நீ என் முதல் காதல் -27

 அத்தியாயம்-27


    ஸ்ரீநிதியை மருத்துவமனையில் சேர்த்தப்பின் ஐசியூ வார்டிற்கு வெளியே தலை தொங்கி கண்ணீரோடு வீற்றியிருந்தான்.


   யுகேந்திரனோ தன் செல்ல மருமகனின் இதயத்தை தானே கத்திக்கொண்டு கீறிய மடத்தனத்தை அறிந்து ம்ருத்யு அருகே செல்லவும் தயங்கினார். 


  ம்ருத்யு மனம் தான் மகளிடம் பேசியதில் வலியோடு போராடுவதை உணர்ந்து மெதுவாக ம்ருத்யு அருகே அமர்ந்தார். 


  "ம்ருத்யு.. டேய் கண்ணா என்னை பாருடா" என்று கன்னத்தை பிடித்து திருப்ப, ம்ருத்யு வெறித்த பார்வையோடு மாமனை கண்டான்.


   "எப்படி மாமா என் மேல அன்பாயிருந்த. உனக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்குமே. அனாதையா கிடைச்ச என்னை, நோஞ்சானா இருந்த என்னிடம் எப்படி மாமா பாசம் வைச்ச? பாசம் வச்சது போதாதுனு ஸ்ரீநிதியை கட்டிக்கொடுத்திருக்கிங்க" என்று குலுங்கி குலுங்கி அழுதான்.


    "ம்ருத்யு உன் வாயால அப்படி சொல்லாதடா. நீ அனாதை இல்லை. என் அக்கா தாரிகா தான் உன் அம்மா. என் மாமா பைரவ் தான் உன் அப்பா." என்று கூற ம்ருத்யுவோ இல்லையென்பதாக தலையாட்டி மறுத்தான்.


    யுகேந்திரன் தலையிலடித்து அய்யோ உனக்கும் என் அக்கா மாமாவுக்கும் ஷண்மதியால எதுவும் தெரியக்கூடாதுனு நினைச்சி தானே நான் ஓடினேன். இப்ப என் வாயால இந்த விஷயம் வெளியே தெரிந்திடுச்சே. என் ஷண்மதி என்னை மன்னிக்க மாட்டாளே. பொண்ணு பாசத்துல உன் புத்தி மழுங்கிடுச்சானு திட்டுவா. 


என் ஷண்மதி எந்த இக்கட்டிலும் எதையும் வாய் திறந்து சொல்லாம கட்டிக்காத்தவள். என்னை மாதிரி ஒருத்தனால எல்லாம் இடிச்சிட்டேன். 

  ம்ருத்யு ம்ருத்யு எதையும் யோசிக்காதடா. அக்கா மாமாவுக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது. அதனால அப்படியே இதை மறந்துட்டு வாழுடா." என்று கூற ம்ருத்யு கண்ணாடி வளையத்துக்குள் இருந்த ஸ்ரீநிதியை கண்டான். 


    ஸ்ரீநிதிக்கு ஏற்கனவே அவள் காதலனை பிரித்து கட்டிக்கொண்டதால் தன்னை பிடிக்கவில்லை. இதில் ரிதுவை வைத்து விளையாடியதால் ஏகப்பட்ட கோபத்தில் இருக்க, விவாகரத்திற்கு காரணம் தேடி அலைபவளுக்கு வசதியாக காரணம் கிடைத்துவிட்டது. 


   தன்னை இகழவும், வெறுப்பேற்றவும் ஸ்ரீநிதி செய்வாள். 

   அவளுக்கு தான் செய்த அநீதிக்கு நிச்சயம் பதிலுக்கு செய்ய கூடும். ஆனால் பைரவ் அப்பா தாரிகா அம்மாவிற்கு என்னை பற்றி எதுவும் தெரியாதே. அவர்களிடம் ஏதேனும் கூறி என் மனதை உடைத்தது போல அவர்கள் மனதையும் உடைத்திடுவாள். அந்த எண்ணமே அவனுக்குள் உயிரை பறித்தது. 


   ஸ்ரீநிதிக்கு சிகிச்சை ஒருபக்கம் சுமூகமாக நடந்து முடிந்தது. 


   "மாமா இந்த உண்மை யாருக்கும் தெரியாமலே இருந்திருக்கலாம்ல. ஏன் மாமா ஸ்ரீநிதியிடம் சொன்ன? அவ என்னை விட்டு விலகிடுவா. நான் அப்பா அம்மாவை விட்டு பிரிஞ்சுடுவேன்." என்று பேச பேச யுகேந்திரன் சொல்லயியலாத வருத்தம் கொண்டான். 


   ''அய்யோ இந்த உண்மையை ஷண்மதி சொல்லிடுவாளோனு பயந்து தான் கல்யாணமாகி சில வருஷம் அவளை விட்டு பிரிஞ்சு இருந்தேன். 

   இப்ப என் வாயால சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேன். என் ஷணு என்னை மன்னிக்க மாட்டா. அவ வாழ்க்கையை கூட பொருட்படுத்தாம உனக்காக தனியா வயிற்றில் ஸ்ரீநிதி இருப்பதை கூட  எனக்கு தெரிவிக்காம, விவாகரத்து கொடுத்தவ. இப்ப ஸ்ரீ கத்தியை வச்சிட்டு கேட்டு மிரட்டவும் உளறிட்டேன். அய்யோ... இதே இந்த நேரம் ஷண்மதி இருந்தா வேற விதத்தில பேசி ஸ்ரீநிதியிடம் உண்மையை மறைச்சிருப்பா. நான் அந்த நிமிடம் என் மகளுக்காக யோசிச்சேனே தவிர உன்னையும் என் அக்கா மாமாவையும் யோசிக்கலையே. கடவுளே.. இப்ப எதையும் மாத்தமுடியாதா?" என்று புலம்பினான். நெற்றிப்பிடித்து ம்ருத்யுவை எப்படி சரிப்படுத்த அவன் மனதை தேற்ற என்று புரியாது அல்லாடினார் யுகேந்திரன்.

  

   மகள் மட்டும் கத்தியை வைத்து கையை கீறாமல் கேட்டிருந்தால் யுகி வாயிலிருந்து ஒரு உண்மையும் வெளிவந்திருக்காது. இரத்தத்தை கண்டதும் பெத்த பாசம் வாய் திறக்க வைத்து விட்டது. 


    ம்ருத்யுவோ முகத்தை அழுத்த துடைத்து முடிக்க, டாக்டரோ "நீங்க உள்ளப்போய் பாருங்க அவங்க கொஞ்ச நேரத்துல கண் முழிப்பாங்க." என்று கூறவும் ம்ருத்யு அடுத்த நொடி ஸ்ரீநிதி இருந்த அறைக்குள் புறப்பபட்டிருந்தான்.


   யுகேந்திரனுக்கோ ம்ருத்யுவை தேற்றிடும் வழியறியாது ஷண்மதியிடம் விஷயத்தை போட்டுவிட முயன்று அலைப்பேசியை எடுத்தார். 


   ம்ருத்யு ஸ்ரீநிதி கையை பிடித்து கட்டுப்போட்டிருந்த இடத்தை தடவினான். 

  

   வலிக்காமல் அந்த கையில் முத்தமிட்டான். 

   சத்தமின்றி கண்ணீரை உயிர்த்தவன், அவள் சிகையை ஒதுக்கி, 'நீ சின்னதுலயிருந்து என்னிடம் வந்து பேசறப்ப விளையாடறப்ப, லண்டன் போனதும் தினமும் கால் பண்ணி விசாரிக்கறப்ப எல்லாம் என் ஸ்ரீக்கு என்னை பிடிக்கும். படிச்சி முடிச்சி வந்து மாமாவிடம் அத்தையிடம் எனக்கு ஸ்ரீயை கட்டிக்கொடுங்கன்னு கேட்டா அவங்களும் தடைச்சொல்ல மாட்டாங்க, நீயும் நம்ம ம்ருத்யுவையே கல்யாணம் பண்ணப்போறோமா உன்னை விட என்னை யார்டா சரியா புரிஞ்சுப்பானு சம்மதிப்ப, சந்தோஷமா தாலி கட்டி மேரேஜ் லைப் ஹாப்பியா வாழ்வோம்னு நினைச்சேன். 


  நீ என்னடானா ஜீவியை விரும்பறேன்னு சொன்னதும் எனக்கு வீம்பு வந்துடுச்சு ஸ்ரீ. 


    எப்படியாவது உன்னை மேரேஜ் பண்ணிட்டா உன்னை சமாதானம் செய்திடலாம்னு நினைச்சேன். ஆனா நீயும் நானும் சண்டைப்போட்டு வீம்பு பண்ணி இப்போ இந்த நிலையில் தள்ளும்னு தெரிந்தா நான் முன்னவே ஒதுங்கியிருப்பேன் ஸ்ரீநிதி. 


   காதல் தோல்வியை கூட விழுங்கிடலாம் போல. இந்த உண்மையை விழுங்க முடியலை ஸ்ரீ. சில ரகசியங்கள் தெரிந்துக்கிட்டா சந்தோஷமாயிருக்கும். ஆனா இந்த ரகசியம் புதைந்திருக்கலாம். 

  எல்லாம் என்னால, என் டார்ச்சரை சகிக்க முடியாம தான் நீ மாமாவை பேச வச்சிட்ட. 


  உன்னை ஏமாத்த முடியுமா சொல்லு. நீ ஷணு அத்தை மகளாச்சே. நான் தான் யார் பையன் என்று கூட தெரியாம இப்ப," என்றவன் உதட்டை கடித்தான். 


  "எனிவே உன்னை காயப்படுத்த மாட்டேன் ஸ்ரீ. உன் இஷ்டம் போல நீ வாழு. நான் இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்." என்றவன் நெற்றியில் இதழ் பதித்தான். 


  ஸ்ரீநிதி நெற்றி சுருக்கி, கண் இமைகள் மூடி அலைப்புறுதலில் இருக்க, நான் போறேன் ஸ்ரீ" என்று கையை விடுவித்து கொண்டான். சட்டென கதவை திறந்து வெளியேறி வேகமாய் சென்றதும் யுகேந்திரனோ போனில், "நீ நேர்ல வா ஷண்மதி. வெரி வெரி இம்பார்டெண்ட்" என்று மருத்துவமனை பெயரை கூறி அழைத்திட, ஷண்மதி என்ன ஏதென கேட்க "நீ வா வந்ததும் சொல்லறேன். ம்ருத்யு ஸ்ரீநிதி பிரச்சனை" என்று கூறவும் பச் வர்றேன்" என்று உச்சுக்கொட்டி கத்தரித்தாள். 


   யுகேந்திரனுக்கோ "ம்ருத்யு ம்ருத்யு நில்லுடா கண்ணா." என்று கூப்பிட, கூப்பிட, சென்றதும் மருத்துவமனையில் இருந்த மகளை விட்டு சென்று அவனையும் நிறுத்த முடியவில்லை. 


    யுகேந்திரனுக்கு இந்த விஷயத்தில் ஷண்மதி மட்டுமே முடிவெடுத்து ம்ருத்யுவை தேற்றிட முடியுமென அவளுக்காக காத்திருந்தார். 


    ஸ்ரீநிதி இமை திறக்க, ஷண்மதி வரவும் சரியாக இருந்தது. 


   மகளை பார்த்து கட்டு கட்டிய இடத்தை கண்டு, ம்ருத்யுவோடு சண்டையிட்டு இப்படி வம்பு செய்துவிட்டாளா என்று தான் கோபமேறியது. 

  

   "என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. உன் காதல் தெரிந்ததும் அந்த ஜீவியோட சேர்த்து வச்சிருக்கணும்னா? அப்படி செய்திருந்தா உங்கத்தை மாமா பாட்டி முன்று பேரோட உறவும் ஒட்டுதலும் கிடைச்சிருக்காது. அதோட ஜீவி ஒன்றும் என்னிடம் வந்து உன்னை கட்டிதர வாய் திறந்து கேட்கலை. 

   

   அப்படியிருக்க உன்னை உயிருக்கு உயிரா காதலிச்ச ம்ருத்யுவை கட்டிவச்சதுல தப்பில்லை. அவன் உன் இஷ்டத்துக்கு தான் வாழ வழிச்செய்வான். 


    அப்படியிருக்க லூசு மாதிரி கையை அறுத்துட்டு இருக்க? போடி டிவோர்ஸ் வாங்கிட்டு எவன் கூடயென்றாலும் வாழு. ஆனா இன்னும் இரண்டு மாசத்துல ரிதுக்கு பதினெட்டு வயசு அடியெடுத்து வைப்பா. உன் கண் எதிர்ல ம்ருத்யுவோட கல்யாணம் பண்ணி வைப்பேன்." என்று ஷண்மதி பேச ஸ்ரீநிதி அந்த ரணத்திலும் அன்னையை ஒரு கோபப்பார்வையை வீச தவறவில்லை. 

   

   "சும்மா ரிதுவை என் லைப்போட இழுக்காதிங்க" என்று மூக்குறிந்தாள். லேசான கலக்கம் அந்த மூக்குறிதலில் புரிந்தது.


   "ஷணு பிரச்சனை அதுயில்லை. ம்ருத்யுவுக்கு அவன் யாருனு தெரிந்திடுச்சு'' என்று யுகன் கூற சட்டென யுகனை கண்டவள் ஸ்ரீநிதியை பார்த்தாள். 


   யுகேந்திரன் இன்னமும் அமைதி காத்திட முடியுமா? ம்ருத்யு எங்கு சென்றானோ, என தமாதிக்காமல் ஷண்மதியிடம் நிலவரத்தை கலவரத்தோடு விவரித்தார். 

  ஷண்மதியோ "ஏன் யுகி நான் சொல்லிடுவேன்னு என்னை விட்டு போனவன் நீ. நீயே உன் மகளோட பாசத்துல உளறலாமா? கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்ல. அவளை மைண்ட் டைவர்ட் பண்ணியிருக்கலாம். இப்ப காலம் கடந்து இப்ப போய்" என்றவள் தலையில் கைவைத்து அங்கும் இங்கும் நடந்தாள் ஷண்மதி. 


   ஸ்ரீநிதியோ இமை திறந்து உதட்டை பற்களால் கடித்து அன்னையிடம் வாய் திறக்கவே அச்சமுற்றாள். 


    ஷண்மதி போனை எடுத்து ம்ருத்யுவிற்கு அழைத்தாள். 


    ம்ருத்யு உடனடியாக எடுக்கவில்லை. போனை பார்த்துவிட்டு அத்தை என்றதும் ஷண்மதி அத்தைக்கு இந்நேரம் மாமா சொல்லிருப்பார். எனக்கும் ஸ்ரீநிதிக்கும் அவர்கள் கட்டிக்காத்த உண்மையை உடைந்து விட்டதென. 


    லேசாய் இதயம் சுருக்கென தைக்க, தன்னால் மாமாவையே விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று தனியாளாக ஸ்ரீநிதியோடு வாழ முடிவெடுத்தவர் அத்தை ஷண்மதி. அப்படியிருக்க, மாமா உண்மை கூறியதால் என்ன செய்வாரோ? மாமாவை விடுத்து ஸ்ரீநிதியிடம் பாய்ந்தால்? அதை நினைத்ததும் முகம் வேர்த்து வழிய கைகள் நடுங்கி எடுத்தான்.


   "அத்தை" என்று கூறியதும், "எங்க இருக்க ம்ருத்யு?" என்று குரலில் மாற்றம் காட்டாது விளித்தார். 


  "எங்க இருக்கறதுனு தெரியலை அத்தை. பட் ஸ்ரீநிதிக்கு ஏற்ற இடத்துல நான் இல்லைனு மட்டும் தெரியுது." என்று கூறியவனின் குரல் மெத்தையில் வீற்றிருந்த ஸ்ரீநிதி செவிக்கு நன்றாகவே எட்டியது.


   தன் சிறுவயது தோழன் ம்ருத்யுவின் பேச்சு இப்படி தான் சட்டென தன் மனதை மாற்றிடும். 


   "இங்க பாரு ம்ருத்யு. கொஞ்ச நேரத்துல ஸ்ரீநிதியை கூட்டிட்டு வீட்டுக்கு போகப்போறோம். நீ அங்கயிருந்தா நல்லது. அப்படி இருக்க மாட்டேன் எங்கயாவது போயிட்டு அழுதுட்டு விலகி ஒதுங்கினா இங்க ஸ்ரீநிதிக்கு போட்ட கட்டை பிரிச்சிவிட்டுட்டு செத்து போடினு விட்டுடுவேன்." என்று அதிரடியாய் பாய்ந்தார் ஷண்மதி. ஸ்ரீநிதியோ அன்னையை விளுக்கென்று ஏறிட்டாள். 

   

   "உனக்காக உங்க மாமாவோட விவாகரத்தை கூட வாங்கி வச்சிட்டு தனியா வாழ்ந்தவ நான். இப்ப உன் மனைவி இல்லைனா நான் ஒன்னும் அழுதுட்டு மூலையில் முடங்கிட மாட்டேன். சின்னவ ரிதன்யா இருக்கா. உன் மனதை சாகடிச்சி ஸ்ரீநிதி ஒன்னும் உயிரோட வாழ தேவையில்லை. இதான் என் முடிவு. உன் முடிவை நீயே எடு. போனை வைக்கறேன்" என்று துண்டித்தாள். அத்தை அத்தை." என்று ம்ருத்யு அலறுவது கேட்டு அணைத்த ஸ்ரீநிதி ஆரேஞ்சு பழச்சாற்றை மகளுக்கு நீட்டினாள். 


   ஒரு பக்கம் போன் பேசிக்கொண்டே மறுபக்கம் கேன்டீனில் மாதுளை பழச்சாற்றை வாங்கி வரவைத்திருந்தாள். அதனை செவிலி வாங்கி வந்து தரவும் எடுத்து அன்னையாக வாயருகே புகட்டினாள். 


   ஸ்ரீநிதி முதல் முறை அறிவுக்கண்ணால் திறந்து அன்னையின் பேச்சும் செயலும் மாறியிருக்க கண்டாள்.

  முன்பும் இதை கவனித்துயிருக்கின்றாள். ஆனாலும் புத்திக்குள் நிறைய குப்பை புழங்கியிருந்தது. 

  

ஸ்ரீநிதி பழச்சாற்றை புறக்கணிக்கவில்லை வாங்கி பருகினாள். அவளுக்கு அசதி இருந்தது. கண்ணை கட்டிக்கொண்டு விழுந்தது போல இப்பொழுதும் லேசான சோர்வு அவளிடம் இருந்தது. 


  ம்ருத்யு தான் அத்தை பேச்சு விளையாட்டுக்கு என்று விடமுடியாது. ஸ்ரீநிதிக்கு தந்தை வேண்டுமென்று எண்ணாமல் தனியாக வாழ்ந்தாலும் தன் நலனை பேணியவர். இன்று இக்கணம் வரை அத்தைக்கு தன் நலன் குறித்து எப்பொழுதும் ஒரு கவனம் உண்டு. பிளஸ் டூ படிக்கும் காலத்தில் ஷண்மதி ஓடிவந்து நலம் விசாரித்தது ஸ்ரீநிதியை போல ம்ருத்யுவுக்கும் ஆழமாய் பதிந்திருந்தது. தன் மகளின் நலத்தை விட தன் நலத்தை கேட்ட வித்தியாசமான பிறவியாயிற்றே. 


   கண்களை துடைத்தவன் தனக்கு யுகேந்திரன் மாமா பரிசளி

த்த வீட்டை நோக்கி காரை செலுத்தினான். 


-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

     


   


   


  


  


   


  


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1