பஞ்ச தந்திரம்-12

 

பஞ்சதந்திரம்-12

   தனுஜாவை ரஞ்சனா மகள் என்று நைனிகா கூற மஞ்சரி திரிஷ்யா ஒரே சேர ரஞ்சனாவை பார்த்தனர்.

    "ஒரு பொய்யை பல முறை சொன்னா அது உண்மையாகிடாது. பொய்க்கும் உண்மைக்கும் அதை சொல்லறவங்களாள சின்ன வித்தியாசம் இருக்கு. அது நல்லங்க சொல்லற பொய், கெட்டவங்க சொல்லற பொய்.

   கெட்டவங்க சொல்லற பொய் நிஜம் மாதிரி இருக்கும். அந்தளவு பெர்பாமன்ஸில் வெளுத்து கட்டுவாங்க. ஆனா நல்லவங்க சொல்லற பொய்யில், ஒரு தள்ளாட்டம் இருக்கும். நல்லவங்க அச்சோ பொய் சொல்லிட்டோமே என்ற குற்றவுணர்வோட பரிதவிப்பாங்க.

  நீங்க அடிக்கடி தனுஜாவை பார்த்து பரிதவிக்கிற தாய் பாசத்தை போல." என்று நைனிகா அழுத்தமாய் தனுஜா ரஞ்சனா மகளென்று உறுதியாக கூறினாள்.

   "ஒரு குழந்தை சாப்பிடாம இருந்தா அதோட முகத்தை வச்சி யாராயிருந்தாலும் சொல்வாங்க பரிதவிப்பாங்க. அதற்கு பெயர் தாய்மை தான். ஆனா பெண்களுக்குண்டான சிறப்பிருக்குற தாய்மை." என்று பூசிமொழுகினாள்.

   நைனிகாவோ தன் தலையெழுத்தே அவலமாக இருக்க, இந்நொடி மறந்தவளாக, "உண்மை தான். ஆனா நான் அந்த பரிதவிப்பை மட்டும் வச்சி சொல்லலை.

  நைனிகா அவளை பத்திபேசறப்ப அப்பாவை தெரியாது. அம்மா அம்மானு திணறி உங்களை தான் பார்த்தா, நீங்க உடனே சரி சரி அழாதே இந்தா சாக்லேட் என்று சமாதானம் செய்திங்க.

   ஹாஸ்டல் சுவர் ஏறினப்ப தனுஜா இறங்க யோசித்து இரண்டு பக்கமும் பார்த்தா. நீங்க என்ன நம்பிக்கை தந்திங்களோ அதை கேட்டு தான் தனுஜா இறங்கினா.

   ஒவ்வொரு முறையும் அம்மானு தனுஜா தடுமாறினப்ப அவ உன்னை பார்த்தா. அது எங்களை பார்த்த பார்வை இல்லை.

  அதோட பெரிய ஆதாரம் என்ன தெரியுமா? நாம பேசறப்ப டிஸ்டர்பா இருக்குனு நீங்க தனுஜாவிடம் உங்க போனை கொடுத்து ஓரமா விளையாட சொன்னிங்க, உங்க போன் பாஸ்வோர்ட் போட்டு இருக்கும். ஆனா தனுஜா போனை வாங்கிட்டு போய் அவளோட நேமை டைப் பண்ணுவா. போன் அன்லாக் ஆகிடும். ஒரு அம்மாவா நீங்க உங்க குழந்தை பெயரை பாஸ்வோர்டா போட்டிருக்க கூடாது. அது காட்டிக் கொடுத்துடுச்சு." என்று ரஞ்சனா தனுஜா தாய் என்பதை புட்டு புட்டு கூறவும் ரஞ்சனா ஆடிப்போய் அமர்ந்தாள்.

   "உண்மை தான் தனு என் குழந்தை. என் மகள். என் ரத்தம்." என்றவள் அவளது வாழ்க்கை காவியத்தை கண்ணீர் வராமல் கூறத் துவங்கினாள்.

      நானும் தனுஜா அப்பாவும் காதலிச்சோம். அவர் பெயர் சூர்யா. ஹீ இஸ் எ மிலிட்டரி மேன். எங்க வீட்ல மிலிட்டரில வேலை பார்க்கறவரை கட்டிக்க கூடாதுனு. அவரோட வீட்ல குலம் கோத்தரம் பார்த்தாங்க

கொஞ்சம் எதிர்ப்பு இரண்டு குடும்பமும் சொன்னதை கேட்காம கோவிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

    ரஞ்சனா-சூர்யா பிளாஸ்பேக்....

    "கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று சூர்யா மையல் கொள்ளும் பார்வையால் கேட்டான்.

   "வேண்டாம்னா விட்டுடுவிங்களா?" என்று அவனைப போலவே கிடுக்குப்பிடியாய் கேட்டாள்.

    "கண்டிப்பா விட்டுடுவேன். வீட்ல அம்மா வேற அத்தை பொண்ணு வெயிட்டிங் டா. மாமா பொண்ணு கூட கட்டிவைக்கிறேன். அந்த வாயாடிலாம் வேண்டாம் வந்துடுனு சொன்னாங்க. நீ மயக்கியாம்." என்று கிசுகிசுத்தான்.

    "ஏன் அத்தை பொண்ணு மாமா பொண்ணு... இரண்டும் கட்டிக்கோங்களேன். யார் வேண்டாம்னது.
     அவங்களை கட்டிக்க ஆசைப்பட்டா என்னை ஏன் காதலிச்சிங்க? அம்மா பின்னாடி போய் இங்கி பிங்கி போட்டு கட்டுங்க." என்று ரஞ்சனா கூறவும், "என்ன பண்ணறது... உன் கண்கள் என் கண்களை மேய்ந்துவிட்டதே" என்றவன் காத்திருக்கும் வரிசையில் கவிதைப் பாடினான்.

    "டேய்.. பங்காளி... இன்னிக்கு பார்த்து கோவில்ல கூட்டம் டா. கொஞ்சம் சண்டையை கல்யாணத்துக்கு பிறகு போட்டுக்கோங்க. இப்ப முன்னாடி நகருங்க" என்று சூர்யா தோழன் ஜனார்த்தன் தள்ளவும் கொஞ்சிப் பேசி காதல் சண்டையை போட்ட ஜோடி முன்னே சென்றார்கள்.

    "சூர்யா... கோவில்ல மாலை மாத்தி தாலி கட்டி நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டதும், ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு வேற போகணும்டா. ரிஜிஸ்டர் ஆபிஸ் வேற பத்து மணிக்கு திறந்துடுவாங்க." என்று கோவிலில் வைத்து அடுத்தடுத்து செல்ல வேண்டியதை எடுத்து சொன்னான் ஜனார்தன்.

    "வீட்டை பார்த்து வச்சிட்டேனு சொல்லற? எங்கடா? பணத்தையும் வாங்கிக்கலை?" என்று சூர்யா கேட்க ஜனார்தன் முன்னே போக கூறினானே தவிர மற்றவையை தெரிவிக்கவில்லை.

  தோழனை நம்பி முன்னால் நகர ஒவ்வொரு ஜோடிக்கும் அந்த கோவிலில் திருமணத்தை முடித்து வழியனுப்பினார்கள் குருக்கள்.

    சூர்யா ரஞ்சனா ஜோடியையும் திருமணம் செய்து வைத்தார்கள்.

    ஜனார்தன் தவிர்த்து மற்ற தோழர்கள் மாரல் சப்போர்ட். மத்தபடி உதவி நிச்சயம் செய்வது அரிது. சூர்யாவுக்காவது ஆண் தோழர்கள் கையெழுத்துயிட்டனர்.

   ரஞ்சனா தோழிகளோ 'அந்தளவு தைரியமில்லைடி.' என்று கூட வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

  அப்பா அம்மாவை தவிர்த்து காதல் திருமணம் நடக்கிறது. அதனை வேடிக்கை பார்க்க.... மற்றபடி சாப்பிட்டதும் கிளம்பினார்கள்.

    சின்ன சரிகை கொண்ட சேலையில் மணப்பெண் அலங்காரமின்றி ஓரளவு மணப்பெண் தோழிக்குண்டான நகைகள் அணிந்து தான் ரஞ்சனா இருந்தாள்.

    அவள் கழுத்தில் புது தாலியும், மேலே சிகைக்குள் சிக்கிய பூக்களும் அட்சதைகளும் இல்லையென்றால் மணமானவர்களென கூறுவது ஐயம்.

    ரஞ்சனாவுக்கு ஊட்டிவிட்டு போனிலேயே சில பல புகைப்படம் எடுத்தவர்கள் அந்த ஏரியாவிலேயே இருந்த ஒரு ஸ்டூடியோவில் தம்பதியாய் முதல் புகைப்படத்தை எடுத்தார்கள்.

       புகைப்படக்காரன் தான் என்ன அண்ண.. லவ் மேரேஜ் என்றாலும் மேரேஜ் ஆச்சே... சேர்ந்து நில்லுங்க. ஸ்டூடியோல இருக்குற பேக்கிரவுண்ட் சீனரி மாத்தி மாத்தி வச்சி போட்டோ எடுக்கறேன்." என்று மினி போட்டோ சூட் நடத்தினார்.

    ரஞ்சனாவுக்கு இப்படி சேர்ந்து புகைப்படம் எடுப்பது பிடிக்கும் என்பதால் சூர்யா அதற்கு சம்மதித்தான்.

   சிறுஆல்பம் போடுமளவுக்கு போட்டோ எடுத்தப்பின்னே புகைப்படக்காரன் விட்டான்.

   சூர்யா அவனது காரில் அவன் வீட்டின் மேல் வீட்டில் கொண்டுவந்து இருவரையும் நிறுத்தினான்.

   "அப்பா அம்மா அண்ணன் வீட்டுக்கு போயிருக்காங்க டா. இங்க தங்க வைக்கட்டுமானு கேட்டேன். என்னிஷ்டம்னு சொல்லிட்டாங்க. சிங்கிள் பெட்ரூம் ஹால் பாத்ரூம் பால்கனி இருக்கும். முன்ன நான் இருந்தேன். உனக்கு வீடு தேவைப்படும்னு நான் கீழேயே ஷிப்ட் பண்ணிக்கிட்டேன். இப்ப எல்லாம் அம்மா அப்பா அண்ணா வீட்டுக்கு போறாங்க. எனக்கு அடுத்து மேரேஜ் முடிஞ்சா கூட கீழே டபுள் பெட்ரூம் தான். தங்கிப்பேன்." என்றான்.

  சூர்யாவோ நண்பனை அணைத்து "தேங்க்ஸ்டா பங்காளி." என்றான்.

       ரஞ்சனாவுக்கு வீடு பிடித்திருந்தது. இவர்கள் இருவருக்கு இது போதுமானது.
   சம்மதமாய் தலையாட்டி முடிக்க அவளை அழைத்து, சூர்யா ரெஜிஸ்டர் ஆபிஸிற்கு சென்றான்.

  ஏற்கனவே பதிவு செய்து இருந்ததால் இன்றைய திருமணத்தை முடித்தப்பின் அதனை இதிலும் பதிவு செய்தார்கள்.

     அந்த வேலை முடித்து வீட்டுக்கு வரவே மணி இரண்டறை தாண்டியது.

       கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமென்று படுக்க, ஜனார்தன் மதிய உணவை நீட்டினான்.

   "சூர்யா சாப்பிட்டு தூங்குடா. வர்றேன் ரஞ்சனா." என்று கீழே சென்றான்.

    சூர்யா வாங்கிய உணவை விழுங்கிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு மூன்று மணியளவில் உறங்கினார்கள்.

  மாலை ஐந்து மணிக்கு கதவு தட்டவும் ரஞ்சனா தான் எழுந்து வந்தாள். கதவை திறக்கவும் சூர்யாவும் விழித்திருந்தான்.

   "என்னடா செம தூக்கமா? காபி டா." என்று கொடுக்கவும், "ஏன்டா இதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா. ஏதோ நேத்து நைட் முழுக்க தூக்கமில்லை. காலையில எழுந்ததும் கோவிலுக்கு போயாச்சு. அங்கவேற செம கூட்டம். நின்று நின்று கால் வலி. இன்னிக்கு வெளியே சாப்பிட்டு நாளைக்கு மளிகை ஐயிட்டம் வாங்கிக்கலாம்னு இருந்தேன் பணமெல்லாம் எடுத்து வச்சேன்." என்று சூர்யா காபி வாங்கி பருகினான்.

    "தெரிந்த அண்ணாச்சி கடையில எங்க வீட்டுக்கு வாங்கற அளவு மளிகை போட்டு கொடுத்தனுப்ப சொல்லிட்டேன் டா. இப்ப வந்துடும். காசு நீயே கொடு. நாளையிலருந்து ரஞ்சனா சமைப்பாங்க. நான் இனி காபி டிபன் வாங்கி தரமாட்டேன். ஆனா ஒன்னு டா. அம்மா அப்பா இல்லைனா... கண்டிப்பா இங்க வந்து சாப்பிடுவேன். எனக்கும் சேர்த்து சமைச்சிடுங்க" என்றான்.

    "தாராளமா." என்று சூர்யா ரஞ்சனா ஒன்றுபோல கூறினார்கள்.

    காபி கப்பை விளக்க ரஞ்சனா கிச்சன் நுழைய முதலிரவுக்காவது கொஞ்சம் போல பூ பழம் வாங்க ஜனார்தனிடம் கடையை கேட்க, "வாடா நானே கூட்டிட்டு போறேன்." என்று அழைத்து சென்றான்.

    இனிய இல்லறம் இரவே தொடரும் என்பதால் ரஞ்சனாவும் குளித்து முடித்து தயாரானாள்.

  -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1