ஸ்டாபெர்ரி பெண்ணே-14

 🍓14
                         வேகமாக சென்றவள் ஒரு ஆட்டோ பிடித்து ஏறினாள். உதய் வீட்டை நோக்கி போனாள். ஆனால் அவளை வரவேற்றது பூட்டி வைத்த கதவு மட்டுமே....
           அருகில் விசாரிக்க சென்றால்... அங்கே இருந்தவர்கள் உதய்-க்கு திருமணம் ஆக போவதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றார்கள் என்ற தகவல் கொடுத்தனர்.
            சோர்வுடன் தனது வீட்டுக்கு சென்றாள். அங்கே அவளோடு இருந்த ஆச்சி மட்டுமே இருந்தார்கள்.
      ''வா டா குழந்த... இப்போ தான் வந்தியா...? ஏன் டா உதய்யை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிட்ட.. பாரு உதய் அம்மா கையோடு அவரோட உறவு பொண்ணை கட்டி வைக்க ஏற்பாடு எல்லாம் பண்ணிடுச்சு... நீ போன இடத்துல போன் வசதி இல்லையாமே... அதுக்காக ஒரு போன் கூடவா வெளியே இருந்து பண்ணி இந்த பாட்டிக்கு சொல்லி இருக்க கூடாது... வளர்த்த பொண்ணு ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று எப்படி துடிச்சேன் தெரியுமா? ஏதோ புண்ணியம் உதய் நேரா வந்து சொல்லி விட்டு போனான்.... இனி இங்க தான் இருப்பியா...?'' என்றே ஆராதனா சொல்லாமலே பதில்கள் தானாக வந்து சேர்ந்ததும் விதிர்த்து போனாள்.

      ''இல்லை ஆச்சி.... உடனே போகணும்... தண்ணீர் மட்டும் கொடுங்க குடிச்சுட்டு கிளம்பறேன்....'' என்றே சொல்ல நீரை கொடுக்க பருகி முடித்து கிளம்பினாள்.
              தனது பாட்டியின் தங்கை கூடவே இவ்வளவு நாள் தங்கி வாழ்ந்த பொழுதிலும் அந்நொடி அவளுக்கு அவரிடம் கூட எதுவும் சொல்ல தோன்றவில்லை... உதய் அவனிடம் மட்டுமே கேட்க தூண்டியது மனம்.
          தான் எதற்கு மீண்டும் வெற்றிசெல்வன் வீட்டுக்கு திரும்பினோம் என்று ஆராதனாவுக்கு புரியவில்லை...ஆனாலும் அவன் இடம் நோக்கி அனிச்சையாக அவளாக வந்து சேர்ந்தாள் என்பதே உண்மை.
                ஆராதனா போகும் பொழுது அமர்ந்து இருந்த இடத்திலே வெற்றி அப்படியே அமர்ந்து இருந்தான். லட்சுமி அம்மா தான்
      ''வந்துட்டியா ஆராதனா...'' என்றதும் ஆராதனா என்ற பெயரை கேட்டு தான் திரும்பி பார்த்தான்.
          ஆராதனாவுக்கு என்ன சொல்ல என்றே புரியாது விழித்தால்... அவனோ  ''உதய்கிட்ட பேசினியா என்ன சொன்னார்...'' என்றே இதயத்தை கல்லாக்கி கொண்டு கேட்டான்.
      ''உ...உதய் ஊரில் இல்லை... அவரோட குலதெய்வ கோவிலுக்கு போய் இருக்கார்... அவரோட கல்யாண பத்திரிகை வைக்க...'' என்றே அமைதியாக நிறுத்தி சொன்னாள்.
      ''திரும்பி வந்த பிறகு கேளு...'' என்றே எழுந்தான்.
      ''நீ இங்க வந்ததுக்கு நன்றி...'' என்றபடி மேலே படியில் ஏறினான். அவனுக்கு இந்த நொடி அவளுக்கு தெரியவில்லை என்ற நிம்மதி...... மற்றும் அவள் திரும்ப இங்கு வந்ததும் ஒரு மகிழ்வு மட்டுமே அவனுள் நிறைந்தது.
        அறை கதவை திறந்த ஆராதனாவுக்கு அப்பொழுது தான் வெற்றி செல்வன் கதவை திறந்த ஒரு சில நொடியில் தனது காதலை சொல்லும் விதமாக அலங்கரித்தது நினைவு வர வேகமாக வெளியே வந்து உயிரை பிடித்துக் கொண்டு மேலே ஓடினாள்.
               வெற்றி செல்வன் கதவை திறந்து உள்ளே நுழைய அதே நேரம் ஓடி வந்த ஆராதனா மூச்சு வாங்கி கதவில் சாய்ந்தாள்.
         தனது மேலே என்ன விழுகின்றது என்றே யோசிக்க  பூவும் வண்ண காகிதமும் விழுந்த நொடி ஒரு பலூன் விழ பிடித்தான் அதில் 'ஐ லவ் யூ ... யூ லவ் மீ... என்றே கேட்டு கேள்வி குறி கொண்ட எழுத்தை காண விழித்தபடி ஆராதனாவை காண அவளோ தலையில் கையை வைத்து அடித்து கொண்டாள். 

அவனுக்கு அது ஆராதனா எழுதியது என்று புரியவும் அவன் ஏதோ பேச வரும் சமயம் ஆராதனை அதற்கு இடம் அளிக்காமல் மீண்டும் கீழே வந்து அவளின் அறையில் புகுந்து தாழிட்டு கொண்டாள்.

         ஐயோ அவசரப்பட்டு காதலை சொல்ல ஐடியா எல்லாம் போட்டு விட்டேனே... நினைவு வந்த பொழுது பிறகே முடிவு எடுத்து இருக்கனும் என்று விட்டுட்டு இருக்கனும்... இப்போ நான் இந்த இடைப்பட்ட காலத்தில் செல்வாவை விரும்பியதை அவரிடமே சொல்லி விட்டேன்...இப்போ செல்வா என்ன நினைப்பார்... கடவுளே எப்படி என்னால உதய் விரும்பிட்டு செல்வாவிடம் காதலை சொல்ல முடிந்தது. நினைவு போனா உள்ளுணர்வு கூடவா தனக்கு சொல்லவில்லை.....?!
           ஒரு பெண் எடுக்கும் முடிவு எப்பொழுது உள்ளுணர்வு சரியாக பதில் சொல்லுமே... அப்போ ஏன் இப்படி ஆகிடுச்சு.... நேற்று இந்த நேரம் காதலை சொல்லி அவர் என்னிடம்... என்னிடம்... முத்தமிடுவது போல அல்லவா எண்ணி மகிழ்ந்தேன்... அப்போ எல்லாம் ஏன் எனக்கு அது தவறா தோணலை...
                         ஒன்றை வருடமா உதய் நானும் விரும்பறேன் ஆனா அப்போ எல்லாம் அவனிடம் தள்ளி நின்று தானே பேசுவேன் அவன் அருகே வந்தாலும் இடைவெளி விட்டே பழகுவேன்.... ஆனா இங்க இருந்த வரை செல்வாவிடம் நான் அவர் அருகே தானே பேசுவேன்...ஏன் அவரோட ஒன்றாய் கூட தூங்கி எழுந்து இருக்கேன்... எப்படி அதெல்லாம்... அதுவும் மாதசுழற்சி காலத்தில்... நான் எப்படி விட்டேன்..
                      வெற்றி செல்வன் என்னிடம் தள்ளி நின்றே தான் பேசுவார் இதுவரை அவர் என்னிடம் அத்துமீறி பேசியது இல்லை பார்த்ததோ இல்லை... ஆனா நான் அவரின் கையை பற்றி எல்லாம் பேசி இருக்கேன்... அவருக்கு ஊட்டி விட்டு இருக்கேன் நான் ஆராதனா தானா?!
          கடவுளே... எதுக்கு இப்படி செல்வாவையே நினைத்து கொண்டு இருக்கேன்.... ஆமா எதுக்கு? உதய் ஏன் என்னை விட்டுட்டு போனார்...? எதுக்கு அவர் அம்மா சொன்ன பொண்ணை திருமணம் செய்ய போறார்? அந்த ஆச்சிகிட்ட ஏன் நான் அவரை வேண்டாம் என்று சொன்னதாகவும் வெளியே வேலை பார்ப்பதாக சொல்லி போன் இல்லை என்றெல்லாம் சொல்லி வச்சி இருக்கார். அப்போ எப்படி என்னை மற்றவங்க தேடுவாங்க... இதெல்லாம் செல்வா வேலையா?
           சே சே இருக்காது... அவர் என் கண்ணை பார்த்து நேரா தான் எல்லாம் சொன்னார் அதில் உண்மை தான் தெரிந்தது. பின்ன என்ன ஆச்சு? யார் என்னை கடத்தியது? இல்லை டாக்டர் என்கிட்ட பணம் பறிக்க வந்தவங்க என்றே சொன்னாங்க.... கேவலம் பணம் பறிக்கவா அப்படி? 
            இப்படி என்னை குழப்பி குழப்பி சாவடிகறத்துக்கு நினைவு வராமலே இருந்து இருக்கலாம்... செல்வாவும் அதே தான் நினைச்சார் போல... செல்வா... செல்வா.... இப்போ என் மனம் யாரை விரும்புது.... ஐயோ.... தலை வலிக்குது... என்றே கண்களை அழுத்த மூட மயங்கி மெத்தையிலே இமை மூடினாள்.
                வெற்றியோ இன்பம் துன்பம் என்ற இரண்டும் குத்தகைக்கு எடுத்து இருந்தான். தனது ஜெஸில் நினைவு திரும்பி தன்னை விலகி நிற்க வைப்பதை கண்டு துன்பமும்... இந்த மூன்று மாதத்தில் தன்னை ஜெஸில் விரும்பி அதனை மறைக்காமல் தன்னிடம் வெளிப்படுத்தி இருப்பதையும் கண்டு இன்பமும் அடைந்தான்.
           அவனுக்கு ஒரே ஆறுதல் மயக்கத்தில் ஜெஸில் தனக்கு நடந்ததை அறிந்து இருக்கவில்லை...
          அவளுக்கு சொல்வதாக இருந்தால் அது உதய் மட்டுமே சொல்ல வேண்டும் அவன் சொல்லாமல் இருந்தால் நல்லது...அவன் எப்படி என்றே புரியாது விழித்தான். அரை மயக்கத்தில் இருந்த ஆராதனைவிடம் தாய்மை இல்லை என்பதால் மட்டுமே விலகி சென்றதாக பேசியது வெற்றிக்கு நினைவு வந்தன.
           உதய் ஜெஸிலை உண்மையாக விரும்பியவன் அதனால் எப்படி எடுத்துக் கொள்வான்?
           வெற்றிக்கு உறக்கம் வர மறுத்தது. ஜெஸில் முன்னுக்கு மட்டும் நினைவு திரும்பாமல் போயிருந்தால் இன்றே நானும் உன்னை விரும்பியதை சொல்லி உடனே தாமதப்படுத்தாமல் திருமணம் செய்து இருப்பேன்... ஆனா உனக்கு என்கிட்ட காதலை சொல்லிய வினாடியில் நினைவு திரும்பி இருக்கு... இப்போ உன் மனம் ரொம்ப போராடும்... அது எனக்கு தெரியும் ஜெஸில்... உதய்யை ஏற்றுபியா? இல்லை என்னை ஏற்றுக்கொள்வாயா? என்றே உன் மனம் உன்னை கஷ்டப்படுத்தும்... நீ உதய் விரும்பின.. அவனும் விரும்பினான்.. உதய் மட்டும் மீண்டும் உன்னை கண்டால் எல்லாம் மறந்து உன்னை ஏற்றுக் கொண்டாள் என் நிலைமை....
          கடவுளே எனக்கு ஒரு அன்பான உறவையும் விட்டு வைக்க மாட்டியா? அம்மா அப்பா அப்பறம் என்னை வளர்த்தவங்க என்று என்னை விட்டுட்டு போயிட்டாங்க இப்போ ஜெஸில்... நோ நோ அவளுக்கு மட்டும் உண்மை தெரிந்து அவளுக்கு ஏற்பட்ட கசப்பு தெரிந்தா அவளும் அவளை அழிச்சிப்பா.. அதுக்கு பிறகு நான் உயிரோட இருக்க மாட்டேன். உதய் அவளுக்கு நடந்த கசப்பை சொல்லிடக் கூடாது... ஆனா ஆராதனா அவனை குற்றம் சுமத்தினால் சராசரியாக எண்ணம் கொண்டு உண்மை சொல்லிடுவானா?

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

thanks for reading and valuable comments 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1