பொம்மை கூற்று
"பொம்மை ஒன்று சொன்னது"
நானிலம் தேடினாலும்
என் மழலை தாய் போல் இல்லை
மலர் பாதத்தால் மிதிப்பாள்
ஒற்றை விரலால் குடைந்து
ஒரு விழியை பிதுக்குவாள்
சிக்கிய சிகையின
சிங்காரமாக அலங்கரிபாள்
எச்சி ஒழுகிய நிலையில்
முத்தம் நூறு தருவாள்
கண் , மூக்கு என வாயை தவிர
முகத்தில் சாதம் ஊட்டுவாள்
"பொம்மை ஒன்று சொன்னது"
நானிலம் தேடியும்
என் மழலை தாய் போல் இல்லை
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment