ஸ்டாபெர்ரி பெண்ணே-23
🍓 23
அதிகாலை எழுந்தது என்னவோ வெற்றி தான். எப்பவும் போல
எழுந்தவன் ஜாக்கிங் செய்ய சென்றிட அதன் பின் எழுந்த ஆராதனா சுற்றி அறையை
பார்த்தவள் நேற்றைய நிகழ்வில் முகம் சிவக்க இந்த வெற்றி எங்க...? என்றே
குளியலறைக்கு சென்றாள்.
நான் எப்படி செல்வாவோட இணங்கி போனேன். எனக்கு பயமோ கூச்சமோ
எல்லாம் எங்க போனது. நிஜமாவே செல்வா எனக்கு என்று படைக்க பெற்றவர்... என்றே
நெற்றியில் குங்குமம் இட கதவை திறந்து செல்வா வந்தான்.
''ஹாய் ஜெஸில்.. ஆர் யூ ஓகே..?''
''எல்லாம் ஓகே தான் ஏன் என்னை எழுப்பலை...''
''நீயே நேற்று வரவேற்பு முடிஞ்சு சோர்வா இருந்து இருப்ப அதுக்கும்
மேல நான் வேற....'' என்றே குறும்போடு சொல்லி ''அதான் எழுப்பலை...''
என்றான்.
''பசிக்குது செல்வா... லட்சுமி அம்மா வேற இல்லை...'' என்றே சொல்லி கீழே இறங்கினாள்.
செல்வன் முகம் கை கால் அலம்பி கீழே வந்து பார்க்க உப்புமா
செய்கின்றேன் என்று ஆராதனா பாத்திரத்தோடு போராடி கொண்டு இருந்தாள்.
''ஹாஹாஹா..........சூப்பர்....ஜெஸில்.....'' என்றே வெற்றி சிரிக்க
''கிண்டலா.... எனக்கு எதுவும் செய்ய தெரியாது.. ஏதோ ட்ரை பண்ணேன் இப்படி ஆகிடுச்சு...'' என்றே சலிக்க
''நகரு...'' என்றே சொன்னவன் அடுப்பை அணைத்து பிரட் எடுத்து
டோஸ்ட்டெர் போட்டு வெங்காயம் தக்காளி முட்டை சீஸ் என்றே வைத்து அழுத்த
பிரட் ஆம்லெட் போல ஒரு சான்ட் வீச் வர ஆராதனா முன் வைத்து சாப்பிடு....
என்றான்.
''உங்களுக்கு.....'' என்றே கேட்க
''எனக்கும் செய்துப்பேன்...என்றே அதே போல செய்தான். கூடவே கேரட் ஜூஸ் எடுத்து முன் வைத்தான்.
''கேரட் ஜூஸ்...?''
''ஹ்ம்ம்...''
''நான் பஸ்ட் டைம் குடிக்க போறேன் நல்லா இருக்குமா?'' என்றே கேள்வி எழுப்ப
''குடிச்சுட்டு சொல்லு டி... '' என்றே அவன் உண்பதில் மும்முரமானான்.
ஆராதனா அவனின் டி யில் கொஞ்சம் உள்ளம் மகிழ அப்படியே கேரட் சுவைத்தாள்.
''ஹ்ம்ம் பரவாயில்லை குடிக்கற மாதிரி இருக்கு'' என்றே சொல்ல
''உள்ள கோந்து செய்து வச்சி இருக்க.. அதுக்கு இது பரவாயில்லை
அப்படி தானே?'' என்றே கேட்க ஆராதனா சிரிக்க வெற்றியும் சிரிக்க அழகிய காதல்
மனம் பிரவேசித்தது.
அதே நேரம் போன் மணி அடித்தது. உதய் தான் அழைத்து இருந்தான்.
ஆராதனாவை பார்த்து கொண்ட மெல்ல நழுவி போனை அட்டேன் செய்தான்.
''ஹ்ம்ம் சொல்லுங்க.. உதய்...''
''ஆராதனா பக்கத்துல இருக்காளா? அப்படி இருந்தா தள்ளி வாங்க..
உங்ககிட்ட பேசணும்'' என்றே சொல்ல உதய் குரலில் ஏதோ வித்தியாசம் தென்பட
''ஒன் செகண்ட்....'' என்றே இன்னும் தள்ளி வந்து நின்று பேசினான்.
''சொல்லுங்க உதய்...என்னாச்சு உங்க குரலுக்கு ஏதோ பதட்டமா....''
''இல்லை போனில் சொல்றதை விட நேரில் பேசறது பெஸ்ட் உங்களை
சந்திக்கனும்.... ஆராதனா விஷயமா... அவளுக்கு நடந்த நிகழ்வில்.. ஒருத்தர்''
''நான் உடனே வர்றேன் நேரில் பேசலாம்'' என்றே வைத்து நிமிர்ந்தான்.
ஆராதனாவோ இதை அறியாமல் அவனுக்கு தனது பங்கில் உணவை அவனுக்கு
ஊட்டி விட்டாள். அவளிடம் முகத்தை மறைத்து சிரித்தபடி யோசித்தான்.
என்ன இது ஆராதனா அவளுக்கு நடந்த நிகழ்வில் ஏற்பட்ட
இரண்டு பேரையும் ஆக்சிடேன்ட் பண்ணி மேலே அனுப்பி இருந்தேன்.. இப்போ இது
யாரு? என்றே அறைக்கு சென்று வேக வேகமாக கிளம்பினான்.
''என்ன வெற்றி சார்... கல்யாணம் ஆனா அடுத்த நாளே வேலையா...?'' என்றே ஆராதனா கேட்க
''ஜெஸில் அது வந்து முக்கியமான விஷயம் நான் போய்ட்டு வந்துடுவேன்.
நீ.. நீ .... பார்த்து இருந்துக்கோ... லட்சுமி அம்மா போன் செய்து வர
சொல்லிடறேன்....'' என்றே போன் செய்து வரவும் செய்துவிட்டான்.
''எங்க இருக்கீங்க... உதய்..''
''சார் உங்க கார் பார்த்து விட்டேன்... நேரா வாங்க'' என்றே கைகளை அசைத்தான்.
வேக வேகமாக உதய் அருகே வந்து..
''உதய் ஆராதனா விஷயம் முடிஞ்சு போனது.. ஏன் திரும்ப பேசறீங்க..
எனக்கு பிடிக்கலை... அவளுக்கு ஏதாவது தெரிந்தால் என்னால் தாங்க
முடியாது...'' என்றே பேசிக் கொண்டே போனவனை
''வெற்றி சார் எனக்கும் ஆராதனாவுக்கு சொல்ல விருப்பம் இல்லை... ஆனா...
உங்கள் வரவேற்பு நிகழ்வில் ஒருத்தரை சந்திச்சேன்... அவர் முன்ன ஒரு முறை
என்கிட்ட வம்பு செய்தவர்...ஒரு டிராபிக் சிக்னல்ல அவர் ஒரு குட்டி பொண்ணை
காரில் ஏற்றிட்டார். அப்போ கோவத்தில் அவரை காரில் இருந்து கீழே இறக்கி
அடிச்சுட்டேன்... அப்போ கூட்டம் சேர்ந்து போச்சு...எல்லோர் எதிரில் அவரை
அடிச்சதால அவருக்கு என் மேல செம கோவம்.... என்னை பார்த்து 'நீ ஒரு நாள் ஏன்
என்னை அடிச்ச என்று பீல் பண்ண வைப்பேன்...மைண்ட் இட்...' என்று
சொன்னார்... அப்பறம் கூட இருந்தவர் அடிப்பட்ட குழந்தையையும் கூட்டிட்டு
ஹாஸ்பிடல் போயிட்டார். அவர் நேற்று என்னை பார்த்து அவரோட பிஏ கிட்ட 'அவன்
எப்படி... அவன் செய்ததுக்கு அவனை பழி வாங்க சொன்னேன்.. அவன் சார்ந்த
யாரையாவது அவன் முன்ன காயப்படுத்தி.. அவன் இயலாமையை புகட்ட சொல்லி
இருத்தேனே... என்ன ஆச்சு?' என்றே சொல்லிட்டு இருந்தார்... எனக்கு அப்போ
யார் அவர் என்று கொஞ்சம் கூட நினைவு இல்லை... ஆனா வீட்டுக்கு போன பிறகு
யோசிச்சப்ப... நினைவு வந்துச்சு முன்ன ஆராதனாகிட்ட தப்பா நடந்தவங்க
பேசியதும் நினைவு வந்துச்சு... 'டேய் இவன் இங்க இருக்கான் அப்போ இது யாரு?
இவனை தானே காயப்படுத்த
சொன்னாங்க... போச்சு ஏற்கனவே சும்மா மிரட்ட சொன்னான் இவளை பார்த்தும்
சும்மா விட முடியுமா என்று தப்பு பண்ணிட்டோம் இவனின் காதலியை தானே
பயமுறுத்த சொன்னான்... என்று பேசிக்கிட்டது தோணுச்சு.. அது ஏன் நான் நேற்று
சந்தித்த மனிதனின் வேலையா இருக்க கூடாது...?'' என்றே நிறுத்த வெற்றி
கண்கள் சிவக்க நின்று இருந்தான்.
''வெற்றி....வெற்றி...'' என்றே உதய் அழைக்க உணர்வு வந்தவன்
''இருக்கலாம்.. ஏன்னா ஆராதனாவிடம் வம்பு செய்த இருவரையும் கொல்ல ஒரு
லாரி ஏற்பாடு செய்தேன். அதுல அவங்க இரண்டு பெரும் ஸ்பார்ட் அவுட்... ஆனா
சாகறதுக்கு முன்ன ஆராதனாவை இப்படி செய்ய சொன்னவன் வேற ஒருத்தன் என்று
மட்டும் தெரியும்... அதுவும் அவளை உன் முன்னால கொஞ்சம் அசிங்கப்படுத்தி நீ
ஒன்றும் செய்ய முடியாம தவிச்சு... அதனாலே நீ மனம் வாடனும் என்று மட்டுமே
சொல்லி அவர்களிடம் வேலையை ஒப்படைத்தார்களாம்... ஆனா அந்த இரண்டு பேரும்
ஆராதனாவை... நாசம் செய்தது யாருக்கும் தெரியாது... ஏன் வேலை ஒப்படைத்தவன்
அப்படி எதுவும் சொல்லவில்லை என்று அவனோட இன்னோரு கூட்டாளி சொன்னான். அதனால
அவன் நீங்க சொல்லிய ஆளா இருக்கலாம்... எனக்கு யாருனு சொல்லுங்க அது
போதும்...'' என்றே வெற்றி கேட்க
வெற்றி ஏற்கனவே ஆராதனாவிடம் தவறு செய்தவரை மேலே அனுப்பி
இருக்கின்றான் என்று அறிந்து திகிலுடன் பார்த்தான். அவனின் பார்வை புரிய
வெற்றி
''என்ன செய்ய சொல்லற உதய்.. என் ஜெஸில் அவளை தூரத்தில் இருந்து எவ்ளோ
காதலிச்சேன் தெரியுமா... அவள் உன்னை விரும்பியதும் விலகி நின்று வேடிக்கை
வேற பார்த்தேன்...
எந்த காதலனும் அப்படி பார்க்க மாட்டான் நான் அவளோட சந்தோசம்
போதும் அவளுக்கு கல்யாணம் ஆகற வரை அவளை பார்க்கும் பாக்கியம் மட்டும்
கிடைக்கும் என்றே இருதேன்.. என் தேவதை ஜெஸில் அவளுக்காக எல்லாம் மறந்த என்
கண் முன்னால நாசம் ஆக்கிய அவங்களை சும்மா விட சொல்லிறியா....?
ஜெஸில் வேணுமின்னா சுய நினைவு இல்லாமல் போகலாம் எனக்கு...
அவர்களை கண்ட துண்டமா அங்கையே கொல்லனும் என்ற வெறி... அப்போ இருந்த நிலை
ஜெஸிலை அங்க இருந்து அகற்றனும் என்று மட்டுமே தோணுச்சு... அதான் என் பிஏ
கிட்ட சொல்லி எல்லாம் ஏற்பாடு செய்து அவர்களை மேலே அனுப்பினேன்.... என்
கையால கொல்ல முடியலை என்ற வருத்தம் எனக்கு எவ்ளோ இருக்கு தெரியுமா...?''
என்றே ஆவேசமாக கூறியவனின் கூற்றில் உதய் மனம் உண்மையை உணர்ந்தது.
''அதுக்காக... இப்பவும்...?'' என்றபடி அதிர்ச்சியாக கேட்க
''தயக்கமே இல்லை... ஆராதனாவை இப்படி நாசம் ஆக்க மட்டும் அவன் சொல்லி
இருந்தா அவனுக்கும் அதே கதி தான் ... '' என்றே கூறி ''யாரவன் சொல்லு
உதய்...'' என்றே உலுக்க சொல்லலாமா வேண்டாமா என்றே உதய் மனம் இருபக்கமாக
சிந்தனையில் உழன்றது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment