மனம்
அதிகாலை எழுந்ததும்
அலைவரிசையில் மாற்றி மாற்றி இமைக்காது
தன் ராசிக்கு சொல்லும் கூற்றையெல்லாம்
செவி சாய்த்து ஏற்று
உடுத்துமாடை கூட செவ்வனே
அதன் சொல்படியே அணிந்து
நாள் பார்த்து நேரம் பார்த்து
வாஸ்துபடிக் கட்டிய வீட்டிலிருந்து
நல்லநேரம் பார்த்தே வெளியேறும் அச்சமயம்
எங்கிருந்தோ தன் துணையை
தேடி ஓடிய பல்லியின்
மதில் பிடி தளர்ந்து
வெண் நரையில் கருமை சாயம் பூசிய
தலையில் சரியாக விழ
பல்லி பலன்களில் சற்று அஞ்சியே
இதுவரை கட்டிக்காத்த
ஜோதிடம் வாஸ்துகளெல்லாம்
பொய்யாக மாற கடவதென புலம்பி
ஒரே நொடியில் மாறுகின்றது மனம்.
- பிரவீணா தங்கராஜ்.
அலைவரிசையில் மாற்றி மாற்றி இமைக்காது
தன் ராசிக்கு சொல்லும் கூற்றையெல்லாம்
செவி சாய்த்து ஏற்று
உடுத்துமாடை கூட செவ்வனே
அதன் சொல்படியே அணிந்து
நாள் பார்த்து நேரம் பார்த்து
வாஸ்துபடிக் கட்டிய வீட்டிலிருந்து
நல்லநேரம் பார்த்தே வெளியேறும் அச்சமயம்
எங்கிருந்தோ தன் துணையை
தேடி ஓடிய பல்லியின்
மதில் பிடி தளர்ந்து
வெண் நரையில் கருமை சாயம் பூசிய
தலையில் சரியாக விழ
பல்லி பலன்களில் சற்று அஞ்சியே
இதுவரை கட்டிக்காத்த
ஜோதிடம் வாஸ்துகளெல்லாம்
பொய்யாக மாற கடவதென புலம்பி
ஒரே நொடியில் மாறுகின்றது மனம்.
- பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment