சிரமமில்லாமல் சில கொலைகள்-19

 


🩸-19
  அட்ரஸை பார்த்து ஜாஸ்மின் அப்படியே அமர்ந்திடவும் "என்னயிது?" என்று இளவழகன் கேட்டு முடிக்க சர்வேஷ் "என்னாச்சு? அட்ரஸ் தெரியுமா?" என்றான்.

      "அய்யோ... இது நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து உங்களை சந்திக்க நேற்று வந்தோம். நாங்க தான் நீங்க திரும்ப வந்தா, பார்க்க வருவதற்கு இந்த அட்ரஸை கொடுத்துட்டு வந்தேன். இந்த அட்ரஸ் என்றால் மெர்லின் கூடயிருப்பா என்று அவரோட அட்ரஸை தந்தேன்." என்று கூறினாள்.

      "ஸப்பா... மாமா அத்தை நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க." என்று அறைக்கு அனுப்பி வைத்தான்.

       ஜாஸ்மின் போனை எடுத்து அந்த நபருக்கு போன் செய்து சர்வேஷை தேடி யாரெனும் வந்தார்களா என்று கேட்டு கொண்டிருந்தாள். கூடவே ஆரோல் குட்டி போட்ட பூனையாக பின் தொடர்ந்தான். பால்கனியில் சென்றிட, சர்வேஷ் மெர்லின் தனித்து நின்றனர்.

       சர்வேஷ் தனது பேண்டில் இருந்த பிரேஸ்லேட்டை எடுத்து அணிவித்தான்.
    
    "யவனரதிக்கு இளவழகன் கொடுக்க நினைத்த அணிகலன். பாகீரதி எடுத்தப்ப அதட்டி நானே எடுத்து வைத்துக் கொண்டேன். ஆனா நான் கிருஷ்ணராஜன் மாமா கூட ஜோதிடம் கேட்கறப்ப திருடி எடுத்துட்டா. அதனால தான் இந்த காலத்தில் அவளிடம் இருந்தது.

    இதை லிசா போட்டுட்டு வந்ததும் இளவழகன் போட்டு தள்ளிட்டு பிடுங்கிட்டார்.

   பட் நியூயார்க்ல பிடுங்கி இங்க என்னோட கப்போர்டில் இருந்தது. நேற்று உன்னை பார்த்தப்பவே எடுத்துட்டு வந்து கையில் மாட்டி சின்னதா முத்தம் கொடுக்க நினைத்தேன்" என்று கையில் இதழ் பதிக்கவும் மெர்லின் "பச்" என்று கையை எடுத்துக் கொண்டாள். அவன் முத்தம் பட்டும் படாமலும் பதிந்து சென்றது.

      "ரஞ்சி... எதுக்கு விலகி போற..? என்னை பிடிக்கலையா... சொல்லு... இரண்டு ஜென்மமும் அப்படியொன்னும் நீயும் நானும் காதலில் மூழ்கலை. நான் மட்டும் தான் என் மனைவியா காதலியா மனதில் போட்டு தவிச்சிட்டு இருந்தேன். நீ என்னை விரும்பலை. இப்ப கட்டாயத்துக்காக இங்க குழுமி இருக்கற மாதிரி பீல் ஆகுது டி.

    அங்க பாரு ஆரோலுக்கு இப்ப தான் ஜாஸ்மின் விரும்பறது தெரியும் ஆனாலும் லவ் மோடுக்கு போயிட்டான். உனக்கு தான் அபரஞ்சியா இருக்கறப்பவே விரும்பியது தெரியுமே அப்பறம் ஏன்டி அவாய்ட் பண்ணற." என்று கெஞ்சும் நிலையில் தான் இருந்தான் சர்வேஷ்.

      "அவாய்ட் பண்ணறேனு தெரிஞ்சே பின்னாடி சுத்தினா என்ன அர்த்தம்." என்று தலையை உலுக்கி தன் அம்மாவிடம் சென்றாள்.

    சர்வேஷ் இதயம் உடைந்த கண்ணாடித்துகளாக மாறியது. இளவழகனோ, "அவள் உன்னிடம் விளையாடுகின்றாள் சர்வேஷ்வரா... நீ இதை பற்றி யோசித்து ஆபத்தை உணராது போகாதே." என்று இளவழகன் கட்டளையிட்டான்.

      "இல்லை இளவழகா... இது அந்த காலம் போல இல்லை. பதினெட்டு தானே புரியலைனு சொல்ல. அவளுக்கு மெஞ்சூர்டு அதிகம். படிக்கும் பொழுதே பார்ட்டைம் ஜாப் போற லெவல். நான் எல்லாம் இன்னமும் செட்டில் ஆகாத லைப். அவளிடம் காதல்னு பேசறது தப்பு தான். அந்த மோகனை மட்டும் கண்டுப்பிடிச்சிட்டு என் லைப்ல நான் போகணும். அவள் லைப்பில் அவப்போகட்டும்." என்று ஹாலில் ஒரிடத்தில் அமைதியாக காத்திருந்தான்.

      தன் தாய் தந்தையர் வந்ததும் மெர்லின் அவர்களோடவே அமர்ந்து பேசி வாயடிக்கவும், மல்லியிடம் என்னிடமே ஆடலரசனை காதலிச்சதை மறச்சிட்ட பார்த்தியா...? என்ற சீண்டலும் சீண்டினாள்.

    ஆரோல் தன்னவளை விழியிமைக்காது பார்த்தான். மரிக்கொழுந்தாக இருந்தப்பொழுது கண்ட அமைதிக்கோலமும், மல்லியாக வாயாடினாலும் தன்னிடம் பேசாத குணம் ஆனால் இன்றோ எத்தனை முதிர்ச்சி. உடனடியாக தன்னை மாற்றி விட்டாள். தனக்காக தன் அண்ணன் உயிரை துச்சமாக எண்ணி அல்லவா வாழ்ந்திருக்கின்றாள். என் அன்பு பெறாவிட்டாலும் தனியாக எங்கள் காதலுக்கு வலு சேர்த்து இருக்கின்றாள். பெண்ணின் திடமே திடம் என்று உவகைத்தான்.

      ஜாஸ்மின் சொன்ன அந்த நபர் வந்திருந்தார். இதுவரை சர்வேஷை தேடி மோகன் வரவில்லை. அதுவுமின்றி மோகனுக்கும் தனது கடந்தகாலம் அறிந்து இருப்பான். அவனுக்கு யவனரதி மீது எந்த வயதில் காதல் பூத்திருக்குமோ அன்றே அவனுக்கு அனைத்தும் நினைவு வந்திருக்கும். சர்வேஷை மெர்லினை அன்றே தேடிக் கொண்டிருப்பான்.

    தானாக மெர்லினை அறிய இயலாது. அதனால் சர்வேஷ் மூலமாக தான் மெர்லினை அறிந்திருக்க இயலும்.

    அப்படியில்லை என்றால் அவன் அனைத்தும் அறிந்து மெர்லினின் தரிசனத்துக்காக மட்டுமே காத்திருக்கின்றான் என்ற இடியை இறக்கினான்.
 
    இந்த காலத்தில் மோகனை பார்த்தது போல நினைவு யாருக்கேனும் உள்ளதா என்று கேட்டான்.

     மோகனாகவோ ஆதவனாகவோ இருந்த முகம் தற்காலத்தில் இன்னமும் தங்கள் காணவில்லையே என்ற உண்மை புரியவும் யோசித்து கொண்டிருந்தனர்.
 
     சர்வேஷ் முகம் வித்தியாசமான உணர்வை தந்து யோசித்தது. இளவழகன் ஆன்மா எல்லோரையும் கணித்து முடித்து சர்வேஷை கணிக்க இயலாது தவித்தது.

    சர்வேஷ் எழுந்தவனாக, "ஓகே நீங்க எல்லாரும் இங்க இருங்க. எனக்கு தலைவலிக்குது. நான் என் வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கறேன்." என்று நழுவப் பார்த்தான்.

    மெர்லினுக்கு தன் பேச்சால் இப்படி வதங்கி செல்கின்றானோ என்று கலங்கினாள். ஆனால் தன்னால் இனியும் அவன் உயிர் பிரிவதை பேதை மனம் ஏற்கவில்லை.

     இளவழகனுக்கு மெர்லினை விட்டு செல்லவும் மனமில்லை. ஆனால் சர்வேஷை தடுக்கவும் முடியவில்லை.

    சர்வேஷ் கூறியது போல எனக்கு மெர்லின் தான் முக்கியம் என்பதாக மெய் காவலாளியாக நின்றான்.

      சர்வேஷ் பைக்கை சீறிக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான்.

     அங்கே சாந்தனு சர்வேஷின் பீரோவில் அதை தேடிக் கொண்டிருந்தான்.

     "பிரேஸ்லேட் கிடைத்ததா மோகன்" என்று கேட்டதும் முதுகு தண்டு சில்லிட திரும்பினான்.

      "கிடைச்சிருக்காதே... அது சேர வேண்டிவங்களுக்கு போய் சேர்ந்துடுச்சு." என்று கையை கட்டி தீயாய் முறைத்தான்.

    "என்ன சர்வேஷ்வரா... புது பெயரை வைத்து கூப்பிடற. என் பெயர் சாந்தனு டா." என்று திக்கினான்.

     "சாந்தனு... ம்... ஆதவன்.. மோகன்.. இப்ப சாந்தனுவா மாறியிருக்கலாம்.

    உங்க சித்தப்பா வைத்தியர் சேதுபதி இந்நாள் முகமாற்று சிகிச்சை சூரியபிரகாஷ் மூலமா உன்னோட மோகன் முகம் மாறி எங்களுக்கு தெரிய விடாம பண்ணியிருக்குதே. ஆனா முகம் தான் மாறும் மோகன் உன்னோட கேரக்டர் மாறலை." என்று பொறுமையை இழுத்து பிடித்து பேசினான்.

    " ஏன்டா இப்படி செய்த?'' என்று காட்டு கத்தலில் ஆரம்பித்தான்.

    "பரவாயில்லையே... மெர்லின் அப்போ வந்துட்டா... நீங்க பார்த்து பேசியிருக்கிங்க. பட் சர்வேஷ் ஒன்றை மறந்துட்ட.. என் காதலியை கொன்ற ஆட்களை தான் நான் கொன்றேன்." என்றதும்

     "யாருக்கு டா காதலி. அவள் என்னவள்." என்று சர்வேஷ் கத்தி அவன் சட்டையை பிடிக்க,

      "உன்னவளா... இரண்டு ஜென்மமா அவளை கொன்றதே உன் குடும்பம் தான். இப்ப அவங்க இல்லை... என்ன அந்த கருப்புபுகை கொன்றிடுச்சா. எனக்கு நல்லது செய்யவே பிறப்பெடுத்தவன் டா நீ. எங்க இருக்கான் கருப்புபுகை? மெர்லின் கூடவா...? உன்னோட போன ஜென்மத்துல இருந்து அது பேசறதை என்னிடம் சொல்லி, இப்பவும் கூடவே இருந்திருக்கேன் இப்பவும் நீ... என்னிடம் எல்லாம் ஷேர் செய்து, நல்லா தான் போகுது. மெர்லின் எங்க டா சொல்லு... அவனை அழைச்சிட்டு வர சொல்லு" என்று மிரட்டினான்.

     சர்வேஷ் சாந்தனு கையில் துப்பாக்கியை எதிர்பார்க்கவில்லை.

     "என்னடா... துப்பாக்கியை எதிர்பார்க்கலையா... நான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துட்டு இருந்தேன்.

     எனக்கு பத்தொன்பது வயதில் படிச்சிட்டே பீட்சா கடையில் பார்ட் டைம் வேலை பார்த்தேன். அப்போ தீப்பிடுச்சிடுச்சு. முகம் சின்னதா மாறுதல். என் மனசுல பெரிய மாறுதல். இரண்டு ஜென்மம் நினைவு யவனரதி அபரஞ்சி என்று மனதில் வந்து என்னை இம்சை பண்ணிட்டா.

   அப்பத்திலருந்து அவளை மட்டும் தேடறேன். பட் என்  பீட்சா கடைக்காரன் தன் பேர்ல தவறாயிருக்க கூடாதுனு தான் இருபது வயசில் முகமாற்று சிகிச்சை எடுத்தேன். அந்தளவு முகம் மாற்றத்துக்கு ஏங்கினேன். பின்ன அபரஞ்சி என்னை பார்த்து இதுவொரு காரணம் என்று மறுத்திடக் கூடாதுல. என் மொத்த உழைப்பையும் என் முகம் மாற்ற மட்டுமே செலவழிச்சேன். இருபத்திரெண்டு வயசில் மாற்றி முடிச்சேன்.

   இதுல ப்யூட்டி என்னனா... நான் ரூமை ஷேர் பண்ண வந்தவனா நீ என் எதிர்ல நின்ற... பத்திட்டு வந்தது டா. உன்னை பார்த்தப்பவே கொல்ல துணிந்தேன் பட் அபரஞ்சி இப்ப என்ன பெயரில் பிறந்து வளர்ந்திருப்பா என்னை தேடி எப்படி வருவா... என்னை தேடி எப்படி வருவா.. உன்னை தேடி வருவா. நீ அப்படி விரும்பியிருக்க. அதான் உன் கூடவே இருந்து அவள் வருவாளானு காத்திருந்தேன்.

   நீ எந்த ரியாக்ஷனும் இல்லாம ஜாலியா இருந்த... மோகனா இருந்தப்பயாவது எதாவது சொல்லுவ. ஆனா இந்த காலத்தில் நீ பாட்டுக்கு வருவ போவ.. தூங்குவ. எரிச்சலா இருந்தது.

   அப்ப தான் வயசு கால்கிலேட் பண்ணினேன். உனக்கும் அபரஞ்சிக்கும் ஒன்பது வயது வித்தியாசம்ல... அவளுக்கு இப்ப தான் பதினெட்டு அடியெடுத்து வைத்திருப்பா.

    நான் எதிர்பார்த்த மாதிரி நீ கோவா போய் வந்த பிறகு நடந்த. நானா ஆர்வம் காட்டினா நீ உஷாராகிடுவனு முட்டாள் மாதிரி நீ சொன்னதை கேட்டு ஷாக்கானதா நடிச்சேன்.

    அந்த பிரேஸ்லேட் மின்னி ஹாலையே பிராகாசமா மாற்றினப்பவும் என் கண்ணுக்கு தெரியாத மாதிரியே நடந்தேன்.

     இதுல நீ சாமியாரை பார்க்க போனதும் பயந்துட்டேன். எங்க சாமியார் உன் நண்பன் தான் எதிரினு போட்டு கொடுத்திடுவாரோனு. பட் சாமியார் போலி என்றதில் பெரிய சந்தோஷம் நிம்மதி. திடீரென பார்த்தா பிரேஸ்லேட்டை அங்கயே வைச்சிட்டு நடந்த. நான் சொன்னா என் கண்ணுக்கு தெரியுதுனு நீ என்னை கண்கானிப்பனு யோசனையோடு வந்தேன். பார்த்தா மரத்துல படுத்திருந்த சாமியார் எடுத்துட்டு வந்து தந்தார். எனக்கு அப்போ வேர்த்துடுச்சு. ஆனாலும் அந்தாள் என்னை பார்த்து நக்கலா சிரிச்சானே தவிர காட்டி கொடுக்கலை.

    நீ எப்ப அபரஞ்சியை பார்ப்ப என்ற ஆவலில் உன் கூடவே சுத்திட்டு இருந்தேன். இப்ப சொல்லு யவனரதி எங்க? இப்ப எந்த பெயர் எங்க இருக்கா?

   அவளை வரச்சொல்லு..." என்று போனை நகர்த்தி முடித்தான்.

    சர்வேஷ் கால் பண்ணுவதாக இல்லை. அதனால் சாந்தனுவே துப்பாக்கி முனையில் போனை எடுத்து கால் பதிவு பார்த்தான்.

    மெர்லின் என்ற பெயரில் ட்ரூ காலர் காட்டவும் அதற்கு அழைத்தான்.

     ஏற்கனவே மெர்லினுக்கு சர்வேஷ் செல்லும் வேகம் கண்டு சந்தேகம் அடைந்தவள் தனியறையில் இளவழகனை அழைத்து பேசவும், அங்கு நடப்பவையை கண்ணாடி திரையில் காட்சியாய் இளவழகன் மாயத்தால் காண்பித்தான்.

    இளவழகன் செல்ல முற்பட, மெர்லினோ நானும் வரவேண்டும் என்று புறப்பட்டு விட்டாள்.

      அதனால் தனக்கு போன் வரவும், "மோகன் சர்வேஷுக்கு ஏதாவது ஆபத்துன்னா நான் இங்கயே தற்கொலை செய்துப்பேன்." என்று பேசவும்.

    "மாட்டேன் அந்த இளவழகனை அழைச்சிட்டு வா. உன் காதலன் உயிரோட தான் இருக்கான்." என்று வைத்தான்.

     "தேங்க்ஸ் சர்வேஷ் மெர்லின் இங்க தான் வர்றா..." என்று கட்டி வைத்தவனிடம் வீர வசனம் பேசினான்.

   சர்வேஷோ இளவழகனின் பிடியில் மாட்டிக் கொள்வான் என்ற மமதையில் மெர்லின் வருகையோடு இளவழகன் வருகையை எதிர்பார்த்தான்.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.
   






Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு