உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15

 


                                     💟 (௧௫)15                    

       ஊரே திருவிழா போல வீதியில் வந்து மித்திரனையும் ருத்திராதேவியையும் கண்டு ஜோடி பொருத்தம் கண்டு அளவில்லா ஆசை தீர கண்களால் பருகி நின்றனர். 

          வீதி எங்கும் ஆர்பரித்த கூட்டம் அரண்மனையில் வந்து நிற்க பூத்தூவளாக மலர் மழை பொழிந்தது. காவலர்கள் மந்திரிகள் என்றே வரவேற்க, வரவேற்க்க வேண்டிய தாயோ அவர்கள் அறையில் தாழிட்டு இருக்க மித்திரன் ருத்திராவிடம் என்ன சொல்ல என்றே திரும்ப 

     ''சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை பிரபு... எமக்கு புரிகின்றது. அத்தை அவர்கள் ஏற்கும் வரை காத்திருகின்றேன். என்ன இருந்தாலும் புத்திர சோகம் அல்லவா? அதுவும் முதல் பிள்ளை என்றாலே அம்மாவின் மனம் கணக்கும் தானே? அறிவேன். மேலும் அரசர் பரிதி மன்னன் நிலைமை அறிந்து தான் வந்தோம்'' என்றே ருத்திரா ஆறுதலாக சொல்ல அங்கே மித்திரன் தந்தை கிளி வடிவில் 

      ''ஆஹா மருமகளே.. நீ கொய்த எம் மூத்த மகனின் சிரம் எமது யாக்கை என்றதால் எமக்கு உம்மீது  வருத்தம் கோவம் என்பது எல்லாம் கூட இல்லை. இப்படி தீங்கு இழைத்த துர்வனை பெற்று எடுத்ததற்கு எமக்கு ஏற்ற தண்டனையாக தான் யாம் கருதுகின்றோம். எமக்கு உம் மீது வருத்தமோ கோவமோ துளியும் இல்லையம்மா.. எமது சின்னவன் மித்திரன் செய்த செய்கை எமக்கு அளவிலா ஆனந்தம் மட்டுமே. எமக்கு இது போதும்'' என்றதும்  

         ''வணங்குகிறேன் வேந்தே..'' என்றதும்  

     ''வாழ்த்துகள் மகளே.. மருமகள் என்ற உறவில் கிடைத்த மகளே..  இனி இந்நாடு உமது பொறுப்பு. பெண்கள் வீட்டில் மட்டுமே ஆட்சி புரிவதை விட நாட்டிலும் உங்கள் ஒத்துழைபு கருத்துக்கள் பகிருங்கள். பெண்ணின் ஆட்சி நாட்டிற்கு சிறந்து தான் அமையும். பெண் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களையும் தனது குழந்தையாக பாவித்து நல்லது செய்வாள். ஆணின் பொறுப்பு வெறும் கடமைக்கு இருக்கும். வீரத்தில் வேண்டுமென்றால் ஆண்கள் உலகை வெல்லும் ஆளுமை இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு அம்மாக்களின் உள்ளதினை ஆளும் பக்குவம் ராணியான உமக்கும் இருக்க வேண்டும்.     

     உன் போன்ற ஒருத்தியின் வீரம் வெறும் அரண்மனையில் அடைபட்டு இருக்க கூடாது. அரசவையில் கருத்து கூறும் ஆலோசகராகவும் இருக்க வேண்டும். இருப்பாயா மகளே.." என்றதும் ஆனந்த களிப்பில்   

  ''நிச்சயம் வேந்தே.. தங்கள்எண்ணம் போல நடக்கட்டும்...'' என்றே வணங்கி அவ்வறையினை காண அவரோ பார்வை பொருள் அறிந்து 

      ''மந்தாங்கினி கோவம் எல்லாம் அவள் கரங்களில் மித்திரன் குழந்தை துள்ளி விளையாடும் கணம் சேர எல்லாம் மாயமாகி மறந்து போவாள்'' என்றே சொல்ல மித்திரன் எதற்கும் தாயின் அறையினை தட்ட வெளியே வந்த மந்தாங்கினி.

        ''வாழ்த்துகள் மைந்தானே... உமது இல்லறம் நல்லறமாகட்டும்... இங்கு இருக்கும் இனி வரும் காலம் அவள் இந்நாட்டின் ராணி என்பதை உணர்ந்து நடந்து கொள்ள அறிவுரை வழங்கு மித்திரா'' என்றே அறிவுறுத்தி பணிப்பெண்களிடம்  

     அவர்கள் அறையை தயாராக செய்ய கட்டளை விடுத்தாள் மந்தாங்கினி.  

            நள்ளிரவு வேளை பால் நிலா முகத்தில் ஒளியாய் வீச மித்திரன் ருத்திரவை நெருங்கி ''நிலவுகள் இரெண்டும் என்ன கதை அளாவி கொண்டு இருக்கின்றன?'' என்றதும் அவன் தன்னை தான் நிலவு என்றே அறிந்து மித்திரனை கண்டு 

     ''அத்தைக்கு எம் மீது கோவம் போகாது..'' என்றே சொல்ல     

 ''அவர்கள் சிந்தை எல்லாம் சேயின் மீது போனால் எல்லாம் மாறும் என்று எந்தை செப்பியது நினைவில் இல்லையா அல்லது மஞ்சரி அடுத்த முறை உமது நாட்டிற்கு செல்லும் பொழுது உமது வயிறு மேடாக வர சொன்னதாக நினைவு'' என்றே மித்திரன் மையலாக பார்க்க ருத்திரா முகம் சிவக்காமல் 

     ''தங்களுக்கு கோவாமில்லையா?''

      ''எமது ருத்திரா நியாயத்தினை தான் பேசுவாள் செய்வாள். உமது தமைக்கை உயிர் துறந்து இறந்தது எமது அன்னைக்கு இன்னும் தெரியாது. அவர்கள் அறிந்தால் உம்மீது இன்னும் கூடுதல் அக்கறை தான் ஏற்படும்.. அம்மாவிடம் உமது தமைக்கை வேறு மணம் புரிந்ததாக தான் எடுத்து சொல்லி இருக்கின்றார் மந்திரியர் கபிலன். அது ஏனோ அவர்கள் சமுத்ரா பற்றியே யோசிக்க கபிலன் செய்த மாய தோற்றம். துர்வனை விரும்பிய நங்கை வேறு மணம் புரிந்த கசப்பு. தற்பொழுது அதை சொல்லி தெளிவு படுத்தவும் முடியவில்லை. அன்னை உமது பேச்சை செவி மடுக்காமல் போனது ஒரு காரணம்'' என்றே சொல்ல   

  ''எழில் கொஞ்சம் பேரழகில் ஒரு பெண்ணை பெற்று எடுத்து வளர்த்து பருவம் வந்து சிட்டாய் மான் போல ஓடி விளையாடியவளை எங்கணம் தனிபட்ட ஒருவனின் சக்தி தேடுதலில் இறப்புக்கு போனது வெகு கவலை மித்திரா. இரு நாட்கள் சமுத்ரா மாயமாகி போன பின்னே அவளை தேடி உழன்று துர்வன் குகைக்கு செல்ல. அன்று உயிர் பிரிந்த சடலமாக காண செய்வோம் என்றே எண்ணி பார்க்கவில்லை. இன்னமும் எந்நாட்டின் மக்கள் அவள் மாயமாகி போனதாக எண்ணி இருக்கின்றார்கள். அவள் இறப்பு துர்வனால் மரணம் என்றால் அவர்கள் கொதித்து எழுவார்கள். இல்லாத உயிருக்காக ஒரு நாட்டில் தண்டிப்பது நியாயம் அல்லவே'' என்றதும்   

  ''மன்னிப்பை தவிர இந்த கணவன் வேறொன்று தர இயலாது கண்ணே'' என்றதும் ஒருவர் ஒருவர் தங்களாக வலி மறந்து அன்றைய நாட்களை உறக்கம் தொலைத்து கடந்தார்கள். 

     நாட்கள் போக மித்திரன் அன்பில் ருத்திரா தனது காதலை மீண்டும் உணர்ந்து வாழ துவங்க அவள் மணி வயிற்றில் முத்தாய் மித்திரன் பரிசு வந்து அமர மந்தாங்கினி பரிதி சொன்னது போல மற்ற பகை மறந்து இருந்து கவனித்தாள்.      கூடவே சமுத்ரா இறப்பு அறிந்து தன்னை போல ஒரு பிரிவு அந்நாட்டிலும் இருக்க அறிந்து நடப்பாய் ஏற்று பழக ஆரம்பித்தாள். 

       நாட்கள் வெகுவாக ஓட ஆண் மகவினை பெற்று எடுக்க ருத்திரா மித்திரன் வாழ்வில் இனிமை கூடியது.   

 அரசவையிலும் ஆலோசகராக மீண்டும் ருத்திரா அமர மித்திரன் நாட்டின் செங்கோல் ஆட்சி முன்னை விட இன்னும் மக்கள் சரி சமமாக பாவிக்கபட்டன.    

      சௌமித்திரதேவன்-ருத்திரமாதேவி இருவரின் பிள்ளை 'பரிதி சித்தார்த்தன்' இரு வயது அகவை நெருங்க ருத்திரா மீண்டும் கருவூற்று தாய்மை அடைந்தாள்.  

         பரிதி தனது பேரன் பரிதி சித்தார்த்தனை  கூடவே இருந்து ஒரு தோழனாக மாறி கூடவே பறந்தார்.   

                                           
💟முற்றும்💟          

                                                                                          

      -பிரவீணா தங்கராஜ்      

கதை எப்படி இருக்கு... கடைசியில் சொதப்பிய உணர்வு... நீங்க சொல்றது எனக்கு கேட்குது.

   
சும்மா விளையாட்டாய் என் மகளிடம் தமிழில் பேச 'அம்மா இப்படி ஒரு கதை எழுதுங்க' என்ற அவளின் தூண்டுதலில் ஆரம்பித்தது.     

   ஆர்வமாக கதை கரு யோசித்து அகராதி எல்லாம் வார்த்தை தேடி எழுதினேன். என்னவோ எனது மற்ற நாவலுக்கு கிடைத்த கருத்துக்கள் விமர்சனம் இக்கதைக்கு இல்லை கொஞ்சம் குறைந்து போனது. ஆனா எனக்கு இந்த கதை பிடித்து எழுதியது. ஆரம்பம் சூப்பரா தான் கொடுத்தேன். கடைசி சொதப்பிட்டேன் நினைக்கின்றேன்.  

  ராஜா காலம் என்றால் சக்திக்காகவும் நாட்டுக்காகவும் தான் கதை வரும். அத்தோட அக்காலத்தில் பெண்களுக்கு தன்னை தீண்டினா காமுகன் இறப்பான் என்ற விதத்தில் எழுதி இருப்பேன். இது போல ஒரு அருள் பெண்ணுக்கு இருந்தா நல்லா இருக்கும் என்ற என் கற்பனை. 

  கொஞ்சம் மந்திரம் வையுங்க என்றதும் என் பெண் சொன்னதுக்காக எழுதியது. அதான் கிளி உருவில் பரிதியை காட்டியது.     

     சரி இது முயன்றதே எனக்கு சந்தோஷம் என்று எடுத்து கொண்டேன்.     படிக்கும் ஒவ்வொருத்தரும் கருத்து பதிவு செய்தால் மற்றற்ற மகிழ்வு கொள்வேன்.       

Comments

  1. கதை மிகவும் அருமை சகி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சகி. மகிழ்ச்சி.... எனது மற்ற நாவல்களுக்கும் தொடர்ந்து வாசித்து கருத்து கூறவும்.

      Delete
  2. Nice story sisy intha story padichitu irunthapo pratilipi la irunthu delete panitinga eppadika padika ninachen iniku padichi mudichiten interesting story alagana karpanai sisy intha mari iruntha pengala thanagala kathupanga . Nalla mudivu romba elukavum kathai ena nu simple superb ah koduthutinga . 👍👌👏👏👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1