இன்னுமொரு தாயாக என் தங்கை

அலுவலகத்திலிருந்து
கிளம்பும்போதே
ஆயிரம் கலக்கம் மனதில் .
இன்று ,
என்ன வம்பு செய்திருப்பானோ .?!
நேற்றே  ,
தங்கை கூறிவிட்டாள் .
இனி ,
பொறுத்து போக மாட்டேன் .
நானே கன்னத்தில்
அறைந்து விடுவேனென .
இதோ !
வீடு வந்துவிட்டது .
தங்கை அருகே அவன் ,
முகம் முழுதும்
மிட்டாய் சுவடோடு ,
டாம் அண்ட் ஜெர்ரி
நிகழ்ச்சியை கண்டு கொண்டு ,
நித்தம் நுறு
குறும்பு செய்யும் என் மகன் .
அவனை முத்தமிட்டதால் ...
பால்  பற்களில்  
கடி வாங்கி ,
கன்னத்தை பிடித்தபடி ,
கல்லுரி பறவை
என் தங்கை .
எப்பொழுதும் போல்
நமுட்டு சிரிப்புடன்
நான் .

           -- பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு