உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11

   


 💟 ( ௧௧)11

                                   உறங்கா இரவுகள் கடக்க... மஞ்சரி தான் வேகமாக ருத்திரா அறையில் நுழைந்தாள்.
         மஞ்சரி நுழைந்ததும் விழி நீர் சிந்தியதை துடைத்து எறிந்து மறைக்க     
   ''எதற்கு மறைக்கின்றாய் அதான் நீ கேவலிட்டு வந்து நின்றதை யார் அறிவாரோ இல்லையோ உயிர் சிநேகிதி யாம் அறியாது போகுமோ? உமக்கே நன்கு புலப்பட்டது தானே? அந்த துர்வனின் கயமையில் ஒரு பங்கும் மித்திரனுக்கு அல்ல என்பது.. அப்படி இருக்க எதற்கு இந்த விஷபரீட்சை சொல் ருத்திரா?''
    ''நியாயம்.. அதுவே.. எமக்கு போதித்தது எதிரில் நிற்பவர் யாராக இருப்பினும் உண்மை நியாயம் மட்டுமே யாம் அறிந்து நடப்போம்''
     ''ஒருவர் செய்த தவறுக்கு நீ தவறே செய்யாத உம் காதலனை தண்டிக்க செய்கின்றாய்... இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது''
     ''துர்வனுக்கு உடன் பிறப்பாய் வந்தமைந்தது தவறே...''
     ''தவறு தான் உம்மை பார்த்த நொடி விரும்பி உமக்கு எவ்வித கெடுதலும் ஏற்பாடா வண்ணம் உமது பின்னால் தொடர்ந்தானே தவறு தான். தனது தமையனின் முன் நியாயம் பேசி எம்மையும் உம்மையும் காப்பாற்றினானே தவறு தான். சமுத்ரா பேசற்று மூச்சற்று கிடக்க அவள் நம்மை போல் எழ என்ன செய்தாக வேண்டும் என்றே நமக்கு சொல்லியதும் அவரே.. உம் காதலை கொண்டு நீ அவரை வினா தொடுத்தாலும் முகம் வாடாது விவரித்தாரே.. இத்தனைக்கும் மேலாக துர்வனின் போல சக்தி இருந்தும் அதனை தவறாக பிரயோகிக்காமல் உம்மை காத்து நின்றார். அதனை வைத்து தப்பிக்காது உம் வதனம் நோக்கி புன்னகை மாறாது விழி இமைக்காது கண்டு உம் நியாயம் ஜெயிக்க அமைதி காக்கின்றாரே தவறு தான்''
       ''எம்மை குழப்பாதே மஞ்சரி.. எதை நீதி தாரசில் வைத்தாலும் மாண்ட 97 உயிர்களுக்கு இணையாக முடியாது. புரிந்து கொள். இன்னாட்டின் மருமகள் போல நட.. பாரபட்சம் பார்க்கும் சக மனிஷியாக சுயநல உலகில் சஞ்சரிக்காதே... நீ இன்னாட்டின் ராணியாக அடுத்த பதவியில் அமர போகின்றவள் நியாயம் நெறிமை(நன்னெறி) மட்டுமே புத்திக்கு எடுத்து செல். உறவுகளை எல்லாம் மனதிலே புதைத்திடு..'' என்றதும் மஞ்சரி இதற்கு மேல் புரியாதவளா புரிந்தும் மறுப்பவள் என்றே அறைவிட்டு நகர்ந்தாள்.
        மஞ்சரி சொல்லி சென்ற கணம் யோசனையில் மூழ்கிய ருத்திரா மனம் மித்திரனை எண்ணி எண்ணி வருந்த அவனிருக்கும் இடம் நோக்கி புலம்(இடம்) பெயர்ந்தாள்.
              அதே நேரம் அரசோலை ஏந்தி வீரன் புரவியில் சந்திரதேசம் நோக்கி விரைந்தான் ருத்திராவின் வீரன் ஒருவன். 
               துர்வனோ  'கண்டறிந்து கொண்டேன்.. அந்த பாயும் புள்ளி மானை கவரும் வழி ஆம் எமது உடன் பிறப்பால் மட்டுமே சாத்தியம்.
       அவனை இந்நாள் வரை எமது யாகதுக்கோ அல்லது எமது பலியில் கூட்டாகவோ சேர்த்ததில்லை... அதற்கு மித்திரன் உடந்தையாக(சம்மதிக்க) மாட்டான். ஆனால் மயக்கவும் இயலாது நெருங்கவும் இயலாத கன்னி ருத்திரா தேவியை இங்கு அழைத்து வர எம்மால் இயலாது ஆனால் மித்திரனால் இயலும்.  (அவளை தீண்டினால் காமுகன் இறப்பான் என்பதை துர்வன் அறியாது தான் இருந்தான்.)
        மித்திரனை நான் வசியத்து விட்டால் அவன் யாம் சொல்லும் சொல்லிற்கு இணங்க அவளை  மறலி செய்து அழைத்து வருவான். அவனை வைத்து எம் சொல்லால் அவனை கட்டுக்குள் வைத்து அவளை யாம் மணந்து யாகத்திற்கு பலியிட செய்வது தான் சரி.
      எப்படியும் ருத்திராவை நெருங்க சென்றால் மித்திரனை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆருயிர் காதலியை தனித்து விட அவன் ஒன்றும் மட்டி(மூடன்) அல்ல. ஆம் எப்படி என்றே யோசனையில் ஆழ்ந்தவன் எண்ணத்தில் உதித்தது அவ்வோசனை.. அதனை சரியாக பயன் படுத்தினால் நிச்சயம் நினைத்ததை நடந்தி காட்ட இயலும். ஆம்.. மித்திரா இதோ உம்மை சந்திக்க வந்து கொண்டே இருக்கின்றேன். உம் காதலியை எமது மணையாளாய் நீயே கொடுக்கும் நிலை...  என்றே அந்த மலைக்குகை அதிர வெற்றி பெற்றது போல களிப்பில் கத்தினான்.
        ஆனால் இவை எல்லாம் நடக்க மித்திரன் தனது காதலி ருத்திரா என்றதை மறந்திட வேண்டுமே...?
        தனது புரவியில் பறந்து சந்திரதேசம் வர அங்கே மித்திரன் இல்லாமல் போக யோசித்தவன் எங்கே போனான் என்று எண்ணுகையில் தான் நாவலூர் வீரன் ஓலை கொண்டு வர தனது உருவத்தை மறைத்து வந்து நின்றான். மந்திரியின் கையில் ஓலை சுவடி கொடுக்க அதனை எடுத்து கொண்டு ராணி மாந்தாங்கியிடம் சென்றார் சந்திரதேசத்தின் மந்திரி கபிலன்.
    ''ராணியரே... இந்நாள் வரை நங்கைகள் மாயமாகும் அவலம்... யார் நிகழ்த்தியது என்றே அறியா மக்கள் இருந்தார்கள். இக்கணம் நாவலூர் கோமகன் அதற்கு காரணம் நமது மூத்த இளவரசர் துர்வன் என்றே விளித்து அவரை கொண்டு வந்து கண் முன் நிறுத்தினால் மட்டுமே இளைய இளவரசரை விடுவிக்க செய்வதாக சொல்லி செய்தி வந்து உள்ளது. அல்லது....''
        ''அப்படி இல்லை என்றால்?''
      ''இளைய இளவரசர் மித்திரனை நாளை மாலை சிரம் கொய்வதாக அடிகோடிட்டு இருக்கின்றார்கள். தங்கள் என்ன செய்ய போகின்றீர் ராணியரே.. தங்கள் முடிவில் தான் இளயவரின் உயிர் உள்ளது. நாம் தாமதிக்கும் கணம் நம் நாட்டுக்கும் ஆபத்து. அரசன் பிணியில் கிடப்பது மற்ற வேந்தர்கள் அறிந்தாலும் ஆபத்து. தற்சமயம் நமது நாட்டிற்கு தான் இன்னல்...''
     ''ஐயகோ.. மந்திரியரே யாம் என்ன செய்து பிரச்சினையை நிவர்த்தி செய்வது?''
     ''ராணியரே... ராஜா சபையில் வேந்தன் இல்லாது இருக்கவே நெறி தவறிய ஆட்சி என்று பெயரும் கெடும்.. ஆதலால் இரு மகனில் ஒருவரை தாங்கள் இழக்க தான் செய்ய வேண்டும். தற்பொழுது இளைய இளவரசரை நாம் விட்டுவிட்டால் அடுத்து மூத்த இளவரசரை தேடி நாவலூர் வேந்தன் படையெடுக்க தான் செய்வார்கள். நமக்கு சின்ன இளவரசர் உயிரும் மிஞ்சாது. அடுத்து நமது நாடும் கைப்பற்று போவது தான் மிஞ்சும். அதற்கு பதிலாக....'' என்றே கபிலன் தயங்க
     ''பதிலாக...?''
     ''நமது மூத்த இளவரசர் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால் சின்ன இளவரசர் உயிரும் காப்பாற்றப்படும் நாடும் காக்கப்படும். இளவரசர் துர்வர் அப்படி ஒன்றும் நன்மைக்கு பலியிடவில்லை என்பது எமது கருத்து. அவரை ஒப்படைப்பது உசிதம்(நல்லது)''
          இதனை கேட்ட துர்வனுக்கோ மந்திரி கபிலன் மீது சினம் எழுந்திட வெட்டி வீழ்த்தும் ஆவேசம் வர தான் செய்தது. அமைதியாக தாயின் மனதை படிக்கவே பொறுமை காத்தான்.
     மாந்தாங்கி சிறிது நேரம் யோசித்தவள் ''மூத்தவனை அவர்களிடம் ஒப்படைப்போம்... என்ன பிரபு கண் திறப்பார் என்றே இந்நாள் வரை நம்பி இருந்தேன்.. இனியும் இயலாது அல்லவா? துர்வன் வரட்டும் அவனை பிடித்திட ஏற்பாடு செய்யுங்கள். அவன் எம்மை அந்தி சாயும் நேரம் சந்திப்பது வழக்கம். எனவே காத்திருப்போம்... நாவலூர் வீரனுக்கு பதில் ஓலை தாருங்கள். துர்வனை ஒப்படைப்பதாகவும் இளவரசன் மித்திரனை விடுவிக்க சொல்லியும் பதில் வரவுகளை அனுப்புக'' என்றே கண்ணீர் உகுந்திட
       துர்வனோ தாயே இந்நாள் வரை தாங்கள் என் மீது வைத்த பாசம் விட மித்திரனின் மீது தங்களுக்கு பாசம் அதிகமோ? உங்களின் அன்பு உண்மை என்று அல்லவா இருந்தேன்... இருக்கட்டும்... நான் தற்பொழுது செய்யும் காரியதிற்கு இடையூறாக உங்கள் அன்பு என்னை கட்டி போடும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இனி எம்மை யாராலும் கட்டி போட இயலாது என்று தந்தையான வேந்தன் பரிதி செங்குட்டவன் அறைக்கு சென்று அவரின் முன் அமர்ந்து அவர் கையை பற்ற பரிதி செங்குட்டவன் இமை திறந்தார்.
     ''வணக்கம் தந்தையே...'' என்றவன் எள்ளளாக, பரிதி செங்குட்டவன் எழுந்து சுற்றி முற்றி பார்த்து
      ''துர்வனே... உன் எண்ணம் தவறு... சக்திக்கா பெண்களை பலியிடுவது நியாயம் இல்லை... எங்கே காவலர்கள்.. இதோ இக்கணமே உம்மை சிறையிட செப்புகின்றேன்''
     ''எந்தையே...சற்றே ஆர்பரிக்கும் மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். உமக்கு தெரிந்து யாம் பதினைந்து நங்கை பலியிட்டேன் என்றே குதிக்கின்றீர்.. தற்பொழுது யாம் 97 நங்கைகளை பலியிட்டு வெற்றியின் விளிம்பில் இருக்கின்றேன்... ஓ தங்கள் தான் ஆழ்ந்த நித்திரையில் கிடந்தீர் அல்லவா.. எம் மந்திரம் மூலமாக.. தங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்'' என்றே சொல்ல பரிதிக்கு இதயம் வெடிக்க துவங்கியது.
      ''துர்வா... என்ன சொல்கின்றாய்...?'' என்றே அதிர்ந்து கேட்க
      ''ஆம் தந்தையே... தங்கள் எனது நடவடிக்கை சந்தேகித்து பின் தொடர்ந்தீர்.. நானோ உமக்கு எம் மந்திரத்தால் சுவாசம் இயங்க யாக்கை நித்திரையில் செலுத்த உங்களை சில காலம் மயக்கத்தில் ஆழ்த்தினேன்''
      ''என்ன.. துர்வா.. நீ தவறுக்கு மேல் தவறு செய்கின்றாய்...'' என்றே நடக்க அவர் காவலரை அழைத்து தான் சிறையிட சொல்ல போகின்றார் என்றே அறிந்து அவரின் கண்களை பார்த்து மந்திரம் புகட்ட பரிதி நித்திரையில் செல்ல அவர் ஆன்மா தனியாக எடுத்தவன் அதனை ஒரு கண்ணாடி குடுவையில் தடை செய்து வைத்து எள்ளளாடி அவனின் சுவாசம் மாத்திரம் உச்சரித்து அவரின் உடலில் அவன் ஆன்மா செலுத்தினான்.(கூடு விட்டு 
    மாறியது போல அவளோ தான்)
        துர்வன் பரிதியின் உடலில் வந்த கணம் ஒரு வினோத சிரிப்பை உதிர்த்து மந்தாங்கியை காண சென்றான்.

-விழியும் வாளும் சந்திக்கும். 

பிரவீணா தங்கராஜ் 

Comments

  1. Yappa intha thruvan enna enna velai ellam seikiran😲

    ReplyDelete
    Replies
    1. ama konjam payama iruku aana ruthiraa partthuppaa

      Delete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு