முதல் முதலாய் ஔ மெல்லிய-27

 

💘27

அன்று ஞாயிறு என்பதால் பவித்ராவுக்கு பருப்பும் சேனை வறுவலும், மற்றவருக்கு சிக்கன் 65யும் செய்தார்  ராதை. 
 

    பவித்ரா பார்க்காத போது சிக்கனை பவித்ரா தட்டில் சேனையோடுக் கலந்து விட்டு அமைதியாக அமர்ந்தான் அஸ்வின். அதை அறியாது பவித்ரா சிக்கனைச் சாப்பிட்டால் தனுவும், சுவாதியும் ஆகாஷ் மூவரும் சிரிப்பை அடக்க படாதப்பாடு பட்டனர்.
    

      ஸ்ரீராம் உள்ளே நுழைந்தான். ''என்னப்பா என்னை விட்டுட்டு சாப்பிடுறிங்க'' என பவித்ரா அருகே அமர்ந்தான்.


''
ஏய் பவித்ரா நீ வெஜ்னு சொன்ன இப்ப சிக்கன் சாப்பிடற?'' என்று கேட்டான்.


''
இல்லை ஸ்ரீராம் இது சேனை வறுவல்'' என்று அறியாதவள் சொல்லவும் ராம் மறுத்தான்.


''
சிக்கனை எப்படி செய்தாலும் கண்டு பிடிச்சுடுவேன் சிக்கன் என் பேவரேட் இது சிக்கன் தான்'' என்று அழுத்தமாய் கூறினான்.


  பவித்ரா இம்முறை தட்டை உன்னிப்பாகக் கவனிக்க, தற்போது சிரிப்பை அடக்க முயன்று  இயலாது தன்யா சுவாதி சிரித்தனர்.


  ''இது உங்க வேலையா? அத்தை இங்க பாருங்க'' என துணைக்கு ராதையை அழைத்தாள்.


  ''என்னடி இது'' என்று ராதை இருவரையும் அதட்டினார்.


  ''அம்மா நாங்க இல்லை. உன் அருமை பிள்ளை அஸ்வின் வேலை'' என்று தனு கூறவும்  பவித்ரா அஸ்வினை முறைத்தாள்.


   ''என்ன டேஸ்ட் பிடிச்சிருக்கா?'' என புருவத்தை உயர்த்தி வம்புக்கு இழுத்தான். அவன் பேசுவதே லாபமென சாதம் மட்டும் சாப்பிட முனைந்தாள்.

 
  ''நல்லா இருந்தா சாப்பிட வேண்டியது தானே'' என மேலும் சிக்கனை வைக்க, ''எனக்கு வேணாம்'' என்று மறுத்தாள்.


   ''எனக்காக ப்ளீஸ்'' என்ற அஸ்வின் கண்களின் கெஞ்சலை ரசித்து இருக்க அஸ்வினோ ''அதுவும் இல்லாம எனக்கு இந்த பாவக்காய், பருப்பு இதுயெல்லாம் செட் ஆகாது. நான்-வெஜ் கண்டிப்பா சாப்பிட செய்யணும் புரியுதா'' என்றவனின் கண்களை பார்க்க முடியாமல் சாப்பிட்டு முடித்து விட்டதாக எழுந்து விட்டாள். அங்கேயே இருந்தால் அவளை அறியாமல் அவன் மீது கொண்ட வசத்தால் சிக்கனை விழுங்கியிருப்பாள்.

 
   ஸ்ரீராமிற்கோ இது போல் ஒரு குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும். அப்பொழுது தான் தனது தனிமை அகலும் என்று நினைத்தான்.

   பேர் வெல் தினத்தன்று ரம்யா சஞ்சு பவித்ரா மூவரும் ஒரே டிசைனில் வெவ்வேறு நிறத்தில் சேலை அணிந்தனர்.         

       அன்று முழுவதும் கொண்டாட்டமாக போயின.
சஞ்சு திருமணம் பரீட்சை முடிந்து ஒரு வாரம் கழித்து இருந்தது. தற்போது பரிட்சைக்கு முன் ஒருவாரம் இருக்க அஸ்வின் பவித்ரா இருவரும் கிப்ட் வாங்க சென்றனர்.

 

 அஸ்வின் பவித்ராவிடம் ''சஞ்சு கல்யாணத்துக்கு நான் வாங்கி தந்த சேலையை கட்டு'' என்றான் உரிமையாய் அதிகாரமாக. 

  அதற்கு “பார்க்கலாம்'' என உதட்டில் சுழிப்பு காட்டி வெறுப்பேற்றினாள். அவள் குறும்பில் மொத்தமாய் இதயம் தொலைத்து விழுந்தான்.


    கிப்ட் ஷாப்பில் ஒரு பெண்மணி மயங்கி கீழே விழ அங்கே சிலர் ஓடிச் சென்று பார்த்தனர். பவித்ராவுக்கு இவங்களை எங்கோ பார்த்த ஞாபகம் என்று யோசிக்க அவளை யோசிக்க விடாது, ''போலாம் வர்றியா?'' என்றான் அஸ்வின்.


  ''அஸ்வின் தெரிஞ்சவங்க மாதிரி இருக்கு. ஆன யாருணு சட்டுனு தோன்றலை'' என்று யாராக இருப்பார்கள் என்று யோசனையோடு சிந்தித்தாள்.

 
   ''ஆமாம் தெரிஞ்சவங்க. உன்னை பெண் பார்த்துட்டுப் போன சூர்யாவோட அம்மா. போகலாம் வா'' என்று பையன் பெயர் முதல் கொண்டு யாரென சரியாய் கூறினான்.


  ''தெரிஞ்சவங்கள விட்டுட்டு வர சொல்றியே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்'' என்று பையனையும் பையனின் தாயையும் நினைவுயின்றி இருந்தவள் தற்போது அவர்களுக்காக கவலைப்பட்டாள்.

 
  ''நான் வரலை நீயும் போக கூடாது'' என்று கட்டளையாய் மொழிந்தான்.


    ''நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் வந்தா வா அஸ்வின் அப்பறம் உன் இஷ்டம்'' என கூறி ஆட்டோ பிடிக்க அஸ்வினும் கோவமாய் துணைக்கு வந்தான்.


    ஹாஸ்பிடலில் சேர்த்த போது மைல்டு அட்டாக் எனக் கூற அவர்களது போனை எடுத்து சூர்யா என்ற நம்பருக்கு போன் செய்து சூர்யாவை அழைத்தாள். சூர்யா வந்தவுடன் அவனிடம் அவன் தாயின் அறையை காட்டி பேசி விட்டு பவித்ரா நாளை வருவதாக கூறிச் சென்றாள். அஸ்வின் அதுவரை வரவேற்பறையில் இருக்க பவித்ரா வரவும் புறப்பட்டனர்.


  ''பெரிய அன்னைதெரசா காப்பாத்த வந்துட்டா?'' என கத்தினான்.


   ''ப்ளீஸ் அஸ்வின். உன் வாயால உதவி செய்யறதை தடுக்காத, உன்னை உயர்வா நினைக்கறேன். அவங்களை பிடிக்கலானாலும், மனிதாபிமானத்தை இழக்காதே'' என்று கெஞ்சினாள்.


   ''என்னமோ செய்'' என்று கத்தினான்.


  ''நாளைக்கு என்கூட வருவியா..?'' என்று கேட்டு நின்றாள்.

 
   ''வர்றேன். உனக்காக... உனக்காக மட்டும்''  அஸ்வினுக்கு நிஜமாகவே அவர்கள் மீது கோவம் தான். எப்படி பவித்ராவை பிடிக்கவில்லை என்று கூறி விட்டார்கள்.

    அவனுக்கு அது சாதகமான விஷயம் என்றாலும் அவனின் உயிர் பவித்ரா. அவளை எப்படி? என்றே கோவம் இருந்தது.


-மெல்லிய பூகம்பம் தொடரும்.

-பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1