முதல் முதலாய் ஒரு மெல்லிய -3

💘 3 இனிதாக இரு நாட்கள் நகர்ந்ததே அறியாதுச் சென்றன. திங்கள் காலை வேளை உதித்தது . பவித்ரா இன்று இயல்பானா பணி முடிந்து பரபரப்பாக இயங்கினாள். தலை குளித்து நீண்டப் பின்னலில் , ராதை கொடுத்தப் பூவைச் சூடி , இளஞ்சிவப்பு சுடிதாரில் ஹாலுக்குள் நுழைந்தாள். '' அங்கிள் எந்த பஸ் எப்படி போகணும்னு தெளிவா சொன்னிங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும். '' என்று வந்து நின்றாள். '' முதல் நாள் பயப்படாம ரிலாக்ஸா போகணும். அதனால அஸ்வின்கிட்ட கேட்டேன் , அவன் ஆபீஸ் போகற வழி என்பதாலா உன்னை பிக் அப் பண்ணிக்கறதா சொல்லிட்டான் '' என்றார் அவர். தங்கள் வீட்டில் இருக்கும் பெண் தங்கள் மகன் அழைத்து செல்வதில் அவருக்கு ஒரு கருத்தும் தோன்றவில்லை. அதுவும் அஸ்வின் பேசுவதே அரிது. அதனால் கொண்டு சென்று அமைதியாக வருவான் பவித்ராவும் பேசாமல் இருப்பாள். இங்கு வந்த நாளில் அப்படி ஒன்றும் தனது இரு மகனிடமும் பேசி அவர் பார்த்ததே இல்லை. எல்லாம் மகள் தன்யாவிடம் மட்டுமே. பவித்ராவுக்கோ ‘அஸ்வினா ? ’ என மனத்திரையில் ஒரு கேள்வி எழும்பியது. ...