காதலென்றால்...
விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்து
நேச முகம் மலர்ந்து
இருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்து
நெடு நேர பிதற்றல் பேச்சில்
ஒன்றுமில்லை என்றாலும்
சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றி
கணநேர சந்திப்புக்கு கால் கடுக்க
காத்திருந்து காதல் என்றே பெயரிட
நேரமில்லை எனக்கு
மணத்தில் இணைந்து இறுகிய முகத்தோடு
உனக்கும் எனக்கும் ரசனைகள் வேறுப்பட்டு
பிடித்த பிடிக்காத எல்லாம் ஏற்று
கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சலோடு
பஞ்சணையில் முகம் சிவந்து
வருடங்கள் பல கடந்து வாழம் சமயம்
சிறு சிறு சண்டை முகதூக்கம்
நீண்ட நேர ஊடலுக்கு பின்
ஒரு வித கை அழைப்பில்நீ அழைக்க
உன் நெஞ்சில் அடைக்கலமாகும் என் மனம்
இதற்கு பெயரும் காதலென்றால்.... மறுப்பாயா?
- வீணா ராஜ்.
Comments
Post a Comment