தித்திக்கும் நினைவுகள்-15

 


அத்தியாயம் -15

தாமரைக்கு உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது. இதை இன்றே காந்தனுடன் சொல்லி விடலாம் என்றால் அவர் பெண்ணின் ஆசைக்கே முன் மொழிவார்.

சியாமளவிடம் சொல்லலாம் என்றால் சியாமளாவே கௌதம்மிற்கு பொண்ணு கேட்டாலும் கேட்கலாம்.

சிவா...? சிவா முன்பாவது இப்படி என்றால் முதல் ஆளாக சண்டைக்கு போயிருப்பான். இப்பொழுது அவனே ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து வைப்பான். ஜோதி ஏற்கனவே அண்ணன் புராணம் பேசுபவள்.

யாரிடம் கூறி இதுக்கு தீர்வு கொள்வது என்று குழம்பினாள் தாமரை.

இரு தினமும் தந்தை தன்னோடு அதே போல பேசி பழக சாதனாவிற்கு தாய் தனது தந்தையிடம் தனது காதல் விவகாரத்தை பற்றி கூறிடவில்லை என்று நிம்மதியாக இருந்தாள்.

ஒரு வழியாக தாமரைக்கு அந்த யோசனை அவளுக்கு உதித்தது. அதன் படியே செய்ய முடிவு எடுத்தாள். அந்த முடிவால் பாதிக்கப்படுவது கௌதம்மை விட தனது மகள் தான் அதிகம் என அறியவில்லை.

ஜோதியிடம் நைசாக பேசி கௌதம் பணிபுரியும் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். நிமிர்ந்து பார்க்க கூடிய கட்டிடத்தில் அவன் நான்காவது தளத்தில் இருப்பதாய் ஜோதி சொல்ல சென்றாள்.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு பெண் கேட்ட கேள்வியில் முதலில் விழித்தவள் கௌதம் என்று வேலை பார்க்கிறார் அவரை பார்க்கணும் என்று கூறிட தாமரையை உட்கார சொல்லி விட்டு கௌதமிற்கு போனில் தகவல் சொல்லிட அவனோ யாரா இருக்கும் என்ற ஆவலோடு பார்க்க வந்தான்.

நிமிர்ந்த நடை நேரிடையான பார்வை என்று வந்தவனை கண்டு தாமரை இவனுக்கே சாதனாவை கட்டி கொடுத்தால் என்ன என்று கூட யோசித்தாள்.

  ஆனால் ரவீந்தர் செயலை எண்ணி இவனும் அப்படி மாறினால் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டாள்.

'' தாமரை அத்தை....'' என்று யோசித்து வந்தவன் இவங்க எதுக்கு என்னை பார்க்க ஆபிஸ் வந்து இருக்காங்க என்று குழம்பினான்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தான் கௌதம்மை நம்பி வந்து இருக்கின்றாள் தாமரை.

''உட்காருங்க நீங்க இங்க...?''

''உன்... உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்'' என்று ஆரம்பித்தார்.

''சொல்லுங்க'' என்றான் மரியாதையுடன்.

''நீ நீ என் மகளை விட்டுட்டு போயிடு... உனக்கு உலகத்தில் வேற பொண்ணே இல்லையா? என் மகள் வாழ்க்கையை பாழாக்கிடாதே'' என்று சொல்ல கௌதம் புரிந்தும் புரியமாலும் நின்றான்.

''நீங்க என்ன பேசறீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை'' அப்பொழுது தான் கௌதமிற்கு சாதனா அவனை விரும்புவது இன்னும் தெரியாது என்று சாதனா சொல்லியது நினைவு வந்தது.

''இங்க பாரு உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்து இருக்கேன் நீ நிச்சயம் செய்வ என்று நம்பறேன்''

''என்ன உதவி தயங்காம கேளுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்வேன்'' என்றான் காதலை புதைக்க கூறுவார்களென்று அறியாது.

''சாதனா உன்னை விரும்பறா ஆனா எனக்கு பிடிக்கலை. புத்தகத்தில் இருக்கற உன் புகைப்படத்தை அவள் பீரோவில் இருந்ததை பார்த்து கேட்டேன் அதட்டினேன். அவ அதுக்கு வாழ்ந்தா உன்னோட வாழ்வாளாம்.'' சனா நீ என்னை விரும்பறியா கண்பார்ம் ஆகிடுச்சு என்று மகிழ்ச்சி கடலில் குதித்தவனை மேலும் தாமரை பேச்சில் கவனம் பதித்தான்.

''நீ தாலி கட்டி ஏற்று கொண்டாலும் சரி வச்சிக்கிட்டாலும் சரி என்று என்கிட்டேயே திமிரா பேசறா'' சனா நீ என்னை இந்தளவு விரும்பறியா எப்படிப்பட்ட வார்த்தை கடவுளே எனக்கு என் சனா மட்டுமே மனைவி என்று கௌதம் கருதிய நேரம்,

''நீ இந்த நிமிஷம் தாலி கட்டினாலும் ஏற்றுப்பேன் என்று எல்லாம் உளருறா நீ உன் அப்பா மாதிரி செய்திடுவியோ என்று கொஞ்சமும் யோசிக்காம என்னை எடுத்தெரிந்து பேசறா'' தனது தந்தை செயலால் தன்னை எடை போடுகின்றார்கள் என அறிந்து கொண்டான். ஆனாலும் சனா பேசிய வார்த்தையில் இருந்து அவள் தன் மீது எவ்வளவு காதல் நம்பிக்கை வைத்து உள்ளாள் என அறிந்து கொண்டான்.

''அவ பிடிவாதக்காரி நான் எது செய்தலும் எதிர்த்து செய்யற குணம் அதனால் தான் நான் உங்கிட்ட உதவி கேட்டு வந்து இருக்கேன்'' தன்னிடம் என்ன உதவி என்று யோசிக்க ''நீ சாதனாவிடம் இருந்து தள்ளியே இரு அவளை விட்டு போய்விடு'' இதுவரை பேசியதை அதிர்ச்சியுடனும் ஆனந்ததிலும் கேட்டவன் அவர்களின் பேச்சில்

''அத்தை நானும் சனாவை விரும்பறேன். என் அப்பா செய்த தவறை நான் செய்ய மாட்டேன். சனாவை நான் நல்லபடியா பார்த்துப்பேன்'' என்று சொல்லி கொண்டிருந்தான்.

''ப்ளீஸ் உன் காதலை கேட்க வரலை என் மகளை விட்டு விலகு. நீ ஒதுங்கிட்டா அவளுக்கு நானே நல்ல வாழ்கை அமைச்சு கொடுப்பேன் அவளும் கொஞ்ச நாளில் உன்னை மறந்துடுவா'' என்று பேசினார்

''அவ மறக்க மாட்டா'' என்று உறுதியாய் கூறினான்.

''அதை நான் மாற்றி காட்டுறேன். நீ அவளிடம் நெருங்காதே அது போதும் எனக்கு'' என்று வேண்டினார் தாமரை.

''அத்தை நீங்க தான் மாறனும் அவள் நிச்சயம் மாறா மாட்டா அவள் என்றால் எனக்கு உயிர் அத்தை'' என்ற போதே கௌதம் காலில் விழுந்தார் தாமரை.

''என் மகளை விட்டுடு ப்ளீஸ் மற்றதை நான் பார்த்துப்பேன் அவளுக்கு நானே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்வேன். எனக்கு இந்த உதவி மட்டுமே செய்'' என்றதும் அம்மா வயது கொண்ட தாமரை காலில் விழுந்ததும்

''அத்தை ப்ளீஸ் எழுந்துக்கோங்க ஏன் இப்படி பண்றிங்க''

''முதலில் என் மகளை விட்டுடுவேன்னு சொல்லு எழுந்திரிக்கறேன்''

''முதலில் எழுந்து நில்லுங்க'' என்றதும் தாமரை எழுந்து அவனின் பதிலுக்காய் பார்க்க, அமைதியாக சிறிது நேரம் யோசித்தவன் ஒரு முடிவோடு

''நானா உங்க மகள் கிட்ட வந்து பேசவோ நெருங்கவோ மாட்டேன் அதே போல சனா வந்து பேசினாலும் அவளை அவாய்ட் பண்ணிடறேன். ஆனாலும் அவள் நீங்க சொல்றதை கேட்பா என்று எனக்கு தோணலை''

''அதை நான் பார்த்துப்பேன். ஆனா நீ அவளிடம் நான் இங்க வந்து பேசியதை சொல்லிட்டா''

''நானா சொல்ல மாட்டேன் போதுமா என்னை கொஞ்சமாவது நம்புங்க....''

''எனக்கு சத்தியம் பண்ணு."

''அத்தை.... சரி நானா சொல்ல மாட்டேன் நிச்சயமா போதுமா'' என்றதும் அவன் கண்கள் கலங்க தாமரை 'நன்றி' என கைகூப்பி இடத்தை விட்டு அகன்றாள்.

எவ்வளவு நேரம் வரவேற்பு இருக்கையிலே அமர்ந்து இருக்க கூட பணிபுரியும் ஒருவன் வந்து 'ஹாய் கௌதம் யாருக்காக வெயிட் பண்ற' என்று இரு முறை கேட்ட பிறகே உணர்வு வந்து அவனது கேபினுக்கு சென்றான். வேலையில் கவனம் செல்லவில்லை.

லீவ் சொல்லிவிட்டு கடற்கரை நோக்கி பைக்கை செலுத்தினான். மணலில் அமர்ந்து அப்படியே கடலை தான் பார்த்து கொண்டே இருந்தான்.

'சனா நீ என்னை எவ்ளோ விரும்பற என்று தெரிந்தும் உன்னை விட்டு விலகறேன். நீ எப்படியும் மனம் மாற மாட்டாய் என்றே நம்பிக்கையில்... என்று கடலுடன் தனது காதலை பகிர்ந்தான்.

எப்பொழுதும் நேரத்திற்கு வரும் பேரன் இன்னும் வரவில்லை என்றே போன் செய்ய அது எடுக்கவில்லை. ஜோதி மூன்று முறை தொடர்பு செய்ய இம்முறை அவனாக செல்லில் கையை ஆன் செய்து காதிற்கு அனிச்சையாக வைத்தான்.

''ஹலோ அண்ணா... அண்ணா எங்க இருக்க ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை'' என்றாள் ஜோதி.

''நைட் வர்றேன் டா''

''அண்ணா இது நைட் தான் மணி எட்டு முப்பது ஆகுது நீ எப்பவும் ஆறுக்கே வந்துடுவே என்ன ஆச்சு?'' சுற்றி முற்றி பார்க்க இருட்டி இருந்தது. ஓஹ் காட் கவனிக்கலை என்று சொல்லி கொண்டு

''இதோ வந்துடறேன் குட்டிம்மா'' என்று செல்லை அணைத்தவன் தானாக பைக் எடுத்து வீடு வந்து சேர்ந்தான்.

''அண்ணா குழம்பை சாப்பிட சூடுபடுத்தவா'' என்றதற்கு

''வேண்டாம் டா அண்ணாவுக்கு பசிக்கலை'' என்று தனது அறைக்கு சென்றான். உடை கூட மாற்றாமல் அப்படியே மெத்தையில் விழுந்தான். 'ஏன் சனா என்னை இந்த அளவுக்கு விரும்பற. உன் காதலுக்கு நான் தரும் பரிசு இனி நிராகரிப்பு தான்.

   ஏன் டி பதினாலு வருஷம் கழிச்சு உன்னை மீட் பண்ணனும். எனக்கு நீ தான் மனைவி என்று ஏன் தோணனும். காதலை சொல்லாமலே ஏன் நானே உன்னை வெறுக்க செய்யற மாதிரி நடிக்க போறேன் என்னால முடியுமா? இதுக்கு இந்த கடவுள் நம்மளை சந்திக்கவே வைக்காமல் இருக்கலாமே... என்று உளறி இரண்டு மணி அளவில் தானாக உறங்கினான்.

அதிகாலை மணி எட்டு ஆனதும் இன்னும் தனது பேரன் எழுந்து வரவில்லை என்று வேதா கவலையோடு இருக்க ஜோதியே டீ போட்டு சமைத்து முடித்து கல்லூரி சென்றாள்.

அப்பொழுதும் கௌதம் வராததை எண்ணி வேதாவே அறைக்கு சென்று கௌதம்மை பார்க்க அவன் நேற்று அணிந்த ஆடை கூட கழற்றாமல் தூங்குவதை கண்டு உடலை தொட்டு பார்த்தார்.

உடலில் எவ்வித மாறுபடும் இல்லாமல் போக கௌதம் டேய் கண்ணா என்ன டா ஆச்சு என்று எழுப்ப மெல்ல கண்களை திறந்தவன்.

''ஆச்சி நான் கொஞ்சம் தூங்கிட்டேன் போல இதோ ஆபிஸ் கிளம்பிட்டேன்''

''என்ன டா ரொம்ப வேலையா உடை கூட மாற்றாமல் தூங்கிட்ட'

''ஆ ஆமா ஆச்சி வேலை டென்ஷன்'' என்று எழுந்தவன் ''ஆச்சி ஜோதி...''

''அவ காலேஜ் போயிட்டா'' என்றார்.

''சரி ஆச்சி நான் கிளம்பறேன் என்று குளிக்க சென்றான்.

வேதா குட்டிம்மா என்றே அழைக்கும் அவனின் குரல் இன்று ஆச்சி என்றும் ஜோதி என்றும் சொன்னதுமே வேதவள்ளி ஏதோ மனம் சரியில்லை என யூகித்தார்.

எப்பொழுதும் ஐந்துக்கு மேலே உண்பவன் இன்று இரண்டு சாப்பிட்டு போக வேதாவிற்கு கவலை வரவே செய்தது. எப்படி கேட்டாலும் அவன் வாயில் இருந்து என்ன விஷயம் என்று எளிதில் வாங்க இயலாது ஆனால் பிரச்னையை அவனே தீர்வு காண்பான் என்று அப்பொழுது அதை மறக்க செய்தார்.

இனி வரும் நாட்கள் எல்லாமே நடைப்பிண வாழ்க்கை என்று கருதினான். சனா செய்யும் மெசேஜ் கால் எதற்கும் அவன் பதிலளிப்பதாக இல்லை. சனாவே ஏன் என்ன என்று குழம்பி தவித்தாள்.

காரணம் என்ன என்று தெரியாததால் வருத்தமே அடைந்தாள். மறந்தும் தாய் தாமரைக்கு இதில் சம்பந்தம் இருக்குமா என்று யோசிக்கவில்லை.

தாமரைக்கு மகளின் வாட்டம் கண்டு கௌதம் அவளை நிராகரிக்கின்றான் என்றே புரிந்து விட்டது. அப்பாடி இவன் நல்லவன் தானா? என்றே யோசித்தாலும் மகளின் வருத்தம் கொஞ்ச நாளில் சரியாகிடும் என்று நினைத்து விட்டுவிட்டாள். சரியாக சாப்பிடாமல் இருக்க போக போக சரியாகிடும் என்று விட்டு பிடிக்க செய்ய நினைத்தாள்.

தினமும் சனாவின் ஸ்டேட்டஸ் பார்ப்பான் ஆனால் பதிலளிக்க மாட்டான். சனவோ 'நீ நேசிக்க மறுத்தாலும் நான் நேசிக்க மறக்க மாட்டேன்' , 'என்றும் உன் நினைவு மட்டுமே நான் இந்த பூமியில் வாழ போதுமான சுவாசம்' என்று இப்படியாக காதல் வரிகள் வைக்க உள்ளுக்குள் மகிழ்வான்.

அன்று கௌதமின் பிறந்த நாள் ஜோதியின் வற்புறுத்தலில் தான் எப்பொழுதும் போகும் உணவகத்திற்கு சென்றான். வேதவள்ளி ஜோதி இருவரின் சந்தோஷத்திற்காக மட்டுமே.

சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் ''ஹாய் ஜோதி...'' என்ற சனாவின் குரலில் திரும்பாமலே உணர்ந்தான்.

''மேனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தே டே'' என்றே கௌதம்மிடம் கூற, அவள் முகம் பார்க்காமலே ''தேங்க்ஸ்'' என்றான்.

ஹாய் அண்ணி சாப்பிட்டாச்சா?'' என்ற ஜோதி கேள்வியில் மாலதி அங்கிருந்து

''எல்லாம் இன்னிக்கு உங்க சனா ட்ரீட் தான்'' என்று கௌதமின் காதில் விழும் அளவிற்கு சொல்லிட கௌதமிற்கு தானாக புரிந்தது.

தனது பிறந்த நாளுக்கு இவள் அவளின் தோழிக்கு ட்ரீட் கொடுக்கிறாள் என்று கூடுதலாக மாலதி உச்சரித்த 'உங்க சனா' என்றது அவனுக்கு புரியாமல் இல்லை.

''மாலதி.... நீ இங்கருந்து போ'' என்று சனா முறைக்க திரும்பி கௌதம்மிடம் ''நான் ஏதாவது தப்பு செய்திருந்தா என்னை மன்னிச்சுடுங்க ஏன் பேசாம இருக்கீங்க. நீங்களா சொல்லாம எதுக்கு என்று எனக்கு தெரியாதே ப்ளீஸ் என் மேல என்ன தப்பு'' என்று சனா மெல்ல கேட்க தான் இங்கே வந்ததே தவறாகி போகின்றதே. சனா நீ தப்பு செய்யலை டி நான் தான் என்று மனதினுள் புழுங்கினான்.

ஜோதியோ கையில் இருந்த ஐஸ் கிரீம் கலக்கி நீராக உருகி இருக்க அமைதியாக தலை நிமிராமல் இருக்க, கௌதமிற்கு ஜோதி முன் எப்படி திட்ட இவள் வேறு இப்படி பேச செய்கின்றாள் என்று மனம் சொல்ல ஜோதிக்கு அதில் விஷயம் புரிந்து இருக்கின்றாள் என அறிந்தான் கௌதம்

''குட்டிம்மா இது உன் வேலையா?'' என்றான். எது என்று கேட்காமல் ''இல்லை அண்ணா'' என்று பதறி பேசியவளின் முகம் வைத்தே இது ஜோதி வேலை என்று அறிந்து கொண்டான்.

''ஜோதி நீ சின்ன பொண்ணு என்று இருந்தேன். என்ன வேலை இது'' என்று அதட்டினான்,

''ஜோதி திட்டாதீங்க ப்ளீஸ் நான் தான்''

''ஷட் அப் எல்லாம் உன்னால...'' என்று சனாவிடம் கூறிவிட்டு ''ஜோதி நீ பண்ற வேலை ரொம்ப தப்பு'' என்றான்.

''அண்ணா உங்க போனில் சாதனா அண்ணி போட்டோ வால் பேப்பர் பார்த்தேன் அதனால் தான்''

''வாட்.?'' என அதிர்ந்தவன் உடனே சுதாரித்து நான் எதுவும் அப்படி வைக்கலை. ஜஸ்ட் சிவா மேரேஜ் போட்டோ இருக்கும் அதுல இவளும் இருக்கா தட்ஸ் இட்'' என்று சொல்லி முடிக்க சனா அவனின் முகத்தை நேரிடையாக பார்த்து, இதற்கு மேல் இவனை சும்மா விடலாமா? சனாவுக்கு பொறுமை போனது.

''ஓகே கௌதம் உங்க போனை கொடுங்க நானே பார்த்துடறேன். நான் மட்டும் விரும்பறேன் நீங்க அப்படி...இல்லை என்றால்....'' கண்ணீர் கண்ணில் வழியா காத்திருக்க அடக்கி கொண்டாள்.

''தென் அப்படி எதுவும் இல்லை என்றால் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் '' என்றே கையை நீட்டினாள்.

அவளின் முதல் பெயரிட்டு கூப்பிடும் அழைப்பு அவள் காதலை அவள் நேரிடயாக தன்னிடம் உரைக்க வேறு செய்தாயிற்று ஆனாலும் அதை உணர்ந்து அனுபவிக்க முடியவில்லை அவளின் நேரிடையாக போனை கேட்டதால் அவன் தனது போனை தொட்டு பார்த்தான். நல்ல வேலை ஷர்ட் பாக்கெட்டில் வைக்கவில்லை. பாண்ட் பாக்கெட் என்பதால் மனம் நிம்மதி அடைந்தது.

''கௌதம் மாமா உங்க போனை கேட்டேன்'' என்ற அவள் விடாது கேட்க, எவ்வளவு நாள் கௌதம் மாமா என்று அவள் கூப்பிட காத்திருந்தவன் இன்று இப்படியா? என்று மனம் வலிக்க அதே நேரம் விடாது கேட்பது தவிர்க்க எண்ணினான்.

''லுக் திஸ் இஸ் யுவர் லிமிட் ... ஜோதி ஆச்சி வந்ததும் கிளம்பலாம்'' என்று திரும்ப கைஅலம்பி வந்த வேதா கௌதம்மை கண்டும் சாதனாவை கண்டும் பார்வை செலுத்தினார்.

சாதனாவின் கண்களில் காதல் அப்பட்டமாக தெரிய கெளதம் கண்களோ பொய்யில் மறைப்பதாய் பட வேதாவிற்கு தனது பேரன் பொய் சொல்கின்றான் என தெளிவாக புரிய ஜோதியை அவன் இழுத்து செல்ல வேதாவும் பின் தொடர்ந்தாள்.

''சாதனா வா நாமளும் போகலாம்'' என்று மாலதி கைப்பற்றி இழுத்தாள்,

''மாலதி நான் என்ன தப்பு பண்ணினேன். எனக்கு தெரியலை டி அவர் என்கிட்ட பேசறதே இல்லை நீயே பார்த்தல அவருக்கும் என் மேல லவ் இருக்கு ஆனா மறைக்கிறார்'' என்றே அழுது சென்றாள்.

''சாதனா எல்லாம் சரியாகிடும் விடு. பயபுள்ள ரொம்ப அழகு என்ற திமிரு. எங்க போயிட போறார் விடு'' என்று ஆறுதல் சொல்லியும் கேட்காது வீசும்பினாள்.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

Comments

  1. Title opposite ah poghuthey kathai. Kadhal naaley eppdi thaano 🤔🤔🤔

    ReplyDelete
  2. கௌதம் நிராகரிப்பு காரணம் தன்னுடைய அம்மாதான் என எப்படி கண்டு பிடிப்பாள் ??

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...