ஸ்டாபெர்ரி பெண்ணே-18

  🍓18
              எழுந்ததில் இருந்து ஆராதனா ஒரே யோசனையில் இருந்தாள்.
    ஒன்றை வருடம் தானாக தேடி விரும்பியவனே தனக்கு தாய்மை இல்லை என்றதும் விட்டு சென்று விட்டான். ஆறு மாதமாக காதலிக்கும் வெற்றி செல்வன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான். முதலில் அவன் சொத்தை ஆள்வதற்கு ஒரு வாரிசை தான் எதிர்பார்ப்பான். அதனால் தான் இனியும் இங்கு இருப்பது தவறு... இன்றே சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும்.
          எப்படி கிளம்பணும் வெற்றியிடம் எப்படி சொல்வது? சொன்னால் சரி போ என்றே சொல்லி விடுவாரோ? எனக்கு என்று ஒரு உறவும் அன்பாக தாங்க இவ்வுலகத்தில் இல்லையா? என்றே என்ன கண்கள் கரித்தது.
            நேற்று போலவே கதவு தட்டும் ஓசை கேட்டு கண்கள் துடைத்தாள்.
          கையில் தட்டில் மூன்று இட்லி கொஞ்சம் போல சட்டினி சாம்பர் என்றே வந்து நின்றான் வெற்றி செல்வன்.
       ''நீ சாப்பிட வருவ என்றே நினைச்சேன் நீ அழுதுகிட்டு இருப்ப என்று நான் சாப்பிட்டு உனக்கு எடுத்துவிட்டு வந்தேன்'' என்றே நீட்டினான்.
             வேண்டாம் என்றே மறுக்க ''பச் ஒழுங்கா சாப்பிடு'' என்றே அவனே ஊட்டி விட்டான். ஆராதனா மறுக்கவில்லை அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் அவனுக்கும் அது தெரியாமல் இல்லை. ஆராதானவுக்கு இம்முறை ஆனந்த கண்ணீர் சுரந்தன. அவள் உண்டு முடித்து நீரை பருகி முடிக்க வெற்றி பேச ஆரம்பித்தான்.
        ''ஜெஸில்....  இரண்டு நாளைக்கு முன்ன என் அறையில் நீ அலங்கரிச்சு ஒரு கேள்வி கேட்டு பலூன்ல எழுதினியே... உனக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை என்றால் அதுக்கு பதில் தெரிந்து இருக்கும்... இல்லையா....?'' என்றான் வெற்றி செல்வன்.
       ஆராதனாவுக்கு தான் இம்முறை மனம் வலித்தது. அதுக்கு இனி பதில் வேண்டாம். தேவைப்படவும் செய்யாது என்றே எண்ணி அமைதியாக இருந்தாள்.
      'ஜெஸில் இப்போ இதை பற்றி பேசலாமா என்று எனக்கு தெரிலை... ஆனா நான் இப்போ பேசலை என்றால் எனக்கு வேற வாய்ப்பே இனி கிடைக்குமா என்றே தெரிலை... அன்னிக்கு கேட்டதுக்கு பதில் நான் சொல்லிடறேன்...'' என்றான்.
          ஆராதனாவோ இவனும் மறுக்க தான் போகின்றான் என்றே யோசிக்க அவனோ
      ''ஜெஸில் நானும் உன்னை விரும்பறேன்.... உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்.... நீ சம்மதிச்சா... இந்த நொடி கூட தாலி கட்ட காத்திருக்கேன்'' என்றான். ஆராதானாவுக்கு பேச்சிழந்து சிலையாக நிற்க
     ''நிஜமா ஜெஸில்.... உன் மேல இருக்கற காதல் மயக்கத்தில் பேசறேன்னு நினைக்காதே... எனக்கு உன் மேல இருக்கற உண்மையான காதலில் தான் கேட்கறேன்.... உனக்கு நினைவு தெரியாமல் நீ இந்த கேள்வி கேட்டாலும் என்னோட பதில் இது தான். நீ நினைக்கலாம் வாரிசு வேண்டாமா என்று எனக்கு ஏன் என்று கேட்க உதய் வீட்டில் போல ஆள் இல்லை ஜெஸில்... எனக்கு கடைசி வரை நீ குழந்தையா இருந்தாலே போதும்... வேண்டும் என்றால் அடாப்ட் கூட பண்ணிக்கலாம்... எல்லாம் உன் விருப்பம் ஜெஸில்.... '' என்றே நின்றான்.
     ''எனக்கு.. என்ன சொல்றது என்றே தெரிலை... ப்ளீஸ்... நினைவு தெரியாம உங்ககிட்ட லவ் சொல்லியது தான் இப்போ ரொம்ப தப்பு''
     ''இல்லை ஜெஸில் அது ஒன்னு தான் சரி... நீ என்கிட்ட உன்னை அறியாம உண்மை சொல்லி இருக்க... இப்போ நினைவு தெரிந்தபின் யோசிக்கற... உதய் தான் வேற கல்யாணம் செய்ய போறான்.... ஜெஸில் உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்... பதில் சொல்லு உண்மையான பதில் வேண்டும்... அதுக்கு பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்...''
      ''என்ன?'' என்றாள் புரியாத பார்வையோடு
      ''இதுவரை நீ உதய் லவ் பண்ணிய பொழுது ஒரு முறை அவன் கையை தொட்டு பேசி இருப்பியா?'' என்றதற்கு இல்லை என்றே தலை அசைத்தாள்.
      ''ஆனா நீ என் கையை புடிச்சு எனக்கு ஊட்டி விட்டு இருக்க... சரியா?'' என்றான் அதற்கு ஆம் என்றே சொல்ல
      ''என்னை ஏன் எட்டி நின்று நீ பார்க்கலை பேசலை...''
      ''அது.. அது.. ஏன்..னு தெரிலை... உங்களை முதல் முறையா ஹாஸ்பிடல் பார்த்த பொழுது நீங்க எனக்காக துடிச்சதை நான் உயிர் வரை உணர்ந்தேன்'' என்றே அவளை அறியாமல் சொல்ல
       ''உயிர் வரை உணர்ந்தவளுக்கு இப்போ என் காதலை ஏற்றுக்க என்ன தயக்கம்? ஏன் என் காதல் உன்னை தாக்கலையா?''
       ''செல்வா புரியாம பேசாதீங்க... இப்போ ஒரு வேகத்தில் உங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று தான் தோண்றும் கொஞ்ச நாள் கழிச்சு அதுக்கு நீங்க உங்களை அறியாமை ஏங்க ஆரம்பிப்பீங்க... ''
       ''ஜெஸில்... இதே மேரேஜ் பண்ணி அதுக்கு பிறகு குழந்தை இல்லை என்ற விஷயம் தெரிந்தா நாம சேர்ந்து தானே இருந்து இருப்போம் இப்போ மட்டும் என்ன பிரச்சனை...?''
       ''வேண்டாம் செல்வா... உன்னை மாதிரி கம்பீரமா அழகா இப்படி கண்கள் ஈர்த்து இழுக்கற அளவுக்கு உன்னை போல ஒரு குழந்தை இந்த உலகத்துக்கு வேண்டும்... அதை தரும் பெண்ணா பார்த்து நீ...'' என்றே திக்கினாள்.
       ''எனக்கு இந்த ஜென்மம் மட்டுமில்லை ஜெஸில் எல்லா ஜென்மத்துக்கும் நீ மட்டும் தான் வேண்டும்... அதுக்கு பிறகு உன் இஷ்டம்... நான் யாரையும் கல்யாணம் செய்ய போறது இல்லை... என்னை என் வசம் இல்லாமல் செய்தவ நீ மட்டும் தான்... வேற யாரும் வர போவதும் இல்லை... ஜெஸில் கல்யாணம் செய்யவில்லை என்றாலும் இந்த வீட்டில் நீ எப்பவும் தங்கணும் அது மட்டும் போதும் என் ஜெஸில் பார்த்தாலே எனக்கு போதும்'' என்றே சொல்லி எழுந்தவனை கண்டு திணறி முழித்து கொண்டு இருந்தாள்.
                அவளுக்கு வெற்றி செல்வன் மீது காதலும் வந்து விட்டது. அவனை இனி இப்படி கவலையை கொண்டு பார்க்கவும் மனமில்லை... டாக்டர் பத்து சதம் வாய்ப்பு உண்டு என்றார்களே என்றே யோசிக்க கண்களை துடைத்தாள். அவளுக்குள் தான் சொல்வது சரியா தவறா என்று எல்லாம் தோன்றாமல்  செல்வா மனம் இந்த நொடி கவலை போக்கும் எண்ணம் களைய
      ''சரி செல்வா நாம கல்யாணம் செய்துக்கலாம்'' என்றாள் ஆராதனா.
                           தனது காதுகளை நம்ப முடியாமல் திரும்பி பார்த்தான்.
       '''ஹ்ம்ம் கல்யாணம் செய்துக்கலாம்...'' என்றாள் ஜெஸில்.
       அடுத்த நொடி ''இரு வர்றேன்'' என்றே ஓடி மாடியில் பீரோவில் அவனின் அம்மாவின் பூர்விக  தாலியினை எடுத்து கொண்டு வந்தான்.
     ''என்ன பண்ற செல்வா?''
     ''ஜெஸில்... இப்போ நீ சரி என்று சொல்லிட்ட கொஞ்ச நேரம் போனா மாட்டேன்னு சொல்லிட்டா... முதலில் கல்யாணம் செய்துக்கலாம்'' என்றான்.
      ''செல்வா நீ எவ்ளோ பெரிய ஆளு ஊரை கூட்டி செய்யாமல் திடீர் என்று இப்போ வேண்டாமே..'' பயந்தாளா திணறினாளோ அவள் அறிவாள்.
      ''எதுவும் வேண்டாம் ஜெஸில் எனக்கு உன் சம்மதம் மட்டும் போதும் இப்போ உன் சம்மதம் தெரிவித்தாயியற்று இங்க வா'' என்றே தாய் தந்தை படத்தின் முன் நிறுத்தி அவளுக்கு தாலி கட்டினான்.
             அவனின் ஜெஸில் அதனை மறுக்கவில்லை.
          மூன்றாவது முடிச்சு போடும் பொழுது தங்கள் மீது பூ உதிர்வதை கண்டு இருவருமே முகம் மலர்ந்து யார் பூ போடுகின்றார்கள் என்றே கவனிக்க அங்கே சுந்தர் பூ தூவி கொண்டு இருந்தான்.
     ''வாழ்த்துக்கள் சார்... நீங்க தாலி கட்டியதும் பூ தேடினேன் இந்த செடியில் இருந்ததா பறிச்சு தூவிட்டேன்.. மேம் செடியை பிய்த்ததற்கு திட்ட மாட்டிங்கனு நம்பறேன்.  வாழ்த்துக்கள் சிஸ்டர்'' என்றே சொல்லி முடிக்க
       ''தேங்க்ஸ் சுந்தர்... எதிர்பாராத பூ தூவலில் ரொம்பவே சந்தோசம் ஆனோம்''
        ''ஆமாண்ணா தேங்க்ஸ்...'' என்றே ஆராதனா சொல்லி வெட்கப்பட
       ''வாவ்..... ஜெஸில்... ரெட் கலர் ஆகுது உன் கன்னம்'' என்றே சொல்ல
       ''சார்... இங்க நானும் இருக்கேன் சார் என் காமிரால நீங்க தாலி கட்டும் பொழுது எடுத்தேன்'' என்றான் சுந்தர். அதை பார்த்து "சுந்தர் இந்த எல்லா போட்டோஸ் எனக்கு சென்ட் பண்ணு நைஸ் மொமெண்ட்ஸ்...''
         ''சரிங்க சார்''
        ''சுந்தர்... நாளைக்கே மார்னிங் பேப்பரில் எனக்கும் ஆராதனாவுக்கும் மேரேஜ் ஆனதை தெரிவித்திடு... அப்பறம் கமிங் சண்டே ஒரு கிராண்ட் ரிஸ்ப்ஷன் வைத்திடுவோம்... எல்லாம் நீ தான் பார்த்துக்கணும்... ஓகே வா'' என்றான்.
       ''சார் நீங்க போற ஸ்பீடுக்கு என்னால முடியுமா?'' 
      ''ஹே மேன் ஆக்ட்டிவ்வா செய் போ...'' என்றே சொல்லி முடித்தான்.
            சுந்தர்-க்கு தலைக்கு மேலே வேலை இருக்க காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தான். லட்சுமி அம்மாவிடம் ஜெஸில் ஆசீர்வாதம் வாங்கிட வெற்றியும் காலில் விழுந்தான்.
       ''ஐயோ தம்பி நீங்க போய்...'' என்றே பதற
       ''அது என்ன ஜெஸில் விழுந்த பொழுது பிளஸ் பண்ணி விட்டீங்க என்னையும் பிளஸ் பண்ணுங்க'' என்றான் பிடிவாதத்துடன்
       ''நூறு ஆண்டு வாழனும் தம்பி... ஆராதனா கண்ணு தம்பி மாதிரி ஒரு பிள்ளையை சீக்கரம் பெற்று தாம்மா அதனை வளர்க்க தான் காத்துட்டு இருக்கேன்'' என்றதும் ஆராதனா மனம் வலிக்க கடினப்பட்டு சிரிக்க முயன்று வெற்றியை கண்டாள்.
       வெற்றியோ முறுவலுடன் கண்களால் நான் இருக்கேன்... கவலைப்படாதே...'' என்றே சொன்னான்.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1