ஸ்டாபெர்ரி பெண்ணே-8
🍓8
வெற்றி கொடுத்த லேப்டாப் கொண்டு முதலில் என்ன செய்யலாம் என்றே
தோன்றியவளுக்கு முதலில் வந்த யோசனை முகநூலில் நுழைவதே என்று
தீர்மானித்தாள்.
எப்படியும் தனது பாஸ்வேர்ட் மறந்து போனதால் புதிதாக ஆரம்பித்தாள்.
அதில் ஜெஸில் என்றே பெயர் வைத்தவள் தனது அப்பா பெயரை எழுத யோசித்தவளுக்கு
தனது தந்தை பேர் நினைவு இல்லை என்றதும் தாயின் பெயரும் தெரியவில்லை
என்றதும் அழுகை வந்தது.
பின்னர் அவளாகவே வெற்றி செல்வன் வந்த பிறகு கேட்டு தெரிந்து
கொள்ளலாம் என்றே எண்ணி 'ஜெஸில் செல்வா' என்றே பெயரை உருவாக்கி முகநூலில்
கணக்கை ஆரம்பித்தாள். அதன் பின் வெற்றி செல்வன் என்றே ஆராய்ந்து அவனது
முகநூலில் நுழைய அவனோ பிசினெஸ் சம்மந்தப்பட்ட ஆட்களை தவிர்த்து இவளோடு எந்த
புகைப்படமும் இல்லை. எப்படி இருக்கும்? இவளோ செல்வா முகநூலில் ஒரு போட்டோ
கூட என்னோடது இல்லையே... என்ன செய்ய? என்றே எண்ணி அவனுக்கு ப்ரெண்ட்
ரெகுஸ்ட் அனுப்பிவிட்டு இருந்தாள். செல்வா நட்பில் தான் இருக்கின்றோமா
என்றே ஆராய்ந்து பார்க்க அதுவும் இல்லை... செல்வா என்னை பற்றி ஒன்றும்
இல்லையே... ஒரு வேலை முகநூலில் நான் பழகியது இல்லியா? என்றே யோசித்து
குழம்பி சாப்பிட்டு மாத்திரை உண்டு உறங்கினாள்.
மாலையில் செல்வா வந்ததும் முதல் ஆளாக அவனின் முன் மறித்து
''என் அப்பா பேர் என்ன என் அம்மா பேர் என்ன? நான் எங்க ஸ்கூல் முடிச்சேன்... எங்க காலேஜ் முடிச்சேன்.... விடாது கேள்வி கேட்க
''இப்போ எதுக்கு அது எல்லாம்'' என்றான்.
''அப்பா அம்மா பேர் தெரிந்து கொள்வது கூட தவறா செல்வா...'' என்றே அழுதவளை கண்டு
''உங்க அப்பா பேர் பலராமன் அம்மா பேர் மகேஸ்வரி... போதுமா'' என்றே மாடி எற
''நான் படிச்ச ஸ்கூல் காலேஜ் சொல்லிட்டு போங்க'' என்றே கேட்க
''ஜெஸில் இப்போ தான் வீட்டுக்கு வந்து இருக்கேன் கொஞ்சம் ப்ரெஷ்
ஆகிட்டு உங்கிட்ட வர்றேன் அப்பறம் கேளு சொல்றேன் சோர்வா இருக்கு ஜெஸில்''
என்றதும்
''சீக்கரம் வாங்க...'' என்றே காத்திருந்தாள்.
போச்சு எப்படியும் தப்பு தப்பா சொல்ல முடியாது. சொன்ன அது
இன்னொரு நாள் நமக்கே ரிட்டர்ன் வரும்... எதுக்கும் உண்மையை சொல்லிடலாம்...
அங்க போனா பிரச்சனை வருமா? நினைவு திரும்பினா...? சே சே அவளுக்கு நினைவு
திரும்ப கூடாது என்று நான் நினைப்பது தவறு தான் அவளுக்கு எப்படி இருக்குமோ
அவளை பற்றி அவளுக்கே தெரியாமல் இருந்தா அப்படி தான் அறிந்து கொள்ள வேண்டும்
என்று ஆசை வரும்... ஆனா எப்படி சொல்ல என்றே குளித்து முடித்து குறுக்கும்
நெடுக்கும் நடந்தவனின் கதவை தட்டும் ஓசை கேட்டதும் இன்னிக்கு விட மாட்டா..
என்றே கதவை திறந்தவன் வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'' என்றே சென்றான்.
''நீ ............இந்த ஸ்கூல் படிச்ச ....... இந்த காலேஜ் படிச்சா
இந்த குரூப் எடுத்த நீ ரேங்க் ஹோல்டர்... உனக்கு ப்ரெண்ட்ஸ் கொஞ்சம்
கம்மி... அப்பறம் போதுமா சாப்பிடு ஜெஸில்''
''செல்வா இங்க இருந்து எப்படி அவ்ளோ தூரம் போய் படிச்சேன் நான்?''
''முன்ன அங்க தான் இருந்தோம் உனக்கு பீச் பக்கம் வீடு என்றால் ரொம்ப
புடிக்கும் அதனால இங்க வந்துட்டோம்'' என்றதும் அவளுக்கு உள் மனசில் அதன்
உண்மை என்றே எடுத்துரைக்க ஓகே என்றே சாப்பிட்டாள்.
அப்பாடி இன்னிக்கு முடிஞ்சது என்றே நிம்மதி அடைய அடுத்த கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
''ஏன் செல்வா முகநூலில் நான் இல்லையா? உன் முகநூலில் ஒரு போட்டோ கூட நீயும் நானும் சேர்ந்து இல்லை... ஏன்'' என்றே கேட்க
''ஹ்ம்ம் நீ இருந்த ஆனா ரொம்ப யூஸ் பண்ண மாட்ட''
''இருந்தேனா... அப்போ ஏன் உன்னோட ப்ரெண்ட்ஸ் ரெகுஸ்ட்ல நான் இல்லை''
''அது பிஸ்னஸ் காக ஓபன் பணியாது அதில் நீ ப்ரெண்ட்ஸ் கொடுக்கலை ''
''ஏன் கொடுக்கலை''
''உனக்கு தான் தெரியும் உங்கிட்ட தான் கேட்கணும்... நீ தான் கொடுக்கலை'' என்றே சொல்லியதும் சே என்றே சிணுங்கியவள்
''சரி என் பேர் ஜெஸில் பலராமன் என்று போட்ட வருமா?'' என்றே லேப்டாப் எடுக்க போனவள் கையை பற்றி நிறுத்தி...
''வராது நீ வேற எதோ பேரில் யூஸ் பண்ணின... எனக்கு அது தெரியாது'' என்றே தடுத்து நிறுத்திட
''சே நான் என்னை பற்றி தெரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி எல்லாம்
வெஸ்ட் ஆகுது போ செல்வா'' என்றே சிணுங்கி அறைக்கு சென்றவளை கூப்பிட கூப்பிட
கேட்காமல் சென்றாள்.
ஜெஸில் தனக்கு ப்ரெண்ட்ஸ் ரெகுஸ்ட் அனுப்பி இருக்கின்றாள்
அதனை அக்ஸப்ட் பண்ண ஆவாலாக போனை எடுத்து ஆன் செய்தான் அதில் ஜெஸில் செல்வா
என்றே பேர் இருக்க வானத்துக்கு பறந்தான்.
அதே மகிழ்ச்சியோடு கதவை திறந்து ஆராதனாவை காண செல்ல அங்கு
அவளின் அறையில் வயிறை பிடித்துக் கொண்டு அவளோ வலி பொறுக்க முடியாமல்
அழுதாள்.
''ஏய் ஜெஸில் என்ன ஆச்சு? என்றே அவளை தனது மடியில் வைத்து கேட்க
''வலிக்குது செல்வா... ஏன்னு தெரிலை'' என்றே துடித்தவளை கண்டு
பதறியவன் உடனடியாக டாக்டர் போன் செய்தான். ஏற்கனவே ஆராதனாவை பார்த்து
அறிந்த அவர்களே வந்து பார்த்தால் நல்லது என்றே வெற்றி அவர்களுக்கு கால்
செய்தான்.
அடுத்த இருபது நிமிடத்தில் வந்த டாக்டர் அவளை செக் செய்து
பார்த்துவிட்டு ப்ளீடிங் ஆவதை கண்டதும் இது மாதாந்திர சுழற்சி என்றே
அறிந்து கொண்டார் அந்த மருத்துவ பெண்.
சில டேப்லெட் வாங்கி கொண்டு வந்து கொடுத்து அவளை விழுங்க வைத்து
மாதுளை ஜூஸ் அருந்தி உறங்க வைக்க அவளோ செல்வா செல்வா என்றே அரற்றினாள்.
வெற்றி டாக்டர் இருவரும் வெளியே வந்து பேச செய்தார்கள்.
''இது மாதாந்திர சுழற்சி தான் வெற்றி கவலை பட ஒன்னுமில்லை. தேங்க்
காட் அந்த பொண்ணு இப்படி ஆவது நல்லது தான் மனசில் ஓரத்தில் அவள் அந்த
கயவர்களின் குழந்தை தங்கிடுமோ என்றே பயந்தேன் இப்போ இல்லை.. நிம்மதி''
என்றே சொல்ல வெற்றிக்கு நிம்மதி ஆனாலும் அவள் துடிப்பதை தங்கி கொள்ளாமல்
கண்களில் அருவி வழிந்தது.
''ஒன்னுமில்லை வெற்றி வயிறு வலி குறைய மாத்திரை கொடுத்து இருக்கேன்
சரி ஆகிடுவா... கவலை படாதே'' என்றதும் வெற்றி கண்ணீர் துடைத்துக் கொன்டே
''மாதம் மாதம் இனி இப்படி தான் துடிப்பாளா டாக்டர்?'' என்றே கேட்க
''அது ஒவ்வொரு உடலை பொறுத்து இருக்கு வெற்றி. இப்போ அந்த பொண்ணுக்கு
வயிற்றில் அடிபட்ட பாதிப்பில் இப்படி இருக்கும் போக போக வலி இருக்குமா
இல்லை எப்படி என்றே அடுத்து மாதம் வந்த பிறகு தான் சொல்ல முடியும். இப்போ
வலி அவளுக்கு வயிற்றில் ஏதோ பட்ட பதிப்பில் தான் இருக்கும். கவலை படாதீங்க
சரி ஆகிடும்'' என்றே கிளம்ப வழி அனுப்பி வைத்து ஆராதனை அறைக்கு வந்து
சேர்ந்தான்.
''செல்வா வலிக்கு செல்வா... என்றே அணர்த்தியவளை கையை பற்ற அவளோ அவனின்
கைகள் பற்றி கொண்டு விடாமல் இருந்தாள். நேரம் போக போக அமைதியாக மருந்தின்
வீரியத்தில் உறங்க சென்றவள் பிடி அப்பொழுதும் அதே இறுக்கத்துடன் இருக்க
செல்வா அவனின் அறைக்கு போக முடியாமல் அதே நேரம் அவளின் அறையில் தங்க
முடியாமல் தவிக்க ஆபத்துக்கு பாவமில்லை என்றே அவன் நேரம் போக போக அவளின்
மெத்தையில் அவனும் உறங்கினான்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
முன்ன words counting தெரியாது அதனால தோராயமா எழுதி போஸ்ட் பண்ணியது இந்த கதை. அதனால epi பெருசா இருக்காது குறைந்த அளவு தான். பட் ஸ்டோரி உங்களுக்கு பிடிக்கும். கருத்து தெரிவித்தால் மகிழ்ச்சியா இருக்கும் போஸ்ட் போட ஆர்வமும் இருக்கும்.
அவளுக்கு தான் கர்ப்பபை பாதிக்கப்பட்டுள்ளதே....பிறகு எப்படி "அந்த கயவரிகளின் குழந்தை தங்கிவிடுமோ" என்று டாக்டர் சொல்கிறார்.
ReplyDeleteகாதலன் விட்டு சென்றதே, அவள் தாயாக முடியாது என்பதால் தானே.....