காதல் பிதற்றல் - 11 யார் சொன்னது




















யார் சொன்னது
மங்கையின்
மான்விழிக்கு
மட்டுமே
மயக்கும்
சக்தி உண்டென்று .
உன் அடர்ந்த புருவம்
ஒன்றே
என் உறக்கத்தை
பறித்து செல்ல
போதுமானதென்று
அறிவாயா ?!
         ***
யார் சொன்னது
பெண்மைக்கு
மென்மை
மட்டுமே
பிடிக்குமென்று
உன் வன்கரங்களில்
தாமரை முகத்தை
புதைத்திடவே
பிடிக்குமென்பதை .
         ***
யார் சொன்னது
நீண்ட இடை தொடும்
கூந்தலே
வசீகரிக்குமென்று ,
உன் முன் நெற்றியில் வருடும்
அடர்ந்த கேசம் போதும் 
என் மனதை
பறித்து செல்ல ...
        ***
              - பிரவீணா தங்கராஜ் .

    

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1