Posts

Showing posts with the label சிறுகதை

யாரென்று யார் அறியும் முன்

Image
       யாரென்று யார் அறியும் முன்           இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.     தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு, பக்கத்து இருக்கையில் பெண்மணியை நோட்டமிட்டார். ஈஸ்வரிக்கு 56 வயது இருக்கலாம். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல தோள்பை கண்ணாடி என்று இருந்தார். முகத்தில் தோள் சுருக்கம் மட்டும் சற்று குறைவாக இருந்தது.     இரயில் சிநேகிதம் என்பாரே அப்படி பார்த்ததும் சிரித்து முடிக்க, இருவரும் பரஸ்பரமாக முறுவல் புரிந்தனர்.     ''இந்த டிரையின் இன்னிக்கு காலியா இருக்கு. இப்ப தான் ஒரு டிரையின் போனதால ஏதோ இந்த டிரையின் காலி.. நமக்கு கொஞ்சம் நெருக்கடியில்லாம இருக்கு." என்று ஈஸ்வரி பேசவும், ஆமோதிப்பதாய் முன்பு போலவே புன்னகைத்தாள் பக்கத்து இருக்கை பெண்மணி.     "நீ வேலைக்கு போறியா மா?" என்று கேட்க, "இல்லிங்க ஹவுஸ் ஒய்ப்" என்று பேச்சை துவங்கினார்கள்.      "ஓ அப்படியா... நல்லது. நானும் வேலைக்கு போகலை. பகவதி பாபாவை பார்க்க போனேன்." என்றார் ஈஸ்வரி. தோள் பையும்

சக்தி

Image
                      சக்தி        இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்... ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம் தோழியான அட்வகேட் ஜெனியின் வீட்டில்.      "லுக் லீலா. கொஞ்சம் யோசித்து முடிவெடு. இப்ப வர்ற பெண்கள், தொட்டதுக்கு எல்லாம் டிவோர்ஸ் என்று நிற்கறாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து பாரு. இன்னிக்கு இந்த முடிவு சரியா இருக்கலாம். ஆனா நாளைக்கு உனக்கு ஒரு துணையென்று தேடுறப்ப வெற்றிடமா இருக்கும். உங்கம்மா வேதராணி சொல்லறதை காது கொடுத்து கேளு. உங்க அத்தை புவனா உங்களுக்கு என்ன பிரச்சனையென்றாலும் அவங்களிடம் சொல்ல சொல்லறாங்க." என்று அட்வகேட் ஜெனிதா தோழியாகவே இப்பொழுதும் அறிவுரை கூறிமுடித்தாள்.     "இது நேத்து முடிவெடுத்து இன்னிக்கு சரியென்று இங்க வந்து நிற்கலை ஜெனி. யோசித்து தான் முடிவெடுக்கறேன் எடுக்கறேன். அவருக்கும் இதுல முழு சம்மதம் தான். நீ மேற்கொண்டு ஆகுற வேலையை பாரு" என்று கூறினாள் லீலாவதி.      சக்தியும் "எஸ் ஜெனி.. லீலாவதி விருப்பப்பட்டதை நிறைவேத்து

வலி உன்னை செதுக்கும் உளி

Image
             வலி           மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.      சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை துடைத்து கொண்டு, "என்னங்க பொண்ணுக்கு வாட்டர்பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு. காசு வச்சிட்டு போ. வாட்டர் பாட்டில் வாங்கணும்.     இப்படியே டியூசனுக்கு போய் பிள்ளையை அழைச்சிட்டு வர்றப்ப இந்த பீடி ஹான்ஸு எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுனு டியூசன் பொண்ணு கண்டிப்பா சொல்லுச்சு.     தயவு செய்து அதை துப்பிட்டு மகளை அழைச்சிட்டு வா. இப்படியே போனா அந்த டியூசன் எடுக்குற நந்தினி பொண்ணு இனி உன்னை வரவேண்டாம் என்னை வந்து அழைச்சிட்டு போக சொல்லுது." என்று சாவித்ரி கூறவும் சட்டை பொத்தானை மாற்றியபடி இருந்த மருதுவோ மனைவியை ஏறயிறங்க பார்த்தான்.     "நான் பீடி புடிக்கிறேன், ஹான்ஸ் போடறேன். அதனால என் பிள்ளையை கூட்டிட்டு வரக்கூடாதா. என்னடி நியாயம். நான் என்ன எவனோ ஒருத்தனோட பொண்ணையா கூட்டியாற போறேன். என் பொண்ணு டி.     என்னை இப்படி வரக்கூடாது அப்படி வரக்கூடாதுனு எவ சொல்லறது?" என்று மரு

விநோத கணக்கு

Image
                                                      விநோத கணக்கு        எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.         இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க மனம் உந்தியது. அப்பொழுது ராம் போன் வரவும் எடுத்தாள்.     "ஹாய் பொண்டாட்டி... என்ன உங்க வீட்டு ராஜ கவனிப்பில் புருஷனுக்கு கால் பண்ணணும் என்றதே மறந்திட்டியா?" என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான் ராம்.    ஜெனிபரோ தாய் தந்தை வீட்டுக்குள் அழைக்காத கோபத்தை தன் காதல் கணவனிடம் காட்டினாள்.     "என்ன நக்கலா ராம். எங்க வீட்ல சேர்த்துக்கலை அதனால குத்தி காட்டறியா. இதெல்லாம் உன்னால ராம்" என்று எகிறினாள்.     "ஏ... எங்க வீட்லயும் தான் சேர்த்துக்கலை. அப்பறம் எப்படி குத்தி காட்டறதா கணக்கு வரும்.      நீ எப்பவும் ரோட்ல இருக்கறப்ப போன் பண்ணுவியே இன்னிக்கு காணோமேனு கேட்டேன். ஒரு வேளை உங்க வீட்ல உன்னை அழைச்சி விருந்து உபசரிப்பு பண்ணறாங்களோனு. அதென்ன எல்லாம் என்னால? நீ ஒன்னும் பண்ணலை.?" என்று தங்கள் காதல் களவாணியில்

பார்வை போதுமடி பெண்ணே

Image
                                பார்வை போதுமடி பெண்ணே          காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த வாழ்த்து எல்லாம் அசட்டுதனமாய் தோன்றியது.        வருடத்திற்கு ஒருமுறை தேரை குளிப்பாட்டி சாமியை வைத்து ஊர்த்திருவிழாவில் வீதிவீதியாய் வலம் வரும் போது அந்த தேரை தோட்டு கும்பிட கூட அத்தனை பேர் தள்ளுமுள்ளில் சிக்கி தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். ஆனால் விழா முடிந்ததும் அந்த தேர் தூசி படிந்து ஒட்டடை அடைந்து கிடக்க கோவிலில் அதை கேட்பாரற்று கிடக்கும். அது போல தான் இந்த மகளிர் தின வாழ்த்தும்.    ஒரு நாளில் ஆஹா ஒஹோ என்று பெண்ணின் பெருமையையும் புனிதத்தையும் பேசி கிழித்து பார்வார்ட் செய்து பீற்றி கொள்ளலாம். மற்ற நாட்களில் பாதுகாப்புக்கும் பஞ்சம். பெண் என்றால் இழிவு.    அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். தந்தை ஆண்வாரிசு இல்லையென்று கூறும் போதெல்லாம், குழந்தை என்றாலே வாரிசு தானே. இதில் ஆண் என்ன பெண் என்ன? என்று கேட்க வேண்டும் போலிருக்கும்.    இதோ இப்பொழுது கூட அவர் நண்பரிடம் போனில்

காவலை மீறிய காற்று

Image
      காவலை மீறிய காற்று          சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, "ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?" என்று கேட்டே விட்டார்.     சுனிலிற்கு 'போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு ஆடுவாளே. நான் வேற பங்ஷனுக்கு வரலைனு சொல்லிட்டேன். அதுக்கும் சேர்த்து சண்டைக்கு போவா' என்று முனங்கினான். அவன் முனங்கி முடிக்கும் முன் யமுனா ஆரம்பித்தாள்.      ''இங்க பாருங்க அத்த. உடை என்பது நமக்கு எது கம்பர்டெபிளோ அதை தான் உடுத்தணும். என்ன பார்க்கறவங்க என்னை பார்த்து முகம் சுளிக்காத வகையில இருந்தா போதும்.    உங்க பையன் கடைசி நிமிஷத்துல எனக்கு மீட்டிங் இருக்கு. வரமுடியாது பொண்ணை நீயே கூட்டிட்டு போனு சொல்லிட்டார். எனக்கு ஸ்கூட்டில இதான் கம்பர்டெபிள். இப்படி தான் உடுத்துவேன்." என்று பொட்டிலடித்தாற் போல கூறி முடித்தாள்.      பாக்கியம் சத்தமேயில்லாமல் "என்னய்யா இது நீ போகலையா. கு