சிரமமில்லமல் சில கொலைகள்-6

🩸-6 

ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம். 

''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர். 

கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள். 

"இவளை உயிரோட புதைத்து முடிங்க,'' என்றே கட்டளையிட்டது சாட்சாத் மேரியே தான். 

நகைகள் உடலில் சூழ்ந்து, தலைகணத்தோடு கூடவே கிரீடமும் கனமாக இருக்க நெற்றியில் அழகான விபூதி குங்குமம் கீற்றுக்கள் பளீரிட, கண்களோ ரௌதிரமாக இருக்க கண்டாள். ஜார்ஜ் ராஜ உடையோடு குழியில் மெர்லினை தள்ளி முடித்து மண்ணையும் தள்ளி விட, யவனரதி மயங்கி சரிய அம்மண்ணில் சரிந்து தலையை மண்ணில் ஒரு பக்கம் முட்டி கொடுத்து பதுகையாக கிடந்தாள். 

யாரோ ஒருவன் குரல் கேட்க திரும்பிட, 

காலங்கள் மாறிய கோலங்களாக ஒரு தெப்ப குளத்தில் அபரஞ்சியாக இம்முறை காட்சி அளிக்க ஆரோல், ஆடலாரசனாக நின்று "அபரஞ்சி அப்படி செய்ய வேண்டாம். பிளீஸ் அம்மா அவளை எனக்கு கட்டி கொடுங்க" என்றே ஆரோல் உருவத்தில் படிக்கறையில் சொல்ல, "அவனை அழைச்சிண்டு போங்க காரியத்தை கெடுத்திடுவான். அப்பறம் மொத்த பிளானும் சொதப்பிடும்'' என்றே மேரி உருவத்தில் சேலை அணிந்து சொல்ல ஜார்ஜ் ஆடலரசனை இழுத்து செல்ல, தண்ணீரில் மூழ்கும் அபரஞ்சி மூச்சுக்கு போராடி மூழ்கி, "சர்வேஷ்..." என்றே கடைசி குமிழ் வெளி வந்து முழ்கினாள். 

இந்த காட்சிகள் எல்லாம் மேரி ஜார்ஜ் மற்றும் ஆரோல் பார்த்து முடிக்க, அதே நேரம் தன் மகள் மயங்கினாள் என்றே தபித்தாள், கிறிஸ்டோபர் இருவரும் மகளை மனதத்துவ மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தனர். 

அவளின் ஆழ் மனதில் சர்வேஷ்வரன் என்ற பெயரே உச்சரிக்க, மருத்துவர் அது யார் உங்களுக்கு பழைய நினைவு ஏதாவது வருதா? என்றே தன் அன்னை வயதை கொண்ட தமிழ் பெண் மருத்துவர் மேக்னா கேட்டு முடிக்க, தொடர்பில்லாமல் அம்முவர் பார்த்த அதே நிகழ்வை மயக்கதில் கூறி முடித்தாள். 

மெர்லின் இங்கே கூறி முடிக்க சர்வேஷ் அவனிடம் அபரஞ்சி சொல்வதாக ஹாலில், இமை மூடி கேட்டு கொண்டு இருந்தான். 

டாக்டர் மேக்னா, ''இது பூர்வ ஜென்மம் என்றே சொல்லலாம். ஆனா அறிவியலில் இது சாத்தியாம என்றால் இப்பவும் சில ஏற்றுப்பாங்க, சிலர் மூடதனம் என்றே சொல்லிடுவாங்க

இதை மொத்தமாக உண்டு என்றும் சொல்லிவிட முடியாது, இல்லை என்றும் மறுத்துவிட முடியாது.

நாம் வாழும் இந்த அறிவியல் யுகத்தில் எல்லாவற்றையும் ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்து நிரூபிக்க வேண்டும். இன்று வரை அப்படி ஒரு நிரூபணம் செய்யப்படவில்லை. சில நிகழ்வு இருக்கு... ஆனாலும் அது நூறு சதம் என்றே சொல்லிட முடியலையே. 

உலகம் முழுவதும் , பூர்வ ஜென்மம், ஆன்மா பற்றிய பல கருத்துக்களும், நம்பிக்கைகளும் இருந்தாலும், இது வரை எதுவும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. அதனால இதுக்கு மருந்து என்று கொடுத்து பணம் பறிக்க நான் விரும்பலை. 

இங்க இருப்பது அவளுக்கு அந்த பெண் லிசா இறப்பும் அவளோட பெற்றோர் எண்ணமே வந்தா, ஒரு மாறுதலுக்கு நீங்க டூர் அழைத்து போங்க, அவளுக்கு மனசும் இதமா இருக்கும். இடம் மாறின மனம் மாறும். சில எண்ணங்களை மறக்கலாம். இல்லையா சில நிகழ்வு அவளுக்கு தாக்காமல் இருக்கலாம். '' என்றே பதில் தர, மெர்லின் தாய் தபித்தாள், தந்தை கிறிஸ்டோபர் பார்வையை பரிமாறி எங்கேனும் அனுப்பி பார்ப்போம் என்பதாய் சொன்னார்கள். 

மயக்கம் தெளிந்து எழுந்த மெர்லின் சர்வேஷ் இப்ப எங்கயாவது பார்த்தியா மா? என்றே கேட்க, 

''டாக்டர் இந்த நேம் ஆரோல் சொன்னது. உங்களுக்கு எப்படி தெரியும்?'' என்றே கேட்க, தபித்தாள் ஆரோல் குடும்பத்தோடு கூடவும் இனி இவளை பழக வைக்க கூடாது என்றே தீர்மானித்தார். 

கிறிஸ்டோபர் மெர்லினை அழைத்து, வெளியே வர, ''பாருங்க டாக்டர் அந்த பெயர் சர்வேஷ் அவ தானே சொன்னா இப்போ யாரு சொன்னது என்றே கேட்கறா.'' என்றதுமே 

''புரியுது தபித்தாள் ஆரோல் என்ற பையனிடம் இருந்து தள்ளி நிறுத்துங்க. கூடுமான வரையில் இவளை வேற நாட்டுக்கு சுற்றி பார்க்க அனுப்பி வைங்க மாற்றம் கிடைக்கும்'' என்றே சொல்லவும் சரியென்றே மெர்லினை தேடி போனாள். 

இங்கு ஆரோல் குடும்பதினர் பாவ மன்னிப்பு செய்து பிரேயர் வைத்தாலும், கண்ட காட்சியினை வியர்வையில் நனைந்து சொல்ல, ''பெரிய பாதரை வர சொல்றேன் எனக்கு இதுக்கு தீர்வு சொல்ல முடியலை. அவரிடம் போனில் தெரிவிக்கறேன். நாளைக்கு மாலைக்குள் சொல்லி உங்களுக்கு தெரியப்படுத்தறேன்.'' என்றதும் மூவரும் பேயறைந்தது போன்று திரும்பினர். 

தங்கள் குடும்பம் மெர்லினுக்கு இரு ஜென்மமாக பாவம் செய்தது என்ற வகை அளவுக்கு புரிந்தது. இதில் லிசா குடும்பமும் சேர்த்து இருந்து இருக்க வேண்டும். அதனால் தான் லிசா இறப்பு மற்றும் அவள் தாய் தந்தை இறப்பு என்றே நிகழ்ந்து இருக்கின்றன. 

நேரம் கடத்தினால் தங்கள் குடும்பம் உயிர் பிழைப்பது அறிதானது என்பதை தெளிவாக உணர்ந்து இருந்தனர். 

தங்கள் வீட்டில் இருக்க பிடிக்காமல் பீச் ஹவுஸ் தங்க சென்றனர். 

ஆரோல் மட்டும் மெர்லினுக்கும் இது எல்லாம் அறிந்து இருகின்றாளா? அல்லது நமக்கு தெரியாமல் அவளை கொன்ற எண்ணத்தால் எல்லோரையும் பழி வாங்குகின்றாளா? கண்டறிய வேண்டும் என்றே உறங்கினான். 

அடுத்த நாள் பொழுது புலர மெர்லினை சுற்றி பார்க்க செல்வதற்கு வேறு நாட்டில் பயணிக்க டிக்கெட் எடுக்க முனந்தனர் கிறிஸ்டோபர். 

லண்டன், ஆஸ்ட்ரேலியா மற்றும் கோவா என்று விமான டிக்கெட் பதிவு செய்திட முயன்றிட, அதில் அடுத்த நாள் இரவுக்கு என்ன விமானத்தில் டிக்கெட் கிடைகின்றதோ அதில் புக் செய்து காத்திருந்தார். 

ஏற்கனவே மகளோடு விடுமுறைக்கு பாரிஸ் சென்று வந்து இருந்ததால் விமானத்தில் பயணம் செல்ல எல்லா தேவைகளும் சரியாய் இருந்தது. அதனால் எந்த நாட்டிற்கு டிக்கெட் பதிவு கிடைக்கின்றதோ என்றே எண்ணியிருக்க, மெர்லின் வர வேண்டிய இடத்திற்கு கிட்டியது. 

ஆம் இந்தியா பயணம் செய்ய விமான டிக்கெட் கிடைத்து விட, அதனை எடுத்து கொண்டு வந்து சேர்ந்தார். 

திடீரென நீ இந்தியா செல் சுற்றி பார் என்றே உரைத்தால் யாருக்கேனும் புரிபடுமா? அப்படி தான் விழித்தாள் மெர்லின். 

இருந்தும் நடக்கும் சூழ்நிலையும் அவளுக்குள் என்னவோ செய்ய, மறுக்காமல் வாங்கி கிளம்பறேன் டாட். என்றே துணிமணிகளை எடுத்து வைத்தாள். 

அந்த கருப்பு உருவம் அவளை வட்டமிட்டு கொண்டு இருக்க, 'வர வேண்டும் யவனரதியே... உன் வருகையில் என் குழப்பம் தெளியும்' என்றே கருப்புகை மாயமாகி ஆரோல் இருக்கும் வீட்டுக்கு வந்து நின்றது. 

அங்கே அக்குடும்பம் இல்லாது போக, அருவுருவமான இளவழகன் தலை மட்டும் அந்தரத்தில் அண்டத்தில் மும்முறை சுற்றி வந்து, உடலோடு சேர்ந்து, 'யவனரதி இத்தேசத்தில் இருந்து சென்ற அடுத்த கணம் உங்களுக்கு முடிவு நெருங்கும்...' என சூளுரைத்தான்.

சர்வேஷ்வரன் ஹாலில் குறுக்கும் நெடுங்கும் நடந்தவன். யோசனையை விடாது தொடர்ந்து சிந்தனையில் கலந்து இருக்க, சாந்தனு மெல்ல அவனின் கையை பற்றி, "என்னடா... மறுபடியும் கொலையா?" என்றான். 

"ம்ம்... ஆமா அடுத்து நடக்கும். அதுவும் இந்த முறை இரண்டு பேர் ஒரே நேரத்தில்." என்றவன் மீண்டும் சிந்திக்க, சர்வேஷ்வரனை பிடித்து நிறுத்தினான் சாந்தனு. 

"யாருனு தெரிந்ததா? எதுக்குனு உனக்கு புரிஞ்சிடுச்சா?" என்று கேள்வி கேட்க, 

"புரியலை... யாருனும் தெரியலை. ஆனா இரண்டு ஜென்மமாக யவனரதியா அபரஞ்சியா வந்தவளை கொன்று இருக்காங்க. அதுக்கு அந்த இளவழகன் பழி வாங்கறான். அதுல என் பேர்ல இருக்கற சர்வேஷ்வரன் யாரு. நான் தான் அவன் என்றால் அப்போ இளவழகன் யாரு? நான் தான் சர்வேஷ்வரன் என்றால் எனக்கு ஏன் எதுவும் நினைவு வரலை. 

இதெல்லாம் பார்த்தா எனக்கு இரண்டு ஜென்மமா ஏதோ ஒரு விஷயம் நடந்து, அது நிறைவேறாமா இறந்து இருக்கேன்." என்று சர்வேஷ் சரியாக கணித்து சொன்னான்.

"சரி இரண்டு ஜென்மத்திலும் நடந்தது நினைவு இருக்கா?" என்றான் சாந்தனு.

"நினைவு இல்லை... இப்ப நடக்கிற லிசா மரணம் அவளோட குடும்பத்தை சேர்ந்தவங்க மரணம் எல்லாம் முன்ன யவனரதிக்கு ஏதோ பாவம் செய்து இருக்காங்க. அதாவது பாகிரதி யவனரதியை அழிக்க அவங்க குடும்பமும் சம்மந்தப்பட்டு இருக்கு. 

அதே போல அபரஞ்சி வாழ்வில் அழிச்சி இருப்பாளா என்று தெரியலை... இருந்தும் அபரஞ்சியா பிறந்தப்ப ஆடலரசன் குடும்பத்தை சார்ந்தவங்க கொன்று இருக்கணும். அதனால தான் இப்ப ஆரோல் குடும்பத்தை பழி வாங்க இளவழகன் துடிக்கிறான்." என்று சர்வேஷ் நிறுத்த, சாந்தனு சிலையாக நின்றான். 

"என்னடா சிலை மாதிரி நின்றுட்ட, நான் பைத்தியம் மாதிரி முன் ஜென்மம். அதுவும் இரண்டு ஜென்ம நிகழ்வை பற்றி கதை விடறேனு நினைக்கிறியோ? இல்லை... பைத்தியமென்றே முடிவு கட்டிட்டியா?" என்று கேட்டதும், 

"சே சே... அதெல்லாம் இல்லை. நான் உன்னை நம்பறேன். எனக்கு என்ன புரியலைனா. இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு, அந்த யவனரதி யாரு அபரஞ்சி யாரு அதே பொண்ணு தான் உன்னிடம் டெலிபதி மாதிரி கம்யூனிக்கேட் பண்ணறானா அவ பெயர் என்ன? எங்க இருக்கா? உன்னைத் தேடி வருவாளா? அவளுக்கும் உனக்கும் நடந்த விஷயம் நினைவு வராம, ஏன் மற்றவங்க நினைவு வர்றாங்க." என்றான் சாந்தனு.

"அதை தான் இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு இருந்தேன். அவன் அவனுக்கு காதலி தான் நினைவு வருவாயென்று படத்துல கதையில கேள்விப்பட்டு இருக்கேன். எனக்கு மட்டும் ஏன் ஏதோ ஒரு கருப்புகை வருதோ. அதுவும் முழு உருவமா வந்து தொலையுதா. தலையில்லாம வருது யாரா இருக்குமென்று கெஸ் பண்ண? எரிச்சலா இருக்கு. பட் சாந்தனு... அபரஞ்சி வர்றா டா. என்னை தேடி வர்றானு சர்வேஷ்வரனா என் உள்ளுனர்வு சொல்லுது." என்று வெட்கம் கொண்டான் சர்வேஷ். 

"அடேய்... இந்த ரணகளத்திலயும் உனக்கு வெட்கம் வருதா டா. எனக்கு அடுத்து என்ன நடக்குமோ என்று ஜர்க் ஆகுது. இதுல ஒரே நேரத்தில் இரட்டை மரணம் நடக்கப் போகுதுனு சொல்லற. எதுக்கோ உன்னை விட்டு தனியா வீடு பார்க்க கிளம்பறேன். இல்லை நீ என்னை போட்டு தள்ளிடுவ" என்று சாந்தனு ஓடினான். 

தன்னவள் அபரஞ்சி என்ற பெயரில் சர்வேஷ்வரன் கனவில் மிதந்தான்.

ஆனால் வருவது அபரஞ்சி என்ற மெர்லின் அல்லவா. அதுவும் மெர்லினாவுக்கு தான் யார் தன்னை சுற்றி நிகழும் சம்பவம் உணராதவளாக இருக்க, சர்வேஷ்வரன் யாரென கண்டறிந்து காதல் கொண்டு, முன் ஜென்ம கணக்கை சரிச்செய்வனரா? என்பது விதி செய்யும் சதியில் தெரியாமல் காத்திருக்க செய்தான் சர்வேஷ்வரன்.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ் 

hi 
read pandravanka valuable comments kodunka. fb la comments pandravankaluku thanks a lot 

Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1