பஞ்ச தந்திரம்-11

 பஞ்ச தந்திரம்-11


      நைனிகாவோ பொறுமையாய் எழுந்து வந்தாள். 


  "இப்ப எதுக்கு அந்த பாட்டியை கேள்வி கேட்கறிங்க. அவங்களுக்கு எப்படி தருணோட ஆக்டிவிட்டிஸ் தெரியும். 


   நம்மளோட ஒரு நாள் மனம் விட்டு பேசியிருக்காங்க. கடலில் சாக போனவங்க. அவங்களுக்குனு அன்பான உறவு இல்லைனு அப்படியிருக்க....


   தருணோட பழகியிருக்கேன். செல்பிஷ்... ஓவரா ப்ளார்ட் பண்ணுவான். 


   ஆட்டிடியூட் காட்டுவான். இந்த ஆட்டிடியூட் ஆக்டிங்ல தான் விழுந்துட்டேன்." என்று வருந்தினாள். 


    "சாயந்திரம் நேர்ல தருணை அடிச்சி ஏன் இப்படி நடந்தேனு கேட்க இருந்தேன் டா. சத்தியமா என் பேரன் என்றதால உனக்கு அநியாயமா எதுவும் செய்ய மாட்டேன். 


    எப்பவும் கிராணினு கொஞ்சி பேசி காலை சுத்தினவனோட மனசு இந்தளவு வக்கிரம் இருக்கும்னு தெரியாது. 


    இன்னிக்கு தானே அவன் இப்படி மோ...சமா.." என்று வாய் பொத்தி அழுதார். 


    மஞ்சரி அழவும் நைனிகா அவரருகே வந்து "மாத்திரை சாப்பிட்டிங்களா இல்லையா? உடம்புக்கு முடியாம போகப்போகுது. முதல்ல டேப்ளட் போடுங்க" என்று உத்தரவிட்டாள்.


    "நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன். என் குடும்பமே சுயநலத்துல இருக்கு. என் பேரன் சின்ன பொண்ணை மிரட்டி" என்று மீண்டும் அழுதார். 


     ரஞ்சனா கண்ணீரை துடைத்து மாத்திரை பெட்டியை எடுத்தார். 


  நேற்றே மாத்திரை பெட்டியை கவனித்தாள். அழகாக காலை மதியம் இரவு என்று தனி தனியாக பிரித்து வைத்திருந்தார். அதனால் எடுத்து கொடுக்க வாங்கி விழுங்கினார். 


    லேசாய் நைனிகா திட்டாமல் இருப்பதிலேயே தெம்பு வந்தவராய் இருந்தார். 


   "தருண் வந்துட்டானா மா? வீடியோ போட்டதால என்ன சொன்னான்." என்று கேட்க, திரிஷ்யா வீட்டிலிருந்ததால் கத்தரித்ததாக கூறினாள். 


    அதே நேரம் தருண் மீண்டும் நைனிகாவுக்கு அழைத்தான். 


   "தருண் தான் போன் போடறான்" என்றதும், எடுத்தாள். 


   "ஏய்... ஏன்டி இப்படி பண்ணின. நான் பிளாக்மெயில் தானே பண்ணினேன். நீ என்ன உன் போட்டோவை ப்ளர் பண்ணி என்னை மாட்டிவிட்டு என் பிரெண்ட்ஸை பேரண்ட்ஸை டேக் பண்ணிருக்க? இங்க பாரு அதை அழிச்சிடு. நானும் உன் போட்டோவை அழிக்கறேன். ப்ளிஸ்..." என்று கெஞ்சினான். 


      "ஏன் தருண் ஒரு பொண்ணை பிளாக் மெயில் செய்த? கிராணி அப்படி தான் உனக்கு பெண்ணை மிதிக்க கத்து கொடுத்தேனா?" என்றதும் மஞ்சரி பாட்டி குரலென்றதும் அதிர்ந்தான். 


   "கி..கிராணி.. உங்களை எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. நைனிகா கூட இருக்கிங்க?" என்று கேட்டான்.


   "ஏன் கூட இருந்தா என்ன? அவ உன்னை பத்தி சொன்னதும் அவ காட்டின வீடியோவும் பார்த்தேன் டா. சென்னை வந்ததும் நம்ம வீட்டுக்கு வா. எந்த ஹோட்டலும் வேண்டாம். வீட்ல வச்சி பேசுவோம்." என்று முடித்தார். தருணோ "வீடியோ மட்டும் டெலிட் பண்ண சொல்லுங்க கிராணி." என்றான். கிட்டதட்ட கெஞ்சினான்.  


     மஞ்சரி போனை துண்டித்து விட்டார். துண்டித்ததும் அடுத்த நொடி நைனிகா அவள் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.


      போனை எடுத்து காதில் வைத்தவளுக்கு நேற்றே இறந்திருக்களாமோ என்ற வருத்தம் மட்டும் மிஞ்சியது. 


   மகளின் வீடியோ இப்படி அவளே போட்டு, யானை தன் மேலே மண்ணை வாரி போட்டு கொண்டதே என்று மகளை திட்டிவிட்டு பிறகு ஏன் என்ன என்று பதவிசமாய் கேட்டிருக்கலாம். 


   'நீ அவளுக்கு பிறந்த மகள் இப்படி தான் இருப்ப. இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம்னு தாவி தாவி ஒழுக்கம் கெட்டு போயிருக்க' என்று நைனிகாவையே திட்டினார்கள். 


    பருவ வயதில் தாய் தந்தை கூடயிருந்து அன்பை பொழிந்து, அரவணைக்காததெல்லாம் அவர் கண்ணுக்கு படவில்லை. மகளின் பருவ வயது தவறு மட்டும் கண்ணில் பூதகரமாக தெரிந்தது. கூடுதலாக உன் அம்மா புத்தி என்று வறுத்து எடுத்தார்.


   நைனிகாவே போனை துண்டித்து விட்டு அழுதாள். ஆறுதலுரைக்க வந்தவர்களையும் தடுத்து, அழவதை தொடர்ந்தாள். 


  பத்து நிமிடம் கூட தாண்டியிருக்காது. நைனிகா அம்மாவிடமிருந்து அழைப்பு. அவர்களும் திட்டி தீர்த்தார்கள். 'உங்கப்பனை மாதிரி நீ பண்ணிட்டு அதுக்கும் என் வளர்ப்புனு அந்தாளு குதிக்கறான். எல்லாம் என் தலையெழுத்து. அந்த வீடியோவை டெலீட் பண்ணி தொலை. நாளைக்கே வீட்டுக்கு வா. உங்க அப்பா கல்யாணம் பண்ண வரன் தேட சொன்னார். மேட்ரிமோனில.." என்று பேசவும் அன்னை அழைப்பையும் துண்டித்தாள். 


   அங்கிருந்த மற்றவர்களுக்கும் நைனிகா தாய் தந்தையின் பேச்சு கேட்டு கசந்தது. 

    தந்தை வேண்டாம் தாயாவது இவளை அரவணைத்து கேட்டிருக்கலாம். எடுத்தோமா கவுத்தோமா என்று தையதக்கா என்று குதிக்கின்றார்கள்.


    ரஞ்சனா இம்முறை நைனிகாவை அரவணைத்து கொண்டு, "இந்த வயசு கெட்டதையே யோசிக்காததுனு சொல்ல முடியாது. கெட்டதை தாண்டி தான் நல்லதை அடையாளம் கண்டு பிடிக்கும். அதனால இதுக்கெல்லாம் பயப்படாதே. எதையும் பேஸ் பண்ணற பாரு.. நீ தைரியமான பொண்ணு. நான் உன்னை பார்த்து வியந்து போறேன். 


  நீ தப்பானவ கிடையாது. நீ காதலிச்ச... அது இப்படி ஆகிடுச்சு. 


   கிளர்ச்சியான எண்ணங்கள் இந்த வயசுல வரும். வந்தா தான் அந்த வயசுக்கு அழகு. அதே போல காதல் துணையோட தனிமை கிடைத்தா சின்ன சின்ன சில்மிஷங்கள் எல்லை தாண்டல்கள் தவறில்லை. ஆனா கண்ணியம் கட்டுப்பாடு கொஞ்சம் இருக்கணும். எப்பவும் சில விஷயத்தில் கண்ணியம் கட்டுப்பாடு சொல்லி தர நல்ல பேரண்ட்ஸ் கையிடு பண்ணிருக்கணும். 


  உனக்கு அந்த வழிகாட்டிகள் இல்லாததால தவறாக போனதில் உன் பிழையில்லை. அந்த கடவுள் தான்." என்று தட்டி கொடுத்தாள். 


  திரிஷ்யாவும் மஞ்சரியும் ஏன் நைனிகா கூட ரஞ்சனாவை கண்டு ஆச்சரியப்பட்டாள். நேற்றிலிருந்து ரஞ்சனாவுக்கும் நைனிகாவுக்கும் ஏகப்பட்ட முட்டலும் மோதலும் இருந்ததே. 


நைனிகாவும் ரஞ்சனாவை கட்டிக் கொண்டாள். 

    "எனக்கும் உன்னை மாதிரி அம்மா இருந்தா நல்லாயிருக்கும். பொண்ணை கைக்குள்ள வச்சி கவனிச்சு. அந்த குழந்தைக்கு எப்ப பசிக்கும் எப்ப தூங்கும். அந்த குழந்தைக்கு என்ன தேவைனு பார்த்து பார்த்து செய்யற உன்ன போல அம்மா. எனக்கு கிடைக்கலை. தனுஜா கொடுத்து வச்சவள்." என்று நைனிகா கண்கள் ஈரத்தோடு கூறினாள். 


   ரஞ்சனாவோ திடுக்கிட்டவளாய் "தனுஜா என் பொண்ணு இல்லை." என்று மறுத்தாள்.

   

   மஞ்சரியும் திரிஷ்யாவும் இதென்ன ஒரு கூத்து என்று தனுஜாவையும் ரஞ்சனாவையும் பார்த்தார்கள். 


    அதே சமயம் தனுஜாவோ போன் விளையாடிக் கொண்டிருந்தவள் அவள் பெயரை கேட்டதும் திரும்பி ரஞ்சனாவை ஏறிட்டாள். 


    ரஞ்சனாவோ "என்ன உளறுற? தனுஜா என் பொண்ணு இல்லை. மறந்துட்டியா.... நான் எங்கயோ உட்கார்ந்து இருந்தேன். அவ எங்கயோ உட்கார்ந்து இருந்தா." என்று படபடப்பாய் கண்களை உருட்டினாள். 


   "ரஞ்சனா அக்கா... எனக்கு தெரியும். தனுஜா உங்க பொண்ணு" என்று மீண்டும் அதையே உரைத்தாள் நைனிகா. 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.


   


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு