவாயில் கை வைத்து சுற்றிமுற்றி பார்த்தவாறு