உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14

 



(௧௪)14           

விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான்.     

     அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது.          

    மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான்.     விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் .          

       ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான். 

        அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டது.  

       இன்று வந்திருக்கும் இளவரசர்களுக்கு அறிய வாய்ப்பு இன்று எமது மகள் ருத்திராவை மணம் புரிய அறிய வாய்ப்பு.   

         அதாவது ஆகபட்டது ஒரே முறையில் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு மீன் சக்கர கேடயத்தையும், வானில் புறாவின் காலில் கட்டி பறக்கவிடும் ஓலையினையும், நீரில் காவலர்கள் போடும் ரத்தின கற்களை மண்ணில் தீண்டும் முன் அம்பை எய்தி துளைத்து ஒரே முறையில் எய்திவிடும் ஆடவனுக்கு மகளினை கட்டி கொடுப்பதாகவும் அறிவிக்க ருத்திரா அதிர்ந்து தந்தையை காண அவரோ மகளை கண்டு அறிவிப்பை அறிவித்தாயிற்று என்பது போல பார்த்தார். 

       ருத்திரா அடுத்து மித்திரனை கண்டு இருக்க மித்திரனும் அதே போல தான் பார்த்தான். பார்வையால் உனக்கு அதில் உடன் பாடா என்பது போல பார்க்க ருத்திரா விழிகள் கலங்கி போனது. எமக்கு இது அறியா ஒன்று என்பது போல. 

       மித்திரன் பெரும் நிம்மதியோடு தானும் கலந்து கொள்ளும் முனைப்போடு நின்றான்.      நிறைய இளவரசர்கள் முதலில் மீன் கேடயம் குறிவைத்து தாக்கிட அடுத்து புறாவின் காலில் கட்டிய ஒலையில் குறிபார்த்து அம்பெய்திட இயலாது போனது. அப்படியும் சிலர் ஓலையினை அம்பெய்தினாலும் ரத்தின கற்களை அம்பெய்திட இயலாது போனார்கள்.    

                மித்திரன் முறை வர அவனோ சர்வ சாதாரணமாக அம்பெய்தி வெற்றி பெற்றான். 

      துர்வனை அம்பால் வீழ்த்திய முறை அவன் கழுதுக்கு மயிரிழையில் சென்ற அம்பால் மேகன் இப்படி ஒரு போட்டி முறை வைத்தான்.   

      வெற்றி பெற்ற இளவரசனுக்கு ருத்திராவை சபை முன் மித்திரன் கையில் ஒப்படைத்து    ''எமக்கு உமது காதலை எப்படி இணைக்க என்றே அறியாது அவசரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். எப்படியும் தாங்கள் எம் மகளை ஏற்று கொள்வீர் என்றே நம்பிக்கை தான். இனி ருத்திரா உமது பொறுப்பு'' என்றே அகத்தியன் செப்பிட 

   ''நன்றி வேந்தே... பிழை புரிந்த தமையானை மனதில் வைத்து மணம் புரிய கேட்பது எமக்கும் கடினமாக இருந்தன''

  ''உமக்கும் அப்படி இருக்கலாகும் என்றே அறிந்து இருந்தேன். இப்படி ஒரு போட்டி வைத்து எமது உயிரை எமக்கே தந்தமைக்கு நன்றிகள். மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.'''

  '' யாம் விடை பெறுகின்றோம். இந்த நற்செய்தியை எம் நாட்டின் குடிமக்களிடம் சொல்லி மகிழ யாம் புறப்படுகின்றோம்'' என்றதும் எந்தையாய் மனம் கலங்கி விடை கொடுக்க தாய் சந்திரமதி   

      ''கண்ணே எங்கு சென்றாலும் நீ அங்கு பொருந்தி கொள்வாய் தான். அதில் ஐயம் இல்லை. ஆனால் நீ வெட்டி வீழ்த்தியது அந்நாட்டின் மூத்த இளவரசனை.. அங்கும் ஒரு தாய் கண்ணீர் வடித்து கொண்டு இருப்பாள் அதனால் அவர்கள் சொல் ஏதேனும் தீயாக இருந்தாலும் அதனை ஏற்று அமைதி கொள். பொறுதருள் சினம் குறைத்து கொள்'' என்றே அறிவுரை வழங்க ஆம் என்பதாய் தலை அசைத்தாள். 

     மஞ்சரியோ ''காதல் மனம் கரம் பற்றியாயிற்று இன்னும் என்ன முகம் சோர்வு... அடுத்து இந்நாட்டுக்கு வருகை தரும் பொழுது உவகையான செய்தியோடு வந்திறங்கு.. புரிகின்றது அல்லவா!'' என்றே சொல்ல ருத்திரா முகம் செங்காந்தணலாக மாறியது. அடுத்து மேகவித்தகன்   

       ''உமக்காக தான் அம்பெய்தும் போட்டி அமைத்ததே.. மித்திரனின் திறன் அறிந்து வைத்தாலும் அதில் மித்திரன் வெற்றி பெரும் வரை எமக்கு இதயமே நின்று விட்டது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல மித்திரன் வெற்றி பெறாது போனாலோ வேறு யாரேனும் அப்படி வெற்றி பெற்று விடுவாரோ என்றே அஞ்சி போனேன். எம் தங்கையை காத்து அருளுங்கள் மித்திரனே'' என்றே சொல்ல மித்திரன் மனம் அது புரிந்து புன்னகை புரிந்து விரிந்து கிளம்பினான்.   

       மித்திரன் செல்வதற்குள் காவலன் மூலமாக செய்தி சந்திரதேசதிற்கு எட்டியது. மக்கள் உண்மை அறிந்த காரணத்தினாலும் அந்நாட்டின் பெண்களும் மாயமாகி உயிர் பிரிந்து போன காரணத்திலும் மக்கள் மனம் மகிழ்ந்தே வரவேற்க தயாராகி நின்றார்கள். 

        வழி நெடுகிலும் மித்திரன் சிந்தனையில் வயபட்டு கொண்டு வந்த துணையை தான் பார்த்தபடி வந்தான்.  

    ''என்ன ருத்திரா பலத்த யோசனையில் சிக்கி இருப்பதாக தோன்றுகின்றது. எந்நாட்டின் ஆட்சியை பிடிக்க யோசனை?'' என்றே மித்திரன் வினவ 

    ''தங்கள் தாயின் மனதில் இடம் பிடிக்க தான்.. அவர்கள் இன்னும் எம் மீது தீரா கோவத்தில் கிடப்பதாக கேள்வி?''    

 ''ஒற்றன் வைத்து இருகின்றாயா என்ன?'' என்றே ஆச்சரியத்துடன் கேட்க

      ''இதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. ஒற்றன் எல்லாம் இல்லை. ஒரு பெண்ணின் விழாவுக்கு தாய் வரவில்லையே.. அதிலே அறிந்திட முடியும். தாங்கள் பெரிய நாட்டின் ராணியாக இருக்கலாம். ஆனால் இன்னும் என் மீது சினம் சற்றும் குறைந்து இருக்காது என்பது என் எண்ணம்.'' என்றே வருந்த 

    ''அழகே.. ருத்திரா.. எதுவாகிணும் இனி மாறாது. நீ எம் துணை எமது இல்லாள். எந்நாட்டின் எமது இல்லாள் என்னும் பதவியில் வகிக்கும் ஒரே பெண்ணவள் நீ.. நீ மட்டுமே..'' என்றதும் மித்திரனின் அஜாகுபான பரந்த தோளில் சிரம் சாய்ந்து கிடந்த ருத்திரா இந்தளவு மாறியதே பெருத்த மகிழ்வில் மனம் உவகையில் சென்றான்.               

-விழியும் வாளும் சந்திக்கும். 

-பிரவீணா தங்கராஜ்.      


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1