நீ என் முதல் காதல் -18

 அத்தியாயம்-18


     ஸ்ரீநிதி நிறைய தாங்கிக் கொண்டிருந்தாள். மனதில் தான் காதலால் ஏமாற்றப்பட்டதாக. 


   ஜீவி இப்படி செய்திருக்க கூடாது. என்று நொடிக்கொரு முறை நினைக்க நினைக்க அவன் மீது கோபம் துளிர்த்தது. 

   ம்ருத்யுவோ "நல்லவேளை கல்யாணத்தை நிறுத்தியிருந்தா என் பேரண்ட்ஸ் முகத்துல இந்த சந்தோஷம் இருந்திருக்காது." என்றவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்ரீநிதியை ஏறிட்டான். 

  

      அவனுக்கு ஸ்ரீநிதியின் இந்த சோகம் கவலையை தந்தது சிறு நொடி என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாய் சினம் அணலாய் உருவெடுக்க, "ஏய் ஸ்ரீ எப்படியும் சாப்பிடமாட்ட. சோகத்துல இரண்டு பெக் அடிக்கிறியா? நான் வேண்டுமின்னா வோட்காவை வாங்கி ஸ்டாக் வச்சிக்கறேன்." என்றதும் ஸ்ரீநிதி விலுக்கென்று நிமிர்ந்தாள். 


  "நீ என்னை கிண்டல் பண்ணற. என் காதலை கேலி செய்யற. அது நல்லாவே தெரியுது." என்று முகம் இறுகினாள். 


   "சாரி எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணறதுனு தெரியலை. நீ சாப்பிடலை, இது நம்ம வெட்டிங் ஃபுட். நிச்சயம் அப்ப ஜாலியா பேசி சிரிச்சு சாப்பிட்ட. இப்ப கல்யாணம் ஆனதும் ஒரு வாய் வைக்கலை. அந்த ஜீவியை பத்தி தான் திங்கிங். என்னை பத்தியோ, நம்ம வீட்டைப் பற்றியோ திங்க் பண்ண மாட்டியா?" என்று கேட்டதும் ஸ்பூனால் சாப்பிட ஆரம்பித்தாள். 


   "இங்க பாரு விரும்பி செய்யறதுக்கும் விரும்பமில்லாம கடத்தறதுக்கும் டிபரெண்ட் இருக்கு. 

   லுக் இப்ப சாப்பிடறதுக்காக நம்மளை தனியா விட்டிருக்காங்க. கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க. யூ நோ நைட் இங்க ஒரு ரூம்ல நமக்கு பஸ்ட் நைட் டெகரெட் பண்ணிட்டு இருக்காங்க உனக்கு தெரியுமா?" என்று கேட்டதும், "என்னை என்ன செய்யணும்னு சொல்லற? எல்லாம் மறந்து உன்னோட வாழணுமா?" என்று கேட்டதும் ம்ருத்யு உணவு தட்டிலிருந்தவையை மிச்சம் வைக்காமல் சுவைத்தவன் டேபிளில் தட்டை வைத்து விட்டு கால் மேல் கால் போட்டு அவளை துளைத்தெடுப்பதாக பார்த்தவன், "வேற என்ன செய்யலாம்னு நீயே சொல்லு." என்றவன் மனதிற்குள் 'வேற ஆப்ஷனே இல்லை ஸ்ரீகுட்டி, இந்த ம்ருத்யு கூட வாழ்ந்து பாரு. ஜீவியை விட உன்னை நல்லாவே காதலிப்பேன் என்பது புரியும்' என்றவனுக்குள் சிரிப்பு மொட்டுவிட்டது. 


    கடகடவென உணவை விழுங்கிவிட்டு நீரை குடிக்க, "எனக்கு யோசிக்க நேரம் தேவை. ஜீவியை சந்தித்து ஒரு தடவை பேசறவரை என்னால எந்த வாழ்விலும் முடிவெடுக்க முடியாது." என்று 'நான் ஷண்மதி மகளாக்கும்' என்பது போல தெளிவாக நின்றாள். 


    ம்ருத்யுவிற்கு சிறு கடுகடுப்பு வந்தாலும் அவளிடம் தன் முகத்தை காட்ட முடியுமா? அதே புன்னகை மாறாது 'ஓகே' என்று தோளைக்குலுக்கினான். 


   ஸ்ரீநிதி தன் மாங்கல்யத்தை உற்று நோக்கி நடந்தாள். திருமண சேலை கால் தடுக்க அதனை தூக்கியபடி மணமகள் அறைக்கு சென்றாள். 


   ம்ருத்யுவோ அங்கும் இங்கும் பார்த்துவிட்டு கோபமாக வேறொரு அறைக்குள் முழங்கை சட்டையை மடித்தபடி சென்றான். 


   அங்கே இரண்டு மூன்று அறைக்குள் புகுந்து, பூட்டப்பட்ட அறையை திறந்தான். 

  ஏற்கனவே மின்கதவால் தாழிட்ட கதவில் மேலும் ஒரு பூட்டை வேறு போட்டிருந்தான். 

  

  அதனை திறந்து கோபமாக அறைக்குள் வந்தான். வாய் கட்டப்பட்டு இருந்தவனை மூக்கு முட்ட முறைத்தான். 


ஜீவி கண்கள் மெதுவாய் திறக்க, ஏன்டா ஏன்?' என்ற ரீதியில் ஜீவி பார்வை "மாப்பிள்ளை கோலத்துல வந்திருக்கேன். ஸ்ரீநிதியை கல்யாணம் செய்து அவளோட கணவனா, பட் அந்த சாட்டிஸ்பேக்ஷன் குறைவாயிருக்கு. உன்னால... உன்னாலடா.


   என் ஸ்ரீநிதியை எப்பயிருந்து லவ் பண்ணினா நீ எங்கிருந்து டா வந்து கொத்தா தூக்கற? இப்ப நான் உன்னை தூக்கியிருக்கேன்.


  என்ன மயங்கி விழுந்ததும் வெத்து வேஸ்ட்னு நினைச்சியா? நான் விரும்பினவ, கல்யாணம் ஆகப்போகுதுனு சந்தோஷமா கட்டிபிடிச்சி என்னை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போவான்னா, உன்னை லவ் பண்ணறேன்னு என்னை எதிர்க்க வச்சி பேசினா என் ஹார்ட் தாங்குமாடா? அதான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன். 

  பட் அதுக்கு பிறகு உங்க காதலுக்கு உதவியது போதும். அதான் ஒன்னுத்துக்கு இரண்டு பேர் போராடறிங்களே. என் காதலுக்கு நான் மட்டுமாவது போராடணுமா வேண்டாமா? 


   சொல்லுடா போராடணுமா வேண்டாமா?" என்று ஜீவியின் நெற்றியில் ஆள்காட்டி கொண்டு தலையை பின்னுக்கு தள்ளினான். 


    "ஓ சாரி வாயை அடைச்சிட்டேனோ" என்று பிளாஸ்திரியை எடுத்தான். 


   "நீ தப்பு பண்ணிட்ட ம்ருத்யு. ஸ்ரீ என்னை ட்ருவா லவ் பண்ணறா, நானும் அவளை உண்மையா விரும்பறேன். நீ என்னை அடைச்சி வச்சிட்டு அவளை கல்யாணம் பண்ண கூடவேயிருந்து திட்டம் போட்டு இப்ப கல்யாணம் பண்ணிட்ட. இது மட்டும் அவளுக்கு தெரியட்டும். உன் லைப் பெரிய கேள்விக்குறில முடியும் ம்ருத்யு. 

    அவயிதுக்கு முன்ன உன்னை பத்தி ஒரு வார்த்தை தவறா பேசியதில்லை. ஆனா இப்ப செய்ததுக்கு அவ நிச்சயம் உன்னை சும்மாவிடமாட்டா" என்று காயம்பட்டவனாய் உறுமினான் ஜீவி. 


    "அதெல்லாம் உன்னை விட என் மாமன் பொண்ணை எப்படி கரெக்ட் பண்ணணும்னு தெரியும்டா. இங்கயிருந்திரு படிச்சிருந்தா அவளை உன்னோட பழகவே விட்டிருக்க மாட்டேன். என் நேரம் வெளிநாட்டுக்கு படிக்க போய் என் காதலை இப்படி பிடுங்க வேண்டியதா போச்சு. பட் இப்பவும் நான் என் காதலை விட்டுதந்து வேடிக்கை பார்க்கலை. 

    

    கடைசி நொடி என் காதலை நான் காப்பாற்றிக்கிட்டேன். தட்ஸ் இட்." என்று கூறவும், ஜீவி அலட்சியமாய் சிரித்தான். 


    "நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செய்தது பெரிய தப்பு. ஸ்ரீநிதி சும்மா விடமாட்டா. இப்பவும் ஒன்னும் குடிமுழுகலை. என்னை விட்டுடு. நான் எதுவும் ஸ்ரீநிதியிடம் சொல்லாம அவளை கூட்டிட்டு போறேன்." என்றவனின் மூக்கிலிருந்து குருதி வழிந்தது. அது அங்கிருந்த சிறு ஜன்னல் வழியாக தெரிந்த வெளிச்சத்தில் தெரிந்தது. 

   

   "தாலி கட்டிய பொண்டாட்டியை கொடுக்கறதுக்கு நான் இளிச்சவாயனா? அவ எனக்குரியவ. எனக்குள்ள இருக்கற மிருகத்தை அடிக்கடி உசுப்பிவிடாத. நான் என்  யுகேந்திரன் மாமா மாதிரி ரொம்ப சாப்டான கேரக்டரா இருக்க ஆசைப்படறேன். என் மாமா தான் எனக்கு ரோல் மாடல். அவரை மாதிரியே இருக்க விட்டிருக்கலாம்ல. நான் பாட்டுக்கு ஸ்ரீநிதியை காதலிச்சிட்டு ஜாலியா இருந்திருப்பேன்.


    என்னை ஏன்டா வில்லனா மாத்திட்ட. இப்ப பாரு உனக்கு உன் கம்பெனி கைக்கு வரக்கூடாதுனு அந்த வக்கீல் சிதம்பரத்துக்கு கோடி கோடியா பணத்தை கொட்டியிருக்கேன். உன்னை அவளிடம் கெட்டவனா பிம்பம் காட்ட சித்தரிச்சிருக்கேன். இதோ உன்னை கடத்தி கட்டிவச்சிட்டேன். அவளை கல்யாணம் பண்ணியாச்சு. 

   அடுத்து பஸ்ட் நைட் முடிச்சிட்டு பொறுமையா மன்னிப்பு கேட்டுட்டு, பிறகு பொறுமையா உன்னை ரிலீஸ் பண்ணறேன். என்ன செய்ய உன்னை அடைச்சி வைக்க இங்க ஐந்து நாள் இந்த மேரேஜ் ஹாலை வாடகைக்கு பேசியிருக்கேன்." என்றவன் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டினான். 


   "ம்ருத்யு..ம்ருத்" என்று கூறியவனின் வாயில் பிளாஸ்திரி ஒட்டியதும் திமிறினான். 


   "குட்பை" என்று ம்ருத்யு அறையிலிருந்து வெளிவந்து கதவை தாழிட்டான். 


   இரண்டு அறையிலும் கதவை மூடிவிட்டு வெளிவந்தான். சிறு துவாரம் இருக்க சுவாசிக்க நிச்சயம் பிரச்சனையிருக்காது. 

  நேற்று காலை வரை இதே இடத்தில் கட்டிவைக்காமல், அறையில் அடைத்திருந்தான் கூடவே உணவும் தண்ணீரும் வைத்திருந்தான்.  இன்று தான் கட்டிவைத்துவிட்டான். 


  நாளை வரை கட்டிவைக்கும் முடிவில் இருக்கின்றான். அதன் பின் உணவு உடை தண்ணீரோடு இரண்டு நாள் இதே அறையில் சுதந்திரமாக வைத்து விட முடிவெடுத்திருந்தான். 


   அவன் மணமகன் அறைக்குள் நுழையும் தருணம், "இங்க என்ன பங்ஷன்? நீ எங்க ஊர்ச்சுத்திட்டு இருக்க ம்ருத்யு? அடிக்கடி நீ தனியா போனா இங்க கேள்வி எழும்பாதா?" என்று ஷண்மதி கேட்கவும், "இல்லை அத்தை நேத்துவரை சாப்பிட்டுயிருப்பான். யார் கடத்தியதுனு குழம்பியிருப்பான். இப்ப கட்டி போட்டது கஷ்டம் தானே?" என்று அப்பாவியாக பதில் தந்தான் ம்ருத்யு. 


   நான் உனக்கு அத்தை என்பது போல, "இந்த அப்பிராணி லுக் எல்லாம் உங்க மாமாவோட வச்சிக்கோ நான் ஷண்மதி.   

  நீயேன் அவனை பார்க்க போனனு சொல்லவா?" என்றதும் திருட்டு முழி முழித்து ம்ருத்யு நின்றான். 


   "உன் காதலியை நான் கல்யாணம் பண்ணிட்டேன்னு கெத்து காட்ட போயிருப்ப, கரெக்டா?" என்று கேட்கவும் ம்ருத்யு பின்னங்கழுத்தை தடவினான். 


   ''அப்படியில்லை அத்தை'' சங்கடமாய் நின்றவனை எப்பவும் போல காப்பாற்ற யுகேந்திரன் மாமா வந்தார். 


  "என்ன மாப்பிள்ளை இங்க நிற்கற? என் பொண்ணு எங்க?" என்று கேட்டதும், "ரிதன்யா கூட இருக்கா மாமா. அப்பா ரிலேஷன்ல ஊர்லயிருந்து வந்தவங்களுக்கு ரூம் அரேஜ் பண்ணிட்டு வந்தேன்." என்று சமாளித்தான். 


    "ரிலேஷன் பிரெண்ட்ஸ் எல்லாம் அப்பா அம்மா பார்ப்பாங்க. நீ ஸ்ரீநிதி கூடவேயிரு புரிதா?" என்று ஷண்மதி குரலில் ம்ருத்யு தலை தானாக ஆடியது. 


   யுகேந்திரன் ஷண்மதி சென்றதும் நெற்றியில் கைவைத்து தலை முடியை கோதினான்.  


  "ஓஎம்ஜி. இந்த ஸ்ரீநிதி அத்தையை அரக்கின்னு சொல்வா. அதோட மீனிங் இப்ப தான் புரியுது. இந்த அத்தையையே என்னால சமாளிக்க முடியலை. இந்த லட்சணத்துல ஸ்ரீநிதியை எப்படி சமாளிப்பேன்.' என்று அறைக்குள் வந்தான். 


   ஏசியறையில் ரிதன்யாவோட ஸ்ரீநிதி வீற்றிருந்தாள். அலங்கரித்த தங்கதேர் போல மெத்தையில் காலை கட்டி தலைசாய்ந்திருந்தாள். 


    "ஏன் அத்தான் அக்கா உம்முனு இருக்கு. எங்களை பிரியறது கஷ்டமாயிருக்கா?" என்றதும், "ரிது நீ வெளியே போ" என்று அனுப்பினான். 


   "வரவர என்னை வெளியே போன்னு அனுப்பிடறிங்க. போங்க அத்தான்." என்று சலித்தவள் அவனை தள்ளிவிட்டு சென்றாள். 


  "ஏய் ரிது" என்று தள்ளாடியவன், ஸ்ரீநிதியை கவனித்தான். 


    ஸ்ரீநிதி ரிதன்யாவை முறைத்தவள் ம்ருத்யுவை கண்டு திரும்பவும் காலை கட்டிக்கொண்டாள். 


   'ரொம்ப கஷ்டமாயிருக்குமோ' என்று தாடை தேய்த்தவன், மனதிற்குள், "டேய் ம்ருத்யு ஷண்மதி அத்தை மாமாவை லவ் பண்ணினாங்கடா. அதனால மாமாவிடம் சரண்டர் ஆனாங்க. இந்த குட்டிபிசாசு ஜீவியை லவ் பண்ணுது. என்னிடம் சத்தியமா சரண்டர் ஆகாது. இதுல நான் வேற இதுவரை இருந்த சாப்ட் நேச்சரை தொலைச்சிட்டு வில்லன் ரேஞ்சுக்கு பிஹேவ் பண்ணிருப்பது தெரிந்தது அவ்ளோ தான் டோட்டல் விஷயமும் பேக்ஃபயர் ஆகிடும். ம்ருத்யு ஒன்னு சாப்ட் பிஹேவ்னர்ஸா இருக்கணும். இல்லை இவளிடம் ஜீவியிடம் காட்டின வில்லத்தனம் எடுக்கணும். 

    ஏதாவது ஒன்னு தான் செல்லுப்படியாகும். நிச்சயம் இந்த சாப்ட் ம்ருத்யுவை அவ ஏய்ச்சிடுவா. எதுவானாலும் இனி இவளை விடறதா இல்லை. ஜீவி சொன்ன மாதிரி ஸ்ரீநிதியை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது' என்று சிந்தித்தவன் தொண்டையை செருமினான். 


    ஸ்ரீநிதியோ "என்னடா பிரச்சனை அதான் மேரேஜ் முடிஞ்சிடுச்சே. இன்னும் என்ன பண்ணணும்

ஐ அம் சோ டயர்ட். மனமும் உடலும் சோர்ந்திடுச்சு. சும்மா இங்க நில்லு அவங்களிடம் பேசு ம்ருத்யு எங்கனு ஆயிரம் வார்த்தை. என் நிலைமை யாருக்கும் புரியாது." என்று வெடித்தாள். 


   ம்ருத்யுவோ மெதுவாக வந்து அவளருகே அமர்ந்து, "நிஜமாவே அவங்களுக்கு உன் நிலைமை புரியாது. அதனால தான் அப்படி பேசறாங்க. யூ டோண்ட்வொர்ரி நான் உன்னை புரிஞ்சுக்கறேன் தானே?" என்று அவள் தோளைபற்றி தன் தோளோடு அணைத்துக்கொள்ள, அவன் நெஞ்சில் சாய்ந்தவள் தன் தோழனிடம் ஆறுதல் தேடி சட்டை பட்டனை பிடித்து இறுகிக்கொண்டாள். ம்ருத்யுவோ அவள் தலையில் தாடைப்பதி

த்து வில்லன் சிரிப்பை உதிர்த்து கொண்டான். 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 

    


   


    


    


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1