சிட்டுக்குருவி சொல்லும் சேதியென்ன?
உணவுசங்கிலியென்று ஒன்றுண்டு
புழுவை மீனுண்ண மீனை நாமுண்ண
நம்மை மண்ணில் புழுயுண்ணும்
யாருக்கும் யாரும் சளைத்தவரல்லவே!
எனக்கான அழிவு மட்டுமல்ல அலைபேசிக் கற்றைகள்
நாளை உனக்கானதும்
கூட தான்
இன்று நான்யென்றால்
நாளை நீயல்லவா..?!
எப்படி மறந்தாய் நானுமொரு உயிரென்பதை
உன்யினமென்றால் சலுகை
என்யினமென்றால் உவகையோ
காலமின்னும் செல்லவில்லை
எல்லாம் மாற்றிட உன்னால் முடியும்.
-- பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment