சிரமமில்லாமல் சில கொலைகள்-14

   
 
🩸-14

     மூச்சு முட்டுவது போன்ற உணர்வோடு சர்வேஷ் மற்றும் மெர்லினாவை அந்தப் படகுக்காரர்கள் காப்பாற்ற இருவரும் நிழலில் தங்களைப் பார்த்துக் கொண்டனர்.

சற்றுநேரம் எல்லோரும் கூடி அவர்களுக்கு ஆபத்து இல்லையென்று ஊர்ஜிதமாகக் கூடியிருந்தவர்கள் கலைந்தனர்.

சர்வேஷ் வேன் டிரைவரிடம் மற்ற பயணியர்களை அனுப்பி வைத்து மெர்லின் அருகே நின்றான்.

"அபரஞ்சி..." என்று அழைக்க, மெர்லினோ அவன் நெஞ்சில் சாய்நது அழத்துவங்கினாள்.

கருப்புருவம் நீரை சுரக்காத தன் கண்களில் ஆசைத்தீர கண்டு மகிழ்ந்தது.

"என் காதலால் தானடி உனக்குப் பிரச்சனை வரும்னு இருந்தேன். நீ எதுக்குத் தண்ணீரில் மூழ்க பார்த்த?" என்றதும்

"சர்வேஷ் நான் ஒன்றும் தேவையேயில்லாம தண்ணீரில் மூழ்கலை." என்று நடந்தவையைச் சொல்லி முடித்தாள்.

கடைசியாக, "ப்ளிஸ்.... இத்தனை பேரை எதிர்த்து நம்ம சேரணும்னு அவசியமேயில்லை. தயவு செய்து விடுங்க. நான் திரும்ப நியூயார்க்கே போறேன். இந்தப் பூமியில் வரவே மாட்டேன்." என்று அவனிடமிருந்து விலக முயன்றாள்.

"எப்படி முடியும்? ஒர் ஜென்மம் இல்லை இரண்டு ஜென்மம். என்ன பார்க்கற... நீ தண்ணீரில் மூழ்கிய பிறகு நான் ஒன்றும் வாழலை. நானும் அந்த நொடியே இறந்துட்டேன். ஆனா இயற்கையா இல்லை. என்னையும் கொன்று இருந்தாங்க. அது எப்படினு தெரியலை." என்று கூறவும் மெர்லின் சிலையாக நின்றாள்.

கருப்புருவம் இம்முறை சர்வேஷ் அருகே வேகமாக வந்து, நீ மட்டும் அல்ல அன்று அனைவருமே உன்னைப் போல இரத்தம் கக்கி இறந்துவிட்டார்கள். எனக்கும் குழப்பமாக உள்ளது. யார் அதைச் செய்து இருப்பார்கள். அன்று யாரெனும் உயிர் தப்பியிருந்தால் கண்டறிந்து இன்று அந்த நபர் யாரென உன்னிடம் காட்டி கொடுத்திருப்பேன். அல்லது என் மாயத்தால் உயிர் உருவியிருப்பேன்." என்று காதில் இளவழகன் குரல் கேட்கவும் விதிர்த்து எழுந்தான்.

"ஆமா நீ யாரு... நடுவுல நடுவுல... நீ தானே எல்லாரையும் போட்டு தள்ளின. இப்ப எதுக்குக் கூடவே சுத்திட்டு இருக்க?" என்றதும் மெர்லின் இவன் யாரிடம் பேசறான் என்பது போல விழித்தாள்.

''ச...சர்வேஷ் யாரிடம் பேசற...?" என்றாள் சுற்றி யாரும் கண்ணில் படாததாள்.

"யாரிடமா... நியூயார்க்ல... ஒரு பெண் லிசா இறந்தாலா... அப்பறம் அவங்க பேரண்ட்ஸ் அப்பறம் ஆரோல் என்றவனோட பேரண்ட்ஸ்... எல்லாரையும் கொலை செய்த உத்தமன் இதோ இவன் தான். கரும்புகை மன்னன். என்ன ஒர் நிம்மதினா ... உன்னை ஒவ்வொரு முறையும் காப்பாற்றியிருக்கான்." என்று சர்வேஷ் சொல்லவும் மெர்லின் முகம் சஞ்சலமானது.

"நான் கிளம்பறேன். இன்றே போறேன். என்னை விட்டுடுங்க. போன ஜென்மத்துல என்னவோ நடந்திருக்கலாம். அதுக்காக இப்ப எதுவும் மாறப்போறதில்லை. யார்யாரோ இறப்பதில் எனக்குச் சம்மதமில்லை.

உங்களுக்கு என்னைப் பிடிச்சது. பட் இந்த ஜென்மத்துல தண்ணீரில் விழறவரை என்னை உங்களுக்குத் தெரியாது தானே அப்படியே விட்டுடுவோம். நாம தண்ணீரில் விழலை. எந்த முன் ஜென்ம நிகழ்வும் வரலை. பை" என்று வேகமெடுக்கப் பார்த்தாள்.

இளவழகன் தன் யவனரதி போவதை கண்டு தடுக்க இயலாது நின்றான்.

ஆனால் சர்வேஷோ அவளின் கையைப் பற்றித் தடுத்து இழுத்தான். இழுத்தவனின் மேலே மோதவும் பயந்து நடுங்கினாள்.

அவளின் அலைப்புறம் கண்ணைக் கண்டவன் "என்னை எத்தனை ஜென்மம் ஏமாற்றலாம்னு இருக்க?" என்றான் சர்வேஷ் அடக்கப்பட்ட கோவத்தோடு.

"ப்ளிஸ் விடுங்க.. ஏன் தராதரம் என்ன உங்க தராதரம் என்ன. நான் நியூயார்க் சிட்டில வளர்ந்தவள். நீங்க ஆப்ட்ரால் டிராவல்ஸ் வைத்துப் பிழைப்பை நடத்தறவங்க. கண்டதை பேசி என்னைத் திருமணம் செய்து பணக்காரனாகத் திட்டம் வகுக்கறிங்களா... முன் ஜென்மம் பந்தமா... அது எதுக்கு... தேவையில்லாம... எனக்கு இந்தக் காதலும் வேண்டாம் ஒர் மண்ணும் வேண்டாம். லீவ் இட்" என்றாள்.

அவனோ பொறுமையாகக் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டவன் தன் சட்டை பையில் கை விட்டு ஒர் வளையலை எடுத்து அவள் கையில் போட்டு விட்டான்.

"ஜென்ம பந்தம் இல்லையா.... இந்த வளையல் நான் சர்வேஷா அபரஞ்சிக்கு போட்டது உன்னைக் காப்பாற்றினப்ப என் கையில் வந்து கிடைச்சது. இதைத் தூக்கியெறிந்தேன் திரும்பத் திரும்பப் பக்கத்தில வந்து உன்னைத் தூக்கறப்ப நின்றுச்சு. எனக்கு அப்ப புரியலை.... பட் இப்ப புரியுது. இது எங்கையோ ஒர் இடத்துல தெப்பத்தில் இருந்த உன்னைக் கடைசியா தொட்டப்ப வந்தது. இப்ப அதே... அதே... மாதிரி வந்து சிக்கியிருக்கு." என்றதும் அந்த வளையலை பார்த்தாள்.

சர்வேஷ் தன் கையில் அணிவித்தது இங்கே எப்படி? பயந்தவள் நகரப் பார்க்க அவளால் ஓடயியலவில்லை. கரும்புகை சூழ்ந்து அவளைத் தடுத்தது.

"என்னைப் போக விடு..." என்று அழுது கரைந்து விட்டாள். சர்வேஷ் கல் போன்று இறுகியிருந்தானே தவிர இம்மியும் நகராது நின்றான்.

தன் தலையில் கைவைத்து சுற்றி பார்க்க இருட்டி கொண்டு வந்தது வானம். மாலை நெருங்கி கொண்டிருந்தது.

"ஓகே.. இப்ப என்ன பண்ண... உங்களைத் திருமணம் பண்ணணும்னு சொல்லறிங்களா.." என்றதும் சர்வேஷுக்குக் கோபம் அதிகமானாலும் அமைதியாக இருந்தான்.

"கேட்கறேன்ல பதில் சொல்லுங்க." என்று கத்தினாள்.

"உன்னைச் சாகடிக்க முயன்றது சொந்தம் தான். பட் இந்தச் சொந்தம் எல்லாம் இறக்க காரணம்...? யாரா இருக்கும் யோசிக்கணும். பிகாஸ் நீ இறந்திருந்தா அவங்களுக்கு லாபம் ஆனா பாரு எல்லாரும் இறந்துட்டாங்க." என்றதும் கரும்புகை அங்கும் இங்கும் சுழன்று நடந்தது.

"அடச்சீ... ஒர் இடமா நின்று யோசி... அங்குட்டும் இங்குட்டும் நடந்தா ஐடியா வருமா... ஆமா நீ யாரு? நீ எதுக்குக் காப்பாத்திட்டு இருக்கக் கொண்றுட்டு இருக்க எதுவும் சொல்லலை?" என்று கேட்டதும் மெர்லின் எதிர் திசையில் பார்த்தாள். யாருமில்லாத இடத்துல யார் கூட டா பேசற? என்ற ரீதியில் அவள் பார்க்கவும்

"அங்க ஒர் ஆவி இருக்குமா... என்னவோ என்னைய முறைச்சிட்டு இருக்க. போன ஜென்மத்துல அடக்கம் ஓடுக்கம் பேலன்ஸ் இருக்கும் தேடி எடுத்து என்னைப் பாரு. பதினெட்டுல எப்படி முறைக்குது." என்று முணங்கினான்.

கரும்புகையோ, "அவள் கையை இணைத்து உன் அருகே நிறுத்தி என்னைக் காண செய். யாம் பேசும் அனைத்தும் அவளாலும் கேட்கயியலும்." என்று கூறினான்.

சர்வேஷ் மெர்லினா தன் அருகே நிறுத்தி அவளின் இரு கரத்தையும் தன் கரங்களுக்குள் பிடித்து எதிர்புறம் கண்ணால் காண கூறவும் திரும்பினாள்.

அங்கே இதுவரை அருவுருவமாக இருந்த கரும்புகை கொஞ்சம் கொஞ்சமாக மனித உருவமாக மாறியது.

யாரவன் என்ற ஆவல் தூண்ட கடைசியில் சேர்ந்த நொடி சர்வேஷின் முகமே. ஆனால் சற்று இராஜ உடையில் இளவரசன் போலக் காட்சியளித்தான்.

"நான் சர்வேஷ்வரனின் முதல் மனிதப்பிறவி. என் பெயர் இளவழகன். நான் விரும்பிய பெண் யவனரதி. அதாவது தற்போது மெர்லின், போன காலக்கட்டத்தில் அபரஞ்சியாகவும் இருந்தவள்.

"அடப்பாவமே... அப்ப இத்தனை கொலையும் நா...நான் தான் பண்ணினேனா..."

"இந்த ஜென்மத்தில் மட்டுமே நான் செய்தது. போன இரு ஜென்மங்களிலும் யாரால் மற்றவருக்கு ஆபத்து நேர்ந்தது என்று அறியமுடியவில்லை.

என் யவனரதியை இந்தக் காலத்திலும் யாரும் ஒன்றும் செய்யக் கூடாதென அவளைக் குரோததமாகப் பார்க்கும் அனைவரின் உயிரையும் உருவிவிடுவேன்." என்று கர்ஜித்தான். அதில் கோபமே அதிகமாக இருந்தது.

"இதென்ன அநியாயம் நீங்க நான் இந்தக் காலத்தில் இப்ப தான் சந்திக்கறோம் பட் அதுக்குள்ள லிசா அவளோட பேரண்ட்ஸ் கொன்றால் என்ன அர்த்தம்.?" என்று மெர்லின் கேட்டு முடித்தாள்.

சும்மா இல்லாமல் சர்வேஷ் வேறு, "தாயே... அது மட்டும் தான் தெரியுமா... ஆரோல் அப்பா அம்மா அவுட்." என்று கூறினான்.

"லிசா-(மனிஷா) உன்னோட இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு இறந்தா. அவளோட அம்மா டெய்சி(கௌசல்யா) போன முறை உன்னைக் குளத்தில் இறக்கிவிட்டு சாக அவங்களும் காரணம் அதனால அவர்களையும் ஆண்டர்சன்(ஆனந்த்) மாமாவையும் போட்டாச்சு.

ஆரோல் அப்பா அம்மா அதாவது ஆடலரசன் அப்பா ஜார்ஜ்(சந்திரசேகர்) அம்மா மேரி(நிர்மலா) அவர்களும் ஓகே.

ஆடலரசன் என்ன பண்ணறான்.?" என்று சர்வேஷ் அறிந்திட கேட்டான்.

"அவன் தேடுதலில் உள்ளான். அபரஞ்சியைத் தேடி இங்கு வந்து விட்டான். எந்த நொடியிலும் அவன் அபரஞ்சியை(யவனரதியை காணலாம்." என்றான்.

"அவனால தான் அபரஞ்சிக்கு ஆபத்தா? அப்போ அங்கயே போட்டு தள்ள வேண்டியது தானே எதுக்கு இங்க வர வைத்த.?" என்றான் சர்வேஷ்.

"முட்டாளே.... ஆடலரசன் நீரில் மூழ்கிய அபரஞ்சியைக் கண்டு அழவே செய்தான். அப்படியிருக்க எப்படி அவன் அவளின் உயிருக்கு ஆபத்தாக இருப்பான். அதுவுமில்லாமல் அவனுமே போனமுறை இரத்தம் கக்கி இறந்துவிட்டான்." என்று சர்வேஷ் கூறி முடிக்கவும்.

"என் அப்பா அம்மாவுக்கு என்னாச்சு... அவங்க நல்லா தானே இருந்தாங்க. அவர்களுமா இறந்தாங்க.. எப்படி..?" என்று கேட்டாள் மெர்லின்.

"அறிய முடியவில்லையம்மா. அந்தத் துயரமும் நடந்து விட்டது. அவர்களுமே கோவில் சடலமாகக் கிடந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாகத் தாளில் கூட வெளிவந்தது. சாப்பாட்டில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதாக. பூச்சி விழுந்த கலவை சாதம் உண்டாதாகவும் இப்படி யான் வந்தது."

"நான் இப்ப எங்க அம்மாவிடம் பேசிட்டு வர்றேன். அவங்களுக்கு நினைவு இருக்கா கேட்கணும்." என்று அகலப்பார்க்க சர்வேஷோ விடாமல் பிடித்தான்.

"அவர்கள் நலம். இன்று வைத்தியம் முடிந்து இனிதாக வீட்டுக்கு சென்று விடுவார்கள். விரைவில் உன்னைக் காண வருவார்கள். அம்புஜம்(தபித்தாள்) மற்றும் கிருஷ்ணன்(கிறிஷ்டோபர்) அறிய வேண்டி அவசியமில்லை. இது நம்மிருவரின் பந்தம் மட்டும் கூடவே யார் அந்தக் கயவன் என்று அறியும் நேரம்." என்று இளவழகன் கூறவும் மெர்லின் யோசித்தபடி நின்றாள்.

"ஆமா.... சர்வேஷ் அபரஞ்சி ஆன்மா வரலை. ஆனா நீங்க இளவழகனா வந்திருக்கிங்க. அப்படின்னா என்னோட யவனரதி ஆன்மா ஏன் வரலை." என்று கேட்டாள்.

"நான் விரும்பியது யவனரதிக்குத் தெரியாது அதே போல அவள் கொல்லப்பட்டதும் அவளுக்குத் தெரியாது. அவளைப் பொருத்தவரை வாழ்ந்தவள் மனதில் எந்த ஆசையும் இன்றி மாய்ந்தாள். அதனால் அவளுக்கு என் காதல் கூட அறியாது சென்று விட்டாள். உன் மூலமாக அவளின் எண்ணங்களை மீட்டி எடுத்து அவளிடம் என் காதலை பறைத்ததும் எனக்கு மோட்சம் கிட்டும். அல்லது உன்னைக் காப்பாற்றி இந்தப் பிறவியில் அவதரித்த சர்வேஷ் மெர்லின் காதலில் தங்கள் யவனரதியாக எண்ண ஆரம்பித்தாலும் இந்த அருவுருவம் அகலும்.

தற்போது தானே சர்வேஷ்வரன் அபரஞ்சி காதலை உணர்ந்தீர்கள். காலம் கனியும் நேரமிது.

"உங்க காலத்தில் எப்படி யவனரதி இறந்தா. இதே போலயா?" என்றதும் இல்லையென ஆரம்பித்துக் கண்கள் சிவக்க கூறத் துவங்கினான் இளவழகன்.


-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.













  
     
    

       
  

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு